சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

 இயற்கை மருத்துவம்........ Khan11

இயற்கை மருத்துவம்........

Go down

 இயற்கை மருத்துவம்........ Empty இயற்கை மருத்துவம்........

Post by jafuras Mon 15 Jul 2013 - 13:26

இயற்கை மருத்துவம்........



1. எனிமா

மனிதனுடைய அனைத்து நோய்களுக்கு காரணம் மலச்சிக்கல்; மலச்சிக்கலுக்கு காரணம் சமைத்துண்ணும் பழக்கம். சமைத்துண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள நம்மில் பலர், பழக்கம், சூழல் நித்தம் சமையலுணவிலிருந்து விடுபடமுடியவில்லை. 

எனவே அவர்கள் அவ்வப்போது அவசியம் மேற்படும் பொழுது, ' அஹிம்சா எனிமா குவளை ' ஒன்று வாங்கி, அதன் குவளையில் பச்சை தண்ணீர் ஊற்றி நிரப்பி, அதில் இணைக்கப்பட்டுள்ள நாசிலை மலக்குடல் துவாரத்தில் குனிந்தபடி செருகி, குவளையிலுள்ள தண்ணீர் முழுவதும் மலக்குடலுக்கு சென்ற பின் நாசிலை எடுத்து விட்டு, சிறிது நேரம் உலாவி, பின் மலம் கழிப்பதன் மூலம் மலச்சிக்கலை நீக்கலாம்.

காய்ச்சல், தலைவலி ஏற்படுங்கால் இவ்விதம் சில தடவைகள் எனிமா கருவி மூலம் மலத்தை வெளியேற்றி காய்ச்சல், தலைவலியிலுந்து நிவாரணம் பெறலாம். இது போல் சருமநோய், சளி, முதலிய அனைத்து நோயாளிகளும் துவக்கத்தில் அடிக்கடி எனிமா குவளை மூலம் வெளியேற்றி, நோய் நீக்கம் பெறலாம். வீட்டிற்கு வீடு 'எனிமா குவளை ' இருந்தால் , முதலுதவி சிகிச்சை பொன்று பயன் தரும். சிறு குழந்தை முதல் பெரியோர் வரை இம்முறையை பின்பற்றி மலத்தை நீக்கலாம்.எனிமா பச்சைத் தண்ணீர் மூலம் எடுப்பதனால் உடல் சூடு தணிந்து அடிவயிறு முதலியன குளிர்ச்சியடைந்து இதத்தை தரும்.

2. ஈரத் துணிப் பட்டி

காய்ச்சல், தலைவலி ஏற்படும் பொழுது, சுத்தமான நீண்ட வெள்ளைத்துணியை எடுத்து பச்சைத் தண்ணீரில் நனைத்து மண்டையில் நெற்றியினங மீது ' பெல்ட் ' போன்று நீளமாக நெற்றி முழுவதும் மறையும் வண்ணம் போட வேண்டும். இது போன்று அடிவயிற்றில் தொப்யுள் பகுதியிலும் நீண்ட ஈர வெள்ளைத் துணிப் பட்டியைப் போட்டு அரைமணி நேரம் படுத்து ஓய்வெடுத்தால், காய்ச்சல், தலைவலி நீங்கும். உடல் சூடு தணியும்.

3. ஈரமண் துணிப் பட்டி

காய்ச்சல், தலைவலி ஏற்படுங்கால் நெற்றியிலும், அடிவயிறு, தொப்புள் மீதும் நீண்ட ஈர வெள்ளை துணியில் ஈரக் களிமண் அல்லது ஈரப் புற்று மண்ணை நீளமாக இட்டு, மண் வெளியே தெரியாதவாறு துணியை மடித்து ஈரமண் துணிப் பட்டி போட்டு அரை மணி நேரம் ஓய்வெடுத்தால் உடல் நலம் பெறும்.

4. இடுப்புக் குளியல்

அகன்ற, உயரம் குறைந்த, வட்டப் பாத்திரத்திற்குள் மலச்சிக்கல், காய்ச்சல், அல்சர், தலைவலி உள்ள நபர் சாய்வு நாற்காலியில் அமருவதுபோல் அமரவும். பாத்திரத்தின் ஒரு விளிம்பு பக்கம் சாய்ந்து உட்காரவும். எதிர்விசை விளிம்பின் வெளியே காலை மடித்து தொங்க போடவும். கால் பாதம் தரையில் படாதவாறு ஒரு மரத் துண்டை வைத்து அந்த மரத் துண்டின் மீது கால் பாதங்களை வைக்கவும். பின்னர் அப்பாத்திரத்தில் பச்சைத் தண்ணீர் ஊற்றச் சொல்லவும். தொப்புளுக்கும் பாதி தொடைக்கும் இடையிலுள்ள அடிவயிற்றுப் பகுதி மட்டும் தண்ணீரில் நனையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
தொப்புளுக்கு மேலேயும் பாதித் தொடைக்கும் மேலேயும் தண்ணீர் ஏறாதவாறு தண்ணீர் ஊற்றினால் போதும். 

பின்னர் அரைமணி நேரம் அப்பாத்திரத்தில் அடிவயிறு மட்டும் தண்ணீரில் நனைந்தவாறு அமர வேண்டும்.ஒரு துணியை அத்தண்ணீரில் நனைத்து அடிக்கடி கையினால் அந்த ஈரத் துணியைஅடிவயிற்றில் நன்கு அழுத்தித் தேய்த்து வரவும்.
இவ்வாறு இடுப்புக் குளியல் எடுத்தால் அடி வயிற்றுப்பகுதி குளிர்ந்து மலம் நன்கு வெளியேறும். காய்ச்சல்,தலைவலி தணியும்.
இடுப்புக் குளியல் எடுப்பதற்கென்றே பிரத்தியேகமாக துத்தநாகத் தகட்டில் இடுப்புக் குளியல் தொட்டி தயாரிக்கப்பட்டு, புதுக்கோட்டை இயற்கை மருத்துவமனையிலும், பெங்களூர் இயற்கை மருத்து சங்கத்திலும், கோவை மருதமலை காந்திஜீ இயற்கை மருத்துவமனையிலும் விற்கப்பட்டு வருகிறது.

5. முதுகுத் தண்டுக் குளியல்

முதுகுத்தண்டு நோய் சிக்கல் உள்ளவர்கள் முதுகுத் தண்டுக் குளியல் குளியக்கென்று புதுக்கொட்டை, பெங்களூர், கோவை ஆகிய நகரங்களில் துத்தநாகத் தகட்டில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட தொட்டியை வாங்கி, அத்தொட்டிக்குள் மல்லாந்து முதுகெலும்புப் பகுதி மட்டும் தொட்டியின் அடிபாகத்தில் படும்படியாகப் படுத்துக் கொண்டு, முதுகெலும்பு பகுதி மட்டும் நனையும் வண்ணம் நீர் ஊற்றி அரைமணி நேரம் படுத்திருக்க வேண்டும். தலை உச்சியில் ஈர வெள்ளை துணிபோட்டு மூட வேண்டும். 
இவ்வாறு அவ்வப்போது முதுகுத் தண்டுக் குளியல் எடுத்து வந்தால் முதுகெலும்பு நோய் சிக்கல் தீரும்.

6. மண் குளியல்

தொழுநோய், சோரியாசிஸ், வெண்குஷ்டம் போன்ற சரும நோயுடையவர்கள் மதியம் பனிரெண்டு மணிக்கு புற்று மண் அல்லது பசையுள்ள செம்மண் அல்லது களிமண்ணை நீரில் நன்கு குழைத்து, குழைத்த மண்ணை உச்சிமுதல் உள்ளங்கால் வரை நன்குத்தடவி கட்டியாக பூசிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைமணி நேரம் வெயிலில் உட்கார்ந்திருக்க வேண்டும். உடலில் ஜட்டி மடடும் அல்லது கோவணம் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். வெயிலில் அரை மணி நேரம் இருந்த பின் நிழலில் அரை மணி நேரம் இருக்க வேண்டும். 
பின்னர் பச்சைத் தண்ணீரில் குளித்தால் உடலிலுள்ள துர் நீர்கள் உறிஞ்சப்பட்டு வெளியேறி உடல் இலகுவாகி சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சி பெறும்.

7. வாழையிலைக் குளியல்

தொழுநோய், சோரியாசிஸ், வெண்குஷ்டம் போன்ற சரும நோயுடையவர்கள் மதியம் பனிரெண்டு மணிக்கு சூரிய ஒளி நன்கு படும்படியான இடத்தில் தரையில் ஒரு பாயை விரித்து பாயின் மேல் நீண்ட வாழை இலையைப் பரப்பி இலையின் மேல் நீட்டி நிமிர்ந்து மல்லாந்து படுக்கவேண்டும். இவ்வாறு படுக்கும் முன்பு வயிறு நிறைய போதிய அளவு பச்சைத் தண்ணீர் அருந்துதல் அவசியம்.

பின் நோயாளியின் உடலை சுற்றி உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலின் எப்பகுதியம் வெளியே தெரியாதவாறு, நீண்ட வாழை இலைகளால் மூடி வாழை நார்களால் கட்டிவிட வேண்டும். மூக்கிற்கு நேராக வாழையிலையில் துவாரம் செய்து சுவாசம் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். கண் மதலிய வேறு பகுதியில் துவாரம் செய்ய வேண்டாம். இரு கைகளையும் உடலையொட்டி நீளமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழை இலையின் உட்பகுதி ( வழ வழப்பு உடைய பகுதி ) உடலின் மேல்படும்படியும், இலையின் வெளிப்பகுதி ( சாம்பல் நிறமுடைய பகுதி ) வெளியே தெரியும்படி வாழையிலைகளால் தலைமுடி, உள்ளங்கால் கூடத்தெரியாதபடி உடலின் அனைத்து பாகங்ளையும் நன்கு மூடி கட்டிவிட வேண்டும். அரை மணி நேரம் இவ்வாறு சூரியள ஒளியில் அசையாது படுக்க வேண்டும். பக்கத்தில் ஒருவர் துணைக்கு ஒருவர் தயாராக நோயாளியைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அரைமணி நேரமானதும் கட்டுகளை அவிழ்த்து, வாழையிலைகளை அகற்றி நோயாளியை எழுந்திருக்கச் சொல்லி, அரை மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் பச்சைத் தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். 
வாழையிலை குளியல் எடுக்கும் சமயம் உடலில் ஜட்டி மடடும் அல்லது கோவணம் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். வேறு எந்த ஆடையும், பனியனும் அணிய வேண்டாம். வாழையிலைக் குளியல் எடுத்து முடித்ததும் நோயாளியின் உடலிலுள்ள கெட்ட நீர்கள் எல்லாம் வேர்த்துக் கொட்டி நோயாளி குளித்தது போன்று வேர்வையால் நன்கு நனைந்தது காணப்படுவார். 
வாழையிலைக்குளியல் எடுத்த இலைகளை ஆடு, மாடுகள் முதலிய கால்நடைகள் திண்ணகூடாது. எனவே அவ்விலைகளை குழி தோண்டி புதைக்கவும். இவ்வாறு மண் குளியல், வாழைக்குளியல் ஆகியன தொடக்கத்தில் ஒரு வாரத்தில் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் ஒருநேரம் எடுக்கலாம். பின்னர் வாரமொருமுறை நோய் குணமாகும் வரை எடுக்கலாம். அதன் பின்னர் அவசியம் ஏற்படும் போது எடுக்கலாம். இதே போன்று எனிமாவையும் பயன்படுத்தலாம்.
மேலும் இடுப்புக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல், ஈரத் துணிப் பட்டி, ஈரமண் துணிப் பட்டி, சூரிய ஒளி குளியல் ஆகிய அனைத்து இயற்கை மருத்துவ சிகிச்சைகளையும் இவ்விதமே மேற்கொள்ளலாம்.
அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே, வாழையிலைக் குளியல் எடுக்கும் நோயாளி, எழுந்திருக்க விருப்பம் தெரிவித்தால் அருகில் துணைக்கு நிற்பவர்உடன் வாழையிலைக் குளியலை முடிக்க உதவ வேண்டும். 

8. சூரிய ஒளிக்குளியல்

குறிப்பாக சரும நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகள் தொடக்கத்தில் ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறைகள் சூரிய ஒளியில் தரையில் பாய்விரித்து பாயின் மீது நீட்டி நிமிர்ந்து அரை மணி நேரம் வரை படுத்திருக்கலாம். உடலில் ஜட்டி மற்றும் கோமணம் மட்டும் அணியலாம். உடலின் மீது சூரிய ஒளி நேரடியாக பட்டு நன்கு வேர்க்க வேண்டும். 

இவ்வாறு நோயாளி விரும்பும் அளவு ( அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை ) சூரிய ஒளிக் குளியல் எடுப்பது நல்லது . மதிய வேலையில் எடுப்பது மிக்க பயன் தரும். 

சூரிய ஒளி குளியல் முடிந்ததும் அரைமணி நேரம் நிழலில் அமர்ந்தோ அல்லது படுத்தோ ஓய்வொடுத்த பின், பச்சைத் தண்ணீரில் குளிக்கலாம்.

9. நீராவிக் குளியல் 

துத்தநாக தகட்டினால் மனிதன் நிற்கும் உயரத்திற்கு கூடு போல் செய்து, அக் கூட்டில் நோயாளியை நிற்க வைப்பர். பின்னர் நீராவிக் குளியல் கூட்டின் கதவுகளை மூடிவிடுவர். அக்கூட்டிற்குள் பைப் மூலம் நீராவி உட்செலுத்துவர். இவ்விதம் நீராவிக் குளியல் எடுத்தும்சரும நோயாளிகள், பிற பிணியாளர்கள் பிணி நீக்கம் பெறுகின்றனர்.


 இயற்கை மருத்துவம்........ 998356_557864880925760_124780454_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum