சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

( பிஸ்மில்லாஹ் )அல்லாஹ்வின் திருப்பெயரால்…! Khan11

( பிஸ்மில்லாஹ் )அல்லாஹ்வின் திருப்பெயரால்…!

2 posters

Go down

( பிஸ்மில்லாஹ் )அல்லாஹ்வின் திருப்பெயரால்…! Empty ( பிஸ்மில்லாஹ் )அல்லாஹ்வின் திருப்பெயரால்…!

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 9:37

பிஸ்மில்லாஹ் – ‘அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்று துவங்கும் காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

ஒரு முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் மேலுள்ள நம்பிக்கை ஊடுருவி, பரவி நிற்கின்றது. அவனுடைய சமூக, கலாச்சாரப் பழக்கவழக்கங்களில் அது பிரதிபலித்து நிற்கின்றது. அது அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளில் ஆனாலும் சரி, மனித உறவுகளானாலும் சரி, உண்பதானாலும் சரி, உடுத்துவதானாலும் சரி, கால்நடைகளை அறுப்பதானாலும் சரி.

இதன் காரணமாகத்தான் ஒரு காரியத்தைச் செய்யுமுன் முஸ்லிம்கள் “பிஸ்மில்லாஹ்” என்று கூறுகின்றனர். அதேபோல் வாக்குறுதிகளைக் கொடுக்கும்பொழுது, எதிர்கால ஏற்பாடுகளைச் செய்யும்பொழுது “இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்று கூறுகின்றனர்.

இஸ்லாமியக் கலாச்சாரம் ஒரு மனிதனை அல்லாஹ்வின் பெயராலேயே அனைத்துக் காரியங்களையும் துவங்கிடுமாறு கோருகிறது. ஒருவர் இதனை உணர்வுபூர்வமாகவும், நேர்மையாகவும் செய்தால் அது மூன்று விதமான நல்ல விளைவுகளை நிச்சயமாக ஏற்படுத்துகின்றது.

முதலாவது பிஸ்மில்லாஹ் அவரைத் தீய சக்திகளிடமிருந்து தூரமாக்கி வைக்கிறது.

இரண்டாவது, பிஸ்மில்லாஹ் என்று கூறும்பொழுது அது அவரது சிந்தனையில் சரியான போக்கை உருவாக்குகிறது. அவரைச் சரியான திசையில் வழிநடத்திச் செல்கிறது.

மூன்றாவது, அவர் அல்லாஹ்வின் உதவியையும், அருளையும் பெறுவார். ஷைத்தானியத் தூண்டுதல்களிலிருந்து  பாதுகாக்கப்படுவார்.

யார் அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிராறோ அவர் பக்கம் அல்லாஹ் திரும்புவான்.

இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் – “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…” என்றுதான் திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் துவங்குகின்றன. ரஹ்மான், ரஹீம் ஆகிய இரு அரபி வார்த்தைகளையும் “அளவற்ற அருளாளன்”, “நிகரற்ற அன்புடையோன்” என்று மொழிபெயர்க்கிறோம். இந்த இரு வார்த்தைகளும் அல்லாஹ்வின் கருணையை அனைத்து விதமாகவும் விளக்குகின்றன.

அர்-ரஹ்மான், அர்-ரஹீம் ஆகிய இரு வார்த்தைகளும் அல்லாஹ்வின் அருங்குணங்களை அருமையாகப் பறை சாற்றுகின்றன. அந்த அரபி வார்த்தைகளின் பிற மொழிபெயர்ப்புகள் இந்த அளவுக்கு பொருள் தரவல்லவையல்ல. அவைகள் இதர படைப்பினங்களோடு ஒப்பிட்டு இந்தப் பொருள்களைத் தருகின்றன.

ஆனால் அல்லாஹ்வைப் போன்று எந்தப் படைப்பினமும் இல்லை. அவனது அருள் மழையை, கருணையை படைப்பினங்களின் கருணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

அவனே அனைத்தையும் படைத்தவன். படைப்பினங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன்.

கருணை என்பது துயரம், நீண்டநாள் துயரம், பொறுமை, மன்னிப்பு ஆகியவற்றின்அடிப்படையில் உருவாகுவது. ஒரு பாவிக்கு அல்லாஹ்வின் கருணை தேவைப்படுகிறது. அல்லாஹ்வும் அவனுக்கு அருள்பாலித்து அவனது பாவங்களை மன்னிக்கின்றான்.

தேவைப்படும்பொழுது மட்டுமல்லாமல் தேவையில்லாத வேளையிலும் அல்லாஹ்வின் கருணை வெளிப்படும்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் நம்மிடம் வேண்டுவது எல்லாம் அவனை நினைவு கூர்வதையும், நன்றி நவில்வதையும், அவனது எல்லையில்லா அன்புக்கு பிரதிபலிப்பையும்தான்.

நமது அனைத்துக் காரியங்களின் துவக்கத்திலும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று கூறுவது ஒரு வகையில் அவனை நினைவு கூர்வதுதான். அதே போல் காரியங்களின் முடிவில் “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும், நன்றியும் அவனுக்கே!) என்று கூறுவது அவனுக்கு நன்றி நவில்வதுதான்.

அல்லாஹ்வின் எல்லையில்லாக் கருணையை மனதிலிறுத்தி, இவைகளெல்லாம் அந்த அளவற்ற அருளாளனின், நிகரற்ற அன்புடையோனின் அற்புதங்கள் என்று உணர்வதே அதன் பிரதிபலிப்பு ஆகும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், இன்ஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் ஆகிய பதங்களைச் சொல்வது ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையின் சமூக வெளிப்பாடாகும்.

இஸ்லாமிய அடிப்படையில் சொல்லப் போனால், அந்த அரபிப் பதங்கள் அனைவரையும் படைத்த அந்த ஒருவனைப் பணிவதற்குரிய பிரகடனங்கள்தாம்.

ஒருவருடைய உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கு இஸ்லாம்இன்னும் நிறைய பதங்களை எடுத்தியம்புகின்றது.

உதாரணமாக, ஒருவரைப் புகழ்வதற்கு “ஸுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்!) என்றும், “மாஷா அல்லாஹ்” (இறைவன் பொருந்திக்கொண்டான் இறைவன் நாடி விட்டான் !) என்றும் கூறுகிறோம்.

அதே போல் ஒரு முஸ்லிம் தும்மினால் “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்று சொல்வார். அருகிலிருப்பவர்கள் அதனைக் கேட்டால் “யர்ஹமுகல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!) என்று சொல்வார்கள்.

யாரவது ஒருவர் இறந்து விட்டால் ஒரு முஸ்லிம், “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காவே இருக்கிறோம்; நிச்சயமாக நாம் அவனிடமே மீளப் போகிறோம்!) என்று கூறுவார்.

ஒரு முஸ்லிம் அவர் விரும்பாதவற்றைப் பார்த்தாலோ, கேட்டாலோ “நவூதுபில்லாஹ்” (நாம் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றோம்!) என்றும், அல்லது “லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் சக்தி இல்லை!) என்றும் கூறுவார்.

இஸ்லாம் உருவாக்கித் தந்துள்ள இந்தப் பதங்கள் மிகச் சுருக்கமாகவும், நறுக்கென்றும் இருக்கலாம். ஆனால் அவற்றின் பொருளும், முக்கியத்துவமும் வானத்திற்கும், பூமிக்குமுள்ள தூரத்தைப் போல் பரந்து விரிந்தது. பொருள் பொதிந்தது.

அவைகளின் அர்த்தங்களுக்கு எல்லையே இல்லை. இந்தப் பதங்களைத் தியானத் தலங்களில்பயன்படுத்துவது வானத்திற்கும், பூமிக்கும் இடையிலுள்ள இடைவெளியை நிரப்பும் அளவுக்கு நன்மைகளை அள்ளித் தரும் என்று அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் அழகுறச் சொன்னார்கள்.

திருக்குர்ஆன், “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” (அகிலங்களனத்தையும் படித்துப் பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!) என்ற வாக்கியத்துடனேயே துவங்குகின்றது.

இது ஒரு சாதாரண வாக்கியமல்ல. அளவில்லாப் பொருட்கள் பொதிந்த மகத்துவமிக்க வாக்கியம் இது. இந்த வாக்கியம் முடிவின்மையை உணர்த்துகிறது.

நாம் இந்த வாக்கியத்தை முணுமுணுக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பொருள் கொள்கிறோம்: இந்த அண்ட சராசரங்கள், அவற்றின் படைப்பினங்கள் அனைத்தும் தோன்றுவதற்கும் முன்பாக உள்ளமையாயிருந்த இறைவனே அனைத்துப் புகழுக்கும் தகுதியானவன்.

அதேபோல் அனைத்துப் படைப்பினங்களும் ஒரு காலத்தில் அழியும். அவை அழிந்த பின்னும் அந்த அல்லாஹ்வே புகழுக்கும் நன்றிக்கும் உரித்தவன்;  தகுதியானவன்; அவனே அனைத்துப் புகழுக்கும் சொந்தக்காரன். இறைத்தூதர்கள், வானவர்கள், அந்த அல்லாஹ்வையே புகழ்கின்றனர். படைப்பினங்கள் அனைத்தும் அந்த அல்லாஹ்வையே புகழ்கின்றன.

அரபியில் 3 வார்த்தைகள் உள்ளன: 1. ஹம்த். 2. மத். 3. ஷுக்ர்.

ஹம்து, மத் என்றால் புகழ், ஷுக்ர் என்றால் நன்றி. ஆனால் இந்த 3 வார்த்தைகளும் அதனதன் அர்த்தங்களால் மாறுபடுகின்றன.

அரபி மொழி ஓர் ஈடிணையற்ற மொழி. அதிகப் பொருள் தரக்கூடிய, சுருங்கிய வார்த்தைகளுக்கு அது பெயர் பெற்றது.

உதாரணத்திற்கு ஹம்த், மத், ஷுக்ர் – இந்த 3 வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம். இந்த வார்த்தைகள் வெளிப்படையாகப் பார்க்கும்பொழுது ஒரே பொருளைத் தந்தாலும், உண்மையில் அதன் அர்த்தங்கள் பெரிய அளவில் வித்தியாசப்படுகின்றன.

அரபி மொழியாளர்களும் அரபல்லாத பிற மொழியாளர்களும் இதன் அர்த்தங்களை விரிவாக அலசி ஆராய்ந்துள்ளனர்.

‘மத்’ என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

‘ஹம்த்’ என்பது உயிருள்ள பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்துவதால் ஒரு நற்கூலியைப் பெறலாம். அல்லது பெறாமலும் இருக்கலாம்.

‘ஷுக்ர்’ என்பது ஒருவர் நற்கூலியைப் பெற்ற பின் பயன்படுத்துவது.

ஆதலால் “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்பது “அஷ்ஷுக்ர்லில்லாஹ்” (எல்லா நன்றியும் அல்லாஹ்வுக்கே!) என்பதை விடச் சிறந்ததாகும். ஏனெனில் ‘ஹம்த்’ என்பது புகழையும் நன்றியையும் குறிக்கிறது.

ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் நமது வாழ்நாள் முழுவதையும் அல்லாஹ்வின் அருளுக்காக, அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகச் செலவழித்தாலும் நாம் முழுமையாக, பூரணமாக அவனுக்கு நன்றி செலுத்த இயலாது.

பாரசீகக் கவிஞர் ஷேக் ஸஅதீ கூறுகிறார்: ஒரு மனிதன் தனது வாழ்நாளின் ஒவ்வொரு மூச்சிலும் நன்றி செலுத்தினாலும் அவன் அல்லாஹ்வுக்கு முழுவதுமாக நன்றி செலுத்திவிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு மூச்சிலும் அல்லாஹ்வின் இரண்டு அருள்கள் அந்த மனிதனுக்கு உள்ளன. ஒன்று – அவன் மூச்சிருப்பதால்தான் உயிர் வாழ்கிறான். மற்றொன்று – மூச்சிருப்பதால்தான் அவன் அனைத்து வசதிகளையும் பெறுகிறான்.

வானங்களிலும், பூமியுலுமுள்ள அனைத்துப் படைப்பினங்களும் அல்லாஹ்வைத் துதித்துப் பெருமைப்படுத்துகின்றன.

ஆம்! அவன்தான் மகா சக்தி வாய்ந்தவன், அவன்தான் நுண்ணறிவாளன் – வஹுவல் அஸுஸுல் ஹக்கீம்.

செய்யது நியாஸ் அஹமது

தமிழில்: MSAH

நன்றி: விடியல் வெள்ளி, ஜூன் 2000

thoothuonline


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

( பிஸ்மில்லாஹ் )அல்லாஹ்வின் திருப்பெயரால்…! Empty Re: ( பிஸ்மில்லாஹ் )அல்லாஹ்வின் திருப்பெயரால்…!

Post by ராகவா Sun 3 Aug 2014 - 12:02

“அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும், நன்றியும் அவனுக்கே!)
( பிஸ்மில்லாஹ் )அல்லாஹ்வின் திருப்பெயரால்…! Images?q=tbn:ANd9GcQp0aQ3k71STFnR6sZOhm-vdfywsqIySm9H5rEaY72I6VKbo2nG
நன்றி அண்ணா...அறியதந்தமைக்கு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum