சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Khan11

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

3 posters

Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by முனாஸ் சுலைமான் Fri 20 Apr 2012 - 12:21

தம்புள்ளையில் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இயங்கிவரும் ஜும்ஆ பள்ளிவாயலின் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கான அழைப்பு ஒன்று பிராந்தியத்தில்இயங்கும் ரங்கிரி FM வானொலி சேவையின் ஊடாக கடந்த சில நாட்களாக விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் அங்குள்ள சகோதரர்கள் சிலரைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.

குறித்த பள்ளிவாயல் ரங்கிரி தம்புளு ரஜமகா விஹாரைக்கு அண்மையில் அமைந்துள்ளதுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த விஹாரைக்கான புண்ணிய பூமிக்கான எல்லைகள் அரச அறிவித்தல் ஒன்றின் ஊடாக குறைக்கப்படுவதற்கு முன்னர் வரை புண்ணிய பூமியின் எல்லைக்குள் அமைந்திருந்தது.

ஆரம்ப காலத்தில் காத்தான்குடியை சேர்ந்த M.O. மாமா என அறியப்படும் வர்த்தகர் ஒருவரால் அன்பளிப்பு செய்யப்பட காணி ஒன்றிலேயே இந்த மஸ்ஜித் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அதனைச் சூழ இருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு சொந்தமான காணிகள் நிதி திரட்டல் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு பள்ளிவாயலுக்கு வக்புச் செய்யப்பட்டன. தேவைக்கேற்ப பள்ளிவாயல் விஸ்தரிக்கப்பட்டது.

தற்போது தம்புள்ளையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவோரும் கடைகளில் பணிபுரிவோரும் என 500க்கும் அதிகமானோர் இந்தப் பள்ளிவாயலில்தான் தமது நாளாந்த தொழுகை மற்றும் ஜும்ஆ கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். இது தவிர இப்பள்ளிவாயலுக்கு அண்மையில் ஜும்ஆ பள்ளிவாயல்கள் ஏதும் நீண்ட தூரத்துக்கு இல்லாத காரணத்தால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பிரயாணிகள் இங்கு ஜும்ஆ தொழுகைக்காக தரித்துச் செல்வது வழக்கம்.

விகாரைக்கு அண்மையில் அமைந்திருந்ததால் நீண்ட காலமாக இப்பள்ளிவாயலுக்கு பெரும்பான்மை கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தல் இருந்தே வந்தது எனினும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இப்பள்ளிவாயல் முறைப்படி பதிவு செய்யப்பட்டே இயங்கி வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளிவாயலின் முன்புறம் கழிவுகளை சேகரிக்கும் தொட்டி ஒன்று நிர்மாணிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது மேற்படி கடும்போக்கு வாதிகளால் விகாரையின் நிர்வாகத்தினருக்கு “புனித பூமியின் எல்லை சுருக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளிவாயலைப் பெருப்பித்து கட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் இயங்கும் ரங்கிரி FM மற்றும் வெளியிடப்படும் பெரும்பான்மை சமயம் சார்ந்த பத்திரிகை ஆகியவற்றில் பள்ளிவாயல் இயங்குவதைக் கண்டித்தும், எமது புண்ணிய பூமியில் இப்பள்ளிவாயல் விஸ்தரிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அதற்கு எதிராக உயிர்த்தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம் என்ற வகையிலுமாக திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், நாளை வெள்ளிக்கிழமை கடைகள் அனைத்தையும் மூடி பள்ளிவாயலின் இயக்கம் மற்றும் விஸ்தரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியில் பெரும்பான்மை இனத்தினர் கலந்து கொள்ளுமாறு இந்த வானொலியில் தொடர்ச்சியாக அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து அச்சமடைந்துள்ள முஸ்லிம்கள் பொலிசில் இது தொடர்பான முறைப்பாடுகளை செய்துள்ளதுடன், இடத்துக்கு வருகை தந்த போலீசார், ராணுவத்தினர் மற்றும் ரகசியப் போலீசார் ஆகியோருக்கு இடம்பெற்ற கட்டுமான வேலை பள்ளிவாயல் விஸ்தரிப்பல்ல என்பதை விளக்கியுள்ளனர்.

தகவல் ஜனாதிபதி செயலகத்துக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழு ஒன்று இடத்துக்கு நேற்று நேரில் விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துள்ளது. இது தொடர்பில் அங்குள்ள முஸ்லிம்கள் நன்றிகளைத் தெரிவிப்பதோடு சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பாதுகாப்புக் கோரி போலீசாரிடம் தனியாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமக்கு பள்ளிவாயல் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றும், எமது பள்ளிவாயலின் இயக்கம் சகோதர இனத்தவர்களுக்கு சிரமமாக இருக்குமாயின் அரசு தலையிட்டு பொருத்தமான இடம் ஒன்றை விகாரையில் இருந்து தூரத்தில் தந்தாலும் தமது கட்டாயக் கடமைகளான தொழுகைகளையும் ஜும்ஆவினையும் அங்கு நிறைவேற்றிக் கொள்ளலாம் என அங்குள்ள சகோதரர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளை வழமை போல் ஜும்ஆ தொழுகை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று தம்புள்ளை மற்றும் அருகில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்று பள்ளிவயலுக்காக துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட்டதுடன் தற்போது பள்ளிவாயலில் நிலவும் பதற்ற நிலை குறித்து ஆராயும் கூட்டம் ஒன்று இடம்பெறுவதாக அறியக்கிடைக்கின்றது.

பிரார்த்தனை மாத்திரமே எமது ஆயுதம் என்றும், இறைவனின் இல்லமான இப்பள்ளிவாயலைப் பாதுகாப்பதற்கான பிரார்த்தனைகளில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு தம்புள்ளையில் தொழில்நிமித்தம் வசித்துவரும் எமது சகோதரர்கள் கண்ணீருடன் எமது சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

2nd Update:

இரவு பத்து மணியளவில் பள்ளிவாயலில் இடம்பெற்ற கூட்டம் நிறைவு பெற்ற போதிலும், சாதகமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்ற தகவல்களே அங்கிருந்து கிடைக்கின்றன.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பல்வேறு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், வெளியூர்களில் இருந்து ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்கள் அழைக்கப்பட்டிருப்பதாகவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமில்லை எனவும் நாளை மாத்திரம் ஜும்ஆ நடத்த வேண்டாம் என்ற தொனியிலும் பாதுகாப்புத் தரப்பினர் பேசியுள்ளனர்.

எனினும் பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட கூட்டத்தில் கலந்து கொண்ட யாரும் ஜும்ஆவை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், அப்படியானால் நீங்கள் ஜும்ஆ நடத்துங்கள் நாங்கள் எங்களால் முடிந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வோம் என்றவாறு கூறி பாதுகாப்புத் தரப்பினர் கூட்டத்தில் இருந்து சென்றுவிட்டனர்.

ஆர்ப்பாட்ட்டம் ஜும்ஆ இடம்பெறும் நேரத்தை இலக்குவைத்தே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இறைவனின் இல்லத்தைப் பாதுகாக்க அனைவரும் பிரார்த்திப்போம்.
நன்றி காத்தான்குடி இன்போ..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty Re: தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by முனாஸ் சுலைமான் Fri 20 Apr 2012 - 14:18

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் 1117568169monk2
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty Re: தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by முனாஸ் சுலைமான் Fri 20 Apr 2012 - 14:19

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Picture-186
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty Re: தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by முனாஸ் சுலைமான் Fri 20 Apr 2012 - 14:20

பள்ளியை உடைக்க வரும் கூட்டமா இது நாய் வேசிகளின் மக்கள் வெறி பிடித்த காடையர்கூட்டம்தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Picture-262
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty Re: தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by முனாஸ் சுலைமான் Fri 20 Apr 2012 - 14:20

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Picture-206
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty Re: தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by முனாஸ் சுலைமான் Fri 20 Apr 2012 - 14:21

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Picture-197
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty Re: தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by mufees Fri 20 Apr 2012 - 15:14

மகிந்த வந்தது நல்லதுக்கா இதுக்க்கு தான்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty Re: தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 20 Apr 2012 - 15:42

என்ன நடக்கிறது இலங்கை மண்ணில் இன அடக்குமுறை இன்னும் ஓய்ந்த பாடில்லை இறைவன் மீது கைவைத்தால் அவர்களுக்கு நாசமே அவன் பார்த்துக்கொள்வான்


தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty Re: தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by முனாஸ் சுலைமான் Fri 20 Apr 2012 - 20:33

அடாவடித்தனமும் காடையர்களின் காட்டுமிராண்டித்தனமும் காவிஉடையின் காவாலி வேலையும் கேவலமான கீள்சாதி பணியும் நன்றாக விளங்குது படைத்தவனின் நாசம் மிக விரவில் கிடைக்க துஆ கேட்போம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம் Empty Re: தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum