சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

அமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும் Khan11

அமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும்

Go down

அமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும் Empty அமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும்

Post by *சம்ஸ் Sun 4 Dec 2011 - 6:19

அமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும்
நேட்டோ, தலிபான் எதிர்காலமும்



இஸ்லாமாபாத் வொஷிங்டன் உறவுகள் கிட்டத்தட்ட கணவன் மனைவி போலத்தான். அவ்வளவு
சண்டையும் சச்சரவும் கொஞ்சலும் குலாவலும் இந்த பத்தாண்டு காலத்தில்.
ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களை கூண்டோடு கசக்கி எறிவதற்கென்றே அமெரிக்கா
பாகிஸ்தானோடு தேனிலவு உறவு கொண்டது. மாப்பிள்ளையும் பெண்ணும் போல நடந்து கொண்டுதான்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை வேட்டையாடுகின்றன மேற்கு நாடுகள். அதிலும் விசேடமாக
அமெரிக்கா இதற்கு அத்துப்படி.

அமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும் Gilaniஇன்றைக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம்
நேட்டோ இராணுவ வீரர்கள் குடிபுகுந்துள்ளனர். இவற்றில் ஒரு இலட்சம் பேர் அமெரிக்க
வீரர்கள். இத்தனை வீரர்களுக்கும் உணவு, உடை மருந்து, ஆயுதம் உள்ளிட்ட அனைத்துத்
தேவைகளும் பாகிஸ்தான் வாயிலாகவே கொண்டு செல்லப்படுகின்றன. கைபர் கணவாய் இதில்
பிரதானமானது.
ஆப்கானில் நேட்டோ படையினரின் இராணுவ நடவடிக்கையின் வெற்றியும் தோல்வியும்
பாகிஸ்தானின் பங்களிப்பிலுள்ளதை நரிப்புத்தியுள்ள அமெரிக்கா நன்கு அறிந்தே
வைத்துள்ளது. இதனால்தான் இந்த மெல்லவும் முடியாத விழுங்கவும் இயலாத நிலை.
தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் பெரும்பாலானவை
பாகிஸ்தானை அண்மித்துள்ள நெருங்கியுள்ள மாகாணங்களாகும். இன்னும் இங்கு பழங்குடியினரே
பெரும்பான்மை. இம்மாகாணங்களையொத்த கலாசாரம் அரசியல் பூர்வீகம் பாகிஸ்தானின்
வஸிரிஸ்தான் மாகாணத்திலுள்ளது. இந்நிலைமைகளும் புவியியற் காரணங்களும் நேட்டோவின்
இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பங்கை முக்கியமாக்கிற்று. வஸிரிஸ்தானில்
தலிபான்களை முடக்கினால் ஆப்கானில் தலிபான்களின் முள்ளந்தண்டு முறியும்.

அமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும் Obamaபாகிஸ்தானில்
கைபர் கணவாய் உட்பட இன்னும் சில நுழைவாயில்களை மூடினால் ஆப்கானிலுள்ள நேட்டோ
படையினரின் வயிறு பட்டினியால் வாடும். இப்படியொரு பின்னிப்பிணைந்த தொடர்பு. இப்போது
களநிலவரம் நோக்கி கண்களைத் திறப்போம்; காட்சிகளைப் பார்ப்போம். வஸிரிஸ்தான்
மாகாணத்திலுள்ள தலிபான்களின் முகாம்கள், மறைவிடங்கள், ஆயுதக் கிடங்குகள் பயிற்சி
நிலையங்கள் மீது நேட்டோ விமானங்கள் குண்டு கொட்டும் அதே நேரம் ஆப்கானிஸ்தானில்
தலிபான்களைத் தேடி வேட்டைகளை துரிதமாக்குவது தேடிக்கொல்வது, தாக்கியழிப்பது போன்ற
நடவடிக்கைகள் உரமூட்டப்படுகின்றன. இந்த ஒழுங்கு முறையிலே இராணுவ நடவடிக்கைகள்
இடம்பெறுகின்றன. வெற்றியின் விளிம்பை எட்டிவிட்டோம். தலிபான்களின் தளங்கள்
வீழ்கின்றன இனிமேல் தப்பியோடவும் முடியாது; சரணடையவும் முடியாது என்று கதை சொல்லியே
அமெரிக்கா 10 வருடங்களை கடத்திவிட்டது.

தோண்டத் தோண்ட தண்ணீர் ஊற்று வருவது போலவே
தலிபான்களின் செயற்பாடுகளும் உள்ளன. கந்தஹாரைப் பிடித்து விட்டோம். ஹெல்மண்ட்
மாகாணத்தை சுற்றிவளைத்து சல்லடை போடுகின்றோம் என்பார்கள் மேற்குலகினர். ஆனால்
இன்றைக்கும் நாக்கிள் புழுக்கள் போல தலிபான்கள் நெளியவே செய்கின்றனர். அண்மையில்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜிர்கா மாநாடு நடந்தது. ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி
தலைமைதாங்க எத்தனையோ முக்கிய தலைவர்கள் பங்குபற்றிய மாநாடு அது. ஒரு மாதத்துக்கு
முன்னரேயே மாநாட்டு மண்டபமும் இடமும் கடுமையான பாதுகாப்புக்கும் கண்காணிப்புக்குக்
கீழும் கொண்டுவரப்பட்டது. கடைசியில் கண்டதென்ன? மாநாட்டு மண்டபத்தை நோக்கி
தலிபான்கள் எறிகணைகளை ஏவ அத்தனை அதிதிகளும் குலைநடுங்க காவல்காரர்கள் கதிகலங்கினர்.

அமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும் World-3அட இவ்வளவு கடுமையான காற்றும் கூட நுழையக் கஷ்டப்படுகின்ற வேலியைத் தாண்டி யார்ரா
வந்தார்கள் யாருமே இல்லை. நம்முடைய தலிபான் காக்காமார்தான். பாதுகாப்புப் படையினரின்
கண்களில் மண்ணைத் தூவியோ அல்லது காவல்காரர்களின் கைகளில் காசைக் கொட்டியோ
வழியெடுத்து நுழைந்துவிட்டார்கள். இப்படித்தான் இந்தத் தலிபான்கள். விசேடமாக ஆப்கான்
தலிபான்களின் பாணியே இதுதான். இதற்காகத்தான் தனியாக நின்று மல்லுக்கட்டாமல்
பாகிஸ்தானைக் கூட்டுக்கும் வம்புக்கும் கூட்டாளியாக்கியிருக்கிறது அமெரிக்கா.
வஸிரிஸ்தான் மாகாணத்தில் அளவுக்கு மீறிய அதிகாரத்தோடு தலிபான்களைத் தாக்கவும்
தவறினால் பாகிஸ்தான் பொதுமக்கள்.

இராணுவ வீரர்களைக் கொலை செய்யவும் துணிந்துள்ள
உறவுதான் இது. ஒஸாமா பின் லேடனை அப்போட்டாபாத்துக்குள் நுழைந்து விமானக் குண்டு வீசி
கொலை செய்ததும் அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் தன்னைக் கொலை செய்யவந்தார் என்ற ஐயத்தின்
பேரில் பாகிஸ்தான் பொதுமகனை தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும்,
இவருக்கெதிராக எந்த விசாரணைகளும் செய்யக் கூடாது என அமெரிக்கா அழுத்திக் கூறியதும்
இந்த இறுக்கமான உறவுகளில் உண்டான இறுமாப்பே! இப்போது நிலைமைகள் மோசமடைந்துள்ளன.
அண்மையில் நேட்டோ விமானமொன்று வஸிரிஸ்தான் மாகாணத்தில் வீசிய குண்டு வீச்சில் 26
பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் இது பெரிய இழப்பு.
காஷ்மீர் எல்லையில் இந்திய- பாகிஸ்தான் இராணுவம் அடிக்கடி மோதலில் ஈடுபடும் போதுகூட
இத்தனை வீரர்கள் இறப்பதில்லை.
இதுமட்டுமல்ல நேட்டோவின் இச் செயற்பாடு மிகவும்
பாரதூரமான செயல். விட்டுவைத்தால் முழு பாகிஸ்தான் எல்லைகளையும் நேட்டோ பதம்
பார்க்கும் என்ற பயத்தில் இப்போது பாகிஸ்தான் மக்கள் அமெரிக்காவை வெளியேற்று,
இல்லாவிட்டால் அரசாங்க அதிகாரம் ஆட்சி ஆசனம் எல்லாவற்றையும் விட்டு ஆஸிப் அலிசர்தாரி
வெளியேறு, யூசுப்ராசா கிலானி வீட்டுக்கு போ, அஷ்பயக் கயானி என்ன செய்கிறாய் என்று
வீதியெங்கும் பாகிஸ்தான் மக்கள் பெரும் போர்க்கொடி, போதாக்குறைக்கு
எதிர்க்கட்சிகளும் தங்கள் தேவைக்கு இவ்விடயத்தை தலைக்கு மேல் தூக்கிப்பிடித்துள்ளன.
இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதுவரை பாகிஸ்தான் இராணுவத் தளபதி நேரடியாக அழைத்து
கண்டிக்குமளவிற்கு விடயம் பெரிதாகிற்று.

ஹிலாரி கிளின்டன், அமெரிக்காவின் முப்படைத்
தளபதி மார்டின் டெம்ஸி, பாதுகாப்பு அமைச்சர் ரியோன் பெனிட்டா ஆப்கானிலுள்ள நேட்டோ
தளபதி ஜோன் எலியான் உட்பட எத்தனையோ உயரதிகாரிகள் பொறுமை காக்குமாறும்
பொருத்தருளுமாறும் பாகிஸ்தானிடம் வேண்டிக் கொண்டனர். இஸ்லாமாபாத் இணங்கவில்லை.
வஸிரிஸ்தானிலுள்ள சி.ஐ.ஏ.யின் விமான தளத்தை மூடுமாறும் அப்பிராந்தியத்தை விட்டு
வெளியேறுமாறும் கேட்டு விட்டது. இப்படியொரு விமானத் தளம் இங்கில்லை என்கிறது
அமெரிக்கா. சகல விமானங்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து கிளம்பி வந்தே வஸிரிஸ்தானைத்
தாக்கியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனிட்டா சொல்கின்றார்.

இத்தளம்
இல்லையென்று ஒருவேளை பாகிஸ்தான் அரசுக்கும் இது தெரியாமலிருக்க சாத்தியமுண்டு.
அவ்வளவு இராஜதந்திரமுடைய வேலைதானே நேட்டோவின் செயற்பாடுகள். ஒருவேளை
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்த விமானங்கள் கிளம்பி வருவதால்தான் எத்தனையோ அடர்ந்த
காடுகள் மலைகள் பள்ளத்தாக்குகளை சரியாக இனம் காணாமல் இலக்குத் தவறிய விமானத்
தாக்குதல்களை நடத்துகின்றனவோ தெரியாது. இதைச் சொன்னால் என்னடா பேசுகிறாய்
விஞ்ஞானத்தின் உச்சக் கட்ட வளர்ச்சியையே தொட்டவிட்ட அமெரிக்க விமானங்களிடமா கருவிகள்
இல்லை, ராடர்கள் இல்லை என்று மறுகேள்வியும் கேட்கின்றனர். என்னதான் சொன்னாலும்
பாகிஸ்தானை தேவையில்லாமல் அமெரிக்கா பகைத்துக் கொள்ளுமா! இப்போ பாருங்களேன் கைபர்
கனவாய் பாதைளை பாகிஸ்தான் முடிவிட்டது. நேட்டோ விமானங்கள் வஸிரிஸ்தான் வான்
எல்லைக்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்துங்கள் என்ற உத்தரவும் வந்தாச்சு.

இந்நிலையில்
அமெரிக்கா என்ன செய்யும். எதையும் தாங்கும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கான
நுழைவாயில்களை மூடுவதை தாங்கிக் கொள்ள மாட்டாதோ. இப்போது தஜிகிஸ்தான்,
உர்க்மொனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வழியாக வடக்கு ஆப்கானிஸ்தானுக்குள்
பொருட்களை எடுத்து வர எண்ணியுள்ளது. செலவு கூடிய பாதுகாப்பு சவால் மிக்க வழிகள்தான்
இவை. என்ன செய்ய எதைச் செய்தாவது என்னைவிட சளைத்தவன் இல்லையென்று பாகிஸ்தானுக்கு
மட்டுமல்ல உலகுக்கே காட்ட வேண்டுமே நேட்டோவின் வலிமையை. என்ன தான் என்றாலும்
முஷர்ரஃப்பிற்குப் பிந்திய பாகிஸ்தான் பலவழிகளில் திண்டாடுவதாகவேயுள்ளது. முஷர்ரஃப்
இராணுவ தளபதியாக இருந்து ஜனாதிபதியாகி இராணுவ ஆட்சி நடத்தியவராச்சே. இவருடைய
காலத்தில் அமெரிக்கா இவ்வளவுக்கு பாகிஸ்தான் விடயத்தில் அத்துமீறவில்லை. இதனால்தான்
பாகிஸ்தானுக்கு இராணுவ ஆட்சியே பொருத்தமானது என்கிறார்னகளே. எதிர்காலம் அப்படித்தான்
அமையப் போகிறதோ...?



ஏ. ஜி. எம். தெளபிக்...-


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானில் தலிபான் தாக்குதல்:31 அமெரிக்க வீரர்கள் பலி
» நேட்டோ தாக்குதல்: ஐ.நாவிடம் பாகிஸ்தான் புகார்
» தலிபான் தாக்குதலில் பலியான அமெரிக்க படைகளுக்கு மரியாதை செலுத்தினார் ஒபாமா!
» நேட்டோ படை தெரிவித்த வருத்ததை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு
» ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் அமெரிக்க ராணுவம்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum