சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 9:23 am

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 9:15 am

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 6:19 am

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 6:11 am

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 11:39 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 11:27 pm

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 11:24 pm

» பல்சுவை 5
by rammalar Yesterday at 9:48 pm

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 9:29 am

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 9:15 am

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 9:08 am

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 8:51 am

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri May 31, 2024 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri May 31, 2024 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri May 31, 2024 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri May 31, 2024 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri May 31, 2024 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri May 31, 2024 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri May 31, 2024 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri May 31, 2024 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:53 pm

» வரகு வடை
by rammalar Thu May 30, 2024 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu May 30, 2024 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu May 30, 2024 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Thu May 30, 2024 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu May 30, 2024 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu May 30, 2024 12:41 pm

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Khan11

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

5 posters

Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by ராகவா Sun Jun 22, 2014 9:38 pm

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த தமிழின்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற பாவேந்தரின் வரிகளை, பி.சுசீலாவின் குரலில் கேட்கும்போது, காதினில் தேன் வந்து பாயும்.ஆனால், இன்றைய பாடகர்கள், நடிகர்கள், வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் சிலரின் நாவில், தமிழ்... 'டமிலாகவும், தமிலாகவும், தமிளாகவும்' உருமாறி, படாதபாடு படுகிறது.

அவர்களுக்கு, அவர்களின் ஒலிப்புத் தவறைச் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பாளர்களாகிய சில தமிழறிஞர்களின் பேச்சு கூட, தமிழன்னையின் காதில் செங்குருதியைத்தான் வரவழைக்கிறது. இந்த தவறை யார் சுட்டிக் காட்டுவது?'தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கல்லவோ... தமிழே, உனக்கொரு பிழை நேர்ந்தால் எமக்கல்லவோ?' என, உள்ளம் வருந்தி, உச்சரிப்புப் பிழை திருத்துவதே என் பணி என உறுதி பூண்டு, ?? ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளிகளுக்கும், மேடைகளுக்கும் ஓடியோடி திருத்தும், கடலூர் தேவநாதன் எனும், ஒரு 'தமிழ் ழகரப் பைத்திய தாத்தா'வை, சென்னை ஆயிரம் விளக்கில் சந்தித்தோம்.

வறுமையிலும் செம்மை

சிறியதொரு அறை, வீடாய் மாறி இருக்க, இருமலையே தமிழாய் சுரம்பிரிக்க, 83 வயதான அந்த தமிழ்த் தாத்தாவின் சொல்லில், அர்ஜுனனின் அம்புக்குரிய வேகமும், தர்மனின் முடிவுக்குரிய விவேகமும் இருக்கின்றன. தேவநாதன், தமிழில் பட்டம் பெற்றவரோ, தமிழ்த் துறையில் வேலை பார்த்தவரோ... அல்ல. அவர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, சாதாரண அரசுப் பணியில் சேர்ந்து, 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்.கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், தென் மாவட்டத்தில் வேலை பார்த்தபோது, படித்தவர், பாமரர் என்ற வேறுபாடில்லாமல், அவர் சந்தித்தவர்களில், 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள், 'ழ'கரத்தை 'ள'; 'ல'கரமாக மாற்றி உச்சரித்திருக்கின்றனர்.

மழையை 'மலை' என்றும், வாழையை 'வாலை' என்றும், கிழவியைக் 'கிளவி' என்றும்... இன்னும், எண்ணற்ற சொற்களை ஒலி மாற்றிப் பேசி, தாம் பேசுவதே சரியான தமிழ் எனவும் வாதிட்டிருக்கின்றனர். பிறகு, ஒருநாள், தன்னையும் அறியாமல், தேவநாதனின் நாவிலும், அந்த எழுத்துக்கள் பிறழ ஆரம்பித்திருக்கின்றன. உடனடியாக, இடமாறுதல் வாங்கிக் கொண்டு, தமது கடலூர் மாவட்டத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறார்.ழகரம் சுத்தமாகப் பேச, என்ன பயிற்சி எடுத்துக் கொண்டீர்கள் என்றால், ''என் தாய், தந்தை, ஊர் மக்கள் சுத்தமாகப் பேசினர்; நானும் அவ்வாறே பேசுகிறேன். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது இதுதான்,'' என்கிறார்.

''சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டில், முக்கால் வாசிப்பேர், தமிழை சரியாக உச்சரிப்பதில்லை,'' என, குமுறுகிறார்.'வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறோம்? வராத விருந்தாளியை, வா... வா என்றழைப்பதால், யாருக்கு என்ன லாபம்' என்பவர்களோடு, அவரால் இணங்க முடியவில்லை. அதெப்படி, ''ஆங்கிலத்தை, வெள்ளைக்காரனைப் போல் பேசத் துடிப்பவர்கள், தமிழை, தமிழனை போல் பேசாவிட்டால், விட முடியுமா?'' எனச் சீறுகிறார்.

மொழி வாழ...

''ஒரு மொழியை அதிக காலம் வாழ வைப்பது, எழுத்துக்களோ; நூல்களோ அல்ல. அந்த மொழியைச் சுத்தமாகப் பேசும் மக்கள் தான்,'' என, பிடிவாதம் பிடிக்கிறார்.அவர், 15 ஆண்டுகளுக்கு முன், 'ழகரப் பணி மன்றம்' என்ற, அமைப்பைத் தோற்றுவித்து, ஆர்வம் உள்ளவர்களுக்கு, இன்றும், அழகுத் தமிழ் பழக்குகிறார்.''தமிழைப் பிழை இன்றி பேசுவது ஒன்றும், கம்ப சூத்திரம் இல்லை. கொஞ்சம் ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். நாவைக் கட்டுப்படுத்தும் சூத்திரத்தை அறிந்து, முயன்றால், இரண்டே மணி நேரத்தில், நல்ல தமிழ் நாவில் விளையாட ஆரம்பிக்கும்,'' என்கிறார்.

நுனி நாக்கை உள் மடித்து, மேல் அண்ணத்தில் படாமல் காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும். அதே நாவை, நடு அண்ணத்தில் வைத்து, 'ழ்' என்று காற்று விட்டால், 'ள்' பிறக்கும். நாவை, மேல் வரிசை பல்லில் வைத்து, உச்சரித்தால், 'ல்' பிறந்து விடுவதாக, அழகுத் தமிழ் பழக்குகிறார்.

துண்டு சீட்டு

''நுனி நாக்கை, நடு அண்ணத்தின் மீது வைத்து, பழகும்போது, 'ற்' பிறக்கும். பல் வரிசைக்கு அருகில் வைத்துப் பழகினால், 'ர்' பிறந்து விடும். நுனி நாக்கை, நடு அண்ணத்தின் மீது வைத்து உச்சரித்தால், 'ண்' பிறந்து விடும். நடு அண்ணத்திற்கும், பல்வரிசைக்கும் இடையில் நாவை வைத்தால், 'ன்' பிறந்து விடும். 'ந்' பல்வரிசையில் நாவை வைத்து உச்சரிக்கும்போது பிறக்கிறது. இந்த எளிமையான சூத்திரத்தைக் கற்று, பழகினால், செந்தமிழால் சிந்து பாடலாம்,'' என்கிறார்.

இதற்காகவே, உச்சரிப்புப் பிழை செய்யும் தமிழறிஞர்களின் கூட்டங்களுக்கு சென்று, 'தமிழுக்கு உங்கள் தூய தொண்டு தேவை, தமிழை திருத்தமாக பேசுங்கள்' என்ற, துண்டு சீட்டோடு நிற்கிறார். பலர் திருந்தி இருக்கின்றனர்; சிலர் வருந்தி இருக்கின்றனர். வருந்தி திருந்தியோர், அடுத்தவர்களை அழைத்து வந்திருக்கின்றனர். அப்படி நிறைய மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறார் இவர்.சிலர், புதிய கிளை மன்றங்களைத் திறந்திருக்கின்றனர். ழகரப் பணி கிளை மன்றங்கள், அந்தமான், போடி நாயக்கனூர், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய நான்கு இடங்களில், தமிழ்ப் பணி ஆற்றுகின்றன.

நன்றாக 'ழகரம்' பேசுவோருக்கு, விருது களையும், சான்றிதழ்களையும் அளித்து, ழகரப் பணி மன்றத்தினர் கவுரவிக்கின்றனர்.தமிழ் வாழ கோரிக்கை'தமிழ்' என்பதை, 'TAMIL' எனவும், 'தமிழ்நாடு' என்பதை, 'TAMILNADU' எனவும் எழுதுவது பிழை. அவை முறையே, 'THAMIZH, THAMIZHNAADU' என, மாற்றப்பட வேண்டும் என, தமிழக அரசிடம் தொடர்ந்து, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளார்.பள்ளி மாணவர்களின், அறிவியல் தமிழ் பாடத்தில், தமிழ் ஒலிப்பு முறை பற்றிய படம், திருத்தப்பட வேண்டும் என்ற இவரின் நெடு நாளைய கோரிக்கை நிறைவேறி இருப்பதே, இவருக்கான நம்பிக்கையைத் தருகிறது. தமிழ் பற்றி பேச, தமிழ் அறிஞர் தேவை இல்லை. தமிழ் உணர்வு இருந்தாலே போதும். ஆனாலும், 'செம்மொளித் தமில் பேசும் தமிலா, நீ தமிலன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று, வீண் பெருமை பேசுபவர்களால், தமிழ் தலை குனிந்து தான் அழும்.

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jaleelge Mon Jun 23, 2014 5:21 am

மிக அருமையாக...

மழை போல்  சொரிகிறாய் தமிழை.....(பிழை திருத்தம்)

அமுதாய் நாமும் தாகம் தீர்க்கிறோம்.

Last edited by jaleelge on Mon Jun 23, 2014 6:08 am; edited 1 time in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by Nisha Mon Jun 23, 2014 5:34 am

சொறி--எனும் ஒரு வகை நோய்
உடலில் ஏற்படும் அரிப்பை சொறிவர்.

மேலிருந்து கீழாக விழும் மழை, மலர் போன்றவை சொரிதல் எனலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jaleelge Mon Jun 23, 2014 5:52 am

Nisha wrote:சொறி--எனும் ஒரு வகை  நோய்
உடலில் ஏற்படும் அரிப்பை சொறிவர்.

மேலிருந்து கீழாக விழும் மழை, மலர் போன்றவை சொரிதல் எனலாம்.

நன்றி சுட்டியதனைக்கு...

மழை சொரிதலை புரிந்தேன்...

அதற்காய்  அன்பு எனும் பூவையும் சொரிகிறேன்....

நம் உரவு மற்றவர்களுக்கு சொறிச்சலை ஏற்படுத்தாமல் அமையட்டும்.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jaleelge Mon Jun 23, 2014 6:08 am

'செம்மொளித் தமில் பேசும் தமிலா, நீ தமிலன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று, வீண் பெருமை பேசுபவர்களால், தமிழ் தலை குனிந்து தான் அழும்.

இப்படித்தான் நான் எழுதுவேன்,....

என்னைதிருத்த மேடம் இருப்பதால்.....

இனிமேல் அப்படி எழுத மாட்டேன்பா !!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by பானுஷபானா Mon Jun 23, 2014 4:51 pm

நல்ல பதிவு நன்றி ராகவன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jasmin Mon Jun 23, 2014 4:55 pm

நிஷா அக்கா என்ன திடீர்னு சொறியா சொரிஞ்சுட்டீங்க ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by Nisha Mon Jun 23, 2014 4:58 pm

jasmin wrote:நிஷா அக்கா என்ன திடீர்னு சொறியா சொரிஞ்சுட்டீங்க ....

ஹாஹா! இப்படி பூமழை சொரிய ஆளில்லாததால் எனக்கு நானே சொறிந்து கொண்டேன்மா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jasmin Mon Jun 23, 2014 5:02 pm

பூ மழை பொழிய இங்க நிறைய ஆட்கள் இருக்காங்கக்க்கா ஆனா எல்லொரும் கல்லுளி மங்காத்தாக்கள் .. உள்ளே வெளியே இருப்பதும் தெரியாது வருவதும் தெரியாது போவதும் தெரியாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by Nisha Mon Jun 23, 2014 5:07 pm

jasmin wrote:பூ மழை பொழிய இங்க நிறைய ஆட்கள் இருக்காங்கக்க்கா ஆனா எல்லொரும் கல்லுளி மங்காத்தாக்கள் .. உள்ளே வெளியே இருப்பதும் தெரியாது வருவதும் தெரியாது போவதும் தெரியாது

அது யாரும்மா? கல்லுளி மங்காத்தாக்கள்? உள்ளே வெளியே இருப்பதும் வருவதும் போவதும் தெரியாதோர் யாருப்பா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jasmin Mon Jun 23, 2014 5:09 pm

இதுகூட தெரியாதாக்கா   எல்லாம் பெரிய அண்ணா மார்கள்தான் ,,,, நண்பன் ..ஹாஷிம் ..ம்ம்ம்ம்ம்ம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by Nisha Mon Jun 23, 2014 5:14 pm

jasmin wrote:இதுகூட தெரியாதாக்கா   எல்லாம் பெரிய அண்ணா மார்கள்தான் ,,,, நண்பன் ..ஹாஷிம் ..ம்ம்ம்ம்ம்ம்

அப்படியா!

வாய்க்குள் விரலை வைத்தால் கடி என சொன்னாலும் கடிக்க தெரியாத பச்சை மண்ணுங்கம்மா என் தும்பிங்க. ! இவர்களையா கல்லூளி மங்காத்தாக்கள் என்கின்றிங்க! ஐய்யோ பாவம்.  ^_ ^_ :dance: :dance: :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jaleelge Mon Jun 23, 2014 7:48 pm

jasmin wrote:நிஷா அக்கா என்ன திடீர்னு சொறியா சொரிஞ்சுட்டீங்க ....

அவங்க சொறிவது ...

இவங்களுக்கும் விளங்கிட்டோ...

எது எப்படிப் போனாலும்...

இடையிலாவது சொறிவதற்க்கு சேனையில் நுளைவதற்க்கு...

நன்றிகளைச் சொரிகிறேம் ஜெஸ்மின்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jaleelge Mon Jun 23, 2014 7:56 pm

jasmin wrote:இதுகூட தெரியாதாக்கா   எல்லாம் பெரிய அண்ணா மார்கள்தான் ,,,, நண்பன் ..ஹாஷிம் ..ம்ம்ம்ம்ம்ம்

நம்ம சொந்தக்காரி நம்மலை நல்ல ...

பலோ பன்னிட்டுதான் இருந்திருக்கிறாங்க...

அப்படிச் சொல்லுங்க ம......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jaleelge Mon Jun 23, 2014 8:12 pm

Nisha wrote:
jasmin wrote:இதுகூட தெரியாதாக்கா   எல்லாம் பெரிய அண்ணா மார்கள்தான் ,,,, நண்பன் ..ஹாஷிம் ..ம்ம்ம்ம்ம்ம்

அப்படியா!  

வாய்க்குள் விரலை வைத்தால் கடி என சொன்னாலும் கடிக்க தெரியாத பச்சை மண்ணுங்கம்மா என்  தும்பிங்க.  ! இவர்களையா கல்லூளி மங்காத்தாக்கள் என்கின்றிங்க!  ஐய்யோ பாவம்.    ^_ ^_ :dance: :dance: :dance: 

என் உறவுக்காரி சூட்டும் ...

பட்டங்கள் எல்லாம் என் மச்சான்மார்களுக்கு...

நன்றே பொறுந்துதப்பா !!!!!

நிஷா என்ன சொன்னீங்க ???

வாய்க்குள்ளா.......  வேணாம்...

இவங்களுக்காடா ????? !*  !*  !* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jasmin Mon Jun 23, 2014 8:15 pm

ஓக்கோ நிஷா அக்காவின் தும்பிகள் உங்களுக்கு மச்சானா ஜலீல் சார் .....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by Nisha Mon Jun 23, 2014 8:17 pm

முடியல்லப்பா! இவங்க டாப் வின்னராக அடிக்கும் கூத்து தாங்கவே முடியல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jaleelge Mon Jun 23, 2014 8:25 pm

jasmin wrote:ஓக்கோ நிஷா அக்காவின் தும்பிகள் உங்களுக்கு மச்சானா ஜலீல் சார் .....

ஓக்கே...

தும்பிகள் அனைவரும் மச்சானா என ???

என்னிடம் கேட்பதா ????

இறுதியில் என்ன சார் ???

வேணாம்...வேணாம்...

நீங்கள் என் சகோதரர் சமட்டின் மனைவி.....

அதுவே போதுமப்பா!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jaleelge Mon Jun 23, 2014 8:33 pm

Nisha wrote:முடியல்லப்பா! இவங்க டாப் வின்னராக அடிக்கும்  கூத்து தாங்கவே முடியல்லை!

டாப் வின்னரோ..கிண்னரோ...

புதிய உறவோடு நாங்கள்.....

உறவாடுவது சில நேரங்களில் தனிக்கையுடன் பதிவுகள்....

அவ்வளவுதான்...

இது வெல்லாம் கூத்து அல்ல....

இங்கு வடமோடியோ ?? தென் மோடியோ அரங்கேற்ற வில்லை மேடம்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by Nisha Mon Jun 23, 2014 8:39 pm

ஹலோ சார், கூத்து என்றால் என்னவென தெரியுமா!

இனி தெரிந்துக்கோங்க சார்!

இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து என்று வழங்குகிறது.

இங்கே நீங்கள் இடும் பதிவுகள் கூத்து என்பதில் அடங்குமா இல்லையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by jaleelge Mon Jun 23, 2014 9:38 pm

Nisha wrote:ஹலோ சார், கூத்து என்றால் என்னவென தெரியுமா!

இனி தெரிந்துக்கோங்க சார்!

 இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து என்று வழங்குகிறது.

இங்கே நீங்கள் இடும் பதிவுகள் கூத்து என்பதில் அடங்குமா இல்லையா?

ஹாஹா...

அப்படியா வாரீங்கள்...

நீங்கள் காரண காரியத்தோடும்...

இடுகுறியாய் சொன்னாலும் அதில் உண்மை உண்டுதான்...

அனைவரும் திரியை நீட்டவே முனைகின்றனர்...

நான் மட்டும் என்ன செய்வது  ????

இதுக்கு மேல கேக்காதீங்க்க.....

கேட்டீங்கள்ண்டா...நான் அழுதிடுவன் மேடம்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக Empty Re: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum