சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Today at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01

» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

 நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!  Khan11

நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!

Go down

 நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!  Empty நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!

Post by நண்பன் Sat 5 Feb 2011 - 14:38


இணைய வானொலி என்பது வானலையூடு ஒலிபரப்பாகும். வழமையான வானொலி சேவை போன்றதே. இங்கு வானொலிப் பெட்டிக்குப் பதிலாக கணனியூடாக ஒலிபரப்புக்குச் செவிமடுக்கிறோம். இணைய வானொலி ஒலிபரப்புக்களைக் கேட்பதற்குப் புதிதாக எந்த வன்பொருளோ மென்பொருளோ நிறுவ வேண்டியதில்லை. இணைய உலாவி கொண்டு (Web Browser) உரிய இணைய தளத்தை அணுகுவதன் முலம் இணைய வானொலிகளைச் செவிமடுக்கலாம். இந்த ஒலிபரப்பு முறையை வெப் காஸ்டிங் (Web Casting) எனப்படுகிறது.

இணையத்தில் ஒலி வடிவில் உள்ள பைல்களைப் பகிர்ந்து கொள்ள போட் காஸ்டிங் (Podcasting) எனும் ஒலிபரப்பு முறை பயன்பாட்டில் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். போட்காஸ்டிங் முறையில் ஒலிபரப்பைக் கேட்பதாயின் உரிய பைலை முழுமையாக எமது கணனிக்கு டவுண்லோட் செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக போட்காஸ்டிங் முறையில் ஒரு பாடலைக் கேட்க விரும்பினால் அந்தப் பாடலை முழுமையாக எமது கணனிக்கு டவுன்லோட் செய்த பிறகே கேட்க முடியும்.

ஆனால் இணைய வானொலி என்பது போட்காஸ்டிங் போன்றதல்ல. இணைய வானொலி சேவையில் ஸ்ட்ரீ மிங்(Streaming) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்ட்ரீ மிங் தொழில் நுட்பத்தில் ஒலி வடிவிலுள்ள ஒரு பைலானது முழுமையாக எமது கணனியை வந்தடையு முன்னரே வந்து சேரும் அளவிற்கேற்ப ஒரு ஒலிப் பகுதியை கேட்கக் கூடியதாயிருக்கும்.

முழுமையாக அந்த பைல் டவுன்லோட் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இணைய வானொலி (ஓடியோ) மட்டுமன்றி இணைய தொலைக்காட்சியும் (வீடியோ) இவ்வாறே இந்த ஸ்ட்ரீமிங் தொழில் நுட்பத்தில் ஒளிபரப்பப்படுகிறது.

இணைய வானொலி சேவைகள் நேரடியாக ஒலிபரப்பப்பட்டாலும் ஒலிபரப்பும் சேர்வரின் Encoder, Server, Player செயல் திறனுக்கேற்ப அதனைக் கேட்பவரை குறைந்தது. 10 வினாடிகள் தாமதித்தே சென்றடையும்.

கணனி வலையமைப்பில் டேட்டா வானது சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டே பயணம் செய்கிறது. தனது இலக்கை அடைந்த பின்னர் வந்து சேர்ந்த பகுதிகளை பிரவுசர் ஒன்று சேர்க்கும் செயற்பாடு காரணமாகவே இந்த நேர இடைவெளி ஏற்படுகிறது.

அநேகமான இணைய வானொலிகள் தரை வழி ஒலிபரப்பை நடாத்தி வரும் வானொலி நிலையங்களினாலேயே நடாத்தப்படுகின்றன.

இதன் மூலம் அவை தமது வழமையான எல்லைகளைத் தாண்டி சர்வதேச அளவில் வானொலி ரசிகர்களைப் பெற்றுக் கொள்கின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!  Empty Re: நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!

Post by நண்பன் Sat 5 Feb 2011 - 14:38

நமது நாட்டிலும் தென்றல், சக்தி மற்றும் பல வானொலி நிலையங்கள் இணையத்தினூடும் தமது சேவையை வழங்குகின்றன. அதேவேளை, இணையத்தினூடு மட்டும் ஒலிபரப்பாகும் நம் நாட்டு இணைய வானொலி சேவைகளுக்கு உதாரணமாக akkniஜீசீ, strஜீசீ என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இணைய வானொலிகளைச் செவிமடுக்க அதிகவே ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. அத்தோடு கணனியில் ஸ்ட்ரீமிங் ஒலிபரப்பைச் செவி மடுப்பதற்கான மென்பொருளும் அவசியம். இதற்கு விண்டோஸ் மீடியா ப்ளேயர் மென்பொருளே போதுமானது. எனவே, அதற்கு புதிதாக வேறு மென்பொருள்களை நிறுவவேண்டியதில்லை.

இணைய வானொலி ஒலிபரப்பில் ரிnணீoனீலீr, ஷிலீrvலீr, ஜிlayலீr என மூன்று வெவ்வேறு விதமான மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

என்கோடிங் மென்பொருள் ஒலியை (டேட்டாவை) சுருக்கி சேர்வருக்கு ஷிtrலீaசீing வடிவில் அனுப்புகிறது. அதனைப் பெற்றுக் கொள்ளும் சேவர் மென்பொருள் அனை பயனர் கணனியிலுள்ள ப்லேயர் மென்பொருளுக்கு (ஞிலீlay) மறுபடியும் அனுப்பி வைக்கிறது.

இதற்குப் பயன்படுத்தப்படும் ரேடியோ சேர்வரானது இணைப்பை ஏற்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒலிபரப்பை வழங்கக் கூடிய செயல்திறனுடையதாக கூடிய பேன்ட்வித்தைக் (கிanனீwiனீth) கொண்டிருக்க வேண்டும்.

ஒரு வானொலி நிலையம் ஆரம்பிப்பதென்பது இலகுவான விடயமல்ல. அரசிடம் முறையான அனுமதியைப் பெறுவதோடு அதற்கு அதிக மூலதனமும் அவசியம்.

ஆனால், உங்கள் வானொலிக் கனவை நனவாக்குகிறது. இணைய வானொலி. வெறும் இரண்டோ அல்லது முவாயிரம் ரூபாவை செலவிட்டு அல்லது எந்த செலவுமே இல்லாமல் இலவசமாகவே ஒரு இணைய வானொலி சேவையை இரண்டொரு நிமிடங்களில் ஆரம்பித்து விடலாம்.

இலவசமாக ஒரு இணைய வானொலி சேவையை ஆரம்பிப்பது எப்படி? அதற்கு உங்களிடம் ப்ரோட்பேண்ட் இணைய இணைப்புடன் கூடிய ஒரு கணனியிருந்தாலே போதுமானது.

முதலில் www.winamp.com இணைய தளத்திலிருந்து Win Amp 5.5 பதிப்பை டவுண்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். (பைல் அளவு 10 MB)

அடுத்து www.shoutcast.com இணைய தளத்திலிருந்து வின் ஏம்பிற்கான shoutcast pluging ஐ டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள் (பைல் அளவு2 MB).

அடுத்து http://www. listen 2 myradio.com இணைய தளத்திற்குச் சென்று இலவச ரேடியோ சேர்வரில் ஒரு கணக்கொன்றை ஆரம்பித்து விடுங்கள். இலவச சேர்வரின் மூலம் குறைந்தது 10 பயனர்களுக்கு (users) மட்டுமே சேவை வழங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்னும் அதிக பயனர்கள் அவசியம் எனின் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கணக்கொன்றை ஆரம்பித்ததும் உங்களுக்கு நிலையான (Static IP Address) ஒரு ஐபி முகவரி வழங்கப்படுவதோடு இணைய வானொலியைக் கேட்பதற்கு பயனர்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரியும் (URL) உங்களுக்கு வழங்கப்படும்.

அடுத்து வின் - ஏம்ப் ப்ரோக்ரமைத்திறந்து கொள்ளுங்கள். வின் - ஏம்ப் விண்டோவில் ரைற் க்ளிக் செய்து வரும் மெனுவில் Options> Preferences> DSP Effect ஊடாக Nullsoft Shoutcast தெரிவு செய்யத் தோன்றும் சவுட் காஸ்ட் சோர்ஸ் விண்டோவில் Input டபில் க்ளிக் செய்து ன்புட் டிவைஸாக வின் - ஏம்ப் தெரிவு செய்யுங்கள். மைக் மூலம் இன்புட் செய்வதாயின் Sound Card Input தெரிவு செய்து அதன் கீழ் Microphone தெரிவு செய்யுங்கள்.

அடுத்து Encoder டபில் க்ளிக் செய்து Encoder Type ஆக MP 3 என்கோடர் தெரிவு செய்யுங்கள். என்கோடர் செட்டிங்ஸில் விரும்பிய அளவினைத் தெரிவு செய்யலாம். இணைய வேகம் மந்தமாயின் 24 Kbps தெரிவு செய்வது பொருத்தமானது.

பின்னர் Output டபிள் க்ளிக் செய்து Address எனுமிடத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐபி முகவரியையும் உரிய போட் (Port) இலக்கம் மற்றும் உங்கள் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட்டையும் வழங்கி Connect பட்டனில் க்ளிக் செய்து விட்டு வின் - ஏம்பில் பாடலையும் ஒலிக்கச் செய்யுங்கள்.

இப்போது உங்கள் இணைய வானொலி செயற்பட ஆரம்பித்திருக்கும். அடுத்து பிரவுசரைத் திறந்து உங்கள் வானொலிக்கென வழங்கப்பட்டிருக்கும் இணைய முகவரியூடாக அதனைப் பரீட்சித்துப் பாருங்கள்.

இணைப்பு சரிவர இயங்காவிட்டால் Listen 2myradio.com தளத்தின் உங்கள் கணக்குக்குரிய கண்ட்ரோல் பேண்லுக்குள் நுழைந்து ரேடியோவை ஓன் செய்து விட்டு மறுபடி முயற்சிங்கள்.

இறுதியாக ஒரு வார்த்தை தொழில் ரீதியாக ஒரு வானொலி சேவையை ஆரம்பிக்க வேண்டுமாயின் அதற்கு அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். எனினும் அனுமதி பெறாமலேயே இதனை ஒரு பொழுது போக்காகப் பரீட்சித்துப் பார்க்கலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum