சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர் Khan11

கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்

2 posters

Go down

கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர் Empty கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்

Post by நண்பன் Sun 16 Jan 2011 - 16:04

கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்வதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் கர்ப்பப்பை புற்றுநோய்
உள்ளிட்ட நோய்கள் பெண்களைத் தாக்கும் என்று பரவலான எண்ணம் உள்ளது.

ஆனால் பிரிட்டனிலுள்ள ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிசிஷியன்ஸ் நடத்திய
ஆய்வில் கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவதால் அதிக நாட்கள் பெண்களால்
உயிர்வாழ முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப் ஹானஃபோர்ட் இதுகுறித்து கூறியதாவது:

40 ஆண்டுகளுக்கும் மேலாக 46 ஆயிரம் பிரிட்டன் பெண்களிடம் இந்த ஆய்வை
நடத்தினோம். கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் பெண்கள் நீண்ட நாட்கள்
உயிர் வாழ முடியும் என்பது இதிலிருந்து தெரியவந்துள்ளது.

இவற்றைச் சாப்பிடுவதால் கர்ப்பப்பை புற்றுநோய், இதய சம்பந்தமான நோய்கள்
பெண்களைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதும் ஆய்வில்
தெரியவந்துள்ளது.

ஆனால் குறைந்த வயதுடைய பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்போது
அவர்களுக்கு மாரடைப்பு, மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய்கள் வருவதற்கு
வாய்ப்புகள் உண்டு.

இளம்பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டு சில ஆண்டுகள் கழித்து நிறுத்தி
விடுகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் மாத்திரைகளால் ஏற்படும் எதிர்மறை
விளைவுகள் அவர்களது உடலிலிருந்து மறைந்துவிடும். மேலும் சீரான இடைவெளிகளில்
நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகள், சுகாதாரமான வாழ்க்கை போன்றவற்றை
கடைப்பிடிக்கும்போது கருத்தடை மாத்திரைகளால் பெண்களின் உடலுக்கு வரும்
பாதிப்பு குறைக்கப்படுகிறது என்பதே உண்மை.

உதாரணமாக ஒரு லட்சம் பெண்கள் ஓராண்டுக்கு கருத்தடை மாத்திரைகளை
சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் இவர்களில் 52 பேர் மட்டுமே நீண்ட நாள்
உயிர் வாழ்வதில்லை. மற்றவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.

அதே நேரத்தில் பழைய வகை கருத்தடை மாத்திரைகள் மட்டுமே பெண்களுக்கு பலன்
அளிப்பதாக உள்ளது. அதாவது பழைய வகை கருத்தடை மாத்திரைகள் சாப்பிடும்
அவர்கள் நீண்ட நாள் உயிர்வாழ்கின்றனர்.

அவர்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

ஆனால் புதிய வகை கருத்தடை மாத்திரைகள், பழைய வகை கருத்தடை மாத்திரைகளின்
பார்முலாவிலிருந்து சற்றே வேறுபடுகின்றன. இதில் இடர்ப்பாடுகள் (ரிஸ்க்)
அதிகம்.

இந்த ஆய்வை 1968-ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். 23 ஆயிரம் பெண்கள்
தொடர்ந்து 4 ஆண்டுகள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
அவர்களில் 1,400 பேர் எந்தவித நோய்க்காகவும் மருத்துவமனைக்குச் சென்று
அறுவை சிகிச்சை செய்து கொண்டதில்லை என்பது தெரியவந்தது.

இந்த மாத்திரைகளை சாப்பிடும் பெண்கள் இதயப் பிரச்னை உள்ளிட்ட நோய்களால்
பாதிக்கப்பட்டு இறந்துவிடுவர் என்று முதலில் சிலர் நடத்திய ஆய்வில்
தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது நடத்தி முடிக்கப்பட்ட ஆய்வில் கருத்தடை மாத்திரை
சாப்பிடுவதால் 30 வயதுக்குள்பட்ட 1 லட்சம் பெண்களில் 20 பேர் மட்டுமே
இறக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதேபோல 30 முதல் 39 வயதுக்குள்பட்ட 1 லட்சம் பெண்களில் 4 பேர் மட்டுமே இறக்கின்றனர்.

40 முதல் 49 வயதுக்குள்பட்ட பெண்களில் 14 பேர் மட்டுமே இறக்கின்றனர்.

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும்போது அதிக கவனத்துடன் இருந்தால் இதய
நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து தப்பிக்க முடியும். ரத்த அழுத்தத்தை
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல், சுகாதாரமான உணவு, அளவான உணவு,
தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றால் இந்த பிரச்னைகளிலிருந்து
விடுபட முடியும் என்றார் அவர்.

பேராசிரியர் ஹானஃபோர்ட் நடத்திய ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர் Empty Re: கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Jan 2011 - 16:10

பதிவுக்கு நன்றி :];:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர் Empty Re: கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்

Post by நண்பன் Sun 16 Jan 2011 - 22:27

அன்பு wrote:பதிவுக்கு நன்றி :];:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர் Empty Re: கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்
» கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்
»  கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்
» பக்க விளைவுகளை உண்டாக்குமா கருத்தடை மாத்திரை?
» ஜப்பான் பெண்கள் பயன்படுத்தும் டயாபர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum