சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மோடியின் முத்தான முதல் முடிவு! Khan11

மோடியின் முத்தான முதல் முடிவு!

5 posters

Go down

மோடியின் முத்தான முதல் முடிவு! Empty மோடியின் முத்தான முதல் முடிவு!

Post by ராகவா Fri 30 May 2014 - 14:30

இந்தியாவின் 15–வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடி, பல நம்பிக்கைகளையும், ஆச்சரியங்களையும் நாட்டுக்கு அளித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு, தெற்கு ஆசிய கூட்டமைப்பில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 நாடுகளின் தலைவர்களை அழைத்து இந்தியாவின் அண்டை நாடுகளோடு உள்ள உறவில் புதிய அத்தியாயத்துக்கு முதல் பக்கத்தை எழுதிவிட்டார். 8 நாடுகளின் தலைவர்களும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டதும் இல்லாமல், தங்கள் நாடுகளுக்கு வர வேண்டும் என்று நரேந்திரமோடிக்கும் அழைப்பு விடுத்து, அவரும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்புக்கு அடுத்தநாள் அனைத்து தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும், இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் சந்தித்து பேசிய வாய்ப்பை பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு துணைபோகக்கூடாது என்று பாகிஸ்தானையும், இலங்கை தமிழர் பிரச்சினைக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காண இலங்கையையும் வலியுறுத்தினார்.

அன்றே மந்திரி சபை கூட்டத்தையும் நடத்தி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க இந்த அரசாங்கத்தின் முதல் முடிவு எடுக்கப்பட்டது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் மட்டும் ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று ஐ.எப்.ஐ. என்று அழைக்கப்படும் சர்வதேச தன்னார்வ அமைப்பின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. கடந்த பல ஆண்டுகளாகவே வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுத்தி வந்தது. 2009–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போதே எல்.கே.அத்வானி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தார். 2012–ம் ஆண்டில் சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங் சுவிட்சர்லாந்து உள்பட பல வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் கோடி என்று பட்டவர்த்தனமாக கூறினார். அப்போது நிதி மந்திரியாக இருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கறுப்புப் பணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை லோக் சபாவில் தாக்கல் செய்தார். அதில் இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர சட்ட அமைப்புகளை விரிவுபடுத்தி வலுப்படுத்தவேண்டும் என்று கூறியதோடு விட்டுவிட்டார். ஆக, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை பற்றி ஆள் ஆளுக்கு அறிக்கைவிட்டார்களே தவிர, இதுவரையில் உறுதியான நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் முதலில் விலைவாசி குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகிய பட்டியலில் மூன்றாவதாக ஊழல் ஒழிப்பையும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவது பற்றியே முன்னுரிமை கொடுத்து உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதியை நிறைவேற்றுவதற்கு உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய ஒரு தீர்ப்பு வழியைத் திறந்துவிட்டது. முதல் நாள் மந்திரிசபை கூட்டத்தில் முதல் பொருளாக இதை எடுத்து விவாதித்து, நரேந்திரமோடி தனது அரசாங்கத்தின் முதல் நாளின் முதல் முடிவாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷாவை தலைவராகவும், மற்றொரு ஓய்வுபெற்ற நீதிபதி அரிஜித் பசாயத்தை இணை தலைவராகவும் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. கறுப்புப் பணம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் இந்த சிறப்பு புலனாய்வு குழு, முழு வீச்சில் தனது புலனாய்வை தொடங்கி, யார்–யார் வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்து இருக்கிறார்கள்? என்ற பட்டியலை வெளியிட்டு, அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து, அரசின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெகுகாலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு, பலத்த எதிர்பார்ப்புகளில் இருந்ததுதான் இது. முதல்நாள், முத்தான முதல் நடவடிக்கை எடுத்து முத்திரை பதித்துவிட்டார் மோடி. ஆக, இதுபோல தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக ஒவ்வொன்றாக நரேந்திரமோடி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இந்த அறிவிப்பின் மூலம் துளிர்த்துவிட்டது.

தினத்தந்தி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மோடியின் முத்தான முதல் முடிவு! Empty Re: மோடியின் முத்தான முதல் முடிவு!

Post by Nisha Fri 30 May 2014 - 16:47

மோடி அலை ஓயட்டும். அப்புறம் பார்க்கலாம்.

பகிர்வுக்கு நன்றி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மோடியின் முத்தான முதல் முடிவு! Empty Re: மோடியின் முத்தான முதல் முடிவு!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 7:48

Nisha wrote:மோடி அலை ஓயட்டும். அப்புறம் பார்க்கலாம்.

பகிர்வுக்கு நன்றி
சரியாச் சொன்னிங்க எங்கும் மோடி எதிலும் மோடியாகிவிட்ட இன்றய இந்தியா நாளைக்காய் காத்திருக்கிறது


மோடியின் முத்தான முதல் முடிவு! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மோடியின் முத்தான முதல் முடிவு! Empty Re: மோடியின் முத்தான முதல் முடிவு!

Post by நண்பன் Sat 31 May 2014 - 9:07

நல்ல முடிவுகள் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோடியின் முத்தான முதல் முடிவு! Empty Re: மோடியின் முத்தான முதல் முடிவு!

Post by jasmin Sat 31 May 2014 - 12:20

முடிவுகள் நன்றாக இருக்கட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக மக்க்ளிடம் இருக்கிறது ஆனால் நல்ல முடிவுகள் கிடைக்க அதிக சிரமங்கள் இருக்கின்றன ...மோடி சாதிப்பது அவ்வளவு எளிது இல்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மோடியின் முத்தான முதல் முடிவு! Empty Re: மோடியின் முத்தான முதல் முடிவு!

Post by ராகவா Sat 31 May 2014 - 12:22

jasmin wrote:முடிவுகள் நன்றாக இருக்கட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக மக்க்ளிடம் இருக்கிறது ஆனால் நல்ல முடிவுகள் கிடைக்க அதிக சிரமங்கள் இருக்கின்றன ...மோடி சாதிப்பது அவ்வளவு எளிது இல்லை
பொறுத்திருந்து பார்ப்போம்.. !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மோடியின் முத்தான முதல் முடிவு! Empty Re: மோடியின் முத்தான முதல் முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோடியின் குஜராத்
» கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
» பிளஸ் 2 தேர்வு முடிவு - முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்கள்
» முதல் மனிதன் தோன்றியது எங்கே?வரலாற்றை திருத்தும் புதிய முடிவு
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum