சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு? Khan11

பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு?

4 posters

Go down

பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு? Empty பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு?

Post by ahmad78 Wed 25 Jun 2014 - 13:54

பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு? Tamil_News_8626520634
பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் உலகின் பெரிய நாடுகள் பட்டியலைப் போட்டால், அதில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. இந்த எல்லா நாடுகளையும் எடுத்துக் கொண்டால், அதிக வேலைப்பளு இருப்பது இந்தியப் பிரதமருக்குத்தான். ஆனால், குறைந்த சம்பளம் வாங்குவதும் அவர்தான் என நிரூபிக்கின்றன புள்ளிவிவரங்கள்.

இந்தியப் பிரதமருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அடிப்படைச் சம்பளம். இது தவிர செலவினங்கள் படி   (Sumptuary Allowance)   மாதம் ரூ.3 ஆயிரமும் தினசரி படி ரூ.2 ஆயிரம் வீதம் மாதத்திற்கு ரூ.62 ஆயிரமும் தொகுதி மற்றும் அலுவலகப் படி மாதம் ரூ.45 ஆயிரம்_-ஆக மொத்தம் மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படுகிறது.

பிரதமரின் உபயோகத்திற்கு கறுப்பு நிற 2009ம் ஆண்டு மாடல் பி.எம்.டபிள்யூ 7 வரிசை கார் அதிகபட்ச பாதுகாப்போடு வழங்கப்படுகிறது. இந்த கார் குண்டு துளைக்காத வகையிலும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித வாயுவினாலும் இதைத் தாக்க முடியாது. கார் உடைந்தாலும் எரிபொருள் டேங்க் வெடிக்காது. மெர்சிடஸ் நிறுவன தயாரிப்பான ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு டாடா சபாரி மற்றும் 5 கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ  எக்ஸ்     5 கார்கள் பிரதமருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு போயிங் 747 - 400 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தனி விமானங்களின் எண் எப்போதும்   கிமி1 (Air India One)   ஆக இருக்கும்.

இந்த விமானத்தில் பிரதமருக்கு தனி படுக்கையறை ஒன்றும் ஓய்வுக்கூடம் ஒன்றும் ஆறு பேர் அமரக்கூடிய அலுவலகம், செயற்கைக் கோள் தொலைபேசிகளும் உண்டு. எட்டு பேர் கொண்ட விமானிகளின் பட்டியலிலிருந்து நான்கு விமானிகள் பிரதமரின் விமானத்தை ஓட்டுவர். ஆயுதங்கள் விமானத்தில் இருக்கும். டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் கண்காணிக்கப்படும். பிரதமர் விமானத்தில் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே விமானம் பிரதமரின் பிரத்யேக பாதுகாப்புக்காக இருக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.

உள்நாட்டில் 5000 கி.மீ தொலைவு வரை மட்டும் விமானங்கள் இயக்கப்படும். இந்திய விமானப் படையின் ராஜ்தூத், ராஜ்ஹான்ஸ், ராஜ்கமல் ஆகியவை பிரதமரின் பயணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் ஆயுதத் தாக்குதல் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளும் செயற்கைக்கோள் தொலைபேசி வசதிகளும் பிரதமருக்கான படுக்கையறை மற்றும் அலுவலகமும் உள்ளன. பாதுகாப்பான செய்தித் தொடர்பு அறையும் உண்டு.

பிரதமர் ஓய்வு பெற்றதும் மாதம் ரூ. 20,000 ஓய்வு ஊதியம் உண்டு. ஓய்வூதியம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படும்.
டெல்லியில் வாழ்நாள் முழுவதும் தங்குவதற்கு வீட்டு வசதி செய்து தரப்படும். அந்த வீட்டுக்கு வாடகை, மின் கட்டணம், குடிநீர் வரி என எதுவும் விதிக்கப்பட மாட்டாது.
14 பணியாளர்கள் அடங்கிய செயலாளர் குழு அளிக்கப்படும். இது 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனி உதவியாளர் மற்றும் ஒரு பியூனாக குறைக்கப்படும்.

ஆண்டுக்கு ஏழு முறை எக்ஸிகியூடிவ் வகுப்பு விமானப் பயணம் செய்யலாம்.

ஐந்தாண்டுகளுக்கு முழுஅலுவலகச் செலவுகள் வழங்கப்படும். பிறகு இது ஆண்டுக்கு ரூ. 6000 ஆக குறைக்கப்படும்.

சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு ஓராண்டுக்கு அளிக்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரைப் போலவே மாதம் ரூ. 1,60,000 சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்படும்.

வீட்டு வசதி, பெட்ரோல், தொலைபேசி அழைப்புகள், மேஜை நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படும். வட்டியில்லா கடனில் கார் வாங்கலாம்.

ரயில்களில் இலவசமாக ஏ.சி. முதல் வகுப்பில் பயணம் செய்யலாம். ஆண்டுக்கு 34 இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி அல்லது கணவன் ஆண்டுக்கு 8 முறை இலவசமாக விமானத்தில் டெல்லி செல்லலாம். நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் நாட்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் இலவசமாக டெல்லி செல்லலாம்.

பிரான்ஸ் மற்றும் ஜப்பானில் அயல் நாட்டுத் தூதர்களுக்கு இணையான ஊதியம் எம்.பி.க்களுக்கு வழங்கப்படுகிறது. ஜெர்மனியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் எதிர்பார்க்காமல் வாழ்கின்ற அளவிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

ஸ்விட்சர்லாந்தில் சம்பளமோ படிகளோ இல்லை. வேலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் நடைபெறும் நாட்களில் சம்பளத்தோடு கூடிய விடுமுறை மட்டும் அளிக்கப்படுகிறது.

மெக்ஸிகோவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் உண்டு. ஆனால் வேறு எங்கும் பணிபுரியக் கூடாது. தொழிலில் ஈடுபடக்கூடாது. எந்த அரசியல் கட்சியிலும் பொறுப்பாளராக இருக்கக்கூடாது.

அமெரிக்க எம்.பிக்கள் அரசு தரும் சம்பளத்தில் 15 சதவீதத்திற்கு அதிகமாக வெளியில் சம்பாதிக்கக் கூடாது.

பிரிட்டனில் சுயேச்சையாக செயல்படும் அமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வு ஊதியம் எவ்வளவு வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆலோசனை வழங்குகிறது.
 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=98036


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு? Empty Re: பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு?

Post by Nisha Wed 25 Jun 2014 - 14:00

தகவல் பகிர்வுக்காக நன்றி முஹைதீன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு? Empty Re: பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு?

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 14:05

அரிய தகவல் அஹ்மட் பாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு? Empty Re: பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு?

Post by பானுஷபானா Wed 25 Jun 2014 - 14:07

இவ்வளவு வச்திகளா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு? Empty Re: பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum