சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

முத்தான கருத்துக்கள் மூன்று Khan11

முத்தான கருத்துக்கள் மூன்று

3 posters

Go down

முத்தான கருத்துக்கள் மூன்று Empty முத்தான கருத்துக்கள் மூன்று

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 21:20

ரசனை!

ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும்
ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.

ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா,
இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான்
வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து, ""நன்றாகப் பரீட்சை
எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.

மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம்
கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது
தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.

""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு
மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும்
சிரித்துவிட்டாள்.

-ப.சோமசுந்தர வேலாயுதம், தென்காசி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்தான கருத்துக்கள் மூன்று Empty Re: முத்தான கருத்துக்கள் மூன்று

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 21:22

சொல்நயம்!

ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.

அவர் அந்த இளைஞனை நோக்கி, ""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.

இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.

அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்தான கருத்துக்கள் மூன்று Empty Re: முத்தான கருத்துக்கள் மூன்று

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 21:22

நம்பிக்கை!

உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.

இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி, ""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.

அதற்கு அலெக்ஸாண்டர், ""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.

-கலவை பா.வரதன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்தான கருத்துக்கள் மூன்று Empty Re: முத்தான கருத்துக்கள் மூன்று

Post by கைப்புள்ள Sun 31 Mar 2013 - 0:31

:/ :/
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

முத்தான கருத்துக்கள் மூன்று Empty Re: முத்தான கருத்துக்கள் மூன்று

Post by ansar hayath Sun 31 Mar 2013 - 0:36

:/
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முத்தான கருத்துக்கள் மூன்று Empty Re: முத்தான கருத்துக்கள் மூன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum