சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Khan11

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:37

இன்றைய காலத்தில் பி.பி எனப்படும் இரத்த அழுத்தத்தினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வயதானவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது இளம் வயதினரும் அதிகமாக இந்த பிரச்சனைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் காரணம் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் போன்றவைகளே ஆகும். இத்தகைய மாற்றங்கள் வருவதற்கு, வெளிநாட்டில் இதுவரை பின்பற்றி வந்தவைகள், இந்தியாவில் புகுந்து ஃபேஷன் என்ற பெயரில் அனைவரின் மனதிலும் பதிந்து, இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுள்ளன.

என்ன தான் மாற்றங்கள் வந்தாலும், அதை அப்படியே நாம் பின்பற்றி வேண்டியதில்லை. இருப்பினும், அவற்றை பின்பற்றி, இப்போது வருந்துவதில் பலனில்லை. இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், மற்ற நோய்களை நாம் தேடிப் போக வேண்டியதில்லை, அவை தானாகவே நம் உடலுக்கு வந்துவிடும். அதிலும் குறிப்பாக இதய நோய். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமலிக்க, மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலேயே, இயற்கை முறையில் ஒருசிலவற்றை செய்தாலே, இரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடலாம். அது என்னவென்று பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:38

மனஅழுத்தம்


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298105-stress-450


மன அழுத்தம் மற்றும் இறுக்கம் கூட இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே மன அழுத்தம் ஏற்பட்டால், சிறிது நேரம் எதனால் இது ஏற்படுகிறது என்று யோசித்து பார்க்க வேண்டும். அவ்வாறு யோசிக்கும் போது எதனால் ஏற்படுகிறது என்று தெரியும் போது, அதனை எப்படி சரிசெய்து மனஅழுத்தத்தை குறைக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். சொல்லப்போனால், மன அழுத்தம் ஏற்பட்டாலே மூச்சை உள் வாங்கி, வெளிவிடுதல், யோகா, தியானம் போன்றவற்றை செய்தால், மனமானது சற்று ரிலாக்ஸ் ஆகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:38

உடல் எடை


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298140-belly-600


இரத்த அழுத்தம் உடல் எடையைப் பொறுத்தது. உடல் எடை அதிகமானால், இரத்த அழுத்தமும் அதிகமாகும். ஆகவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:39

உடற்பயிற்சி


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298168-exercise1-600


தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், இரத்த அழுத்தம் குறையும். நேரமில்லையெனில் 10 நிமிடமாவது செய்ய வேண்டும். அதை விட்டு, எப்போது செய்தாலும் ஒன்று தானே என்று வார இறுதியில் கடுமையான முறையில் உடற்பயிற்சி செய்தால், அதனால் உயிருக்கு பாதிப்பு தான் ஏற்படும். எனவே எந்த ஒரு செயலையும் அவசரமாக ஒரே நேரத்தில் செய்வதை தவிர்த்து, பொறுமையாக செய்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இரத்த அழுத்தமும் குறையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:39

உணவுகள்


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298194-food-600


இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், உண்ணும் உணவுகளில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது 14 மில்லிமீட்டர் Hg குறையும். அதிலும் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகுந்த நன்மையைத் தரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:40

உப்பு


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298222-salt-600


உப்பில் சோடியம் அதிகம் இருக்கும். ஆகவே உணவில் உப்பை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் உப்பு அதிகம் உள்ள எந்த ஒரு உணவையும் அறவே தவிர்ப்பது நன்மையைத் தரும். அவ்வாறு உப்பை உணவில் குறைத்து வந்தால், இரத்த அழுத்தமானது 2-8 மில்லிமீட்டர் Hg குறையும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:40

இடுப்பு


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298290-waist-600


முக்கியமாக இடுப்பின் சுற்றளவை அடிக்கடி அளவிட வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமான எடையை இடுப்பில் தூக்கினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். ஆகவே எப்போதும் தொப்பை போடாதவாறு, பார்த்துக் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:41

ஆல்கஹால்


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298333-alcohol-600


ஆல்கஹாலில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதுவும் அளவாக ஒரு நாளைக்கு ஒரு பெக் குடித்தால், இரத்த அழுத்தமானது 2-4 மில்லிமீட்டர் Hg குறையும். ஆனால் அதுவே அளவை மீறினால், உயிருக்கு ஆபத்தை தான் ஏற்படுத்தும். உடனே குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், தினமும் ஒரு பெக் அடிக்க வேண்டாம். அத்தகையவர்கள் குடிக்காமல் இருப்பதே நல்லது. இது குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் தான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:41

புகைப்பிடித்தல்


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298365-cigarette-600


இரத்த அழுத்தத்தை அளவுக்கு அதிகமாக எகிறிக் கொண்டு செல்வதில் சிகரெட் தான் முதலிடம் பிடிக்கும். ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் இரத்த அழுத்தத்தை 10 மில்லிமீட்டர் Hg அதிகரிக்கும். மேலும் புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருந்தாலும், இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோயை ஏற்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:42

காப்ஃபைன்


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298415-coffee-600


காப்ஃபைன் உள்ள உணவுப் பொருட்களாலும் சிலருக்கு இரத்த அழுத்தம் சீராக அதிகரிக்கும். இதனை தெரிந்து கொள்ள காப்ஃபைன் குடிப்பதற்கு முன்னும், பின்னும் இரத்த அழுத்தத்தின் அளவை அளவிடும் போது 5-10 மில்லிமீட்டர் Hg அதிகரித்திருந்தால், உடனே காப்ஃபைன் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்திட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:42

பரிசோதனை


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298449-checkup-600


அடிக்கடி இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும். அதிலும் மருத்துவர் வீட்டிற்கு அருகிலேயே இருந்தால், வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை சென்று அதனை பரிசோதித்து, என்ன செய்ததால் குறைந்தது என்று தெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இல்லையெனில் வீட்டிலேயே இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவியைக் கொண்டு, பரிசோதிக்கலாம். ஒரு வேளை இரத்த அழுத்தம் குறையாமலேயே இருந்தால், உடலில் வேறு ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அப்போது நிச்சயம் அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:43

குடும்பம் மற்றும் நண்பர்கள்


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! 12-1355298485-friends-600


குடும்பம் மற்றும் நண்பர்களிடம் மனம் விட்டு பேசி, மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். ஏனெனில் மனமானது அதிக டென்சன், கோபம், அதிக உணர்ச்சிவசப்படுவதால், இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இவற்றிற்கு யாரிடமும் சரியாக மனம் விட்டு பேசாமல் இருப்பதும் ஒரு காரணம், ஆகவே எப்போதும் தனியாக இல்லாமல், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

http://tamil.boldsky.com/health/wellness/2012/ways-control-blood-pressure-without-002442.html#slide29925


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!! Empty Re: மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum