சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

 "ஈரானைத் தாக்க தயார் நிலையில் Khan11

"ஈரானைத் தாக்க தயார் நிலையில்

5 posters

Go down

 "ஈரானைத் தாக்க தயார் நிலையில் Empty "ஈரானைத் தாக்க தயார் நிலையில்

Post by Atchaya Sun 26 Feb 2012 - 13:13

நன்றி:
நாகூர்கனி காதர் மொஹிடீன் பாஷா

"ஈரானைத் தாக்க தயார் நிலையில் அமெரிக்க படைகள்: யு.ஏ.இ., பஹ்ரைன் படைகளுக்கு சிறப்பு பயிற்சி.....

பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள ஈரான், அந்தக் கடுப்பில், ஹோர்முஸ் நீரிணையை மூட எத்தனித்தால், அதைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளை அப்பகுதியில் அதிகமாகக் குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

எண்ணெய் நிறுத்தம்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது, அமெரிக்கா மற்றும் மேற்குலகம் சந்தேகம் கொண்டுள்ளன. அதனால், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஈரானும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: தன் மீது மேலும் மேலும் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடி விட நேரிடும் என, ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது. அது நிகழ்ந்தால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்

. படைக் குவிப்பில் அமெரிக்கா: ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டை மிரட்டும் வகையில், அப்பகுதியில் அமெரிக்கா, தனது தரை மற்றும் கடற்படைகளைக் குவிப்பதிலும், வியூகங்கள் வகுப்பதிலும் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது.

போர்க் கப்பல்கள் தயார்: அதன்படி, பெர்ஷிய வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள், நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. கரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. சிறப்புப் பயிற்சிகள்: ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிலும் அமெரிக்க ராணுவம், தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அதோடு, ஐக்கிய அரபு நாடுகளில், அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படைக் குழுக்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆபத்துக்கு உதவுவதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பஹ்ரைன் படைகளுக்கு, இந்த சிறப்பு குழுக்கள் பயிற்சி அளித்து வருகின்றன.ஹோர்முஸ் நீரிணையில், ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் சுற்றி வருவதால், அவற்றைத் தாக்கும் விதத்தில், அமெரிக்க போர்க் கப்பல்களில் ஆயுதங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. உளவு நிறுவனங்களின்தகவல்கள்:

இதற்கிடையில், ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் பிரதிநிதிகள் குழு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து, இரு முறை ஆய்வுகள் நடத்திய பின், வெளியிட்ட அறிக்கைகளுக்கு மாறாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் வேறு விதமான தகவல்களை அளித்துள்ளன.

அவற்றின்படி, அணு ஆயுதங்கள் தயாரிப்பை ஈரான் கைவிட்டு விட்டது. அணு ஆயுதத் தயாரிப்பிற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

அதேநேரம், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்திருப்பதில், அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கு இடையில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால், யுரேனியச் செறிவூட்டலை அதிகரித்த கையோடு, அணு ஆயுதத் தயாரிப்பை மேற்கொள்வது குறித்து, ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை

எனவும், அண்டை நாடுகளை ஒருவித பீதியிலேயே வைத்திருப்பதற்காக ஈரான் இதுபோன்ற தகவல்களைக் கசிய விடுவதாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் கருதுகின்றன. ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை என்ன சொல்கிறது? ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து இதுவரை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரு முறை ஈரானில் ஆய்வுகள் மேற்கொண்டது.இரு முறையும், கோம் நகரின் போர்டோ பகுதியில் உள்ள அணுசக்தி நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொள்ள ஈரான் அக்குழுவை அனுமதிக்கவில்லை என ஐ.ஏ.இ.ஏ., குற்றம்சாட்டியுள்ளது.

அங்கு தான் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான சில குண்டுவெடிப்புகள் நடந்ததாக ஐ.ஏ.இ.ஏ., ஏற்கனவே கூறியிருந்தது. இந்த இரு ஆய்வுகள் குறித்து, ஐ.ஏ.இ.ஏ., வெளியிட்ட 11 பக்க அறிக்கையின் சாராம்சம்: *அணுசக்தி திட்டங்களின் ராணுவப் பரிமாணங்கள் குறித்து ஏஜென்சி கவலை கொண்டிருக்கிறது.

*போர்டோ அணுசக்தி நிலையத்தில் உள்ள 696 மையவிலக்கு விசை கருவிகள் மூலம், 20 சதவீத யுரேனியச் செறிவூட்டலை ஈரான் மும்மடங்கு அதிகரித்துள்ளது. *அதேநேரம் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு உதவும் வகையில், 90 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருகிறது.

*கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, 19.8 கிலோ யுரேனியம், டெஹ்ரானின் ஜாபர் இபின் ஹயான் ஆய்வகத்தில் இருந்தது. ஆனால் அதை விடக் குறைவான யுரேனியம் தான் கணக்கில் காட்டப்பட்டிருந்தது. இதை வைத்து அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்றாலும், இவை ஆயுதப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இந்த முரண்பாடுகள் குறித்து ஈரான் விளக்கம் அளிக்கவில்லை.

*1995 - 2002 காலகட்டத்தில் யுரேனிய செறிவூட்டலில் இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பற்றிய விவரங்களை ஈரான் தரவில்லை.".
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 "ஈரானைத் தாக்க தயார் நிலையில் Empty Re: "ஈரானைத் தாக்க தயார் நிலையில்

Post by முfதாக் Sun 26 Feb 2012 - 15:10

 "ஈரானைத் தாக்க தயார் நிலையில் 111433  "ஈரானைத் தாக்க தயார் நிலையில் 111433  "ஈரானைத் தாக்க தயார் நிலையில் 111433
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

 "ஈரானைத் தாக்க தயார் நிலையில் Empty Re: "ஈரானைத் தாக்க தயார் நிலையில்

Post by முனாஸ் சுலைமான் Sun 26 Feb 2012 - 16:35

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சை யூனினையந்த வேற்படைகள் வந்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 "ஈரானைத் தாக்க தயார் நிலையில் Empty Re: "ஈரானைத் தாக்க தயார் நிலையில்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 26 Feb 2012 - 17:19

மீதமாக உள்ள நாடு ஈரான் அதைனையும் அழித்துவிட்டால் முழு அரபுலகமே அமேரிக்காவினினதும் ஐரோப்பிய ் சாம்ராஜ்யத்தினதும் காலடியில் விழவைத்த பெருமையினை எட்டிவிட துடிக்கிறது போலும் அனைத்துக்கும் வல்லமையான இறைவன் போதுமானவன் அவன் துணைபுரிவான்


 "ஈரானைத் தாக்க தயார் நிலையில் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 "ஈரானைத் தாக்க தயார் நிலையில் Empty Re: "ஈரானைத் தாக்க தயார் நிலையில்

Post by ahmad78 Mon 27 Feb 2012 - 14:59

இதற்கு துணை போகும் அரபு நாடுகளை என்ன சொல்வது. நாளை நம்மையும் அழிப்பான் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கிறார்களே!
என்று இவர்கள் உணர போகிறார்களோ?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 "ஈரானைத் தாக்க தயார் நிலையில் Empty Re: "ஈரானைத் தாக்க தயார் நிலையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum