சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை Khan11

கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை

2 posters

Go down

கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை Empty கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை

Post by நண்பன் Mon 18 Aug 2014 - 9:20

கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை
யாழ். 46.1 மி.மீ, அ'புரம் - 35மி.மீ
மட்டு. 20.1 மி.மீ, மன்னார் 97 மி.மீ. இதே காலநிலை தொடரும்

கடும்வரட்சி நிலவிய நாட்டின் பல பகுதிகளில் சுமார் 6 மாதங்களின் பின்னர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வடமத்திய மாகாணம், மன்னார், மட்டக்களப்பு, வவுனியா, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்துள்ளது.

இந்தப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் மழைபெய்துள்ளது. நீண்ட காலத்தின் பின் பெய்திருக்கும் மழை தொடர்பில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் 35.3 மில்லிமீற்றர் மழையும், மட்டக்களப்பில் 20.1 மில்லிமீற்றர் மழையும், யாழ்ப்பாணத்தில் 46.1 மில்லிமீற்றர் மழையும், மன்னாரில் 97 மில்லிமீற்றர் மழையும், இரத்தினபுரி மாவட்டத்தில் 16 மில்லிமீற்றர் மழையும், திருகோணமலையில் 9.6 மில்லிமீற்றர் மழையும், வவுனியா மாவட்டத்தில் 41.7 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நிலவிவரும் சூழ்நிலையில் வளிமண்டத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் கடும் மழை பெய்யும் என்றும், இந்த மழையுடன் கூடிய காலநிலை வடமேல் மாகாணத்துக்கும் பரவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதேநேரம், இரவு வேளைகளில் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கம் தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

காலி ஊடாக புத்தளம் முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பில் மணிக்கு 20 கிலோமீற்றர் முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும். ஏனைய கடற்பரப்பில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீற்றர்வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, வரட்சி நிலவும் பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்கின்றபோதும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் மாவட்டங்களுக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்குப் போதுமானளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, கடந்த வாரம் 11 தண்ணீர் பவுசர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

வரட்சி நிலவும் மாவட்டங்களுக்கென 100 தண்ணீர் பவுசர்களை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மேலும் 20 தண்ணீர் பவுசர்கள் இவ்வாரம் வழங்கப்படவிருப்பதாவும் அமைச்சர் கூறினார்.

எதிர்பார்த்தளவு மழையின்மையால் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 17 இலட்சம் பேர் நீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை Empty Re: கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை

Post by ராகவா Mon 18 Aug 2014 - 9:22

நேற்று எங்கள் ஊரிலிலும் நல்ல மழையாம்...
நெடு நாளைக்கு பிறகு எல்லோரும் கொண்ட்டத்தில் இருந்தனர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum