சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்... Khan11

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்...

3 posters

Go down

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்... Empty கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்...

Post by mufees Fri 23 Mar 2012 - 8:15

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதுமொழி அனைவரும் அறிந்ததே. நோய் எப்படி உண்டாகிறது?

உடல், மனம், உள்ளம் இம்மூன்றும் பாதிக்கப்படும்போது நோய்கள் தானாகவே மனிதனை ஒட்டிக்கொள்கின்றன. இவை சீராக செயல்பட்டால்தான் மனிதன் நோயின்றி வாழமுடியும்.

மனித உடலானது பல கோடி நரம்புகளாலும், தசைகளாலும், இரத்த நாளங்களாலும், எலும்புகளாலும் பின்னிப் பிணையப்பட்டதாகும். அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பிண்டம் என்ற இந்த மனித உடலிலும் அமைந்துள்ளது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

இப்படி இயற்கையால் உருவாக்கப்பட்ட மனித இனம் நோயின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கிறது.

குறிப்பாக முதுகுவலி, கீழ்த்தண்டு முதுகுவலி, கழுத்துவலி, கைகால் மூட்டு வலி போன்றவற்றால் அதிகம் பேர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக நீரிழிவு, இரத்த அழுத்த நோயாளிகள் இத்தகைய நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த வகையில் கழுத்துவலி என்ற தோள்பட்டை வலி நம்மில் அனேக பேரைப் பாதிக்கிறது.

“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்பது சித்தர்களின் கூற்று. மனிதர்களின் இயக்கம் அனைத்திற்கும் முக்கிய காரணமாக செயல்படுவது சிரசு என்ற தலைப்பகுதி தான்.

பிரபஞ்ச சக்திகளை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடைபெறுகிறது. இந்த சிரசில் தான் மனிதனை இயக்கும் ஐம்புலன்களும் அமைந்துள்ளன.

இத்தகைய சிறப்புகள் கொண்ட தலைப்பகுதியை உடலோடு இணைக்கும் பாலம் தான் கழுத்துப்பகுதி. கழுத்துப்பகுதி வழியாகத்தான் உடலுக்கும் சிரசுக்கும் நரம்புகள், இரத்த நாளங்கள் செல்கின்றன.

கழுத்தானது உடலின் முக்கிய உறுப்புகள் செயல்படும் பகுதி எனக் கூறலாம்.

கழுத்தின் மையப் பகுதியில் ஏழு தண்டு வட எலும்புகள் உள்ளன. இவற்றைச்சுற்றி தசைகளும், தசை நார்களும் இணைந்து உள்ளன. மேலும் கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

இப்படி உடலுக்கும் சிரசிற்கும் பாலமாக இருக்கும் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய அன்றாட செயல்கள் அனைத்தும் கடினமாகிவிடுகின்றன.

இது பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே ஏற்படுகிறது. இந்த எலும்பு இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical Spondylosis) என்று ஆங்கில மருத்துவ முறைகளில் கூறுகின்றனர்.

இதை வர்ம மருத்துவத்தில் தோள் பட்டை வாதம் என்று அழைக்கின்றனர். இது குறிப்பாக அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர்களையே அதிகம் பாதிக்கிறது. உடல் உழைப்பின்மை, உடற் பயிற்சியின்மை, சீரற்ற உணவுமுறை, தூக்கமின்மை, இவற்றினாலும் உண்டாகிறது.

கழுத்துவலி வரக் காரணங்கள்

செரியாமை, மலச்சிக்கல், வாயுக்கோளாறுகள், குடல் சூடு, அஸ்த சூடு, மூலச்சூடு இவற்றினாலும்,அதீத சிந்தனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, கோபம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், அதிகமான நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்தல், தொலைக்காட்சி பார்த்தல், போன்றவற்றாலும் இத்தகைய கழுத்துவலி உருவாகிறது.

நேரங்கடந்த உணவு, அளவுக்கதிகமான உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, கோபம், பயம் எரிச்சல் உள்ள போது உண்பது, நீண்ட நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, பித்தத்தை அதிகரிக்கும் உணவுகள், வாயுவை அதிகரிக்கும் உணவுகள் என பலவற்றை உண்பது போன்றவற்றாலும் கழுத்துவலி உண்டாகிறது.

இப்படிப்பட்ட உணவுகளை உண்பதால் குடலில் நீரானது அதிகம் சுரந்து செரியாமை ஏற்படுகிறது. பின் அது மலச்சிக்கலாக மாறுகிறது. இதனால் குடலில் அபான வாயு சீற்றம் கொண்டு குடல் நீரை மேல்நோக்கித் தள்ளுகிறது.

இந்த குடல் நீர் ஆவியாகி சிரசை நோக்கி சென்று அங்கே தங்குகிறது. பின்பு தலையின் பின்பகுதி நரம்புகள் வழியாக கீழ் இறங்கி கழுத்துப் பகுதிக்கு வரும்போது அங்கு தசைகளையும் நரம்புகளையும் சுற்றிக் கோர்த்துக் கொள்கிறது.

பின்பு அது பசைத் தன்மையடைந்து பந்துபோல் கழுத்து தசை எலும்புகளையும், நரம்புகளையும் இறுகச் செய்கிறது. இதனால் கழுத்துப்பகுதி திரும்ப முடியாமல் போகிறது. மேலும் அங்கு கைகளின் நரம்புகள் ஆரம்பிப்பதால் அவைகளும் தோள் பட்டை பாகங்களும் இறுகி வலியை உண்டாக்குகிறது.

உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாகி மேல் சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீரும் ஆவியாக மாறி சிரசை அடையும்போது அவை நீராக மாறி கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இது அவரவர் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு பாதிப்புகளை உண்டுபண்ணுகிறது.

குறி குணங்கள்

தலைவலி, மூக்கில் நீர்வடிதல், மண்டைக்குத்து, பின் கழுத்துப் பகுதியில் பிடிப்பு போன்றவை உண்டாகும். குனிந்து நிமிரும்போது தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றச்செய்யும். உடல் அதிர்ந்து நரம்புகள் இறுகும். சிலருக்கு எழுந்து நடக்கும்போது தலை சுற்றல் மயக்கம் உண்டாகும்.

கழுத்துப் பகுதியில் கைகளின் நரம்புகள், எலும்புகள் ஆரம்பிப்பதால் கைகள் மரத்துப் போகும். சுண்டு விரல் பகுதிகள் செயலிழந்து காணப்படும். மன எரிச்சல் உண்டாகும். எதிலும் விருப்பம் தோன்றாது. அதிக கோபம் உண்டாகும், தூக்கமின்மை ஏற்படும். கண் எரிச்சல் உண்டாகும். அதிகநேரம் படிக்கும்போது கழுத்துப் பகுதியில் வலி உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும்.

கழுத்துப் பகுதி தடித்துக் காணப்படும். மேலும் கழுத்து வலியானது உடற்கூறுகளுக்கு தகுந்தவாறு அறிகுறிகள் தென்படும். வாத உடற்கூறு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திரும்ப முடியாத நிலை உண்டாகும்.

பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் தலைசுற்றல் ஏற்படும்.

கப உடற்கூறு கொண்டவர்களுக்கு கழுத்துப் பகுதி தடித்து உப்புநீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாகத் தோன்றும். மேலும், உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு, ஒருசிலருக்கு ஒற்றைத் தலைவலியை உருவாக்கும்.

இதே நீர், தலையில் (சிரசில்) உள்ள தனஞ்செயனில் நின்றுகொண்டு, சித்த பிரம்மையை ஏற்படுத்தும். இதே நீர், மூக்கில் நீர்வடியச் செய்து அதுவே சைனஸ் ஆக மாறிவிடும்.

இதே நீர் அதிக பித்த நீருடன் கலந்துவிடுமானால், பித்த வாதமாக மாறி ரத்த அழுத்தத்தை உண்டுபண்ணுகிறது.

பொதுவாக எந்த உடற்கூறு கொண்டவர்களும் தோள்பட்டை வலி உண்டானால் அது கழுத்துப்பகுதியில் அதிக வியர்வையை உண்டாக்கும். ஒரு சிலருக்கு கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழ் இறங்கி தோள்பட்டைப் பகுதியில் அதிகமான வலியை ஏற்படுத்தும்.

சில சமயங்களில் இது நெஞ்சுவலி என நினைக்கத் தோன்றும். நெஞ்சு வலிக்கும், தோள்பட்டை வலிக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. இந்த கழுத்து வலியானது நாளடைவில் தலைப் பகுதியான சிரசை ஆடச் செய்துவிடும்.

கழுத்து வலியைப் போக்க

கழுத்து வலியை எக்ஸ் ரே மூலம் படம் பிடித்து பார்த்து உடனே கழுத்துப் பட்டையை அணிய பரிந்துரைக்கின்றனர் இன்றைய நவீன மருத்துவர்கள். ஆனால் இந்திய மருத்துவமுறையில் கழுத்து வலியை முழுமையாகப் போக்க சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன.

அகத்தியர் அருளிய வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் கொடுத்தும் கழுத்து, தோள்பட்டைப் பகுதியில் மூலிகை தைலங்கள் தடவி சீராக கழுத்தை வர்ம முறையில் நீவி விட்டு வந்தால் கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகளைச் சுற்றியுள்ள பசைத்தன்மை இளகி சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். நாளடைவில் வலி நீங்குவதுடன் மேற்கண்ட குறிகுணங்களும் மாறும்.

இதுபோல் சித்தா, ஆயுர்வேத முறைகளிலும் முழுமையாக கழுத்து வலியை குணப்படுத்தலாம்.

கழுத்து வலி வராமல் தடுக்க:

இன்றும் கிராமங்களில் பெண்கள் தண்ணீரை தலையில் சுமந்து செல்கின்றனர். மூட்டை களையும் சுமக்கின்றனர். 100 கிலோ அளவு எடையைத் தாங்கும் கழுத்து. எந்தப் பொருளும் தூக்காதவர்களுக்கு தலையைத் தாங்கமுடியாமல் போவதற்கு காரணம் உணவு முறை மாறுபாடும், முறையான உடல் உழைப்பும் இல்லாததே.

உணவு முறை:

நேரம் கடந்த உணவு, அதீத உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, நொறுக்குத்தீனி, மது, போதைப்பொருள், நீண்ட பட்டினி, வாயு பதார்த்தங்கள் உண்பது. அல்லது அதிக குளிர்ச்சியூட்டும் உணவுகளை உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கலைப் போக்குவதுடன், தினமும் மதிய வேளையில் ஒரு கீரையை சேர்த்து சாப்பிட வேண்டும். இரவில் கீரை, தயிர் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இரவு நேர உணவு மென்மையானதாவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்கவேண்டும். பாதி வயிற்றுக்கு சாப்பிடுவது நல்லது. மேலும் படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும்.

குறிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. இரவு முழுவதும் காலியாக உள்ள வயிற்றில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் வாய்வு தொல்லை உண்டாகும். இதனால் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

பிராய்லர் கோழி, முட்டை, பதப்படுத்தப்பட்ட உணவு, ஊறுகாய் இவற்றை தவிர்ப்பது நல்லது.

உடல் உழைப்பு

உடல் உழைப்பு என்பது பலருக்கு இல்லாமல் போய்விட்டது. காரணம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களே அதிகம் உள்ளனர். இவர்கள் தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி யோகா, உடற்பயிற்சி செய்வது.

யோகா ஆசிரியரை அணுகி முறைப்படி யோகா கற்றுக் கொள்வது நல்லது. மன உளைச்சல், மன எரிச்சல், மனஅழுத்தம், டென்ஷன் இவைகளை குறைக்க தியானம் செய்யலாம்.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது நேரம் எழுந்து நடந்து பின் வேலை செய்யலாம். குறிப்பாக கணினி முன் வேலை செய்பவர்கள் சிறிது ஓய்வெடுத்து பின் வேலை செய்வது நல்லது.

படுக்கை

தலையணை அதிக உயரமில்லாமல் இருக்க வேண்டும். பள்ளம் மேடு இல்லாத படுக்கையிலேயே தூங்க வேண்டும். அதிக குளிர் காற்று உடலில் படும்படியாகத் தூங்கக்கூடாது.

மருத்துவமுறை

கழுத்து வலிக்கு கழுத்துப்பட்டை, அறுவை சிகிச்சை முறை மட்டும்தான் சிகிச்சைமுறை என முன்பு பலர் நினைத்தனர். ஆனால் அறுவை சிகிச்சையில்லாமல் வர்ம பரிகார முறையில் இரண்டு வாரங்கள் தொடர்ந்து உள்மருந்தும், தைலம் தடவி ஒற்றடம் கொடுத்தும் தோள்பட்டை வர்மத்தை , (தோள்பட்டை வாதம்) இயக்கி இறுகிப்போன கழுத்து பகுதிகளை சரிசெய்து வலியைப் போக்கி இரத்த ஓட்டத்தை சீர்படுத்தலாம். இதுவே கழுத்து வலிக்கு சிறந்த சிகிச்சை முறையாகும்.

மேலும் வர்ம மருத்துவத்தில் வயிற்று உபாதைகளுக்கு மருந்து கொடுத்து மீண்டும் கழுத்தில் நீர் கோர்த்துக்கொள்ளாமல் பாதுகாக்கலாம்.

வர்ம சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை மற்றும் கழுத்து பட்டை அணியாமல் கழுத்து வலியை பூரண குணமடைய செய்யலாம்.

மேற்கண்ட முறைகளை முறையாகக் கடைப்பிடித்து கழுத்து வலியிலிருந்து விடுபடலாம்.
[img][/img]
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்... Empty Re: கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்...

Post by பானுஷபானா Sat 24 Mar 2012 - 15:34

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்... 480414 கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்... 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்... Empty Re: கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்...

Post by *சம்ஸ் Sun 25 Mar 2012 - 10:51

பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்... Empty Re: கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum