சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த  இந்த நாடகம்? Khan11

பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?

2 posters

Go down

பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த  இந்த நாடகம்? Empty பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?

Post by Naseeb Mohammed Tue 10 Jun 2014 - 19:45

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்கமாக இனவாதம் பேசுவதினூடாக பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் தாங்கள் பௌத்த தர்மத்தின் காவலர்கள் என்று காட்டிக் கொள்ள முயன்று வரும் பொது பல சேனா என்ற அமைப்பின் போக்கில் அண்மையை நாட்களில் ஒரு வித்தியாசம் வெளிப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுதல். பள்ளிகளுக்கு எதிரான தாக்குதல்கள். முஸ்லிம் பெயரிலான பாதைகளின் பெயர் பலகை மாற்றம். ஹழால் எதிர்ப்புப் பிரச்சாரம். ஹிஜாப் எதிர்ப்பு நடவடிக்கைகள் என பரவலாக முஸ்லிம் எதிர்ப்பை வைத்து மக்கள் மத்தியில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட இனவாத இயங்கங்களில் முதல் இடத்தில் இருப்பது பொது பல சேனா என்ற அமைப்பாகும்.

கடந்த காலங்களில் தெளிவான இனவாத பிரச்சாரங்களை மேற்கொண்டவர்கள் இனிமேல் போராட்டங்கள் நடத்துவதில்லை என்றும், போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்றும் அறிவித்திருந்தமையும் நினைவு கூறத் தக்கதாகும். மாற்றுத் திசையில் பயணிக்கும் மர்மம் என்ன? முஸ்லிம் எதிர்ப்பு இனவாத பிரச்சாரத்தை பகிரங்கமாக முன்னெடுத்து வரும் பொது பல சேனா தற்போது மாற்றுத் திசையொன்றில் பயணிக்க ஆரம்பித்திருப்பதைப் போன்றதொரு தோற்றம் உருவாகியுள்ளது அல்லது திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

பள்ளி உடைப்பு முதல் பர்தா பிரச்சினை வரை இனவாதம் பேசியவர்கள், இனிமேல் ஆர்பாட்டங்களே நடத்த மாட்டோம் என்று அறிவித்தார்கள். ஆனால் அதன் பின்னர் மியன்மார் சென்று, மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளில் முன்னனி வகிக்கும் விராது தேரர் என்பவரை பொது பல சேனாவினர் சந்தித்திருந்தனர். இவர் பௌத்த பயங்கரவாதத்தின் முகம் என மேற்கு ஊடகங்களினால் அழைக்கப்படுபவராவார். மாத்திரமன்றி போராட்டங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என்றவர்கள் விராது தேரரை ஏன் சந்திக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுவதுடன், சந்திப்புக்கான காரணத்தை வெளிப்படுத்திய பொது பல சேனாவினர் மியன்மாரில் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பிலேயே தாம் ஆய்வு நடத்த சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

கலவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் தேவை பொது பல சேனாவுக்கு ஏன் ஏற்பட்டது்?என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அரசியலில் சங்கமிக்கப் போகின்றதா பல சேனா?

போராட்டங்களை கைவிடுவதாக அறிவித்த பொது பல சேனாவினர் தற்போது சமூக சேவைகள் செய்வதில் ஆர்வம் காட்டுவதை காணக் கிடைக்கின்றது. அண்மையில் கிட்னி நோய் தொடர்பான விளிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை பொது பல சேனா நடத்தியது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். முஸ்லிம்களின் நெஞ்சில் மிதித்தால் போல் இனவாதம் பேசும் ஒரு அமைப்பினர் ஏன் திடீரென கிட்னி விளிப்புணர்வில் இறங்கினார்கள்? அதே போல் 2014 ம் ஆண்டுக்கான “அவுருது பொல” புது வருட சந்தை என்ற பெயரிலான ஒரு நிகழ்ச்சியையும் பொது பல சேனா நடத்தி வருகின்றது.

இனவாதத்தையே மூலதனமாக கொண்ட பகிரங்க இனவாத அமைப்பு தற்போது சமூக சேவைகளில் ஆர்வம் காட்டுவதைப் பார்க்கும் போது ஹெல உறுமைய பாணியில் அரசியல் நீரோட்டத்தில் நுழைவதற்கான சமிக்ஞையை காட்டுவதாகவே பல சேனாவின் அண்மைக் கால நிகழ்வுகள் அமைந்துள்ளன.

யாரை திருப்திப் படுத்துவதற்காக இந்த நாடகம்?

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பேசி வருகின்ற பொது பல சேனா தற்போது சமூக சேவை என்ற பெயரில் மாற்றம் பெற்றிருப்பது என்பது பல சேனாவின் அடுத்த கட்ட நகர்வு என்னதாக இருக்கும் என்ற ஒரு சாதாரண கேள்வியை தொடர்ச்சியாக எழுப்புகின்றது. மாத்திரமன்றி அண்மையில் பொது பல சேனா நடத்திய 2014 ம் ஆண்டுக்கான “அவுருது பொல” புது வருட சந்தை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கொழும்பின் மேயர் முஸ்ஸம்மில் கலந்து கொண்டமை “யாரை திருப்திப் படுத்துவதற்காக இந்த நாடகம்?” என்ற புதியதொரு கேள்வியை உருவாக்கியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராகவும் தெளிவான இனவாதத்தை கக்கும் ஓர் அமைப்பின் நிகழ்ச்சியில் மேயர் கலந்து கொண்டமை எப்படி நியாயமாகும்? என்ற நியாயமான கேள்வியை இப்போது பொது மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த 04 மாதங்களுக்கு முன்பு இலங்கையின் இன ஐக்கியத்தை வலியுறுத்தும் விதமாக எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அதன் தலைமையகமான ஸ்ரீ கோத்தாவில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. குறித்த கண்காட்சியில் பொது பல சேனா அமைப்பினர் செய்த இனவாத செயல்பாடுகள் புகைப்பட காட்சிகளாக அங்கு வைக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஸ்ரீ கோத்தாவுக்குள் புகுந்த பொது பல சேனாவினர் அங்கு ரகளையில் ஈடுபட்டது மாத்திரமன்றி ஐக்கிய தேசிய கட்சியையும், அதன் தலைவர்களையும் கடுமையாக சாடி விமர்சனம் செய்தார்கள்.

இதன் மூலமாக இலங்கையின் எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொது பல சேனாவுக்கும் இடையிலான பிரச்சினை பூதாகரமாக மாறியது. அது மட்டுமல்லாமல் அரசியல் விமர்சனங்களை பொது பல சேனா முன்வைக்கும் போதெல்லாம் ஐக்கிய தேசிய கட்சியை மிகக் கேவலமாக விமர்சிப்பது வழமையான ஒன்றாகவும் இருக்கின்றது. இப்படி பல கட்ட இடியப்ப சிக்களைக் கொண்டியங்கும் பொது பல சேனாவின் “அவுருது பொல” புது வருட சந்தை நிகழ்ச்சியின் சிறப்பு அதிதியாக மேயர் முஸ்ஸம்மில் (ஐக்கிய தேசிய கட்சி) கலந்து கொண்டமையானது யாரைத் திருப்திப் படுத்துவதற்கான நாடகம் இது? என்ற தெளிவான கேள்வியை உருவாக்கியுள்ளது.

கொழும்பின் மேயராக பதவி வகிக்கும் முஸ்ஸம்மில் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் கிரான்பாஸ், தெஹிவலை மஸ்ஜிதுஷ் ஷாபி என்று பள்ளிப் பிரச்சினைகள் மற்றும் ஹழால் பிரச்சினை, ஹிஜாப் பிரச்சினை என பல தரப்பட்ட பிரச்சினைகளும் இனவாதிகளினால் உருவாக்கப்பட்டன. அப்போதெல்லாம் இனவாதிகளுக்கு எதிராக பேசாதவர் தற்போது அதே இனவாதிகளின் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மர்மம் என்னவோ? பொது பல சேனா என்பது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தில் முன்னிலை வகிப்பது மாத்திரமன்றி, கொழும்பின் மேயர் அங்கம் வகிக்கும் எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் ஒரு அமைப்பாகவும் பிரபல்யம் பெற்றிருக்கும் போது அந்த அமைப்பின் நிகழ்ச்சியில் மேயர் கலந்து கொள்வதற்கான தேவை என்ன? இந்த சானக்கிய அரசியல் எதற்கான ஆரம்பம்? போன்ற கேள்விகள் மேயருக்காக காத்திருக்கின்றன.

பொது பல சேனாவின் நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கலந்து கொள்வதினூடாக மேயர் முஸ்ஸம்மில் யாரை திருப்திப் படுத்துவதற்காக இந்த நாடகத்தை நடிக்கின்றார்? இனவாதிகளை திருப்திப் படுத்துவதினூடாக தனது அடுத்த கட்ட அரசியல் இலக்கை அடைய முனைகின்றாரா? அல்லது இனவாதிகளுக்கு பின்புலனான அரசியல் சக்திகளின் அற்ப சொற்ப நோக்கங்களுக்காக, அவர்களை திருப்திப் படுத்துவற்கான இந்நிகழ்வில் கலந்து கொண்டாரா? அல்லது தமது கட்சியின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இதனை மேயர் பயன்படுத்திக் கொண்டாரா? போன்ற தவிர்க்க முடியாத பல கேள்விகள் இதன் மூலம் உருவாகியிருக்கின்றன.

தூரப் பார்வையற்ற அரசியல் குருடர்கள். இலங்கை முஸ்லிம்கள் இனவாதிகளினால் இன்னல்களை அனுபவித்து வரும் இவ்வேலையில் இனவாதத்திற்கு எதிராக களம் காண வேண்டிய அரசியல் தலைமைகள் வெரும் வங்குரோத்து அரசியலுக்காக இனவாதிகளுக்கு துணை போகும் தூரப் பார்வையற்ற அரசியல் குருடர்களாகவும், அதிகாரத்திற்கு ஜால்ரா அடிக்கும் அடிமைகளாகவும் மாறியிருப்பது இந்த சமுதாயத்தின் அரசியல் கைசேதம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அரசின் அற்ப சுக போகங்களுக்காக சமுதாயத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கும் குள்ள நரியின் அரசியல் விளையாட்டை இவர்கள் முன்னெடுக்க நினைக்கின்றார்களே தவிர, சமுதாய அக்கரை துளியும் இவர்களிடம் இல்லை என்பதை நாம் இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. -


Last edited by Nisha on Tue 10 Jun 2014 - 20:44; edited 2 times in total (Reason for editing : பந்தி பிரிக்கப்பட்டது)
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த  இந்த நாடகம்? Empty Re: பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 20:31

எது எப்படியோ மொத்தத்தில் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு இனி என்றும் கஷ்டம்தான் அண்டை நாடான இந்தியா மட்டும் இல்லை என்றால் இன்று இலங்கையிில் தமிழே பேச முடியாமல் போயிருக்கும் என்று நான் நினைக்கிறேன் அந்த அளவுக்கு சிங்கள தீவிரவாதம் அதிகரித்துள்ளது  !* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி
» சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
» யாரு யாரை பார்த்து சிரிச்சா என்ன அர்த்தம்? அசரவைக்கும் இந்த சிறுமியின் பேச்சு!
» தும்மல் அலட்சிய படுத்த வேண்டாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum