சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா? Khan11

நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா?

3 posters

Go down

நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா? Empty நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா?

Post by ahmad78 Thu 3 Jul 2014 - 10:30

நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா? Mineral_1980679h
படம்: கோப்பு
பெரு நகரங்களிலும் நகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நாம் நம்பி வாங்கும் கேன் குடிநீர் அவ்வளவும் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டவைதானா? இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, தரமணியில் இருக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பின் விஞ்ஞானிகள் இருவர் கைது செய்யப்பட்ட போது அம்பலமானது அநேக கேன் குடிநீர் நிறுவனங்களின் மோசடிகள்.

குடிநீர் எப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்?

Ø காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்திரத்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும் மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும்.
Ø நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மை குறைக்கப்பட வேண்டும்.
Ø மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும்.
Ø ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
Ø இந்தத் தண்ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) தொழில்நுட்பம் மூலம் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ், பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.
Ø ஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
போலி சுத்திகரிப்பு
தண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர். எதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில் நிரப்புவோரும் உண்டு. சிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள். இது ஆபத்தானது.

கோடையில் இது சீசன் தொழில்

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் 1,250 மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்திய தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டல அதிகாரிகள் கூறுகையில், “அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.

இது சீசன் தொழில். கோடை தொடங்கிவிட்டால் போர்வெல் தோண்டி குடிசைத் தொழிலைப் போல செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்தி வருகிறோம்” என்கின்றனர். தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியர், “இதனால் மொத்த நிறுவனங்களுக்கும் சேர்த்து அவப் பெயர் ஏற்படுகிறது. தமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்கள் 'ஐ.எஸ்.ஐ. 2002' உரிமம் இல்லாமல் தொழில் செய்கின்றனர்” என்றார்.

தீர்வுகள் என்ன?

250 - 300 வரை டி.டி.எஸ். இருக்கும் நீர் குடிப்பதற்கு உகந்தது. நாம் குடிக்கும் நீரை நாமே பரிசோதனை செய்யலாம். பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பரிசோதனைக் கருவி கிடைக்கிறது. இதை குடிநீரில் வைத்தால் டி.டி.எஸ். அளவு காட்டும். இதில் 100 முறை சோதனை செய்ய முடியும். சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள பி.டி.ஆர். பவுண்டேஷனில் சுமார் 350 ரூபாயில் சிறு கருவி கிடைக்கிறது.
கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன.
பாட்டில் குடிநீர் குறியீடு அறிந்துகொள்ளுங்கள்

பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளில் முக்கோண குறியீட்டுக்குள் 1 முதல் 7 வரை ஓர் எண்ணைக் குறிப்பிட்டிருப்பர். அதை கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணும் அந்த பாட்டில் எந்த வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.
எண் 1 - பாலி எத்திலின் டெர்ப்தலேட், 2 - ஹை டென்சிட்டி பாலி எத்தனால், 3 - பாலிவினைல் குளோரைடு, 4 - லோ டென்சிட்டி பாலி எத்தனால், 5 - பாலி புரோபைலினால், 6 - பாலிஸ்டிரின் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது. 7 - ஓரளவு நீடித்த பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிக்கிறது. குடிநீர் பாட்டிலைப் பொறுத்தவரை முறையே 1, 2, 3 என எண் குறிப்பிடப்பட்ட பாட்டில்களை அந்த எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!
 
http://tamil.thehindu.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா? Empty Re: நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா?

Post by jasmin Thu 3 Jul 2014 - 12:08

என்ன செய்யிரது குடி நீர் ஆறாய் ஓடிய காலம் போய் இப்ப பாட்டிலில் வாங்க வேண்டி இருக்கு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா? Empty Re: நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா?

Post by ராகவா Thu 3 Jul 2014 - 12:15

jasmin wrote:என்ன செய்யிரது குடி நீர் ஆறாய் ஓடிய காலம் போய் இப்ப பாட்டிலில் வாங்க வேண்டி இருக்கு
குடிநீர் எங்கள் கிராமங்களில் பயிருகளுக்கு பாச்சுவோம்..அப்போது நினைப்பேன் இந்த நீருக்காக நகரத்தில் மக்கள் அல்லல் நினைத்து அழுதுவிடுவேன்..
தண்ணீருக்காக ஒரு வண்டி வரும் அதில் பிடிக்க பெரிய கூட்டம் கூடும்,,,,,சண்டை ..கூச்சல் அப்பப்பா அதில் ஒரு குடம்தான் கிடைக்கும் சில நாட்களில்...
இப்படியே போனால் நாம் சுவாசிக்கும் காற்றையும் காசு வாங்கும் நிலை வரும்போல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா? Empty Re: நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum