சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

கோபம் தன்னையே அழித்து விடும் Khan11

கோபம் தன்னையே அழித்து விடும்

4 posters

Go down

கோபம் தன்னையே அழித்து விடும் Empty கோபம் தன்னையே அழித்து விடும்

Post by Nisha Wed 25 Jun 2014 - 0:21

கோபம் தன்னையே அழித்து விடும்


உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…
கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…

· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது…

· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது…

· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது …இப்படியே பல காரணங்கள் உள்ளன.


ஒருவன் நம்மைப் பார்த்து “கழுதை” என்று திட்டும்போது நாம் “குரங்கு” என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து – பாராட்டி – உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்…

· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

· மன இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

http://www.readislam.net/portal/archives/2615


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோபம் தன்னையே அழித்து விடும் Empty Re: கோபம் தன்னையே அழித்து விடும்

Post by rammalar Wed 25 Jun 2014 - 4:20

பாரதியார் சொங்கிறார் 'ரௌத்திரம் பழகு' என்று.!
-
கோபம் தன்னையே அழித்து விடும் Z
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கோபம் தன்னையே அழித்து விடும் Empty Re: கோபம் தன்னையே அழித்து விடும்

Post by Nisha Wed 25 Jun 2014 - 9:00

ரௌத்திரம் பழகு என  ஒரு வார்த்தையில் சொல்லி  தப்பிக்க முடியாது. எங்கே எந்த சூழலில் எவரிடம் ரௌத்திரம் வெளிப்படவேண்டும் எனும் நியதி உண்டு அல்லவா?
சிதையா நெஞ்சுகொள்
செய்வது துணிந்து செய்
தீயோர்க் கஞ்சேல்
தொன்மைக் கஞ்சேல்
நேர்படப் பேசு
கொடுமையை எதிர்த்து நில்
சாவதற்க் கஞ்சேல்

நையப் புடை
நொந்தது சாகும்
பேய்களுக் கஞ்சேல்
போர்த்தொழில் பழகு

சௌத்திரமிருந்தால் தான் மேற்சொன்னபடி வாழ இயலுமாம்!

அது இருக்கட்டும்  ரௌத்திரம் என்றால் என்ன? எந்த சூழலில் ரௌத்தரம் வெளிப்படணுமாம்?

தன் கண்முன் நடக்கும் கொடுமைகளை தட்டிகேட்காது  துணிவின்றி தன்க்குள்ளே வருந்துவதும் அதை நினைத்து தன்னை சார்ந்தோரை துன்புறுத்துவதுமான ஆத்திரமும் சினமுமல்ல ரௌத்திரம்!

அநீதி எங்கே நடந்தாலும் உண்மைக்கு புறமாய்  நடப்பதை  கண்டு பொங்கி  விவேகத்துடன் எழுதலே பாரதியார் சொன்ன ரௌத்திரம்!

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
தேம்பியழுங் குழந்தை நொண்டி ,- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா

பாரதியார் சொன்ன ரௌத்திரம் என்னவென விளக்கமாய் சொல்லாது பாரதியார் சொன்னார் ரௌத்திரம் பழகென சொல்லிக்கொண்டு   ஒன்றுமில்லாததுக்கெல்லாம் உண்ர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டு தன்னையும் தனனை சார்த்தோரையும்  வலிக்க வைப்பது நிச்சயம் பாரதியார் சொல்லும் ரௌத்திரம் இல்லை!

தேவையான் இடத்தில்  கோபம் வருதலும்  வரும் கோபம் விவோகத்தோடு இருப்பதும்  நமக்கும் நம் உட்ல நலத்துக்கும் நம்மை சார்ந்தோருக்கும் நல்லதுதான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோபம் தன்னையே அழித்து விடும் Empty Re: கோபம் தன்னையே அழித்து விடும்

Post by ahmad78 Wed 25 Jun 2014 - 10:16

கோபம் பற்றிய தகவலும்
ரௌத்திரம் பற்றிய விளக்கத்திற்கும் நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கோபம் தன்னையே அழித்து விடும் Empty Re: கோபம் தன்னையே அழித்து விடும்

Post by பானுஷபானா Wed 25 Jun 2014 - 10:38

அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி நிஷா


பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோபம் தன்னையே அழித்து விடும் Empty Re: கோபம் தன்னையே அழித்து விடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum