சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

கவிஞர்களே கவனியுங்கள் Khan11

கவிஞர்களே கவனியுங்கள்

+2
நண்பன்
கவினா
6 posters

Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Tue 24 Jan 2012 - 13:02

இந்த மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சென்னை நகரின் மிக உயர்ந்த கட்டிடமொன்றின் மீது ஏறிக்கொண்டு கீழே பார்க்கிறேன்.

எப்படியெல்லாம் பரபரக்கிறார்கள் இந்த மனிதர்கள் குள்ளம் குள்ளமாக இருந்துகொண்டு!

எனக்கு ஒரு நிமிடம் சிரிப்புதான் வருகிறது.

ஆனால் அடுத்த நிமிடமே என்னால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

இவ்வளவு உயரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும் இந்த கட்டிடத்தை எழுப்பியது இந்த குள்ளமான மனிதர்கள்தானே?

அதோ அந்த பரபரப்பான சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து செல்லும் ஆயிரமாயிரம் வாகனங்களும் இந்த குள்ளமான மனிதர்கள் உருவாக்கியதுதான்.

ஃபேஸ் நியூட்ரலின் சங்கமத்தில் இந்த மனிதன் விதவிதமான விளக்குகளை ஜொலிக்க விட்டு எப்படியெல்லாம் அழகு பார்க்கிறான் பாருங்கள்.

குள்ளம் குள்ளமாக இருந்து கொண்டு இந்த மனிதர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

நம் உடலைவிட்டு மனசு வெளியேறி மீண்டும் அந்த உடலையே திரும்பிப்பார்த்தால் எப்படி இருக்கும்!

அதுபோல இந்த பூமியைவிட்டு வெளியேறி மீண்டும் இந்த பூமியையே திரும்பி பார்த்தான் ரஷ்ய வீரன் யூரிகாகரின்.

இன்றைக்கு நானிந்த கட்டிடத்தின்மீது ஏறி நிற்பதை போல அன்றைக்கு மேகங்கள் முட்டிமுட்டி விளையாடுமே அந்த எவரெஸ்டின் மீதே ஏறி நின்றான் ஷெர்பா டென்சிங் நார்கே.

இன்னும் கொஞ்சம் தவ்விக் குதித்து ஒரே தாவலில் நிலவையே எட்டிப் பிடித்தான் நீல் ஆம்ஸ்ட்ராங்.

துப்பிய எச்சில் கீழே விழுவதற்கு முன்பே பனிக்கட்டியாகிவிடும் துருவங்களுக்கு. . .

ஆறுமாதம் இரவாகவும் ஆறுமாதம் பகலாகவும் இருக்கும் பூமிப்பந்தின் ஓரங்களுக்கு... பயணம் சென்று வந்தார்கள் ஆமுன்ட்சென் ராபர்ட் பியரி.

இவர்களெல்லாம் இந்த சின்னமனித கூட்டத்தை சேர்ந்தவர்கள்தானே?

நம் புருவங்களை உயர்த்தவைக்கும் காரியங்கள் இன்னும் எத்தனை இருக்கிறது இந்த உலகில்?

கலவரம் ஏற்பட்ட வீதிகளை விடுத்து வேறுவீதிகளுக்கு போக்குவரத்தை திசைதிருப்பிவிடுவதைபோல ரத்த ஓட்டத்தை திசைதிருப்பிவிட்டு இப்போதெல்லாம் சர்வசாதாரணமாய் செய்யப்படும் பைபாஸ் சர்ஜரியைபோல.

இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த மனிதகூட்டம்?

ஒரு கிலோமீட்டர்வரை வாலை நீட்டிக் கொண்டெ வரும் ரயில்கள்.

நகர்ந்து செல்லும் தீவைபோல ஒரு நகரத்தையே உள்ளடக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய கப்பல்கள்.

காகங்களும் கழுகுகளும் ஆச்சர்யமாய் அன்னார்ந்து பார்க்கும் விமானங்கள்.

கண்ணால் கண்டவற்றையும் காதால் கேட்டவற்றையும் பதிவு செய்து கடந்த காலங்களை கிட்டத்தட்ட நிகழ்காலங்களாக மாற்றிவிடும் ஒலி-ஒளி நாடாக்கள்.

இமைக்கும் பொழுதுக்குள் உலகத்தையே சுடுகாடாக்கி விடும் அணுகுண்டுகள்.

ஒருகோடி தகவல்கள் எழுதிவைக்கபட்ட கையடக்க டிஸ்குகள்.

இண்டர்நெட்டுகள்

செல்போன்கள்

இன்னும் இன்னும் இத்யாதிகள்.

இவை எல்லாவற்றுக்கும் பின்னால் கோடானுகோடி மக்களின் உழைப்பு நிச்சயமிருக்கும்.

பத்தே பத்து விரல்களை வைத்துக்கொண்டு இந்த மனிதகூட்டம் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறது!

அந்த நிலாவின்மீது ஏறி நின்றாலும் பூமித்தாய் தன் உச்சிக்கு வகிடெடுத்துக் கொண்டதைப் போல தெரியும் உலகின் மிகப்பெரிய சீனப்பெருஞ்சுவர்.

புதைக்கப்பட்ட பின்பும் விதைக்கப்பட்டதாய் நினைத்து மீண்டும் கம்பீரமாய் எழுந்து நின்ற ஷிரோஷிமா நாகஷாகி.

இப்படி எல்லாமும் மனித உழைப்பால் வந்ததுதான்.

வெறும் மணல்மேடுகளாக இருந்த இந்த பூமிக்கோளின் அமைப்பே கிட்டத்தட்ட மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது உலகில் நீ எதை தொட்டாலும் அதில் மனித உழைப்பு நிச்சயம் கலந்திருக்கும்.

அத்தனைக்கும் காரணம் அந்த பத்து விரல்களுக்கிடையே ஒளிந்திருக்கும் உழைப்பு, மனித உழைப்பு.

எனில் அந்த உழைப்பைவிட மனித ஆராதனைக்குரிய பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.

மனித உழைப்பை பற்றி அல்லாமல் ஒரு கவிஞனின் போற்றத்தக்க பாடுபொருளாக வேறு எது இருக்க முடியும்?

வேறு எதுவும் இருக்க முடியாது.

நிலவைப்பாடுதல்,

மலரைப்பாடுதல்,

இயற்கையை ப்பாடுதல்,

நாணத்தைப்பாடுதல்,

காதலைப்பாடுதல்,

கன்றாவியைப்பாடுதல்,

காறிதுப்பியதைப்பாடுதல் என விரியும் இன்னும் பிற பாடுதல்களெல்லாம் ஒரு கட்டத்தில் நிச்சயம் நீர்த்து போய்விடும்.

பெண்ணின் சரீர மேடுபள்ளங்களைப்பற்றியும்

காதலி தனது நுனிநாக்கால் எனது இமைகளை ஈரமாய் வருடியதைப்பற்றியும்

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகள் பற்றியும்

ஒரு பாத்திரகடையின் பளபளப்பைக்கொண்ட அந்தி வானம் பற்றியும்

மழையில் நனைந்தபின் குடித்த தேநீரைப்பற்றியும்

ஆசூசை மனசோடு கவிதை எழுதி கொண்டிருந்த நான் இப்போது மனித உழைப்பை பற்றி யோசிக்க தொடங்கியிருக்கிறேன்.

அப்பப்பா!

உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக செலவு செய்யமுடியும் உலகின் ஒரே செல்வம் உழைப்புதான்.

அந்த உழைப்பை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாதாரண மனிதனின் அசாதாரண உழைப்பை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கே பட்டாளி மக்கள் துடித்துக் கொண்டிருக்கையில் இங்கே பட்டாம்பூச்சிகளின் துடிப்பை கணக்கிட்டு கொண்டிருக்க இனிமேல் எனக்கு நேரம் கிடையாது.

இனி எனக்கான திசை மனிதன்தான்.

இனி எனக்கான பாடு பொருள் மனிதன்தான்.

மனித உழைப்புதான்.

மனித நேயம்தான்.

மனிதஅன்புதான்.
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by நண்பன் Tue 24 Jan 2012 - 13:40

கவிஞர்கள் எவ்வளவு அருமையாக சிந்திக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் அறிந்தேன் வித்தியாசம் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் படிக்கிறோம் பயன் பெறுகிறோம்
நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by பானுஷபானா Tue 24 Jan 2012 - 15:24

நண்பன் wrote:கவிஞர்கள் எவ்வளவு அருமையாக சிந்திக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் அறிந்தேன் வித்தியாசம் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் படிக்கிறோம் பயன் பெறுகிறோம்
நன்றியுடன்
நண்பன்.
கவிஞர்களே கவனியுங்கள் 111433 கவிஞர்களே கவனியுங்கள் 111433 கவிஞர்களே கவனியுங்கள் 111433
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Tue 24 Jan 2012 - 16:15

பானுகமால் wrote:
நண்பன் wrote:கவிஞர்கள் எவ்வளவு அருமையாக சிந்திக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் அறிந்தேன் வித்தியாசம் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் படிக்கிறோம் பயன் பெறுகிறோம்
நன்றியுடன்
நண்பன்.
கவிஞர்களே கவனியுங்கள் 111433 கவிஞர்களே கவனியுங்கள் 111433 கவிஞர்களே கவனியுங்கள் 111433
@. @. :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by *சம்ஸ் Tue 24 Jan 2012 - 21:03

வித்தியசமான சிந்தனைக்கு பாராட்டுக்கள்.அசத்தல் வரிகள். உங்கள் வரிகளை நேசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by முfதாக் Wed 25 Jan 2012 - 16:10

நல்ல ஒரு கதையாக உருவாக்கி இருக்கலாம் மிகவும் அதிக நீளம் வாசிக்கும் போதே முந்தயது என்ன என யோசிக்க வைக்கிறது,,,
வாசகர்கழுக்கு அத்த்னை பொறுமை இருக்காது என்பது என் கருத்து,,,

நல்ல சிந்தனை,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Wed 25 Jan 2012 - 18:44

முfதாக் wrote:நல்ல ஒரு கதையாக உருவாக்கி இருக்கலாம் மிகவும் அதிக நீளம் வாசிக்கும் போதே முந்தயது என்ன என யோசிக்க வைக்கிறது,,,
வாசகர்கழுக்கு அத்த்னை பொறுமை இருக்காது என்பது என் கருத்து,,,

நல்ல சிந்தனை,,,

ஆலோசனைக்கு நன்றி தோழா.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Wed 25 Jan 2012 - 18:47

*சம்ஸ் wrote:வித்தியசமான சிந்தனைக்கு பாராட்டுக்கள்.அசத்தல் வரிகள். உங்கள் வரிகளை நேசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Wed 25 Jan 2012 - 18:53

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:கவிஞர்கள் எவ்வளவு அருமையாக சிந்திக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் அறிந்தேன் வித்தியாசம் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் படிக்கிறோம் பயன் பெறுகிறோம்
நன்றியுடன்
நண்பன்.
கவிஞர்களே கவனியுங்கள் 111433 கவிஞர்களே கவனியுங்கள் 111433 கவிஞர்களே கவனியுங்கள் 111433
கவிஞர்களே கவனியுங்கள் 111433 கவிஞர்களே கவனியுங்கள் 111433 கவிஞர்களே கவனியுங்கள் 528804

மூவருக்கும் நன்றி.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Wed 25 Jan 2012 - 18:55

நண்பன் wrote:கவிஞர்கள் எவ்வளவு அருமையாக சிந்திக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் அறிந்தேன் வித்தியாசம் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் படிக்கிறோம் பயன் பெறுகிறோம்
நன்றியுடன்
நண்பன்.

மிக மிக நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள் Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum