சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

கிரீன் டீ Khan11

கிரீன் டீ

Go down

கிரீன் டீ Empty கிரீன் டீ

Post by mufees Sat 30 Jun 2012 - 1:14

கிரீன் டீக்கு பச்சைக் கொடி
காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங். புதிதாகப் பறிக்கப்பட்ட
பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு
நிறத்தில் திரவம் வெளிப்பட்டது. அதைக் குடித்த நங் தாங்கமுடியாத
உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த ஆட்டத்திலிருந்து
தொடங்கியதுதான் கீரின் டீயின் வரலாறு.

சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். “சா’ என்ற
சொல்லிலிருந்தே சாயா.பச்சைத்தேயிலை சாயாவுக்குத் தொடக்கம் சீனாவாக
இருந்தாலும், அது எல்லா இடங்களுக்கும் பரவி பச்சைத் தேயிலை உற்பத்தியில்
ஒவ்வொரு நாடும் போட்டி போடுகிற நிலைக்குக் கொண்டுபோய்விட்டது. இதன்
வரிசையில் மலை மாவட்டமான நீலகிரியில் பிரதானத் தொழிலான தேயிலைத் தொழிலில்
முதலிடத்தில் இருப்பது பசுந்தேயிலை. அதேபோல, தேயிலை வர்த்தகத்தில்
முதலிடத்தில் இருப்பது பச்சைத்தேயிலை.

பசுந்தேயிலை என்பது தேயிலைத்தூள் உற்பத்திக்காக தேயிலைச் செடிகளிலிருந்து
பறிக்கப்படும் கொழுந்து. இதைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி
தேயிலைத்தூளாகத் தயாரிக்கப்படும். ஆனால், பச்சைத் தேயிலை என்பது தேயிலைச்
செடிகளிலிருந்து பறிக்கும் கொழுந்தை அப்படியே உலர வைத்து பின்னர்
பயன்படுத்துவது.
காலையில் தினமும் கண்விழித்தவுடன் கும்பிடும் தெய்வம் இது. இன்னும் பொருத்தமாகக் கூற வேண்டுமானால் கண் விழிக்கும் முன் மூக்கால் கண்டு (நுகர்ந்து) கும்பிடும் தெய்வம் என்றும் கூறலாம். எத்துனை முக்கியமானதாக இது இருந்திருந்தால் இதற்கென டீ டைம் என்று இரு நேரத்தை காலையிலும் மாலையிலும் ஒதுக்கி வைத்திருப்பர் எல்லா வேலை இடங்களிலும். எந்த இடத்திற்குப் போனாலும் எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இது கிடைக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வாறு எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இது. வாழ்வில் மக்கள் உற்சாகமாகவும் ஊக்கமாகவும் செயல்பட உதவிடும் காரணிகளில் முக்கியமானது இது.. இல்லம் தொடங்கி, பணி புரியும் அலுவலகங்கள் மட்டுமன்றி ஓட்டுநர், நடத்துநர், இழுப்பவர்(வண்டி) சாதி மதம் பாட்டாளி, பணக்காரன் என்று பேதமின்றி அனைவருக்கும் சக்தி கொடுக்கும் ஒரே பாணம் இது. முக்கியமாகப் பாட்டாளிகளின் ஊக்க டானிக் இது. அலுவலங்களில் பலரின் வெளிநடப்புக்கும் அதே வேளையில் விரைவான பணி முடிப்புக்கும் பெரிதும் உதவுவது இதுவே. அதுதான் டீ என்று நம்மால் விரும்பி அழைக்கபடும் தேயிலை.
தேயிலையின் தோற்றம் சீனா, பர்மா என்று கருதப்பட்டாலும் இது உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
ஆண்டுக்கொரு முறை விளையும் தாவர வகையான். இதன் ஃபேமிலி பெயர் கெமிலா சினசிஸ் (Camellia sinensis). இதில் சுவை என்னவென்றால் இந்தப் பெயர் ஒரு கிறித்துவ பாதிரியாரின் பெயர். செரொக் காமெல் என்ற இப்பாதிரியார் தேயிலையை உருவாக்கவும் இல்லை. கண்டு பிடிக்கவும் இல்லை. பின் இவரின் பெயர் எதற்கு? தாவரவியல் அறிஞரான இவர் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டும் வகையில் இவர் பெயர் அதிகமாக விளையும் இந்த தாவர இனத்திற்கு வைக்கப்பட்டது.
டீ இலை அதாவது தேயிலை ஒன்றுதான் ..ஆனால் அது வெள்ளை தேயிலை, கருப்புத் தேயிலை , மஞ்சள் தேயிலை, பச்சைத் தேயிலை என்று இதற்கும் வண்ணம் பூசி அழைப்பர்..
இது ஆண்டுக்கொரு முறை விளையும் பச்சைத்தாவர வகை. பச்சைத் தேயிலை என்பது டீ என்று மூச்சுக்கு முந்நூறு முறை நம்மால் அழைக்கப்படும் சாதாரனத் தேயிலையின் வேறுபட்ட பக்குவ நிலையே ஆகும் பொதுவாக பறிக்கப்படும் தேயிலை சரியாக உலர்த்தப்படாவிட்டால் அதில் உள்ள ஆகிஸிஜன் வெளியேறி அதில் உள்ள குளோரோஃபில் எனப்படும் பச்சயம் அழிந்து விடும். அப்போது அதிலிருந்து டானின் என்றதொரு இரசாயானம் வெளிவருகிறது. இதனால் டீ ஒரு விதமான துவர்ப்புச் சுவையை அடைகிறது. இதனை தமிழில் நொதித்தல் என்பர்.
நாம் அயல் நாட்டில் இருந்து கொண்டு வரும் கீரீன் டீயை மிகச்சுவையானது என்று அருந்த விரும்புகிறோம். அதில் பிற தேயிலையைப் போல நொதித்தல் இருக்காது. அதற்கு முன்னரே அதன் இலைகளை இளம் குருத்துகளுடன் மிதமாகச் சூடாக்குவர். இதனால் இதில் உள்ள நொதிகளின் நிலை மந்தமாக்கப்படுவதால் இயல்பாக இருக்கும் துவர்ப்புச்சுவை குறைந்து ஒரு கசப்புச்சுவை வருகிறது. இதில் உள்ள ஃபாலி ஃபினாலின் சிதைவது இல்லை.
மூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பு அளித்து உற்சாகமூட்டுவது ஒருபுறம் இருக்க, இது இதயத்தைக் காக்கிறது என்பது இன்றைய மருத்துவ ஆயவு கண்டறிந்த உண்மை. அதனால் உயிர்காக்கும் பாணம் இது என்றும் தயங்காமல் கூறலாம் என்கின்றனர் கிரீக் நாட்டின் மருத்துவ ஆய்வுக்குழு. பச்சைத்தேயிலயில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைபுரிகிறது. .
நம் உடலுக்குத்தேவையான ஆண்டி ஆக்ஸெண்ட் கிரீன் டீயில் அதிகமாக இது உள்ளது. இது வைட்டமின் சியில் இருந்து கிடைப்பதைவிடவும், வைட்டமின் டியில் இருந்து கிடைப்பதைவிடவும் முறையே 100 சதவீதமும் 25 சதவீதமும் அதிகம் கிடைக்கிறதாம். இரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவைக் கட்டுப்படுத்தி (LDL கெட்ட கொழுப்புச்சத்து) நல்ல கொழுப்புச்சத்து அளவை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இதயத்தைப் பசுமையாக வைத்திருக்க உதவுகிறது இந்த பச்சை தேயிலை.
கிரீன் டீயில் ஃபாலிஃபினால்கள் அதிகம் கிடைக்கின்றன. இவை டியூமர் எனப்படும் மூளைக்கட்டி செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
கேன்ஸர் செல்களின் டிஎன் ஏ உருவாக்கத்தைத் தடுப்பதுடன் நல்ல திசுக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கேன்ஸர் திசுக்களை அழிக்கின்றன.
கிரீன் டீயில் உள்ள ஃபாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து சர்க்கரையை மெதுவாகச் சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
இது மட்டுமல்ல இது எலும்பு நோய்களுக்கும் அழும்பாக பயன் தந்தே தீர்வேன் என்கிறது. ஒரு நல்ல செய்தி ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வாதம் இதைக்கண்டால் ஓடிப்போகும் என்கிறார்கள்.
எலும்பு என்று கூறியவுடன் அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது என்ன? பற்கள்தானே. ஆம் அதற்கும் மருந்தான ஃபுளூரைடு பற்சிதைவு, பற்குழி ஆகியவற்றில் இருந்து பற்களைக் காக்கிறது.
இதைக் குடிப்பவர்களுக்குப் பசி வராது. அப்படியென்றால் என்ன? மாவுப்பொருள்களின் செரிமானம் குறைவு படுகிறது என்பதே. இதனாலும் ஒரு பயன் உண்டே. உடல் எடை கூடும் (குண்டு நோயும் மன்னிக்கவும் அது நோய் அல்ல) விளைவும் இதனால் கட்டுப்படுத்தப் படுகிறதாம்.. இதனால் தான் பச்சை தேயிலை அதிகம் அருந்தும் வெள்ளை அழகிகள் (Forigners) பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்களோ!!
பொதுவாக காபி குடிப்பவர்களை நாம் காபி குடிப்பதை விட தேநீராவது அருந்துங்கள் என்போம். அதிலும் பிற தேயிலையை விட பச்சைத் தேயிலை வயதாவதையும் தடுக்கும் அதியனின் நெல்லிக்கனி போன்றது. ஒளவை இளைமையாக இல்லை. வாழ்நாள் மட்டும் அந்த நெல்லிக்கனி கூட்டியது என்றறிகிறோம். ஆனால் இந்த இலை நெல்லி அதாவது தேயிலை இளமையையும் அழகையும் கூட்டுகிறதாம். முகப்பொலிவை அதிகரிக்கிறதாம்.
ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியும் உண்டு. காந்தியடிகள் உப்புச்சத்தியாகிரகம் செய்வதற்கு முன்னோடியாக இருந்தது பாஸ்டன் தேநீர் விருந்து என்பர். அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது தேயிலைகளைக் கப்பல்களில் இருந்து துறைமுகத்திற்கு இறக்கிக் கொண்டு வராமல் கடலில் தூக்கி வீசினராம். இந்த உத்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உப்புச் ச்த்தியாகிரகமாக மாற்றம் பெற்றது என்பர்..
கிரீன் டீ Reen-tea-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum