சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Khan11

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

+4
jasmin
rammalar
நண்பன்
Nisha
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 1:53

இந்த திரிக்கு வந்த அன்புறவுகளே இதை மு்ழுமையாக படியுங்கள், சிந்தியுங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!

வாழ்வின் படிகள்

மிக மிக நல்ல நாள் --- இன்று
மிகப்பெரிய வெகுமதி---மன்னிப்பு
மிகவும் வேண்டியது-- பணிவு
மிகப்பெரிய தேவை ---சமயோஜித புத்தி
மிகப்பெரிய கொடிய நோய்-- பேராசை
மிகவும் சுலபமானது---குற்றம் காணல்
மிகவும் கீழ்த்தரமானது---பொறாமை
நம்பக்கூடாதது---வதந்தி
ஆபத்தை விளைவிப்பது---அதிக பேச்சு
செய்ய வேண்டியது ---உதவி
விலக்க வேண்டியது.--விவாதம்
உயர்வுக்கு வழி --- உழைப்பு
நழுவ விடக்கூடாதது --- வாய்ப்பு
பிரியக்கூடாதது---நட்பு
மறக்கக்கூடாதது---நன்றி

Last edited by Nisha on Mon 30 Jun 2014 - 2:39; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 1:57

வாழ்க்கை வாழ்வதற்கே

நாம் இனிமையாக பழகும் போது மற்றவர்களும்நம்முடன் இனிமையாக பழகத்தொடங்குகிறார்கள்.. நகைச்சுவையாக பேசுபவனை எல்லோரும்விரும்புவார்கள்.பிறருக்கு நாம் உதவும் போது உலகமே நம்மை விரும்பும்.

நாம் நம்மைத்தானே எப்படி மதித்து நடக்கிறோம்? பிறருடன் எப்படி பழகமுயல்கிறோம் என்பதைக்கொண்டே நம் நட்பு பலப்படும்..!

நமக்குள்ள அறிவு, திறமை, கற்பனை .தன்னம்பிக்கை. முடிவுகளைதீர்மானிக்கும் வேகம், இவற்றுடன் நாம் வாழ்வில் வெற்றி பெற தேவையானது நாம் மற்றவர்களுடன் பழகும் முறை!

நாம் வாழ்வில் ஜெயிப்பதற்கு அதிகாரமோ,செல்வாக்கோ, உதவலாம்.ஆனாலும் நல்ல நட்பை பெறுவதிலோ மற்றவர்களுடன் அனுசரித்து , விட்டுக்கொடுத்து போவதோ, முடியவில்லை எனில் வாழ்வில் ஜெயிக்கவே முடியாது.!

அதனால் நம்மைப்போல் பிறரையும் நேசிப்போம்..! வாழ்வில் ஜெயம் பெறுவோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:01

பிறக்க ஒரு காலமுண்டு! இறக்க ஒரு காலமுன்டு!
நட ஒரு காலம் உண்டு ! நட்டதைப்பிடுங்க ஒரு காலமுண்டு
இடிக்க ஒரு காலம் உண்டு! கட்ட ஒரு காலம் உண்டு!
அழ ஒரு காலம் உண்டு! நகைக்க ஒரு காலம் உண்டு!
தேட ஒரு காலம் உண்டு! இழக்க ஒரு காலம் உண்டு!
காப்பாற்ற ஒரு காலமுண்டு !எறிந்து விட ஒரு காலமுண்டு !
மௌனமாய் இருக்க ஒரு காலமு்ண்டு! பேச ஒருகாலம உண்டு !
சினேகிக்க ஒரு காலம் உண்டு! பகைக்க ஒரு காலம் உண்டு!
யுத்தம் பண்ண ஒருகாலம் உண்டு! சமாதானம் பண்ண ஒரு காலம் உண்டு!

எல்லாவற்றிக்கும் ஒருகாலம் உண்டு..!
வாழ்வில் தோல்விஅடையவும்,அதையேவெற்றியாக்கவும் ஒரு காலம் உண்டு............!

இதை உணராமல்நாம்வருத்தப்பட்டுபிரயாசப்படுகிறதனால் என்ன பலன்?

மகிழ்ச்சியாய் இருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயன்றி வேறோரு நன்மையும் எமக்கு இல்லையே... !

அவ்வாறே எப்போதும் மகிழ்ச்சியாய்இருந்துவாழ்க்கையை ரசிப்போம்!

அந்தந்த காலத்திலே அததை செய்து வாழ்வில் வெற்றி பெறுவோம

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:03

புத்திமதிகளைக்காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் நடக்கிறான்.தண்டனையை வெறுக்கிறவனோ மோசம் போகிறான்.

புத்திமதிகளை தள்ளுகிறவர்கள் வாழ்க்கையிலே பெரும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அடைவார்கள்.
புத்திமதியையும் கடிந்து கொள்ளுதலையும் ஏற்றுக்கொள்பவன் வாழ்விலே கனத்தைப்பெறுவான்..
கடும் சொற்களோ கோபத்தையே உருவாக்கும்.
ஆனால் எதையும் அமைதியாக மெதுவாக எடுத்துச்சொல்லும் போது அவ்வார்த்தைகள் கேட்போரின் உள்ளத்தை அசைக்கும் !
ஏட்டுக்கல்வியோடு கூடிய அனுபவக்கல்வியும் சேரும் போது வாழ்வு நம் வசப்படும்!

நாம் வழ்வில் வெற்றி பெற நம்மை வழிநடத்துவோரின் புத்திமதிகளை ஏற்று அதன் படி நடந்தால் நல் ஆலோசனையினால் நம் எண்ணங்கள் ஸ்திரப்பட்டு வாழ்க்கையை வெல்ல முடியும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:07

நாம் சந்திக்கும் ஒவ்வொருவருவருடனும் அவரிடம் ஆழ்ந்த புன்னகையுடன் முழு ஈடுபாட்டுடன்
தன் முழு அன்பையும் அவர் மீது கொட்டி உற்சாகமாக உரையாட வேண்டும் !

ஒரு நாள் பழகிய அந்த நட்பு, ஒரு மணி நேரம் பேசிய அந்தப் பேச்சு, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி நினைவில் நிற்பதாக இருக்க வேண்டும்.இப்படி ஆழ்ந்து செயலாற்றும்போது நாம் அவருக்கு பிரியமானவர் ஆகிறோம் !

"நல்லதோர் வீணை செய்தே- அதை
நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ?”
- பாரதி

ஆம், நம்முடைய வாழ்க்கையே நல்லதொரு வீணையாக இனிய இசையைக்கொடுப்பதாக இருக்கவேண்டுமானால்
கடந்து போன காலங்கள் எத்தனைதான் சிறப்பானதாக இருந்தாலும் அவைகள் செத்துப் போனவை.
அவைகளுக்கு இன்றைய நினைவுகளால் உயிர் கொடுக்க முயலக் கூடாது..!

இன்று தான் நம்மிடம் இருக்கும் பெரிய வெகுமதி.
அதை உணர்ந்து நாளை என்பதை கடவுளிடம் ஒப்புக்கொடுத்து இன்றைய தினத்தை நம்பிக்கையோடு உற்சாகமாக ஓடுவோம்!

வாழ்க்கையை ஜெயிப்போம்.!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:14

வாழ்த்துதலாய் இருந்தாலும் ,கடிந்து கொள்ளுதலாய் இருந்தாலும் ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது?

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற நாம் செய்யும் காரியங்களில் ஓரே சிந்தையுடன் ஈடுபட வேன்டும் !

அது எதுவானாலும் சிறிதோ பெரிதோ அதை ஏற்கனவே பலமுறை நாம் செய்திருந்தாலும் இப்போதுதான் முதல் முறை செய்வது போல் முழுமனதோடும் ஈடுபாட்டோடும
நம்முடைய உணர்வுகளை செலுத்தி அக்காரியத்தை செய்யும் போது நாம் அக்காரியத்திம் வெற்றி பெறுகிறோம்..!

சிறிதாக நாம் பெறும் வெற்றி தான் நம்மை பெரிய காரியங்களை செய்ய வழிநடத்தும். .!

புதிய பல யுக்திகள் , அனுபவங்களைப்பெற்றுக்கொள்ள உதவும்!

நா்ம பெறும் அனுபவங்கள் நம்மை வெற்றியின் பாதையில் கொண்டு போய் சேர்ப்பது நிச்சயமே.. !

ஆதலால் இப்போ வாழும் வாழ்க்கையை ரசித்து, ருசித்து, ஈடுபாட்டோடு வாழுவோம் !

வாழ்வில் வெற்றி பெறுவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:18

கற்கக் கசடற
கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத்தக

நாம் எல்லோருமே எப்போதும் ஆரோக்கியமான விஷயங்களைக்கற்று எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ முயற்சிப்போம்.

பயிரிடுகிறவன் பூமியின் மேல் விதைகளைத்தூவி அதன் நற்பயனைப்பெற காத்திருப்பது போல் நாமும் நான் கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்து அதை எங்கிருந்து கற்றோமோ, எதற்காக கற்றோமோ அதன்பயனைஅடையும்வரை எல்லோரிடத்திலும் பொறுமையுள்ளவர்களாய் சாந்த குணமுள்ளவர்களாய். பிரியமுண்டாக நடந்து மற்றவர்களைப்பார்த்து பொறாமைப்படாமல் எப்போதும் எல்லாவற்றிலும் மனத்தெளிவுடன் வாழக்கற்றுக்கொள்வோம் !

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:22

கவலைப்படுவதனால் உங்களில் எவன் தன் சரீரத்தில் ஒரு முழத்தைக்கூட்டுவான்.?

ஆம் நண்பர்களே! நாங்கள் எங்கள் வாழ்க்கையிலும் எங்களிடம் இல்லாதவைகளைக்குறித்து அதை எதிர்பார்த்து கவலைப்படுபவர்களாகவே இருக்கிறோம்.

நம்மிடம் எத்தனையோ விதமான நல்ல திறமைகள் மறைந்திருக்கிறது எனபதை அறியாதவர்களாக இருக்கிறோம்.

நமக்குள்ள பல திறமைகளை நாம் பயன் படுத்தபடாமலே வீணாக்கி கொண்டிருக்கிறோம்.நாம் ஓவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் சிறந்தவர்க்ள்.

நாம் வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டுமானால் நம்மைநாமே நிதானித்து சிந்தித்து அந்தத்திறமைகளை வெளிக்கொண்டு வர முயல வேண்டும்.

நாளைய தினத்தை குறித்து கவலைப்படாமல் அந்தந்த நாளுக்கான அதனதன் பாடுகளைக்கவனித்து
கவலைப்பட்டு மன தைரியமிழந்து சோர்ந்திருக்காது நம்மால் முடிந்த வரையில் நமக்கான இலக்கி நோக்கி ஓட வேண்டும் !

அப்போது நாம் வாழ்வின் வெற்றியை நோக்கி செல்ல முடியும் !

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:25

கசப்பு கசப்பை வளர்க்கும், அன்பு அன்பை வளர்க்கும்.

நம் வாழ்க்கையிலே அனேக விஷயங்களில் பெரிய நல்ல காரியங்களைசெய்கிற சில சிறிய காரியங்களில் அசட்டையாக நடக்கிறோம்.

நாம் நம்முடைய விரோதிகளை மன்னிக்கிறோமா? நமக்கு தீங்கு செய்பவர்களை நேசிக்கிறோமா?

நாம் மற்ற்வர்களுக்கு அனேக நல்ல விஷயங்களைப் போதிக்கிறோம்.அவற்றை நாம் செயல் படுத்துகிறோமா ?
அது நல்லது நல்லதோ கெட்டதோ அடுத்தவர்களை செய்யாதே, செய் என சொல்லும் நாம் அதைக்கடைப்பிடிக்கிறோமா?

இல்லை நாம் அதை கடைப்பிடிப்பதில்லை.

மற்றவர்கள் நம்முடைய தப்பிதங்களை பிழைகளை மன்னிக்க வேண்டும் மறக்க வேண்டும் என சொல்லும்,-நினைக்கும் நாம் நமது சொந்த சகோதரனை மன்னிக்க மறுக்கிறோம், அல்லது மறக்கிறோம்.

உள்ளத்தின் கசப்புக்களால் அன்பை இழக்கிறோம்.
ஓவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் வெற்றி பெற அவனுக்கு மன்னிக்கும் சிந்தை அவசியம்.
ஆகையால் நாம் எல்லோரையும் மன்னிக்கக் கற்றுக்கொள்வோம்.

வாழ்க்கையில் வெற்றியை நமதாக்குவோம்.

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:27

பிறக்கும் போதே யாரும் வெற்றியாளர்களாக பிறப்பதில்லை.கடமையுணர்வுடனும் மனஉறுதியுடனும் உழைத்தால் அனைவருக்கும் வெற்றி சாத்தியமே.

எங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது.தனி மனிதன் வாழ்வில் வெற்றி என்பது அவன் குடும்பத்தின் மகிழ்ச்சியோடும் , சமாதானத்தோடுமே கிடைக்கக்கூடியது.

குடும்பத்திலூள்ள ஒவ்வொருவரும் தத்தம் கடமையை உணர்ந்து செயற்படும் போது நிச்சயம் அந்தக் குடும்பத்தில் குழப்பங்கள், பிரச்சனைகள், பிரிவினைகள் இருக்காது.

நம் எல்லோருக்கும் தேவையான வாழ்க்கைத்தரம், செல்வம், கல்வி, பதவி போன்றவை ஒன்று போல அமைவதில்லை. ஆனாலும் நாம் கடமையைச் செய்யும்போது முயற்சி, திருப்தி, சகிப்புத்தன்மை, பொறுமை, பிறருடன் ஒப்பிடாது இருத்தல், பொறாமை இன்மை ,விமர்சனங்களை சரியான விதத்தில் புரிந்து கொள்ளல் போன்ற முக்கிய பண்புகளைப்பற்றிக்கொள்ள முடியும்.

நமக்கென உளள கடமைகளை அது சிறிதோ ,பெரிதோ முழு மனதுடன் தெளிவாக உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் நம் எதிர்காலத்தைக் வெற்றியுள்ளதாக, மிக மகிழ்ச்சியுள்ளதாக அமைத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:28

இலட்சியம் அற்ற வாழ்க்கை துடுப்பற்ற படகைப்போன்றது.

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் அதை அடைய வேண்டும் என்கிற இலக்கு நமக்கு இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும். பிரச்சனைகள் வரும் போது தயங்கவோ, கலங்கவோ கூடாது.

நாம் திட்டமிட்டபடியே நாம்முடைய இலக்கு எதுவோ அதை நோக்கி செல்லவே முயல வேண்டும்.அதே போல் பிரச்சனைகள் வரும் போது எதையும் நாளை ,நாளை எனத்தள்ளிப்போடாது, உரியகாலத்தில் சிந்தித்து முடிவெடுக்க பழக வேண்டும்.

நம்முடைய இலக்கின் பாதையில் தடைகள் வந்தாலும் சோர்ந்து போகாது கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்வோமானால் நாம் இலட்சியத்தில் நிச்சயிக்கப்பட்ட இலக்கை அடைவதுடன் வாழ்க்கையிலும் வெற்றியையே அடைவோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:31

வாழ்க்கை என்பது ஒரு பயணம்.

நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் வாழ்க்கைப்பயணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
அந்த்ப்பயணத்திலே நாம் எத்தனையோ பேரைச்சந்திக்கிறோம். அவர்களில் எத்தனை பேரை நம் அன்பால் ஆதாயப்படுத்திக்கொள்கிறோம் !
.
மனித வாழ்வைப்பொறுத்தவரை அறிவிலும் இன்றியமையாதது அன்பு. சில சூழ்நிலைகளில் நம் அறிவால், பணத்தால் ஆதாயப்படுத்த முடியாதவைகளை இனிமையான சில வார்த்தைகளால். அக்கறையோடு கூடிய விசாரிப்புக்களால் ஆதாயப்படுத்திக்கொள்ள முடியும்.

அன்பு கஷ்டங்களையும், வருத்தங்களையும் தாங்கும் . இவ்வுலகம் இப்பொழுது ஒரு துளி அன்புக்காக அன்பான வார்த்தைக்காக தகித்துக்கொண்டுள்ள வேளையில் நாம் நம்மால் இலவசமாக கொடுக்கக்கூடிய அன்பினால் எல்லோரையும் அரவணைத்து நடக்கும் போதும் நாம் நம் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறோம்.

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:34

நாம் தலைக்கு மேல் பறக்கும் பறவைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது,ஆயினும் அவை நம் தலையின் மேல் கூடுகட்டாதபடி தடுத்து நிறுத்த நம்மால் முடியும்.

நம்முடைய இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகின்ற பொல்லாத சிந்தனைகளைத்தடை செய்ய நம்மால் முடியாது.ஆயினும் அவைகளை ஏற்றுக்கொள்ளாமலோ சார்ந்து கொள்லாமலோ தவிர்க்க நம்மால் முடியும்.

நம் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் நம்முடைய அடி மனதின் வெளிப்பாடாகவே இருக்கும்.

மனிதனுக்கு உள்ளே போகிறது எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது ,அவன் வாயிலிருந்து வரும் வார்த்தகைளே அவனைத்தீட்டுப்படுத்தும்.

ஆம் அப்படியே நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்ல வார்த்தைகளை எடுத்துப்பேசுகிறான்.பொல்லாத மனிதன் பொல்லாத வார்த்தகளைப்பேசி தன்னையும் துன்பப்படுத்தி சூழ உள்லோரையும் துன்பப்படுத்துகிறான்.

மனிதராகிய நாம் பேசும் வீ்ணான வார்த்தைகளை தவிர்த்துகொள்ளும் போது பல கருத்து வேறுபாடுகளைத்தவிர்த்து எல்லோருடனும் எப்போதும் மனம்கிழ்ச்சியாய் இருப்பதன் மூலமும் நாம் வாழ்க்கையில் வெற்றியை சுதந்தரித்துக்கொள்கிறோம்.

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:36

உலகத்தில் வாழ்கிற நாம் எல்லோரையும் ஒதுக்கி விட்டு நமக்கென தனித்து வாழ முடியாது.

ஆனால் பிரித்தெடுக்கப்ப்ட்ட ஒரு தனிப்பட்ட உண்மையான உத்தமமான வாழ்க்கையை வாழலாம்.

கொஞ்சத்தில் உண்மையய் நடக்கும் மனிதனை அனேகத்திலும் நம்புவார்கள்.

அவ்வாறே நாமும் நம்மை மற்றவர்களுடைய நம்பிக்கைக்குரியவர்களாக உண்மையோடும், உறுதியோடும் வாழ முயலலாம்.

ஆம் ,சத்திய உதடுகள் எனறும் நிலைத்திருக்கும, உண்மையாய் நடக்கிற ,ஓரு மனிதனை எல்லோரும் விரும்புவதனால் அவன் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியைத்தருவதாக மாறும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நம் வாய் மொழிகளினால் சிக்குண்டு நம் வார்த்தைளில், செய்கைகளில், நடத்தைகளில் மாறுபாடு வராதபடி காத்து எல்லோருக்கும் உண்மையுள்ளவர்களாய் நடக்கும் போதும் நாம் வாழ்க்கையை வெற்றி கொளகிறோம்

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 2:37

மாயை ,மாயை எல்லாமே மாயை.

இந்த உலகத்தில் எல்லாமே மாயையும் மனதுக்கு சஞ்சலம் தருவதுமாகவே இருக்கிறது.எல்லாம் வருத்தத்தினால் நிறைந்து இருக்கிறது.

அது மனுஷரால் சொல்லி முடியாது. கண்கள் காண்கிறதில் திருப்தியாகறதுமில்லை. காதுகள் கேட்கப்படுவதினால் செவி நிரப்படுகிறதுமில்லை.

முன் இருந்தவைகலைப்பற்றி ஞாபகம் இல்லை.பின் வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேல் இருப்பவர்களுக்கு ஞாபகமிராது.

அப்படியே கோணலானவைகளை நேராக்க நம்மால் முடியாது. ஆனால் நாம் செய்வதை முழுமனதோடு செய்ய முடியும் .அப்படி மனதில் சஞ்சலமின்றி எடுத்த காரியத்திலும் அதன் மேல் கொண்ட நம்பிக்கையிலும் தடம் மாறாது நிலைத்து இருக்கும் போதும் நாம் வாழ்க்கையை வெல்ல முற்சிக்கிறோம்.

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by நண்பன் Mon 30 Jun 2014 - 8:26

Nisha wrote:
இந்த திரிக்கு வந்த அன்புறவுகளே இதை மு்ழுமையாக  படியுங்கள், சிந்தியுங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!

வாழ்வின் படிகள்

மிக மிக நல்ல நாள் --- இன்று
மிகப்பெரிய வெகுமதி---மன்னிப்பு
மிகவும் வேண்டியது-- பணிவு
மிகப்பெரிய தேவை ---சமயோஜித புத்தி
மிகப்பெரிய கொடிய நோய்-- பேராசை
மிகவும் சுலபமானது---குற்றம் காணல்
மிகவும் கீழ்த்தரமானது---பொறாமை
நம்பக்கூடாதது---வதந்தி
ஆபத்தை விளைவிப்பது---அதிக பேச்சு
செய்ய வேண்டியது ---உதவி
விலக்க வேண்டியது.--விவாதம்
உயர்வுக்கு வழி --- உழைப்பு
நழுவ விடக்கூடாதது --- வாய்ப்பு
பிரியக்கூடாதது---நட்பு
மறக்கக்கூடாதது---நன்றி

ஒரு மனிதனின் வாழ்வில் இவைகள் அனைத்தும் இருக்கும் என்றால் கடைப்பிடிப்பார்கள் என்றால் வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் மனிதன் மனிதனாகவே வாழ முடியும்
அடியேனுக்கும் அறிவுடயதாக இருந்தது
பகிர்வுக்கு நன்றி அக்கா..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by நண்பன் Mon 30 Jun 2014 - 8:30

Nisha wrote:வாழ்க்கை வாழ்வதற்கே

நாம் இனிமையாக பழகும் போது மற்றவர்களும்நம்முடன் இனிமையாக பழகத்தொடங்குகிறார்கள்.. நகைச்சுவையாக பேசுபவனை எல்லோரும்விரும்புவார்கள்.பிறருக்கு நாம் உதவும் போது உலகமே நம்மை விரும்பும்.

நாம் நம்மைத்தானே எப்படி மதித்து நடக்கிறோம்? பிறருடன் எப்படி பழகமுயல்கிறோம் என்பதைக்கொண்டே நம் நட்பு பலப்படும்..!

நமக்குள்ள அறிவு, திறமை, கற்பனை .தன்னம்பிக்கை. முடிவுகளைதீர்மானிக்கும் வேகம், இவற்றுடன் நாம் வாழ்வில் வெற்றி பெற தேவையானது நாம் மற்றவர்களுடன் பழகும் முறை!

நாம் வாழ்வில் ஜெயிப்பதற்கு அதிகாரமோ,செல்வாக்கோ, உதவலாம்.ஆனாலும் நல்ல நட்பை பெறுவதிலோ மற்றவர்களுடன் அனுசரித்து , விட்டுக்கொடுத்து போவதோ, முடியவில்லை எனில் வாழ்வில் ஜெயிக்கவே முடியாது.!

அதனால் நம்மைப்போல் பிறரையும் நேசிப்போம்..! வாழ்வில் ஜெயம் பெறுவோம்!

அனுசரிப்பு ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவசியமான ஒன்று
யார் வாழ்க்கையில் அனுசரித்து வாழக்கற்றுக்கொள்கிறாரோ அவர் வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by நண்பன் Mon 30 Jun 2014 - 8:34

Nisha wrote:பிறக்க ஒரு காலமுண்டு! இறக்க ஒரு காலமுன்டு!
நட ஒரு காலம் உண்டு ! நட்டதைப்பிடுங்க ஒரு காலமுண்டு
இடிக்க ஒரு காலம் உண்டு! கட்ட ஒரு காலம் உண்டு!
அழ ஒரு காலம் உண்டு! நகைக்க ஒரு காலம் உண்டு!
தேட ஒரு காலம் உண்டு! இழக்க ஒரு காலம் உண்டு!
காப்பாற்ற ஒரு காலமுண்டு !எறிந்து விட ஒரு காலமுண்டு !
மௌனமாய் இருக்க ஒரு காலமு்ண்டு! பேச ஒருகாலம உண்டு !
சினேகிக்க ஒரு காலம் உண்டு! பகைக்க ஒரு காலம் உண்டு!
யுத்தம் பண்ண ஒருகாலம் உண்டு! சமாதானம் பண்ண ஒரு காலம் உண்டு!

எல்லாவற்றிக்கும் ஒருகாலம் உண்டு..!
வாழ்வில் தோல்விஅடையவும்,அதையேவெற்றியாக்கவும் ஒரு காலம் உண்டு............!

இதை உணராமல்நாம்வருத்தப்பட்டுபிரயாசப்படுகிறதனால் என்ன பலன்?

மகிழ்ச்சியாய் இருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயன்றி வேறோரு நன்மையும் எமக்கு இல்லையே... !

அவ்வாறே எப்போதும் மகிழ்ச்சியாய்இருந்துவாழ்க்கையை ரசிப்போம்!

அந்தந்த காலத்திலே அததை செய்து வாழ்வில் வெற்றி பெறுவோம

மகிழ்ச்சியாய் இருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயன்றி வேறோரு நன்மையும் எமக்கு இல்லையே... !

அவ்வாறே எப்போதும் மகிழ்ச்சியாய்இருந்துவாழ்க்கையை ரசிப்போம்!

நாளையை எண்ணி இன்றைத் தொலைக்காமல்

உள்ளதைக்கொண்டு அந்தந்த காலத்திலே அததை செய்து வாழ்வில் வெற்றி பெறுவோம்

பயனுள்ள பகிர்வு நன்றி அக்கா..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by நண்பன் Mon 30 Jun 2014 - 8:37

Nisha wrote:புத்திமதிகளைக்காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் நடக்கிறான்.தண்டனையை வெறுக்கிறவனோ மோசம் போகிறான்.

புத்திமதிகளை தள்ளுகிறவர்கள் வாழ்க்கையிலே பெரும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அடைவார்கள்.
புத்திமதியையும் கடிந்து கொள்ளுதலையும் ஏற்றுக்கொள்பவன் வாழ்விலே கனத்தைப்பெறுவான்..
கடும் சொற்களோ கோபத்தையே உருவாக்கும்.
ஆனால் எதையும் அமைதியாக மெதுவாக எடுத்துச்சொல்லும் போது அவ்வார்த்தைகள் கேட்போரின் உள்ளத்தை அசைக்கும் !
ஏட்டுக்கல்வியோடு கூடிய அனுபவக்கல்வியும் சேரும் போது வாழ்வு நம் வசப்படும்!

நாம் வழ்வில் வெற்றி பெற நம்மை வழிநடத்துவோரின் புத்திமதிகளை ஏற்று அதன் படி நடந்தால் நல் ஆலோசனையினால் நம் எண்ணங்கள் ஸ்திரப்பட்டு வாழ்க்கையை வெல்ல முடியும்!

நிச்சியமாக மாதா பிதா குரு இவர்களைப் போன்று நம்மை வழிநடத்திச்செல்வோருடன் நாம் வழி பட்டு நடந்து கொண்டால் தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்து கொண்டால் நாளை நாமும் சிறந்த முறையில் வழி நடத்த முடியும் என்பது உண்மை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by நண்பன் Mon 30 Jun 2014 - 9:01

Nisha wrote:நாம் சந்திக்கும் ஒவ்வொருவருவருடனும் அவரிடம் ஆழ்ந்த புன்னகையுடன் முழு ஈடுபாட்டுடன்
தன் முழு அன்பையும் அவர் மீது கொட்டி உற்சாகமாக உரையாட வேண்டும் !

ஒரு நாள் பழகிய அந்த நட்பு, ஒரு மணி நேரம் பேசிய அந்தப் பேச்சு, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி நினைவில் நிற்பதாக இருக்க வேண்டும்.இப்படி ஆழ்ந்து செயலாற்றும்போது நாம் அவருக்கு பிரியமானவர் ஆகிறோம் !

"நல்லதோர் வீணை செய்தே- அதை
நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ?”
- பாரதி

ஆம், நம்முடைய வாழ்க்கையே நல்லதொரு வீணையாக இனிய இசையைக்கொடுப்பதாக இருக்கவேண்டுமானால்
கடந்து போன காலங்கள் எத்தனைதான் சிறப்பானதாக இருந்தாலும் அவைகள் செத்துப் போனவை.
அவைகளுக்கு இன்றைய நினைவுகளால் உயிர் கொடுக்க முயலக் கூடாது..!

இன்று தான் நம்மிடம் இருக்கும் பெரிய வெகுமதி.
அதை உணர்ந்து நாளை என்பதை கடவுளிடம் ஒப்புக்கொடுத்து இன்றைய தினத்தை நம்பிக்கையோடு உற்சாகமாக ஓடுவோம்!

வாழ்க்கையை ஜெயிப்போம்.!

என்னைப் பொறுத்த வரை கடந்து போன வாழ்க்கை திரும்பாதவைதான் ஆனால் செத்துப்போனவையாக என்னால் ஏற்க முடியாது அந்த நினைவுகளுக்கு அப்பப்போ உயிர் கொடுக்கிறேன் அப்பப்போ வந்து என் மனதுக்கு பசுமையான நினைவுகளைத் தந்து கொண்டுதான் இருக்கிறது பள்ளி வாழ்க்கை பழகிய நட்புகள் பள்ளிப்பருவ காதல் காதலிக்கும் போது முனுமுனுத்த பாடல் இப்படி நிறையவே மறக்க முடியாது

சில நினைவுகள் மனதுக்கு இனிமையாகவும் சில நினைவுகள் மனதிற்கு ஆறுதலாகவும் சில நினைவுகள் கொடூரமானதாகவும் அமைந்துள்ளது அது என்னவோ தெரியல அவைகளை செத்துப்போனதாக எண்ணி உயிர் கொடுக்காமல் இருக்க முடிய வில்லை அதனால்தான் என்னவோ என் வாழ்வில் இன்னும் வெற்றிப் படியை நான் எட்ட வில்லை ..!

அருமையான பதிவு அக்கா இன்னும் தொடருங்கள்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by நண்பன் Mon 30 Jun 2014 - 9:09

Nisha wrote:வாழ்த்துதலாய் இருந்தாலும் ,கடிந்து கொள்ளுதலாய் இருந்தாலும் ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது?

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற நாம் செய்யும் காரியங்களில் ஓரே சிந்தையுடன் ஈடுபட வேன்டும் !

அது எதுவானாலும் சிறிதோ பெரிதோ அதை ஏற்கனவே பலமுறை நாம் செய்திருந்தாலும் இப்போதுதான் முதல் முறை செய்வது போல் முழுமனதோடும் ஈடுபாட்டோடும
நம்முடைய உணர்வுகளை செலுத்தி அக்காரியத்தை செய்யும் போது நாம் அக்காரியத்திம் வெற்றி பெறுகிறோம்..!

சிறிதாக நாம் பெறும் வெற்றி தான் நம்மை பெரிய காரியங்களை செய்ய வழிநடத்தும். .!

புதிய பல யுக்திகள் , அனுபவங்களைப்பெற்றுக்கொள்ள உதவும்!

நா்ம பெறும் அனுபவங்கள் நம்மை வெற்றியின் பாதையில் கொண்டு போய் சேர்ப்பது நிச்சயமே.. !

ஆதலால் இப்போ வாழும் வாழ்க்கையை ரசித்து, ருசித்து, ஈடுபாட்டோடு வாழுவோம் !

வாழ்வில் வெற்றி பெறுவோம் !
நிச்சியமாக அனுபவவே அறிவூட்டும் என்பது மட்டுமல்ல
வெற்றியையும் அதுவே தேடித்தரும்
ஒரு முடிவு அதில் தெளிவு வேண்டம்
உணர்வுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by நண்பன் Mon 30 Jun 2014 - 9:11

Nisha wrote:கற்கக் கசடற
கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத்தக

நாம் எல்லோருமே எப்போதும் ஆரோக்கியமான விஷயங்களைக்கற்று எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ முயற்சிப்போம்.

பயிரிடுகிறவன் பூமியின் மேல் விதைகளைத்தூவி அதன் நற்பயனைப்பெற காத்திருப்பது போல் நாமும் நான் கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்து அதை எங்கிருந்து கற்றோமோ, எதற்காக கற்றோமோ அதன்பயனைஅடையும்வரை எல்லோரிடத்திலும் பொறுமையுள்ளவர்களாய் சாந்த குணமுள்ளவர்களாய். பிரியமுண்டாக நடந்து மற்றவர்களைப்பார்த்து பொறாமைப்படாமல் எப்போதும் எல்லாவற்றிலும் மனத்தெளிவுடன் வாழக்கற்றுக்கொள்வோம் !

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

பொறுமை சாந்தம் பிரியம் இவைகள் அனைத்தும் வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு ஏணிப்படிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by rammalar Mon 30 Jun 2014 - 9:16

*_  *_ 
வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! 9k=
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by நண்பன் Mon 30 Jun 2014 - 9:16

Nisha wrote:கவலைப்படுவதனால் உங்களில் எவன் தன் சரீரத்தில் ஒரு முழத்தைக்கூட்டுவான்.?

ஆம் நண்பர்களே! நாங்கள் எங்கள் வாழ்க்கையிலும் எங்களிடம் இல்லாதவைகளைக்குறித்து அதை எதிர்பார்த்து கவலைப்படுபவர்களாகவே இருக்கிறோம்.

நம்மிடம் எத்தனையோ விதமான நல்ல திறமைகள் மறைந்திருக்கிறது எனபதை அறியாதவர்களாக இருக்கிறோம்.

நமக்குள்ள பல திறமைகளை நாம் பயன் படுத்தபடாமலே வீணாக்கி கொண்டிருக்கிறோம்.நாம் ஓவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் சிறந்தவர்க்ள்.

நாம் வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டுமானால் நம்மைநாமே நிதானித்து சிந்தித்து அந்தத்திறமைகளை வெளிக்கொண்டு வர முயல வேண்டும்.

நாளைய தினத்தை குறித்து கவலைப்படாமல் அந்தந்த நாளுக்கான அதனதன் பாடுகளைக்கவனித்து
கவலைப்பட்டு மன தைரியமிழந்து சோர்ந்திருக்காது நம்மால் முடிந்த வரையில் நமக்கான இலக்கி நோக்கி ஓட வேண்டும் !

அப்போது நாம் வாழ்வின் வெற்றியை நோக்கி செல்ல முடியும் !

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் !

நமக்குள்ள பல திறமைகளை நாம் பயன் படுத்தபடாமலே வீணாக்கி கொண்டிருக்கிறோம்.
நாம் ஓவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள் அடியேனின் அறிவைக் கூர்மையாக்கும் பதிவாக இதைக் கருதுகிறேன் நன்றி அக்கா...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by jasmin Mon 30 Jun 2014 - 10:36

நல்ல பதிவு எல்லாம் எல்லோரும் அறிந்தவைதான் ஆனால் சில நேரங்களில் நாம் அதை உணர்வது இல்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum