சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Khan11

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

2 posters

Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:30

அனைவருக்கும் தூங்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாள் முழுவதும் உடம்பு நோக வேலை பார்த்த பின், மெத்தைக்குள் நுழைந்து இழுத்து போர்த்தி தூங்குவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது? நாம் அனைவரும் அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் தூக்கம். அத்தகைய தூக்கத்தை மேற்கொண்டால், அது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அதுவும் போதிய நேரம் தூங்குவதற்கு தான் நம்மை பலரும் அறிவுறுத்துகின்றனர். போதிய தூக்கம் இல்லையென்றால் ஒருவருக்கு பல வகையில் உடல்நல கோளாறுகள் ஏற்படும். இதை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதனால் தான் இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்த பல வகையான சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் பாட்டி வைத்தியங்களை கையாளுகின்றனர்.

ஆனால் இதற்கு எதிர்மறையாக நடந்தால் என்ன செய்வது? என்ன புரியவில்லையா? அதிக நேரம் தூங்குவதால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா? கேட்டால், சொகுசாக, சந்தோஷமாக இருக்கும் என்று பலர் சொல்வார்கள். ஏன் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என்றும் கேட்கலாம்? கண்டிப்பாக கேட்க வேண்டும். ஏனெனில், நீண்ட நேரம் தூங்குவதால் கண்டிப்பாக பிரச்சனைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் சில பிரச்சனைகளை கீழே பார்க்கலாம். அதுமட்டுமின்றி, அத்தகைய பழக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகளையும் பார்ப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:31

 சர்க்கரை நோய்

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373953944-1-diabetes
தினமும் இரவு அதிக நேரம் தூங்குவதால் அல்லது போதிய தூக்கம் கிடைக்காவிட்டால், சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:31

 உடல் பருமன்
நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373953962-2-weightgain

அதிக நேரம் தூங்குவதால் உடல் எடையானது அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளது. தினமும் 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 9-10 மணி நேரம் தூங்குபவர்களில், ஆறு வருட காலத்தில் 21% மக்களின் எடை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:32

 தலைவலி

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373953977-3-headache
அடிக்கடி தலைவலி வரும் நபர்கள், வார இறுதி அல்லது விடுமுறைகளில் அதிக நேரம் தூங்க முற்பட்டால், அதனால் தலை வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பக்கவிளைவு மூளைகளில் உள்ள நரம்புக்கடத்தியை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செரோடோனினும் அடங்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:32

 முதுகு வலி

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373953991-4-bacjache
முன்பெல்லாம் முதுகு வலி என்று மருத்துவர்களிடம் சென்றால், படுக்கையில் நேராக படுக்க அறிவுறுத்துவார்கள். ஆனால் அதையும் தாண்டி அதிகமாக தூங்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் முதுகு வலி உள்ளவர்களை அதிக நேரம் தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:33

 மன அழுத்தம்

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373954776-5-stress
அதிகமாக தூங்குவதை விட, தூக்கமின்மை தான் மன அழுத்தத்துடன் அதிக தொடர்பில் இருந்தாலும், மன அழுத்தம் உள்ளவர்களில் தோராயமாக 15% நபர்கள் அதிகமாக தூங்குகிறார்கள். இதனால் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே எந்த ஒரு நோய்க்கும் போதிய தூக்கம் தான் நிவாரணியாக விளங்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:33

 இதய நோய்

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373954026-6-heartdisease

செவிலியர் ஆரோக்கிய ஆய்வு, கிட்டத்தட்ட 72,000 பெண்களை ஆய்வில் பயன்படுத்தியது. அந்த ஆய்வின் படி 38% பெண்கள் தினமும் 11 மணி நேரம் தூங்குகிறார்கள் என்றும், தினமும் 8 மணி நேரம் தூங்கும் பெண்களை வி,ட இவர்களுக்கு தான் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் கூறுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:33

 மரணம்

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373954043-7-death
தினமும் இரவு ஒன்பது அல்லது அதற்கு மேலாக தூங்குபவர்கள், 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, விரைவிலேயே இறக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:34

 வேகமாக விழித்திட முடிவு செய்யவும்

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373954067-8-sleepy
அதிக நேரம் தூங்க விரும்பினால், அதிக நேரம் படுக்கையில் இருக்க விரும்புகிறோம் என்று அர்த்தம். இதை விட சுலபமாக இதை சொல்ல முடியாது. பல நேரங்களில் அதிக நேரம் தூங்குவது என்பது தப்பிக்கும் வழிமுறையாகும். ஒரு வகையில் நிஜத்தை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் கையாளும் வழி தான் இது. ஆகவே அதிக நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைபட்டால், எமனை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தால், நீண்ட நேர தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:35

அதிக நேரம் தூங்குவதை தடுப்பதில் ஆர்வமூட்டவும்

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373954087-9-writing
இந்த ஆர்வத்தை வரவழைக்க பல வழிகள் இருந்தாலும், சுலபமான ஒரு வழியை பார்க்கலாமா...

1. ஏன் அதிக நேரம் தூங்க கூடாது என்பதற்கு ஆணித்தனமான ஒரு காரணத்தை முடிவு செய்யுங்கள். அதில் தெளிவாக இருங்கள்.

2. அதனை உறுதியான மற்றும் நேர்மறையான கூற்றாக எழுத வேண்டும். அப்படி எழுதும் போது நிகழ்கால நடையில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு, "நான் தினமும் உற்சாகத்துடன் காலையில் 7 மணிக்கு எழுந்திருப்பதால், என்னை நினைத்து மிகவும் சந்தோஷமும் பெருமையும் அடைகிறேன்."

3. அதனை எழுதி, அடிக்கடி வாசித்தும் திரும்ப திரும்ப எழுதவும் செய்ய வேண்டும். குறைந்தது படுக்கும் முன் அதனை ஒரு முறை படிப்பது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:35

 தூக்கத்தை பற்றிய அபிப்பிராயத்தை மாற்றவும்

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373954103-10-wakeup

தூக்கம் என்பது வாழ்வதற்காக மட்டும் தான் என்ற எண்ணம் எப்போதும் மனதில் ஓட வேண்டும். முக்கியமாக சுகத்திற்காக தான் தூக்கம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:36

ஒரே நேரத்தை எப்போதும் கடைபிடிக்கவும்

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373954127-11-sleep

தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், விழிக்கவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினாலும், குறைந்தது ஒரே நேரத்தில் எழுந்திருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:37

நன்றாக தூங்கவும்
நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373954145-12-smoking

நல்ல தரமுள்ள ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு பல எளிய முறைகள் உள்ளன. அப்படி தூங்குவதால், உடலுக்கு தேவையான ஆற்றலானது கிடைத்து விடும்.

அதற்கு குறைந்தது நாம் செய்ய வேண்டியவை:

- ஒரே மாதிரியான தூக்க ஒழுங்கு முறையை பின்பற்ற வேண்டும்.

- மதிய நேரத்தில் காஃப்பைன் உள்ள உணவை தவிர்க்கவும்.

- இரவு நேரத்தில் புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும்.

- கண்களை சூரிய ஒளியில் குறைந்தது 2 மணி நேரமாவது வெளிக்காட்ட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 12:37

படிப்படியாக அதிக தூக்கத்தை குறைக்கவும்

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! 16-1373954265-13-sleep

ஒரு வாரத்தில் 30-60 நிமிட தூக்கத்தை குறைக்க வேண்டும். முதலில் அது கஷ்டமாக தான் இருக்கும். மேலும் இந்த புதிய தூக்க ஒழுங்கு முறையுடன் ஒத்துப்போவதற்கு 7-10 நாட்கள் ஆகும். முக்கியமாக இதில் குறிப்பிட்ட அளவையே கடைபிடிக்க வேண்டும். அதிகமாக தூக்கத்தை தொலைக்க வேண்டாம். தினமும் இரவு 6-8 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதுப்போக தினமும் 20-40 நிமிடங்கள் வரை குட்டி தூக்கமும் போடலாம்.


http://tamil.boldsky.com


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by Muthumohamed Fri 19 Jul 2013 - 2:23

பயனுள்ள நல்ல பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!! Empty Re: நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum