சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கு களம் அமைக்கிறதா மாலைதீவு? Khan11

வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கு களம் அமைக்கிறதா மாலைதீவு?

Go down

வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கு களம் அமைக்கிறதா மாலைதீவு? Empty வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கு களம் அமைக்கிறதா மாலைதீவு?

Post by முனாஸ் சுலைமான் Sun 12 Feb 2012 - 20:44

இந்து சமுத்திரத்தின் சொர்க்கமென வர்ணிக்கப்படும் தீவுக்கூட்டங்களடங்கிய சின்னஞ்சிறு நாடான மாலைதீவில் முதன்முறையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியான முஹமட் நசீட் பதவிவிலகிய போதிலும் அந்நாட்டில் வன்முறைகள் தொடர்வது சர்வதேச சக்திகளின் அதிகாரப் போட்டிக்குள் அந்த நாடு பகடைக்காயாக பயன்படுத்தப்படுகின்றதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது. சிறப்புக் கண்ணோட்டம்


ஸுன்னி இஸ்லாமிய நாடான மாலைதீவை நவீனமயப்படுத்தும் நோக்கத்துடன் இந்த வருட முற்பகுதியில் முகமட் நசீட் அறிமுகப்படுத்திய மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை பழைமைவாத எதிரணிக் குழுக்கள் கடுமையாக எதிர்ப்பதனால் தோன்றியுள்ளதே தற்போதைய குழப்ப நிலைவரம் என்ற கருத்துகள் தெற்காசியப் பிராந்தியத்தின் பெரிய நாடான இந்தியாவின் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

மாலைதீவை 30 வருடகாலம் ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மைமூன் அப்துல் கையூமின் ஆதரவாளர்கள் தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நசீட்டின் ஆட்சிக்கு எதிரான பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடனான வன்முறைகளுக்கு ஊக்குவிப்பு அளிப்பதே நிர்வாக மாற்றம் ஏற்பட்ட போதும் அங்கு வன்முறைகள் தொடர்வதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் வழிப்போக்குவரத்தின் கேந்திர ஸ்தானமாக இலங்கையைப் போன்று மாலை தீவும் விளங்குவதால் இந்தக் குழப்பத்தை அதிகாரம் மிக்க சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றன என்ற சந்தேகமும் இராஜதந்திர வட்டாரங்களில் காணப்படுகிறது.

குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதியை இராணுவம் கைது செய்தமையும் அதனால் ஏற்பட்ட பொலிஸார் ஆதரவுடனான கலகமுமே நசீட் பதவி விலகி தனது துணை ஜனாதிபதியான டாக்டர் வாகிட் பதவியேற்க வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால்இ புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி விடுவிக்கப்பட்டதுடன்இ வன்முறைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதன் உச்சக்கட்டமாக புதன்கிழமை இரவு இடம்பெற்ற பொலிஸார்ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் பலர் காயமடைந்ததாகவும் அதில் பதவி விலகிய நசீட்டும் ஒருவரெனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் நசீட்டின் மனைவியும் இரு மகள்மாரும் பாதுகாப்புத் தேடி நசீட் நெருங்கிய நட்புறவு கொண்டிருக்கும் இலங்கைக்கு வந்துள்ளதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜனாதிபதியும் நசீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாலைதீவின் புதிய நிர்வாகத்திற்கு வலியுறுத்தியிருக்கிறார். அதேவேளை பதவி விலகிய நீசீட்டும் அவரின் எதிராளிகளும் அமைதி பேண வேண்டுமென சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது.

'மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் பின்வாங்கி அமைதி காக்க வேண்டும். இந்த மோதலினால் எவருக்கும் அனுகூலம் ஏற்படப்போவதில்லை' என்று அமெரிக்கா பிரிட்டன்இ ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா. இந்தியா உட்பட சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது. மாலைதீவில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் வெறும் கலகமே தவிர அதனை அடக்குவதற்கு சர்வதேச தலையீடு குறிப்பாக தெற்காசியாவின் பெரிய நாடான இந்தியாவின் உதவி தேவைப்படுவதாகத் தென்படவில்லை என்று இந்திய ஊடகங்களின் ஒரு பகுதி அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றது.

மாலைதீவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளின் பின்னணியில் இந்தியா சீனா கதையும் இருக்கின்றது என்ற சந்தேகங்கள் எழுப்பப்படாமலுமில்லை. ஆனால் இதில் பிரிட்டனின் 'கதை'யும் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்ற ஊகங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஊகங்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் பிராந்தியத்திலுள்ள பிரிட்டனின் உயர்மட்ட இராஜதந்திரியான இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரி ஒருவர் மாலைதீவின் தலைநகரான மாலேயில் மூன்று தினங்கள் முகாமிட்டிருந்தமை பற்றியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது சிரேஷ்ட அதிகாரி ஒருவரை அங்கு அனுப்பி வைத்தமை குறித்தும் இந்தியாவின் பிரபல ஆங்கில நாளேடு ஒன்று பூடகமாக செய்தியொன்றை வெளியிட்டிருப்பதும் சந்தேகங்களுக்கு எண்ணெய் ஊற்றுகிறது.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலேயில் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பதவி விலகிய ஜனாதிபதி நசீட்டையும் புதிய ஜனாதிபதி வாகிட்டையும் சந்தித்திருக்கிறார். நசீட்டிற்கு பிரிட்டன் ஆதரவளிப்பதாக தோன்றியுள்ள அபிப்பிராயத்தை பிரிட்டிஷ் இராஜதந்திரிகள் நிராகரித்துள்ளபோதும் 'மாலைதீவுடனும் ஜனாதிபதி நசீட்டுடனும் பிரிட்டன் நெருங்கிய நட்புறவை கொண்டிருப்பதாகவும் ஆனால் நசீட் இராஜிநாமா செய்தமை தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கிருப்பதாகவும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகள் மற்றும் ஸ்திரமான அரசாங்கம் குறித்து தாங்கள் கடும் கரிசனை கொண்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.


ஆனால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் சதி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டிருப்பதால் தற்போதைய அரசாங்கத்தில் பணிபுரிய முடியாது என்று தெரிவித்து பிரிட்டனுக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாரா பைசால் இராஜிநாமா செய்திருப்பது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. பாரா பைசால் பிரிட்டனுக்கு மட்டுமன்றி பிரான்ஸ் ஸ்பெய்ன் நோர்வே சுவீடன் டென்மார்க் பின்லாந்து பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கும் தூதுவரென்பதும் அந்தப் பதவிகளையும் அவர் இராஜிநாமா செய்துவிட்டார் என்பதும் இங்கு முக்கியமான விடயமாக உள்ளது.

மாலைதீவில் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மையை நீக்குவதற்கு இங்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் வலுவான கரம் தேவைப்படுகிறது. மாலைதீவு அரசியல் அமைப்பின் பிரகாரம் சட்ட ஆட்சிக்கு மதிப்பளிக்குமாறு அந்நாட்டுக்கு இராஜதந்திர அழுத்தத்தை பிராந்திய நாடுகள் குறிப்பாக பெரிய நாடான இந்தியா கொடுப்பதற்கு தயங்குவதால் மேற்குலகினதும் ஆசியாவின் மற்றொரு வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசான சீனாவினதும் அதிகாரப் போட்டிக்களத்திற்குள் 3 இலட்சம் மக்களைக் கொண்ட அந்த சிறிய நாடு சிக்குண்டு நசுங்கிவிடும் ஆபத்தும் இல்லாமலில்லை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum