சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Khan11

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்..

5 posters

Go down

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Empty பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 12:03

ஆண்களுக்கான பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Th?id=HN.608054643596070573&pid=15

பாதங்கள் பிளவு படுவதை பித்த வெடிப்பு என்று அழைப்போம் . அவை தொல்லை மற்றும் வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் உங்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும் . பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர் . இருப்பினும் உங்கள் பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகளும் இருக்கத் தான் செய்கிறது . இதனால் உங்கள் பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகளும் உண்டாகிறது . ஊட்டச்சத்து குறைபாடுகளினால் கூட சில நேரங்களில் பித்த வெடிப்பு உண்டாகலாம் . உங்கள்


பாதங்களை நல்ல அக்கறையுடன் கவனித்து கொண்டு பித்த வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும் . அப்படி செய்யாமல் , வலி வரும் வரை காத்திருந்து அதன் பின் அதற்கு சிகிச்சை எடுக்கும் கஷ்டம் எதற்கு ? ஒரு வேளை , பித்த வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் முயற்சியை நீங்கள் கடந்திருந்து ஏற்கனவே வலி உண்டாகியிருந்தால் , அதற்கு பல வீட்டு சிகிச்சைகள் இருக்கிறது . அவைகளை பின்பற்றினால் உங்கள் பித்த வெடிப்புகள் குணமாகும் . உங்கள் பித்த வெடிப்புகள் குணமான பிறகு , அது மீண்டும் வராமல் தடுக்க அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள் . உங்கள் மொத்த எடையையும் தாங்கும் விதமாக உங்கள் பாதத்தின் தோல் கடுமையானதாக இருக்கும் . மெருகேற்ற உதவும் கல் / ஸ்கரப்பர் பாத சருமத்தை மென்மையாக்க , பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும் . அரம் அல்லது நுரைக்கல்லை பயன்படுத்தி உங்கள் பாதத்தில் உள்ள செத்த அணுக்களை மெதுவாக தேய்த்து எடுக்கவும் . பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவிக் கொள்ளுங்கள் . அதனை பாதங்கள் உறிஞ்சிட வேண்டும் என்பதால் ஒரு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள் . ஈரப்பதத்தை நீட்டிக்க செய்திட இரவு நேரங்களில் , ஏன் பகல் முழுவதும் கூட பாதங்களுக்கு காலுறைகளை அணிவித்துக் கொள்ளுங்கள் . ஒரு வாரத்திற்கு இதனை தினமும் ஒரு முறை செய்தால் , அதனால் ஏற்பட போகும் மாற்றத்தை கண்டு வியப்பீர்கள் . பாத மாஸ்க் ஒரு பெரிய வாளி ஒன்றை எடுத்து அதில் வெப்பமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள் . உங்கள் பாதங்களை அதனுள் முக்கிக் கொள்ளுங்கள் . உப்பு , எலுமிச்சை சாறு , கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரின் பயன்பாடும் பின் தேவைப்படும் . 15-20 நிமிடங்கள் வரை உங்கள் பாதங்கள் இந்த நீரில் ஊறட்டும் . பின் உரைக்கல் அல்லது பாத ஸ்கரப்பரை கொண்டு உங்கள் பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும் . 1 டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின் , 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள் . இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு , காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிடுங்கல் . தேன் கலவை உங்கள் பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க தேன் பெரிதும் உதவி செய்யும் . மேலும் தேனில் சிறந்த ஆன்டி - பாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளது . 2-3 டீஸ்பூன் அரிசியை எடுத்து , அதனுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து அடர்த்தியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள் . உங்கள் பாதங்கள் பித்த வெடிப்புடன் வறண்டு காணப்பட்டால் , ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும் . வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் வரை ஊற வைத்து , பின் அந்த பேஸ்ட்டை வைத்து மெதுவாக பாதத்தில் தேய்க்கவும் . அப்படி செய்யும் போது பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும் . தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது , வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்யை கூட பாதங்களில் மெதுவாக தடவலாம் . இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடுங்கள் . இதனை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால் , உங்கள் பித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும் . குறிப்பு மேற்கூறியவற்றை தினமும் நேரம் கிடைக்கும் போது செய்து வந்தால் , நிச்சயம் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு , பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி , பாதங்கள் அழகாக இருக்கும்

நன்றி சுரேஷ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Empty Re: பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 12:07

பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டுமா?

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Nail-care-300x275


பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

பாதத்தில் போதுமான ஈரப்பசை இல்லாதபோது வெடிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை ‘ட்ரொமாட்டிக் ஃபிஷர்ஸ்’ ( traumatic fissures ) என்று குறிப்பிடுவோம். பித்தவெடிப்பு இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வருகிற ஒன்றுதான்.

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.

* பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

* தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

* கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* பித்தவெடிப்பு இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருது வாகும். கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.
பித்தவெடிப்பிலிருந்து ரத்தம் வந்தால், உடனடியாக தோல் மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது அவசியம்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* ஆலமரப்பால்,அரசமரப்பால் இரண்டும் சமஅளவு கலந்து பூசவும் வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு குணமாகும் .

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Empty Re: பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்..

Post by jaleelge Tue 24 Jun 2014 - 13:49

பாராட்டு வழங்குவது...

நநீங்கள் தகவல் பெற்ற மூலத்தினை...அல்லது இனையத்தின் பெயரினை இடும்போதுதான் பாராட்டுக்கள் இடப்படும்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Empty Re: பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 14:03

jaleelge wrote:பாராட்டு வழங்குவது...

நநீங்கள் தகவல் பெற்ற மூலத்தினை...அல்லது இனையத்தின் பெயரினை இடும்போதுதான் பாராட்டுக்கள் இடப்படும்...
எங்களுக்கு மெயிலில் வரும் தகவல்களுக்கு அனுப்பியவரின் பெயரை மட்டும்தான் எழுத முடியும் குருவே
பாராட்ட வேண்டாம் பயன் பெற்றாலே போதும் ஞான் பெற்ற இன்பம் பெருக வையகம்  )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Empty Re: பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்..

Post by Nisha Tue 24 Jun 2014 - 14:12

பயன் தரும் பதிவு நண்பன் சார்!

மகள் பிறந்த பின் எனக்கிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை இது!

வேலை அதிகமாகவோ அதிக தூரம் நடந்தாலோ எங்காவது ஒரு இடத்தில் வெடிப்பு  வந்து வலிக்கும்.  அப்படி வெடிப்பு வராவிட்டல தலை சுத்தும்!  தலை சுத்துவதை விட  காலில் வலி வருவது தாங்குவது போல் இருக்கும்.

பித்த வெடிப்புக்கு வைத்தியம் செய்யகூடாது என்பர்.  நம் உடலில் இருக்கும் பித்த நீர்  அந்த வெடிப்பின் மூலம் வெளியேறுகின்றது. அப்படி வெளியேறா விட்டம பித்தம் தலைக்கேறி  தலைசுத்தலை தரும் என சொல்வர்.

பித்த வெடிப்பை முழுமையாக குணப்படுத்த டாக்டர்கள் மருந்துகள் தருவதில்லை.  கிரிம்கள் தந்து பூச மட்டுமே சொல்வர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Empty Re: பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்..

Post by ராகவா Tue 24 Jun 2014 - 14:25

நானும் பலநாட்கள் அவதியுற்றேன்,...தீர்வு கிடைத்தது,,,
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Empty Re: பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்..

Post by நேசமுடன் ஹாசிம் Tue 24 Jun 2014 - 14:31

நன்றிகள் அவசியமான பதிவு


பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்.. Empty Re: பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum