சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Khan11

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Go down

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Empty வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Jan 2011 - 22:36

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Fenugreek16

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!:
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Empty Re: வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Jan 2011 - 22:37

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Empty Re: வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Jan 2011 - 22:37

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். வெந்தயத்தில் தாவர சாஸ்திரப் பெயர் ட்ரைகோ நெல்லாஃபீனம் கிரேக்கம் (trigonella foerum graecum) என்பதாகும். ஃபீனம் கிரேக்கம் என்றால் கிரேக்க நாட்டு வைக்கோல் என்றும் ட்ரைகோனல் என்றால் முக்கோணம் என்றும் பொருள். காய்ந்த வைக்கோலைப் போன்ற வாசனையும் கால்நடைகளுக்கும் உணவாகப் போட கிரேக்க நாட்டிலிருந்து தருவித்துக் கொண்டிருந்தார்கள். ரோம் நாட்டவர்கள், இதன் வெண்ணிறப் பூக்கள் முக்கோண வடிவமுடையதாக இருக்கும். இதுவே இதன் பெயர்க்காரணமாக அமைந்திருக்கலாம். பிறப்பிடம்   ஆசிய நாட்டினராலும், மத்திய தரைக்கடல் நாட்டினராலும் பெரிதும் விரும்பி உணவாகவும், மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படும். இதன் பிறப்பிடம் கிழக்கு ஐரோப்பாகவோ, எத்தியோப்பியாகவோ இருக்கலாம். ஆரம்பத்தில் மேலை நாட்டவருக்கு இதன் மணம் பிடிக்காமலிருந்தாலும் காலப்போக்கில் மூலிகையாக பயிரிட்டு வந்துள்ளனர். வெந்தயத்தின் துளிர் இலைகளை கீரைபோன்றும் முதிர்ச்சியடைந்த விதைகளை மசாலாப் பொருளாகவும் உபயோகிக்கிறோம்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Empty Re: வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Jan 2011 - 22:37

வெந்தயக்கீரை:

கீரை வகைகளில் மிகவும் குளுமையான வெந்தயக்கீரை, தாராளமாக சூரிய வெளிச்சமும், தண்ணீரும் கிடைக்குமிடத்தில் செழித்து வளரும். வருடா வருடம் விதைத்து வளர்க்கும் இந்த மூலிகைக் கீரை அதிக பட்சம் ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரும்.

உடலை ஆரோக்கியமாகவும் வயிற்றை சுத்தமாகவும் வைக்கும் வெந்தயக்கீரையில் உலக சுகாதாரக் கழகத்தின் (றாடி) கணிப்புப்படி இதன் புரதச் சத்தின் அளவு 65. நாம் உண்ணும் நூறு கிராம் அளவு கிரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது. இந்த அளவு வெந்தயக்கீரை 49 கலோரிச்சத்து தருகிறது.

வெந்தயக்கீரையோடு, பாசிப்பருப்பைச் சேர்த்து உண்பதால் கல்லீரல் பலப்படுகிறது. வாய் வேக்காடு வராமல் காப்பாற்றுகிறது. பருப்பு சேர்த்து சுவையாகத் தயாரிக்கப்படும் வெந்தயக்கீரையை நெய்சேர்த்து சோற்றோடு பிசைந்து சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானது. உப்பு, புளி, காரம் சேர்த்து வெந்தயக்கீரையை தொக்காக்கி பல நாட்களுக்கு பயன்படுத்தலாம். பருவத்துக்கு வரக்கூடிய பெண்களின் ரத்தவிருத்திக்கு அவசியமானது.
வெந்தயக்கீரையில் விட்டமின் ஏயும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம், நாள்பட்ட சொறி, சிரங்கு... என்று அத்தனைக்கும் அருமருந்தாகிறது. இக்கீரையை பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு புற்றுப் போட்டு வைப்பதால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.

சீஸனில் இந்தக் கீரையை நிறைய வாங்கி சுத்தப்படுத்தி, காயவைத்து, காற்றுபுகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொண்டு வருடம் முழுவதும் உபயோகிப்பதால் லைஸின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Empty Re: வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Jan 2011 - 22:38

வெந்தயம்:

வெந்தயத்தை அப்படியே உபயோகிப்பதால் கசப்பாகவும், விநோத வாசனையும் உடையதாக இருப்பதால் தான் இதனை வறுத்துப் பொடித்துப் பயன்படுத்துகிறோம். இதன் கசப்பு ருசியும், பாகற்காய் கசப்பைப் போல் ஒருவித ருசியாக நாவுக்குப் பழகிவிடுகிறது. இந்தக் கசப்பு ருசிக்குக் காரணமான க்ளைக்கோசைட்ஸ் (clycosides) வெந்தயத்தில் தூக்கலாக இருக்கிறது. நல்ல பசி கிளப்பியாக இந்த கசப்பு ருசி இருப்பதோடு உணவு ஜீரணத்துக்கு அத்தியாவசியமாக பித்த நீரை தாராளமாக சுரக்கத் தூண்டிவிடுகிறது. அசைவ உணவுக்காரர்களுக்கு இது நன்மை கூட்டுகிறது.

வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ, அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்தசோகை அண்டாது. நிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும், இதுவே நீரிழிவுக் காரர்களுக்கும் நல்லது.
தினமும் இரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை பொடித்தோ, முழுசாகவோ கொடுத்து வந்தால் ரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை ம்ட்டும் வடிகட்டிக் குடிக்கலாம்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Empty Re: வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Jan 2011 - 22:38

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கொடுக்கலாம்.

மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ரத்தப் போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது இழக்கும் தெம்பை மீட்க உதவும்.
நல்ல ருசியான உணவு தயாரிப்புகளின் வாசனை வந்தும்கூடி பசி கிளம்பாமலோ நாவில் ருசி மரத்துப் போயிருந்தாலோ கூட இதுவே மருந்து.
கணையம், கல்லீரல் வீக்கம், வயிற்றுப் போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல்... போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து. வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது, வெந்தயநீர் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். சிறுநீர்ப்போக்கை சீராக்கும்.
இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Empty Re: வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Jan 2011 - 22:38

சமையலில்:

தென்னிந்தியர்களின் சாம்பாருக்கு உபயோகிக்கும் மசாலாப் பொடியில் வெந்தயம் முக்கிய இடம் பெறுகிறது. சாம்பாரின் தூக்கலான வாசனைக்கு தூண்டுகோல் இதுவே. ஊறுகாய்களுக்கு உயிரூட்டும் வாசனையும் வெந்தயப் பொடியிலிருந்து தான். வங்காளிகளின் பாஞ்ச்ஃபோரன் எனும் ஐவகை மசாலாப் பொடியில் முக்கிய இடம் பெறுவதும் வெந்தயம்தான்.


ஈரானியர்களிடையே பிரபலமாக உள்ள கோர்மே சப்ஜி காய்கறிகளை வேகவைத்து சாஸ் போன்று தயாரிக்கும் தயாரிப்பில் இடம்பெறும் மசாலாக்களில் ஒன்றாக இருக்கிறது.

எத்தியோப்பியரின் மசாலாப் பொடியான பெரெபெரெயிலும் வெந்தயம் உண்டு.

எகிப்து, எத்தியோப்பிய ரொட்டி தயாரிப்பிலும் வெந்தயப் பொடி இடம் பெறுகிறது.

எகிப்தியரிடமும், மத்திய கிழக்கு நாட்டினரிடையே பிரபலமான பானம் ஹெல்பா என்பது. இது வெந்தயத்தை வேகவைத்த சாறில் சீனிபால் சேர்த்து பருகுவதாகும்.

செயற்கை வெனிலா, செயற்கை மேப்பிள் சிரப் தயாரிப்புகளில் இடம் பெறுவதும் வெந்தயத்திலிருந்து எடுக்கப்படும் எஸ்ஸென்ஸ் தானாம்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Empty Re: வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 16 Jan 2011 - 22:39

அழகுக் கலையில்:

பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.


அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.


பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள். Empty Re: வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum