Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
தி.மு.க. துணைத் தலைவராக கனிமொழி? கருணாநிதி விருப்பம்: ஸ்டாலின் எதிர்ப்பு சென்னை:
Page 1 of 1
தி.மு.க. துணைத் தலைவராக கனிமொழி? கருணாநிதி விருப்பம்: ஸ்டாலின் எதிர்ப்பு சென்னை:
அடுத்த மாதம் சென்னையில் கூட உள்ள தி.மு.க.வின் பொதுக் குழுக்கூட்டத்தில் கனிமொழிக்கு மிக முக்கிய பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் இந்தத் திட்டத்துக்கு பொருளாளர் ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2 ஜி வழக்கில் கைதாகி 7 மாதம் சிறையில் இருந்த கனிமொழி கடந்த மாதம் பிணையில் விடுதலையானார். இதையடுத்து பெரும்பாலும் டில்லியி லேயே இருக்கும் கனிமொழி வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வருகிறார்.
கலைஞர் தொலைக்காட்சி விவகாரத்தில் எந்தத் தவறும் செய்யாத கனிமொழி, கட்சிக்காகவே சிறைக்குச் செல்ல நேர்ந்ததாகவும், இதனால் அவருக்கு முக்கிய பதவி தரப்பட வேண்டும் என்றும் அவரது தயார் ராஜாத்தி அம்மாள் வலியுறுத்தி வருகிறார்.
அரசியலையே கூட விரும்பி ஏற்காத கனிமொழி, கட்சிக்காக செய்த தியாகங்கள் மிக அதிகம் என்று கூறி வரும் ராசாத்தி அம்மாள், அவருக்கு எதிர்காலத்தில் கட்சியில் போதிய அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்கிறார்.
ஆனால், இதை ஸ்டாலின் விரும்ப வில்லை என்று தெரிகிறது. இருப்பினும் ஸ்டாலினின் எதிர்ப்பையும் மீறி கனி மொழிக்கு முக்கிய பதவி வழங்க தி. மு.க. தலைவர் கருணாநிதி திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் பெப்ரவரி 3ம் திகதி கூடும் திமுக பொதுக் குழுவில், கனிமொழிக்கு துணை தலைவர் பதவியும், ஸ்டாலினுக்கு பதவி உயர்வாக துணைப் பொதுச் செயலாளர் பதவியும் தரப்படலாம் என்கிறார்கள்.
தான் அரசியலில் தீவிரமாக இருக்கும் போதே கனிமொழிக்கு கட்சியில் முக்கிய இடத்தைத் தந்துவிட கருணாநிதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முதலில் கருணாநிதியின் இலக்கிய வாரிசாக மட்டுமே கருதப்பட்ட கனிமொழி, எப்போது ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டு டில்லியில் தயாநிதி மாறனுக்கு மாற்றான ஒரு சக்தியாக உருவாக்கப்பட்டாரோ, அப்போதே அவரும் அழகிரியைப் போல ஸ்டாலினுக்கும் ஒரு போட்டியாக உருவாகிவிட்டார்.
சமீபத்தில் வட சென்னையில் கனிமொழியின் 45 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். இந்த விழாவைத் தடுக்க ஸ்டாலின் தரப்பு முயன்றதாகவும் கூட செய்திகள் வெளியாயின. ஆனால் அதையும் மீறி திமுகவினர் பெருமளவில் பங்கேற்க, அந்த விழாவை நடத்திக் காட்டினர் கனிமொழி ஆதரவாளர்கள்.
ராஜ்யசபா எம்பியாக கனிமொழியின் செயல்பாடுகள் அவ்வளவாக வெளிச்சத்துக்கு வரவில்லை என்பதே நிஜம், நாடாளுமன்றத்தின் பெண்கள், நலம், ஊரக வளர்ச்சி தொடர்பான குழுக்களில் மிக ஆர்வமாக பங்கேற்றுள்ள கனிமொழி அதில் சும்மா ஒப்புக்கு இடம்பெறாமல் தீவிர ஆர்வம் காட்டி வருவதோடு, நல்ல யோசனைகளையும் வழங்கி வருகிறார்.
குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், சமூக நீதி போன்ற விவகாரங்களில் கனிமொழியின் யோசனைகளை மற்ற எம்.பிகள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
திமுகவைப் பொறுத்தவரை ஸ்டாலின் கடைமட்டத்தில் இருந்து படிப்படியாக உழைத்து, கட்சிக்காக பல தியாகங்கள் செய்து மேலே வந்தவர். ஆனால், அழகிரி திடீரென வானத்தில் இருந்து குதித்தது போலத்தான், கட்சிக்குள் திடீர் தலைவராக நுழைந்தார்.
அந்த வகையில் தான் அவருக்கு திமுகவில் முக்கியப் பதவியைப் பெற்றுத் தர தீவிரம் காட்டி வருகின்றனர். இதை கருணாநிதியும் ஆதரிப்பதாகத் தெரிகிறது.
ஸ்டாலின் விரும்பாவிட்டாலும், ஏன் கனிமொழியே விரும்பாவிட்டாலும் கூட, இதைத் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» கனிமொழி ஜாமீன் தள்ளி வைப்பு: கருணாநிதி சென்னை திரும்பினார்
» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
» கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
» திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.கருணாநிதி
» கனிமொழி ஜாமீன் தள்ளி வைப்பு: கருணாநிதி சென்னை திரும்பினார்
» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
» கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
» திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|