சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

நம்ம குடும்பம் நல்ல குடும்பம் Khan11

நம்ம குடும்பம் நல்ல குடும்பம்

4 posters

Go down

நம்ம குடும்பம் நல்ல குடும்பம் Empty நம்ம குடும்பம் நல்ல குடும்பம்

Post by *சம்ஸ் Mon 3 Jun 2013 - 18:51

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் எனும் ஒப்பந்தத்தின் மூலம் கணவன் மனைவியாக இல்வாழ்வை துவங்குகின்றனர். அனைவருமே மகிழ்ச்சியாக, நிம்மதியாக குதூகலமாகவே குடும்பம் நடத்த ஆசைபடுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் நல்ல குடும்பமாக மிளிர்ந்திட கணவன் மனைவியின் ஒத்துழைப்பு மிக மிக அத்தியாவசியம்.

ஒரு பெண் திருமணமானவுடன் தன் பெற்றோர் உற்றாரை விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கிறாள். அவளது எல்லா அபிலாசைகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது ஒரு நல்ல கணவனின் கடமை.

உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவிமார்களிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவிமார்களிடத்தில் நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: திர்மிதி

ஆண்களே! நீங்கள் உங்கள் மனைவிக்கு நல்ல கணவனாக விரும்பினால் இறையச்சம் உடையோராகி விடுங்கள். இந்த இறையச்சமே உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உள்ள உறவை வளப்படுத்தி மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அவரவர் பொருளாதாரத்தின் அடிப்படையில் செய்து கொடுத்துமனைவியரை உடலாலோ மனதாலோ நோவினை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் குடும்ப பராமரிப்பு, மார்க்க வழிகாட்டுதல், ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் முக்கியமாக பொருளீட்டுதல் இவையாவும் இன்றியமையாததாகும்.

கடினமான வீட்டு வேலைகளில் மட்டுமல்லாமல், பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு தயார் செய்வதிலும், அவர்களது கல்வியறிவு, நல்லொழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் பங்கேற்க வேண்டும்.மனைவி ஏதாவது தவறு செய்தால் தனிமையிலன்றி பிறர் முன்னிலையில் கண்டிக்கக் கூடாது.

மனைவியை பொறுத்தமட்டில் கணவனது தேவைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த முயற்சியுடன் ஆர்வமாக செயல்படவேண்டும். வேலை முடிந்து திரும்பி வரும் கணவனை சுத்தமான உடை, அழகிய தோற்றம், மற்றும் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி மார்க்க விஷயங்கள், அதாவது தொழுகையை பள்ளிவாசலில் சென்றுதான் தொழவேண்டும், வீட்டில் தொழ அனுமதிக்க கூடாது. மார்க்கத்துக்கு முரணான செயல்களை ஆதரிக்கக் கூடாது. புகை, மது போன்ற கேடுதரும் பழக்க வழக்கங்களை அடியோடு நிறுத்தி விட முயற்சிக்க வேண்டும். கணவர் ஏதும் மன உளச்சலில் இருக்கும் போது ஆறுதலான வார்த்தைகளை கூறி உற்சாக மூட்ட வேண்டும். கணவனின் குடும்பத்தாரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?’ அண்ணலார்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்’.
ஆதாரம்: நஸயீ

பொதுவாக கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒருவரையொருவர் பிறரிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது. எந்த ஒரு விடயமாக இருந்தாலும்கணவன் மனைவி இருவருமே கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டும். கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ உடல் நலம் இல்லாத போது மிகுந்த கனிவுடன் உடனிருந்து கவனிக்க வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். வாய் வார்த்தைகள் சற்று தடிப்பதாக தெரிந்தவுடன் உஷாராகி சகஜ நிலைக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும்.
ஊடல் இல்லாத வாழ்க்கை ஏது! ஊடலுக்கு பின்பு தான் ஒருவரையொருவர் புரிந்துணர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டு உறவில் நெருக்கம் இன்னும் அதிகமாகும். தவறு செய்தது யார் என்கிற ஆராச்சியில் ஈடுபடாமல் தாமாகவே வலிய சென்று பேசி சமாதனமாகி விடவேண்டும். இருவருமே சமவுரிமை உள்ளவர்கள் என்கிற மனோபாவத்தை வளர்த்துக் கொண்டால் குடும்பத்தில் சந்தோஷம் தழைத்தோங்கி விடும்.

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் (அல்குர்ஆன் 2:187)

தம்பதிகள் சந்தோஷமாக வாழ்வது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல. அவ்விருவரின் குடும்பத்தார் பிள்ளைகள் அனைவருக்குமே சந்தோஷத்தை கொடுக்கும். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி சகிப்புத் தன்மையுடனும், பொறுமையுடனும் விட்டுக் கொடுத்து வாழ்வதை பார்க்கக் கூடிய பிள்ளைகள் இத்தகைய நற்பண்புகளை தங்கள் வாழ்விலும் கடைபிடித்து நன்மை அடைவார்கள். அமைதியான சூழ்நிலை நிலவக் கூடிய இல்லறத்தில் வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கி நம்மகுடும்பம் எப்போதுமே நல்ல குடும்பமாக பரிணமிக்கும்.

Jazzakallah - உம்மு ஸஹீரா



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நம்ம குடும்பம் நல்ல குடும்பம் Empty Re: நம்ம குடும்பம் நல்ல குடும்பம்

Post by Muthumohamed Mon 3 Jun 2013 - 19:15

பயனுள்ள பதிவு :/ :/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நம்ம குடும்பம் நல்ல குடும்பம் Empty Re: நம்ம குடும்பம் நல்ல குடும்பம்

Post by rammalar Mon 3 Jun 2013 - 23:05

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நம்ம குடும்பம் நல்ல குடும்பம் Empty Re: நம்ம குடும்பம் நல்ல குடும்பம்

Post by ahmad78 Tue 4 Jun 2013 - 16:56

அருமையான தகவல்கள்

பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்ம குடும்பம் நல்ல குடும்பம் Empty Re: நம்ம குடும்பம் நல்ல குடும்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum