சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Khan11

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

4 posters

Go down

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Empty ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 19:44

ஆந்திரா ஸ்டைல உணவுகள் என்றாலே மிகவும் காரமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்களில் இருந்து தண்ணீர் வரும் அளவு காரமானது இருக்கும். ஆனால் அதற்கேற்றாற் போல் ஆந்திரா ஸ்டைல் உணவுகளின் சுவைக்கு நிகர் எதுவும் இருக்காது.

இப்போது அத்தகைய ஆந்திரா ஸ்டைல் அசைவ குழம்புகளுள் ஒன்றான மட்டன் குழம்பை எப்படி எளிதில் வீட்டில் செய்வது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து அசத்துங்கள்....

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  21-muttoncurry-600

தேவையான பொருட்கள்:

மட்டன் - 700 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 10
பச்சை ஏலக்காய் - 5
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 5
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனை போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சீரகம், கசகசா, மல்லி, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் சோம்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும்.

பின் வேக வைத்துள்ள மட்டன் கலவையை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடி, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!!

இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

http://tamil.boldsky.com/recipes/non-veg/hot-n-spicy-andhra-style-mutton-cur-003065.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Empty Re: ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Post by பானுஷபானா Sun 21 Apr 2013 - 19:51

இதெல்லாம் நம்ம ஊர்லயும் செய்யுற முறை தானே

ஏலக்காய் சேர்க்கமாட்டோம் காரம் கம்மியா செய்வோம்

இப்போ மட்டன் விக்கிற விலையில :,;:
சிக்கன்ல செய்து பார்க்கிறேன் #+
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Empty Re: ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 21:49

பானுகமால் wrote:இதெல்லாம் நம்ம ஊர்லயும் செய்யுற முறை தானே

ஏலக்காய் சேர்க்கமாட்டோம் காரம் கம்மியா செய்வோம்

இப்போ மட்டன் விக்கிற விலையில :,;:
சிக்கன்ல செய்து பார்க்கிறேன் #+
1கிலோ வெறும் QR:15/- மட்டும் அக்கா :. மட்டன் எனக்கு ரொம்ப பிடிக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Empty Re: ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Post by பானுஷபானா Mon 22 Apr 2013 - 4:20

இங்கே கிலோ 450-00 தெரியுமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Empty Re: ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Post by *சம்ஸ் Mon 22 Apr 2013 - 7:27

பானுகமால் wrote:இங்கே கிலோ 450-00 தெரியுமா
இலங்கையில் 1 கிலோ 900 முதல் 1000 வரை விற்க்கிறது அக்கா தெரியுமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Empty Re: ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Post by பானுஷபானா Mon 22 Apr 2013 - 7:43

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:இங்கே கிலோ 450-00 தெரியுமா
இலங்கையில் 1 கிலோ 900 முதல் 1000 வரை விற்க்கிறது அக்கா தெரியுமா?

அப்போ சாப்பிட வேணாம் பார்த்துகிட்டே இருங்க போதும் :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Empty Re: ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Post by *சம்ஸ் Mon 22 Apr 2013 - 8:10

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:இங்கே கிலோ 450-00 தெரியுமா
இலங்கையில் 1 கிலோ 900 முதல் 1000 வரை விற்க்கிறது அக்கா தெரியுமா?

அப்போ சாப்பிட வேணாம் பார்த்துகிட்டே இருங்க போதும் :”
நல்ல ஐடியா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Empty Re: ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Post by எந்திரன் Mon 22 Apr 2013 - 15:40

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:இங்கே கிலோ 450-00 தெரியுமா
இலங்கையில் 1 கிலோ 900 முதல் 1000 வரை விற்க்கிறது அக்கா தெரியுமா?

அப்போ சாப்பிட வேணாம் பார்த்துகிட்டே இருங்க போதும் :”
நல்ல ஐடியா!
:” :” :’
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு  Empty Re: ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum