சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி Khan11

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி

Go down

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி Empty கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி

Post by நண்பன் Thu 9 May 2013 - 0:04

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 223 தொகுதிகளில் அந்தக் கட்சி 120 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. காங்கிரஸ் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைத்தன. காங்கிரஸ் சார்பில் தரம்சிங் முதல்வரானார்.

ஆனால் தேவ கெளடா தந்த தொல்லையால் அந்தக் கூட்டணி முறிந்தது. இதையடுத்து பா. ஜ. க.வும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சி அமைத்தன குமாரசாமி முதல்வரானார். ஆனால் தனது பதவிக் காலம் முடிந்து முதல்வர் பதவியை பா. ஜ. க.வின் எடியூரப்பாவிடம் தர குமாரசாமி மறுத்ததையடுத்து 2007 ஆம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்தது. பா. ஜ. க. இதையடுத்து நடந்த தேர்தலில் பா. ஜ. க. வெற்றி பெற்றது.

ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எடியூரப்பா முதல்வரானார். இதையடுத்து ‘ஒபரேசன் கமலா’ என்றொரு அராஜகத்தை நடத்தி பல்வேறு கட்சிகளில் இருந்தும் எம். எல். ஏ.க்களை விலைக்கு வாங்கியது. இது தான் பா. ஜ. க.வின் முதல் தவறு. இதைத் தொடர்ந்து பா. ஜ. க. ஆட்சிக்கு ஏராளமாக செலவு செய்த ரெட்டி சகோதர்களின் அராஜகம் ஆரம்பித்தது.

மாநிலத்தின் கனிம வளத்தை சுரண்டி கொள்ளையடித்தனர். இதனால் அவர்கள் மீது வழக்குப் பதிவாகியது இதற்கிடையே எடியூரப்பாவுக்கு ரெட்டிகளிடமிருந்து எதிர்ப்பு ஆரம்பித்தது இதனால் ஆட்சி தள்ளாடியது. ஆனாலும் அதை எடியூரப்பா சமாளித்தார். இதைத் தொடர்ந்து பா. ஜ. க. அமைச்சர்கள் எடியூரப்பா அவரது குடும்பத்தினர் வரிசையாக நில மோசடி வழக்குகளில் சிக்கினர்.

மாபெரும் ஊழல்கள் நிறைந்த ஆட்சியாக எடியூரப்பா அரசு மாறியது. எடியூரப்பாவில் ஆரம்பித்து ரெட்டிகள், அமைச்சர்கள் என பலரும் சிறைக்குச் சென்றனர். இதனால் அவரை ஆட்சியை விட்டு பா. ஜ. க. நீக்க வேண்டிய நிலை வந்தது. ஆனல் பா. ஜ. க அவரிடம் பணிந்து நடந்து கொண்டது. அவர் சொன்னபடி சதானந்த கெளடாவை முதல்வராக்கியது.

பின்னர் அவரை நீக்க வைத்த எடியூரப்பா ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கினார். பின்னர் தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கேட்டார் எடியூரப்பா. இந்தமுறை பா. ஜ. க. தலைமை பணியவில்லை. கட்சியின் மாநிலத் தலைவர் பதவியைக் கேட்டார் அதையும் தர பா. ஜ. க. தலைமை மறுக்கவே கர்நாடக ஜனதா கட்சியை ஆரம்பித்தார்.

ஒரு வழியாக 5 வருட பா. ஜ. க.வின் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் வெல்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல் தான் தேர்தலை சந்தித்தது. பா. ஜ. க. நம்பியதைப் போலவே அவர்களுக்கு இந்தத் தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க் கட்சியாக இருந்தும் எந்த வகையிலும் உருப்படியான காரியம் எதையும் செய்யாத காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.

பா. ஜ. க.வை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் காங்கிரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில் கெளடாவின் கட்சி அவரது சமூகத்தினரான ஓக்கலிகா மக்கள் அதிகம் வசிக்கும் காவிரிப் படுகை மாவட்டங்களில் மட்டும் வழக்கம் போல் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மாநிலத்தின் முதல் அமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில மூத்த தலைவர் சித்தராமையா மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி மல்லிகார் ஜூன் கார்கே, தற்போதைய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் முதல் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து களமிறங்கி உள்ளனர். இவர்களில் யாரை முதல் மந்திரியாக நியமிப்பது என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் 14வது இடத்தை பிடித்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum