சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!  Khan11

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!

Go down

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!  Empty நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!

Post by சாமி Sun 23 Dec 2012 - 21:15

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! - தொடர் பதிவு

வே என்பது ஓரெழுத்து வேர்ச் சொல். அதிலிருந்து வேதல், வேய்தல், வேலி போன்றச் சொற்கள் கிளைத்து எழும். வேகவைக்கும்போது பாத்திரத்தின் மேலே ஒரு தட்டை வைத்து மூடுவோம். கூரை வேயும் போது சுவர்களின் மீது ஓலை, ஓடு போன்றவற்றால் மூடுவோம். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை மற்றவரிடமிருந்து மறைக்க இடும் அமைப்பை வேலி என்கிறோம்.

அது போல பல உள்ளுறைகளை மறைத்து மூடிச் சொல்வதை வேதம் என்று ஆன்றோர் கூறினர். வேய்ந்தது வேதம் எனப்பட்டது. ஆகவே அது தூய தமிழ் வேர் ஒன்றினைக் கொண்ட தூய தமிழ்ச் சொல்.

இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.

“அற்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை
சொற்றமிழ் பாடுகென்றான் தூமறை பாடும் வாயான்”

என்பது பெரியபுராண வாக்கு. அதாவது தூயமறைகளை எல்லாம் இறைவன் தம் வாயினாலேயே பாடியருளினான் என்கிறார் சேக்கிழார். உடனே நமக்கு சேக்கிழாருக்கு முன்னால் அப்படியாரும் சொன்னார்களா என்று கேட்கத் தோன்றலாம்.

(தொடரும்)

சாமி
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!  Empty Re: நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!

Post by சாமி Sun 23 Dec 2012 - 21:15

சங்க காலத்தில் கூட வேதம் இறைவனால் பாடப்பட்டது என்றே கூறப்பட்டது. புறநானூற்றில் 166 ஆவது பாட்டில் இது அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.

“நன்றாய்ந்த நீணிமிர் சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”

என்று அப்பாடல் தொடங்குகிறது. சிவபெருமானை முதுமுதல்வன் என்று அப்பாடல் கூறுகிறது. அந்த முதுமுதல்வனாகிய சிவபெருமானின் திருவாயிலிருந்து மறைகள் நீங்காமல் வந்து கொண்டிருக்கிறதாம்.

பெருமான் பாடியதுதான் தமிழ் வேதம்; அதுவே நமக்கு வேதம்.

திருஞானசம்பந்தக் குழந்தை ஒரு வினா எழுப்புகிறது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த பெருமானே! ஏதோ வேதம் சொன்னாயே? என்ன என்று சேய்ஞலூரில் கேட்கிறது.

“ நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே! “

இது சம்பந்தர் திருசேய்ஞலூரில் பாடியருளியது. சேய்ஞலூர் முருகப்பெருமான் குழந்தையாக இருந்து வணங்கிய தலம். அத்துடன் சண்டீசர் குழந்தை வணங்கிய தலம். இங்கே பார்த்தீர்களானால் அருமறை சொன்னதென்னே என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பதில் இப்பாடலில் இல்லை.

(தொடரும்)

சாமி
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!  Empty Re: நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!

Post by சாமி Sun 23 Dec 2012 - 21:16

பதிலை வயதான பெரியவர் என்று அழைக்கப்படுகிற சிவபெருமான் தலமான திருமுதுகுன்றப் பதிகத்தில் கூறுகிறார் சம்பந்தர்.

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தானினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே

அதாவது ‘மாலடைந்த நால்வர் கேட்க’ என்று சேய்ஞலூர் பாடலில் குறிப்பிட்ட சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வரைக் குறிப்பிட்டவர், இந்தப் பாடலில் ‘அழிந்த சிந்தனை அந்தணாளர்’ என்று அவர்களைக் குறிப்பிடுகிறார்.

அங்கே அவர்களுக்கு சொன்ன அருமறை என்னே என்று வினாவி அவாய் நிலையாக (SUSPENSE) விட்டவர் இங்கே அது என்ன என்று விளம்புகிறார். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்றார். இந்த நான்கும் தமிழர்க்கே உரித்தானது என்பதை எல்லா அறிஞர்களும் கூறுகின்றனர். சிவஞான முனிவரும் தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தியுரையில் இவை தமிழுக்கே உரிய பகுப்பு என்று கூறுகிறார்.

எனவே சிவபெருமானால் அருளப்பட்ட அறம், பொருள், இன்பம், வீடு என்பதுதான் நம்முடைய வேதம். இதுதான் நம்முடையது. சுயம்புவான வடமொழி ரிக், யசுர், சாமம், அதர்வணம் வேதத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.
(தொடரும்)

சாமி
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!  Empty Re: நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!

Post by சாமி Sun 23 Dec 2012 - 21:17

எண்ணார்மும் மதிலெய்த விமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார்நீ றணிமார்பன் கள்ளின் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.


பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும் இசையமைப்போடு கூடிய அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்மறைகளைப் பாடி மகிழும் மேலான யோகியும், கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த மார் பினனும், பெண் ஆண் என இருபாலாகக் கருதும் உமைபாகனும் ஆகிய பெருமான், கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

முதல் திருமுறை - சம்பந்தர் அருளியது - 119 திருக்கள்ளில் - பாடல் என் 3

சாமி
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!  Empty Re: நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum