சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

நாளை ஆருத்ரா தரிசனம் Khan11

நாளை ஆருத்ரா தரிசனம்

Go down

நாளை ஆருத்ரா தரிசனம் Empty நாளை ஆருத்ரா தரிசனம்

Post by rammalar Thu 27 Dec 2012 - 13:46



நாளை ஆருத்ரா தரிசனம் Tamil_News_large_614545



சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதியில், இன்று ஆருத்ரா அபிஷேகமும்,
நாளை ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடத்தப்படும். தமிழகத்தில்
நடராஜருக்கு பஞ்சசபைகள் உள்ளன. திருவாலங்காட்டில் ரத்தினசபை, சிதம்பரத்தில்
பொன்னம்பலம், மதுரையில் வெள்ளியம்பலம், திருநெல்வேலியில் தாமிர சபை,
குற்றாலத்தில் சித்திர சபை ஆகியவற்றில் நடராஜர் திருநடனம் ஆடுகிறார்.

ஆருத்ரா தரிசன விழாவை நடத்துவது, ஒரு பெண்மணியின் பதிபக்திக்காக என்பது
உங்களுக்குத் தெரியுமா! காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சாதுவன்
பணக்காரன். அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன்
இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச்
சென்றான். நாடகத்தில் நடித்த நடிகையுடன்அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது.
அவனிடமிருந்து பொருளைக் கறந்த நடிகை ஓடிவிட்டாள். தன் மனைவிக்கு இழைத்த
துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன்
வீட்டிற்குக் போகவில்லை. மீண்டும் சம்பாதிக்கத் திட்டமிட்டான்.

அப்போது, வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம்
வந்தனர். அவர்களிடம் வியாபார நுட்பங்கள் குறித்து பேசினான். அவர்களுக்கு
சாதுவனைப் பிடித்துப் போனது. தங்களுடன் அவனை பாய்மரக்கப்பலில் அழைத்துச்
சென்றனர். செல்லும் வழியில் புயலில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கி விட்டது.
வியாபாரிகளை முதலைகள் விழுங்கி
விட்டன. சாதுவன் மட்டும் எப்படியோ தப்பித்து, பலகை ஒன்றின் மீதேறி
படுத்துக் கொண்டான். கணவன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லபடியாக இருக்க
வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அதன் பலனாக,
சாதுவன் கரை ஒதுங்கினான். சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில்
மூழ்கியதும் ஆதிரையை எட்டியது.

தன் கணவன் இறந்துவிட்டான் என முடிவு செய்த ஆதிரை தீ மூட்டி உயிர் துறக்க
முடிவெடுத்தாள்.”" சிவனே! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக
வரவேண்டும்,” என்று வேண்டியபடி தீயில் குதித்தாள். ஆனால், கற்புக்கரசியான
அவளைத் தீ சுடவில்லை. அவளுடைய கற்புத்தீ தான் எரியும் நெருப்பைச் சுட்டது.
தனக்கு ஏதும் நேராததால் ஆதிரைக்கு வருத்தம் உண்டானது. அப்போது வானில்
அசரீரி ஒலித்தது.”" ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும் வருவார்,”
என்றது.

இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை அந்நாட்டு அரசரிடம் காவலர்கள்
ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை சாதுவன் எடுத்துச் சொன்னான். அரசர் உண்ணக்
கொடுத்த மாமிசம், கள் ஆகியவற்றை சாதுவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசர்
சாதுவனிடம்,”"நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தான் கடவுள் மதுவையும்,
மாமிசத்தையும் படைத்திருக்கிறார்.
அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?,” என்று கேட்டார். சாதுவன்
ஏற்கனவே மது, மாதுவிடம் சிக்கி வருந்தியவன் அல்லவா?அவன்
அரசரிடம்,”"உயிர்களைக் கொல்லக்கூடாது. மாமிசம் உண்பது கூடாது. இலை,
காய்கறி, கனிவகை, தானியம், கிழங்கு ஆகிய உணவுகளை நமக்காக வழங்கியுள்ளார்.

இந்தபிறவியில் ஒரு ஆட்டைக் கொன்றால் அந்த ஆடு அடுத்த பிறவியில் நம்மைக்
கொல்லும்! கள் குடிப்பதால் சண்டைகள் உருவாகி அது கொலையில் முடியும்,” என்று
எடுத்துக்
கூறினான். இதைக்கேட்ட மன்னர் மனம் திருந்தினார்.சாதுவனை அவனது சொந்த
ஊருக்கு ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய சாதுவன்
மனைவியுடன் கூடி வாழ்ந்து மகிழ்ச்சி அடைந்தான். அவளது கற்புத்திறனை
பாராட்டிய சிவன், அவளை வானமண்டலத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தார்.
அதை தனது நட்சத்திரமாகவும் ஏற்றார். அந்த நாளில் ஆனந்த நடனமாடி
பக்தர்களுக்கு பரவசமூட்டுகிறார்.

-

=====================

நன்றி: தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum