சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

நுரையீரல் புற்றுநோய் Khan11

நுரையீரல் புற்றுநோய்

3 posters

Go down

நுரையீரல் புற்றுநோய் Empty நுரையீரல் புற்றுநோய்

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 12:54

புற்றுநோய் வகைகளை அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல் படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.

நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 9000 cubic feet காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக்குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் முடியும். கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும்.
நுரையீரல் புற்றுநோய் Lungs-cast-sb9815-ga


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய் Empty Re: நுரையீரல் புற்றுநோய்

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 12:58

அல்வியோலை எனப்படும் காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த இரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.
ஆல்வியோலை சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும் என்பதை கீழ்க்காணும் படம் சொல்கிறது.
நுரையீரல் புற்றுநோய் Alveoli
பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கஸை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.

படங்கள் gray’s anatomy, National geopgrphy தளத்தில் இருந்து பெறப்பட்டவை.

புற்றுநோய்க்கான புற காரணிகள்:External Risk Factors காற்றில் உள்ள மசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர்காலத்தில் இது போன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது.

எனக்கு நினைவுதெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன் படுத்தி இருக்கிறோம். காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெரோசின் என்று பல பொருட்களை பயன் படுத்தி இருக்கிறோம். இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும் காணலாம்.
இதற்கு அடுத்த படியாக கட்டிடங்கள் கட்டிய பின் வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்குகள் என்று பலவும் உடல் நலத்தை பாதிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய் Empty Re: நுரையீரல் புற்றுநோய்

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 13:00

வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்ஸைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, இன்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.

ஒருவர் புகை பிடிக்கும் போது அதிலிருந்தும், புகப்பவரின் சுவாச காற்றிலும் இருந்த்து வெளிப்படும் புகை second hand smoke என்று அழைக்க படுகிறது. இதன் விளைவால் வருடத்திற்கு 150, 000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப் படுவதோடு ஆண்டொன்றுக்கு 3000 குழந்தைகள் இறக்கிறார்கள். உலகளைவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களைத்தரலாம்.

புகைபிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு passive smokers என்றே அழைக்கிறது. சிகரெட் புகையில் 4000 விதமான புற்று நோய், மற்றும் வெகு துன்பம் தரக் கூடிய உடல் நலனுக்கு பாதகம் விளைவிக்கை கூடிய வேதி பொருட்கள் கலந்திருக்கின்றன. அடிக்கடி காது வலி, ஆஸ்த்மா என ப்படும் மூச்சிழுப்பு, பொதுவான அலர்ஜி,இருமல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது.

கருவுற்ற பெண்மணியின் அருகில் புகை பிடிப்பதால், வருடத்திற்கு அமெரிக்காவில் 18, 600 குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கின்றன. 300000 குழந்தைகளுக்கு இருமலும், bronchitis உம் வருகின்றது. 1.6 மில்லியன் குழந்தைகள் காதில் கிருமிகள் வளர்வதால், காது வலியும் சீழும் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. வெளியே பால்கனியில் புகை பிடித்தாலும், கார் கராஜில் பிடித்தாலும் உள்ளே வந்த 5 மணித்துளிகளில் புகைப்பவரின் சுவாசத்திலிருந்து இந்த வேதி பொருட்கள் வெளிப்படுகிண்றன. இப்போதெல்லாம் இங்கு குழந்தைகள் காப்பகத்தில் புகைப்பது குற்றம். சட்டப்படி அது தடை செய்ய பட்டு விட்டது. இதை விட காரில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் புகைக்கும் போது பின் இருக்கையில் உள்ள குழந்தை அ ந்த காற்றை சுவாசிக்க நேருகிறது.

இதை தடுக்க காரில், வீட்டில் புகைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் குறைந்த அளவில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளுவது சிறந்தது. புகைப்பவர் அருகில் குழந்தைகளை இருக்க விடாதீர்கள்.

புற்றுநோய்க்கான சில அக காரணிகள் (internal risk Factors): 1. நுரையீரலில் உள்ள அல்வியோலையை சுருங்கி விரிய செய்ய உதவும் எலாச்டின் எனப்படும் பொருள் குறைவு

2.அதன் பசைத்தன்மையை குறையாமல் வைத்திருக்கும் ஈச்ட்ரோஜனின் ரிசப்டார் அளவு குறைதல்

3.தோல் வளர்ச்சி புரதம் (Epidermal growth factor)ளவில் மாற்றம்

4.மரபணுவால் புற்றுநோய்க்கான susceptibility இருத்தல் ஆகியவை ஆகும். இது பற்றி விரிவாக பிறகு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய் Empty Re: நுரையீரல் புற்றுநோய்

Post by ஹம்னா Sat 5 Feb 2011 - 17:06

##* ##*


நுரையீரல் புற்றுநோய் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய் Empty Re: நுரையீரல் புற்றுநோய்

Post by ஹனி Sat 5 Feb 2011 - 20:12

சிறந்த கட்டுரைக்கு நன்றி ரசிகன்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய் Empty Re: நுரையீரல் புற்றுநோய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum