சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன் Khan11

கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்

4 posters

Go down

கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன் Empty கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்

Post by அப்துல்லாஹ் Sat 3 Dec 2011 - 12:20

வரவேற்பு ஏற்பாடுகளை தி.மு.க.வின் தலைமை முதல் தொண்டர்கள் வரை எல்லா மட்டத்திலும் காண முடிகிறது. 6 மாத காலத்திற்குப் பிறகு "தமிழகத்தில் கனிமொழி' என்கிற உற்சாக உணர்வு பரவலாகத் தெரிகிறது.

நவம்பர் 28-ந் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்றம் கனி மொழி உள்ளிட்ட ஐவருக்கு 2ஜி வழக்கில் ஜாமீன் வழங்கிய போதும், அந்த உத்தரவு நகல், வழக்கு விசாரணை நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டுக்குத் தாமதமாகவே வந்தது.

மறுநாள். நவம்பர் 29 செவ்வாய். கனிமொழியின் ஜாமீனுக் காக 10 லட்ச ரூபாய்க்கான ஷ்யூரிட்டி தரவேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர்.பாலுவும் ஏ.கே.எஸ்.விஜயனும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஷ்யூரிட்டி கொடுத்தனர். அவை ஏற்கப்பட்டு, நீதிமன்றத்திலிருந்து திகார் சிறைக்கு, கனிமொழிக்கான ஜாமீன் உத்தரவு சென்றது.

திகாரின் 6-வது ப்ளாக்தான் பெண்கள் ப்ளாக். அங்கிருந்த சக கைதிகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததில் ரொம்பவும் சந்தோ ஷப்பட்டார்கள். வாழ்த்திய பெண்கைதிகளை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்ட கனிமொழி, சிறை கேண் டீனில் ஆர்டர் செய்த ஸ்வீட்டுகளை அவர்களுக்குக் கொடுத்ததோடு, சிறையில் பார்ப்பதற்காக அனுமதிக் கப்பட்ட அவரது சொந்த கலர் டி.வி.யையும் அவர்களுக்குப் பரி சளித்துவிட்டு, சிறை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டார்.

கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன் KANIMOZHI%2B1

அப்போது சிறை அதிகாரி ஒருவர், ""வி.ஐ.பி. அந்தஸ்தில் நீங்க இருந்தாலும் உங்களுக்கென்று எந்த சலுகையும் கேட்கலை. தியானம்-யோகா- படிப்புன்னே இருந்திட்டீங்க'' என்று சொன்னதோடு, சிறைக்கைதி களை சீர்திருத்தவும் அவர்களின் மறுவாழ்வுக்காகவும் செயல்படும் தன்னார்வ அமைப்பான திவ்ய ஜோதி ஜக்ரதிசன்ஸ்தான் பணிகளில் கனிமொழி ஆர்வத்துடன் பங்கேற்றதையும் நினைவுபடுத்தினார். அப்போது அருகிலிருந்த ஓர் ஊழியர், வாரந்தோறும் கனிமொழிக்கு அனுமதிக்கப்பட்ட 4000 ரூபாய் பணத்தை சக பெண் கைதிகளின் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதில் செலவு செய்ததை எடுத்துச் சொன்னார்.

உணர்ச்சிகரமான மனநிலை அங்கே நிலவ, இரவு 7.30 மணிக்கு திகார் ஜெயிலிலிருந்து வெளியே வந்தார் கனிமொழி. அவரை எதிர்பார்த்து கட்சி முன்னணி யினர் குவிந்திருந்ததுடன், மீடியாக்களும் பலமாக முற்றுகையிட்டிருந்தன. வழக்கின் ட்ரையல் போய்க் கொண்டிருக்கும் இந்த நிலையில், மீடியாக்களிடம் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என்று கலைஞர் சொல்லியிருந்ததால், வேறு வாசல் வழியாக சிறையிலிருந்து வெளியேறி தனது டெல்லி வீட்டிற்குச் சென்றார் கனிமொழி. அங்கே டி.ஆர்.பாலு, மு.க. அழகிரி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் அவரை வர வேற்றனர். உற்சாகம் அலைமோதும் தருணமாக அது இருந்தது.. அதன்பின், தி.மு.க.வின் மத்திய இணை யமைச்சர்கள், எம்.பி.க்கள் என ஒவ்வொருவராக வந்து கனிமொழியை சந்தித்து மகிழ்ச்சியையும் வாழ்த்து களையும் தெரிவித்தபடியே இருந்தனர். வெளிநாடு சென்றிருந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தலை நகருக்குத் திரும்பியதும் வியாழக்கிழமை காலை 9.40-க்கு கனிமொழியை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ட்ரையல் நடக்கும் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்திலும் மீடியாக்கள் நிறைந்திருப்பதால், கவனமாக சென்று வருமாறு கனிமொழிக்கு தி.மு.க. தலைமையிடமிருந்து அறிவுறுத்தப்பட்டிருப்பதால், தன் மீதான எந்த ஃப்ளாஷும் படாதவகையில் கோர்ட் டுக்கு வந்து விசாரணையை எதிர்கொண்டார் கனி மொழி. வெள்ளிக்கிழமை வரை விசாரணை தொடர, அதன்பிறகு கோர்ட்டுக்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு சென்னைக்கு வருவது என கனிமொழியின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டது.

எப்போது வருகிறார் என்று தொண்டர்கள் தரப்பிலிருந்து அறிவாலயத்திற்குப் போன்கால்கள் தொடர்ந்துகொண்டே இருந்ததால், கனிமொழிக்கு பலமான வரவேற்பு தருவது என தலைமை முடி வெடுத்தது. அது பற்றிய அறிவிப்பு வெளியானதும், தலைமையின் உத்தரவுப்படி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கனிமொழியை வரவேற்பதற்காக கட்சிக்காரர்கள் சென்னைக்குப் புறப்படத் தொடங் கினர். சென்னையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் விமானநிலையம் சென்று கனிமொழியை வரவேற்பது எனத் தீர்மானிக்கப்பட, சென்னை மாவட்ட தி.மு.க நிர்வாகிகளிடம் வரவேற்பு ஏற்பாடுகளை விரிவா கச் செய்யும்படி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். கனிமொழியின் வருகையை தி.மு.க தொண்டர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற மனநிலையைப் படம்பிடித்தோம். தமிழகத்தின் பல பகுதிகளிலும் வரவேற்புக் குரல்கள் பலமாக ஒலிக்கின்றன. குறிப்பாக, தென்தமிழகத்தில் உள்ள தொண்டர்கள், "கனிமொழியின் வருகையும் அவருக்குத் தரப்படும் முக்கியத்துவமும் தி.மு.க.வுக்கு பெரும் பலம் சேர்க்கும்' என்கிறார்கள்.

""43 வயதில் 60 வயதுக்கான அனுபவத்தை கனிமொழி பெற்றிருக்கிறார். கலைஞரையும் ஸ்டாலினையும் சிறைவாசம்தான் தமிழக மக்களின் தலைவராக்கியது. அந்த வழியில் கனிமொழியை நாங்கள் பெண் தலைவராகப் பார்க்கிறோம்'' என்கிறார்கள் தென் மாவட்டத்தில் உள்ள உ.பி.க்கள் பலரும்.

முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா நம்மிடம், ""தேர்தல் நேரத்துல கனிமொழி மீதான 2ஜி கேஸை வைத்து என்னென்னவோ எஸ்.எம். எஸ். அனுப்பினாங்க. ஜெயிலைத் தைரியமா எதிர்கொண்டதால் பழைய பேச்செல்லாம் ஓய்ஞ்சிப் போச்சி. தியாகத்தில் கலைஞரோட குடும்பத்தில் ஒருத்தரும் சளைச்சதில்லைங்கிறது தான் இப்ப உள்ள பேச்சு. அதனால, கட்சிக்காரங்க மத்தியிலும் கனிமொழிக்குன்னு ஆதரவு வட்டம் பெருகுது'' என்றார். ""2ஜி கேஸில் கனிமொழி நிர பராதின்னு நிரூபிக்கத்தான் போறாங்க. அப்ப தி.மு.க.வோட மதிப்பே இன்னும் உயரும். பெண்கள் மத்தியில் இன்னும் பிடிப்பு அதிகமாகும்'' என்றார் பொதுக்குழு உறுப்பினரான ஏர்வாடி சித்திக்.

கனிமொழி நடத்திய வேலைவாய்ப்பு முகாம்கள் அதனால் பயன் பெற்றவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது பற்றியெல்லாம் பேசிய சங்கரன்கோவில் சங்கரன், ""நிச்சயமா கனிமொழி உயர்ந்த இடத்துக்கு வருவார்'' என்றார். கனிமொழிக்கான ஆதரவு வட்டம் தென்மாவட்டத்தில் உருவாவதை தி.மு.க பேச்சாளரான வாகை முத்தழகன் உள்பட பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

திகார் சிறைக் கொடுமைகளை மனத் துணிவுடன் சந்தித்துவிட்டுத் திரும்பும் கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எனத் தி.மு.க தலைமை விரும்புவதோடு, அதற்கான திட் டங்களையும் வகுத்து வருகிறதாம். அதேநேரத்தில், கட்சி நிர்வாகத்தில் உள்ள கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, "கனிமொழிக்கு இப்போது பதவி கொடுத்தால் குடும்ப அரசியல் என்ற விமர்சனம் மீண்டும் தலை தூக்கும்' என்கிறார்களாம். இது தொடர்பான முணுமுணுப்புகளும் சலசலப்புகளும் கேட்காமல் இல்லை.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன் Empty Re: கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்

Post by kalainilaa Sat 3 Dec 2011 - 12:26

:”@: :”@: ஐயா.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன் Empty Re: கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்

Post by யாதுமானவள் Sat 3 Dec 2011 - 12:40

"43 வயதில் 60 வயதுக்கான அனுபவத்தை கனிமொழி பெற்றிருக்கிறார். கலைஞரையும் ஸ்டாலினையும் சிறைவாசம்தான் தமிழக மக்களின் தலைவராக்கியது. அந்த வழியில் கனிமொழியை நாங்கள் பெண் தலைவராகப் பார்க்கிறோம்'' என்கிறார்கள் தென் மாவட்டத்தில் உள்ள உ.பி.க்கள் பலரும்.
அடப்பாவிங்களா,,,இவ என்னமோ நாட்டுக்காக தியாகம் பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிட்டு திரும்பி வந்தது போலல்ல ஆர்ப்பாட்டம் பண்றானுங்க....

செருப்புல அடிச்சு கேள்வி கேட்டிருந்திருக்கணும் airportla வச்சு....

திருந்தாது திருந்தாது...தமிழகம் திருந்தவே திருந்தாது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன் Empty Re: கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்

Post by அப்துல்லாஹ் Sat 3 Dec 2011 - 15:24

சகோதரி உங்களுக்கு கனி மீது ஏன் இத்தனை கோபம... அவரும் ஆரியப் பகை தாண்டி வந்த ஆரணங்கு அல்லவா.. அன்னைத்தமிழகம நோக்கி ஆவலுடன் வரும் அன்புடைத்த பெண் அல்லவா... ஊழல்களும் கையாடல்களும் பெரிய விசயங்களல்ல..அரசியலில் சதுரங்கக் காய்கள் சகுனிகளுக்குத்தான் சாதகமாக அமையும் சமதர்மம் போற்றும் பெரியவர் கருணாநிதிக்கு என்றைக்குமே அது சாதகமாக வாய்த்ததில்லை...நாட்டை துண்டாட பாசிச வெறியுடண் பாயத் துடிக்கும் பனங்கள்ளு குடித்த நரிகலான பண்டாரங்கள் நீதிபதி இருக்கையில் காத்திருக்கையில் நாம் நிரபராதி என்று பூட்டிய அறைக்குள் நின்று கூவிப் பயன் என்ன காலம் மாறும் காட்சிகளையும் மாற்றும்...சகோதரி ஆதரியுங்கள்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன் Empty Re: கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்

Post by jasmin Sat 3 Dec 2011 - 15:36

யாது தயவு கூர்ந்து சகோதரர் அப்துல்லா அவர்களின் கூற்றையும் கொஞ்சம் கேளுங்கள் .....அதில் நியாயம் இருக்கலாம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன் Empty Re: கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum