சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

எதுவும் இலவசம் இல்லை Khan11

எதுவும் இலவசம் இல்லை

2 posters

Go down

எதுவும் இலவசம் இல்லை Empty எதுவும் இலவசம் இல்லை

Post by ராகவா Thu 26 Sep 2013 - 14:44

கல்லூரிகளில், மாணவத் தலைவர்கள் இருப்பார்கள். ஆளுமைத்தன்மை அவர்களுக்கு மட்டுமே என நினைப்பது சரியல்ல. அனைவருக்கும் தலைமைப்பண்புகள் தேவைப்படுகிறது.
மாணவர்களிடம் இலவசமாக எது கிடைக்கும் என்று கேட்டால், அறிவுரை இலவசம் என்கிறார்கள். இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாய் கிடைக்காது. சில சாமியார்களெல்லாம் கூட்டம் போட்டு ஒரு மணிநேரம் பேசுகிறார்கள். ஆயிரம் ரூபாய் தொடங்கி, ஐந்தாயிரம் வரை டிக்கெட் விற்பனையாகிறது. இப்போது சொல்லுங்கள், அறிவுரை இலவசமா? சாமியாரின் அறிவுரை நிகழ்ச்சியின் வசூல் 20 லட்சம்!
தனியார் கலைக்கல்லூரியில் படிக்க கட்டணம் கட்டுகிறீர்கள். உங்களுக்கு ஒரு மணிநேரம் அறிவுரை சொல்லும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அந்த ஆசிரியரின் அறிவுரை இலவசம் கிடையாது. நீங்கள் செலுத்தும் கட்டணம் ஆசிரியருக்கு சம்பளம். இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாய் கிடைக்காது.
மிகவும் உயர்ந்த பொருள் என்றால் நீங்கள் அதிக விலை கொடுக்க வேண்டும். ஒரு பெரிய விஞ்ஞானியாக வேண்டுமா? பெரிய சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆக வேண்டுமா? பெரிய தொழிலதிபராக மாற வேண்டுமா? ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வரவேண்டுமா? நோபல் பரிசு பெற வேண்டுமா? இப்படி உங்களுக்கு எத்தனை கனவுகள் இருந்தாலும், அதை அடைய அவற்றிற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும். விலையென்பது பணமில்லை, முயற்சி. அதற்கான முயற்சியிருந்தால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும்.
உலகத்தில் உங்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்தான் இலவசமாய் கிடைக்கும். அது உங்களின் உடல். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது இலவசம் இல்லை என்றாலும், அதை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். அதை ஏன் இலவசம் என்று சொல்கிறேனென்றால், எந்தப் பெற்றோரும் ‘உன்னை கஷ்டப்பட்டுப் பெற்றுப் போட்டேன். பணம் கொடு’ என்று கேட்க மாட்டார்கள். ஆனால் இந்த உடல், உள்ளம் இருக்கிறதல்லவா, அதுதான் மிகமிக முக்கியமான வளம். மனித வளம்! (Human Resource).
ஒரு தொழில் தொடங்க இடம், முதலீடு, தொழிலாளர்கள் வேண்டும். இதில் மிகமிக முக்கியமானது மனித வளம். ஒரு மனிதனுடைய மிகப்பெரிய சொத்து (Asset) அவனது உடல். அறிவு, செயல்திறன், தன்னம்பிக்கை, ஞாபகத்திறன், முடிவு எடுக்கும் திறன், உற்சாகம் ஆகியவை தான் மிகப்பெரிய மூலதனங்கள். இவை அனைத்தும் மனித உடலுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.
ஹார்வர்டு மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள். அப்போது உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர், போர்டு மோட்டார் கம்பெனியின் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, ஹென்றி போர்டின் வருமானம் (அவர் உயிருடனிருக்கும் போது) இந்திய அரசாங்கத்தின் வருமானத்தைவிட அதிகம். ஃபோர்டின் உண்மையான சொத்து எது? என்று மாணவர்களிடம் வினா எழுப்பினார் பேராசிரியர். பல மாணவர்கள், பத்து லட்சம் கார்கள் தயாரிக்கும் அவரது ஃபோர்டு கம்பெனி 95 சதவீதம். மீதி 5 சதவீதம் அவரது வீடு மற்ற சொத்துக்கள் என்று குறிப்பிட்டார்கள்.
ஒரு மாணவன், ஹென்றி ஃபோர்டின் சொத்தின் மதிப்பிலேயே 5 சதவீதம் தான் அவரது ஃபோர்டு கம்பெனி, அவரது வீடு, கார் சொத்துக்கள் என்றான். மீதி 95 சதவீதம் எது என்று கேட்டார் ஆசிரியர். மீதி 95 சதவீதம், அது ஹென்றி ஃபோர்டுதான் என்றான் மாணவன். எப்படியென்று பேராசிரியர் கேட்டதற்கு, அவரது சொத்துக்களையெல்லாம் அரசாங்கம் பறிமுதல் செய்து விட்டு அவரை நடுத்தெருவில் விட்டாலும் அடுத்த ஃபோர்டு கம்பெனியை அவர் ஆரம்பிப்பார். அவருக்கு அதற்கான அறிவு, ஆற்றல், தொழில் நுட்பம் இருக்கின்றன. எனவே, அவர் தான் 95 சதவீத சொத்து என்று கூறினான். சபாஷ்! என்ன அருமையான சிந்தனை.
உங்களுடைய மிகப்பெரிய சொத்து நீங்கள் தான்:
சில நாட்களுக்கு முன் ஒரு கல்லூரிக்குப் போயிருந்தேன். அந்தக் கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி என்னிடம் ஆட்டோகிராப் கேட்டாள், “நீ ஓர் அதிசயம்” என்று எழுதினேன். அந்த மாணவி, “ஏன் அப்படி எழுதினீர்கள்” என்று கேட்டாள். “உனது உடலை செயற்கையாக செய்துவிட முடியாது.
மனித உடலில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ஆச்சர்யப்படும்படி உள்ளது” என்றேன். அங்கு ஆறு மாணவிகள் நடனமாடினார்கள். அதில் ஒரு மாணவியை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். அந்த மாணவிக்கு ஒரு கையே கிடையாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் நடனம் எப்படியிருந்தது என்று ஓடிவந்து கேட்டார்கள். “மிகச் சிறப்பாக இருந்தது” என்று கூறினேன்.
கையில்லாத பெண் ஆட்டோகிராப் கேட்டபோது, “நீ ஓர் அதிசயம் என்று எழுதிக் கொடுத்தேன். அந்த மாணவிக்கு கையில்லாவிட்டால் கூட நடனமாட வேண்டும் என்று ஆசை; ஆர்வம் இருக்கிறது. இரு கைகள் கொண்ட மாணவிகளைவிட, அவர் நடனம் தான் அற்புதமாக இருந்தது. அங்கத்தில் ஒரு குறை என்றாலும் முயற்சியில் குறைவில்லை. அம்மாணவியை அரவணைத்துப் பாராட்டினேன். அவளது கண்களில் கண்ணீர்; அழுதுவிட்டாள். அவளது முயற்சிக்கு பலன் கிட்டிவிட்டது.
நமது மாணவர்களை மனமுவந்து அவ்வப்போது பாராட்ட வேண்டும். குறைகளைக் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிப்பது மட்டும் கல்லூரி நிர்வாகத்தின் கடமையாகாது. அப்படி தண்டிப்பதால் மட்டுமே விரும்பாத செயல்கள் மறைந்து போவது இல்லை. நாம் விரும்பும் பல நல்ல செயல்களை செய்யும்போது பாராட்ட வேண்டும்.

நன்றி:தன்நம்பிக்கை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எதுவும் இலவசம் இல்லை Empty Re: எதுவும் இலவசம் இல்லை

Post by ahmad78 Thu 26 Sep 2013 - 15:41

அருமையான தகவல்கள்

பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
» சீனாவுடன் மறைமுக பேரம் எதுவும் இல்லை
» லட்சியத்தை அடைவதில் பெரிய மகத்துவம் எதுவும் இல்லை.
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum