சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!! Khan11

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!

2 posters

Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!! Empty தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!

Post by ராகவா Sat 28 Jun 2014 - 14:20

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!! 75311963

எல்லா உயிர் பிராணிகளுக்கும் தூக்கம் என்பது இயல்பான செயல் ஆகும். அதிகமான உடல் உழைப்பு செய்தும் அமைதியாக இருப்பவர்களுக்கு குறைந்த சக்தி செலவாகிறது. ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் வேண்டுமென்பது அவர் எவ்வளவு மன அமைதியுடனும் மன நெருக்கடியின்றியும் இருக்கிறார் என்பதைப் பொருத்ததாகும்.


பலர் அதிக தூக்கத்தால் கவலை கொள்கிறார்கள் எனில் வேறு பலர் குறைந்த தூக்கத்தால் கவலை கொள்கிறார்கள். தூக்க மருந்தை சாப்பிடுபவர்களுக்கும் அமைதியான நல்ல தூக்கம் வருவதில்லை. வயிறு சுத்தமாக இருக்கும் குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. உடல் சக்தியும் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் கண்ட பொருட்களை சாப்பிட்டு அவர்களுடைய வயிறு நிரம்பியிருக்கும் போதும், மலச்சிக்கல் இருக்கும் போதும் அதிகம் தூங்குகிறார்கள். இப்படி இருக்கும் குழந்தைகள் குறைந்த அளவு தூங்குவதால் அவர்களுக்கு பயன் இருக்காது.


தூங்குகிற நேரம் கிடைக்கும் போது நன்றாக தூங்குங்கள். தூக்கத்தை தவிர்த்தால் உடல்நலமும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

மனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும்.
பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவு கோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

இரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் உண்டு. இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் காலையில் வெகு சீக்கிரமாக அதிகாலையிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு.

சரியாக தூங்காதவர்களை கண்களை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.

தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசைகளாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.

ஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும், பெண்களின் உடலில் சுமார் 36 சதவீதமும் கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் இருக்கின்றன. தூக்கத்தின்போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் பெரும்பாலும் தற்காலிகமாக செயலிழந்து விடுகின்றன.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள்(inVoluntary Muscles) இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள், இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.

தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது. பாலூட்டி, விலங்குகள், பறவைகள், தவளை, மீன் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தூக்கம் உண்டு.

தூக்கத்தை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த 1937ம் ஆண்டில் முதன் முதலாக ஆல்பிரெட் லூமிஸ் என்பவர் தூக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நலம் தரும் மருத்துவம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!! Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!

Post by ராகவா Sat 28 Jun 2014 - 14:20

தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியம். தூக்கமின்மையால் ஒருத்தர் அவதிபடுகிறார் என்றால் அதை போன்ற ஒரு மனம் சார்ந்த சித்ரவதை வேறு எதுவும் கிடையாது.

ஒருவர் பசியுடனும் தாகத்துடனும் வேண்டுமானாலும் இருந்து விடலாம் ஆனால் தூக்கம் இல்லாமல் இருப்பது என்பது மிக பெரிய கொடுமை.

ஒருவருக்கு நல்ல தூக்கம் இருக்கும்போது புத்தி நல்ல கூர்மையாக வேலை செய்கிறது.

தொடர்ந்து ஒருவர் சாதரணமாக தூங்க வேண்டிய அளவிற்கு கூட தூங்க முடியாமல் போகும்போது பல வித உடல் குறைபாடுகளுக்கு ஆளாகின்றார்.
எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகுதல், ஞாபக சக்தியை இழத்தல், நம்பிக்கை இழத்தல், பள்ளி மாணவர்களாக இருந்தால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகுதல் போன்ற குறைபாடுகள் தூக்கமின்மையால் உண்டாகும்.

தூக்கமின்மையால் மக்கள் அவதி படும்போது நிறைய தவறுகள் செய்கின்றனர். விபத்துக்கள் அதிகரிக்கின்றன. ஒரு நாளைக்கு 5 மணி நேரம் குறைவாக தூங்குபவர்கள் தான் அதிக பட்சமாக சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதுமட்டும் அல்லாது மற்றவர்களிடம் விரோத மனப்பான்மையுடன் பழகுதல், சக ஊழியர்களிடம் தேவை இல்லாமல் சண்டை போட்டு கொள்வது, மது பழக்கத்திற்கு அடிமையாகுதல், உடல் எடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சரியான முடிவுகள் எடுக்கும் தன்மையை இழத்தல் போன்ற பல பிரச்சனைகள் தூக்கமின்மையால் உண்டாகிறது என்று ஆராய்சிகள் தெரிவிக்கின்றது.

சரியான தூக்கம் இல்லையென்றால் மரணம் கூட சம்பவிக்கும் என்பதற்கு சில எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்ததில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போதுமான அளவு தூக்கம் ஒருவருக்கு இருக்கும்போது அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. சக்கரை வியாதி தோன்றுவதற்கு வாய்ப்பில்லாமல் போகின்றது. வேலை பார்க்கும் இடத்தில் சிறப்பாகவும் பாதுகாப்பகவும் வேலை செய்வதற்கு ஏதுவாகிறது. இதயம் சார்ந்த வியாதிகளில் இருந்தும், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்தும் விடுபடுவதற்கும் வாய்ப்பு உருவாகிறது.

சரி, தூக்கமின்மையால் அவதிபடும் ஒருவர் தியானம் செய்வதின் மூலம் பலன் பெற முடியுமா?

நிச்சயம் முடியும், என பல ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

தூக்கமின்மைக்கு பெரும்பான்மையானவர்கள் கூறும் காரணம் மனதில் அலை மோதும் பல வித எண்ணங்கள். இந்த எண்ணங்கள் அவர்களை தூங்க விடாமல் அவதியுற செய்யும்.

ஒரு சில நிமிடங்கள் செய்யப்படும் தியானத்தின் மூலம் அவர் மனதில் குமிந்துள்ள தேவை இல்லாத எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்போது அங்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு நல்லபடியாக தூங்க முடியும்.

தியானம் என்பது ஒருவருடைய நினைவுகளை கட்டுபட்டுத்தகூடிய அருமையான பயிற்சியாகும்.

ஒருவருடைய நினைவுகள் தேவையான அளவிற்கு மட்டும் கட்டு படுத்தபடும்போது மன குழப்பம், மன சோர்வு, கவலைகள் போன்றவற்றுக்கு இடம் இல்லாமல் போகிறது. அப்படி இடம் இல்லாமல் போகும்போது ஒருவருக்கு தூக்கம் என்பது ஒரு பிரச்னை இல்லாமல் போய் விடுகிறது.

தூக்க மாத்திரைகளை கொண்டு ஒருவர் தூங்கும்போது தற்காலிக தீர்வுதான் கிடைக்குமே ஒழிய தூக்கத்திற்கான நிரந்தரமான தீர்வு கிடைக்காது. மேலும் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை உபயோகிக்கும்போது நாளடைவில் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியாது என்ற நிலையும் ஏற்படும். மேலும் உடல் சம்பந்தமான பக்க விளைவுகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் தியானம் செய்யும்போது தூக்கம் இல்லாமைக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுகிறது. அதனால் உடலுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

தூங்கும் போது உடல் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளது. உடலில் உள்ள பாகங்களும் தேவையான அளவு ஓய்வு எடுத்து கொள்கின்றன. அப்படி ஓய்வெடுத்து கொள்ளும்போது மனித இதயமும் தேவையான அளவு ஓய்வில் இருக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் ரத்த அழுத்தத்தின் அளவும் 20% to 30% குறைகிறது. அப்படி ரத்தத்தின் அழுத்தம் குறையும்போது மனித மூளையும் சூடாவது தவிர்க்கபடுகிறது.

தியானம் செய்யும்போது தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வுக்கு நிகரான சக்தி உடலுக்கு கிடைக்கின்றன என ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

தூக்கத்தின் போதுதான் உடல் வளர்ச்சிக்கு தேவையான harmone கள் உற்பத்தி செய்ய படுகின்றன. சரியான தூக்கம் இருந்தால்தான் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி ஆகும். இது போன்று உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும், cancer போன்ற வியாதிகளை தடுக்கும் அல்லது எதிர்க்கும்விதத்தில் உதவி செய்கின்றன.

தியானம் செய்யும்போதும் தூக்கத்திற்கு இணையான ஓய்வு கிடைப்பதால்
உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி செய்யபடுவதற்கு தியானமும் ஒரு காரணம் ஆகிறது.

ஒரு மனிதருக்கு சாப்பிடுவதும், மூச்சு விடுவதும் எவ்வளவு முக்கிய துவம் வாய்ந்ததோ அதுபோன்று தூக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
ஒருவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தூக்கம் இன்றியமையாதது ஆகும். அந்த தூக்கம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்கு எந்த பக்க விளைவும் இல்லாத தியானமும் முக்கியமாகும் என்று சொன்னால் மிகையில்லை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!! Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!

Post by rammalar Sat 28 Jun 2014 - 15:23

மேலும் சில குறிப்பு;
-
இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.
சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..
-
சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.
தெற்கு திசை…உடல் களைப்பு நீங்கும்….
-
மேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.
-
வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த மண்டலம்
இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!! Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum