சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்.. Khan11

வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்..

2 posters

Go down

வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்.. Empty வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்..

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 12:08

வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்.. 30522581

தம்பதிக்குள் பிரச்னைகளுக்கான முதல் புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது?யார் சரி என்பதில்தான். இது தம்பதிக்குள் என்றில்லை. நண்பர்களுக்குள், வேறு உறவுகளுக்குள், அலுவலகத்தில் என எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் பரவலாகக் காணப்படுகிற மனநிலைதான். தம்பதிக்குள் இந்த மனநிலை இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே இருப்பதுதான் பிரச்னை.அதிலும் கணவர்களுக்கு இந்த மனோபாவம் எப்போதும் அதிகமாகவே இருப்பதைப் பார்க்கலாம். படித்த, பெரிய பதவியில் இருக்கிற கணவர்களுக்கு அதைவிட அதிகமாக இருக்கும். அதற்காக மனைவிகள் விதிவிலக்கு என்று அர்த்தமில்லை. கணவரை விட அதிகம் படித்த, அவரை விட உயர்ந்த பதவியில் இருக்கும் மனைவியிடமும் இந்த மனநிலையை சகஜமாகப் பார்க்கலாம்.

வாழ்க்கைத்துணையிடம் இந்த மனோபாவம் இருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

• எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். துணை சொல்கிற விஷயத்துக்குக் காது கொடுக்காமல், எதிர்த்துப் பேசி, தன் தரப்பை சரி என நிரூபிப்பதில்தான் அவரது கவனம் இருக்கும்.

• இந்தப் போக்கு தவறானது என்று தெரிந்தாலும், அதனால் கெட்ட பெயர் வருமென உணர்ந்தாலுமே அந்த மனநிலையைத் தொடர்வார்கள்.

• தன் துணையின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் எனத் தோன்றினாலும், அந்த எண்ணத்தைப் புறந்தள்ளிவிட்டு, தன் தரப்பை சரியென நிரூபிப்பதற்கான புள்ளி விவரங்களைப் பற்றியே பேசுவார்கள்.

• தவறு செய்கிறோம் என உணர்ந்தாலுமே இவர்களால் மன்னிப்பு கேட்க முடியாது.

• எப்போதும் எந்த விஷயத்தையும் தனக்குத் தெரிந்த ஒரு கோணத்திலிருந்து மட்டுமே பார்ப்பார்கள். மற்றவர் பார்வையிலிருந்து வேறு வேறு கோணங்களில் இருந்தும் அதைப் பார்க்கலாம் என அறியாதவர்களாக / அறிந்திருந்தாலும் அதைச் செயல்படுத்த விரும்பாதவர்களாக இருப்பார்கள். இந்த மனநிலை கொண்டவர்களுக்கு தான் தன் துணையிடம் விவாதிக்கிற விஷயத்தில் உள்ள உண்மைத் தன்மையை விட, தன் தரப்பை சரியென நிரூபிக்கிற நோக்கமே முக்கியமாகத் தெரியும்.

• தான் மட்டுமே சரியென நினைக்கிற இந்த மனநிலை கிட்டத்தட்ட போதை போன்றது. நம்மைச் சுற்றிலும் பலரும் இத்தகைய மனநிலையில் இருப்பதைப் பார்க்கலாம்.

• நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்கிற, அப்படி வாழ நினைக்கிற தம்பதிக்குள் பெரும்பாலும் இந்த மனப்போக்கு இருக்காது. காரணம்... அவர்களில் ஒருவர் தேவையற்ற வாக்குவாதங்களுக்குள் நுழைவதை விரும்பமாட்டார்கள் அல்லது துணையின் பேச்சை ஏற்றுக் கொள்ளப் பழகுவார்கள். தனது வாக்குவாதத்தில் தவறாகப் போவது தெரிந்தால், அதை ஏற்றுக் கொள்ளவும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்.. Empty Re: வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்..

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 12:09

தம்பதியிடம் காணப்படுகிற இந்த மனப்போக்கின் பின்னணி என்ன?

• அவரவர் வளர்ப்பு முறையே அடிப்படை. சாதி, மதம், கடவுள் போன்ற விஷயங்களில் ஒவ்வொரு வருக்கும் இருக்கும் நம்பிக்கை இன்னொரு காரணம். கணவனும் மனைவியும் வேறு வேறு நம்பிக்கைகளுடன், வேறு வேறு பழக்கவழக்கங்களுடன் வளர்கிறார்கள். வாழ்க்கையில் இணைகிற போது, இருவரில் ஒருவர் தனக்கெதிராகவோ, முரண்பட்டோ யோசிப்பது அதிர்ச்சியைத் தரலாம். ஒரு நடிகரைப் பற்றியோ, அரசியல் தலைவரைப் பற்றியோ ரசிகர்களுக்கு மாறுபட்ட அபிப்ராயங்கள் இருப்பதைப் போன்றதுதான் இதுவும். சிறு வயது முதல் நம் ஒவ்வொருவரையும் ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளே வளர்க்கின்றன.

• அந்த நம்பிக்கைகள் அவரவர் இனம், மதம், வளர்ப்பு முறை, வாழும் சூழல் எனப் பல்வேறு விஷயங்களால் தீர்மானிக்கப்படுபவை. நமது சிந்தனை, செயல், பேச்சு என எல்லாம் அவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். உதாரணத்துக்கு... சில ஆண்களுக்கு பெண்கள் மீதான மதிப்பீடு மிகத் தாழ்ந்ததாக இருக்கும். பெண் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என தனக்குள் ஒரு பிம்பத்தை, அளவுகோலை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். தாம் சந்திக்கிற, தம் வாழ்க்கையில் வருகிற எல்லாப் பெண்களிடமும் அந்த லட்சணங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள். எந்தப் பெண்ணாவது அதற்கு முரண்படும் போது, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தம் நம்பிக்கை தான் சரி என வாதம் செய்வார்கள்.

• தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற இத்தகைய மனிதர்களை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு முட்டாள்கள் போலத் தெரியலாம். ஆனால், உண்மையில் இவர்கள் மிகப்பெரிய புத்திசாலிகளாக இருப்பார்கள். தன் தரப்பை நிரூபிக்க கை நிறைய புள்ளி விவரங்களுடனும் தகவல்களுடனும் ஒரு வக்கீல் அளவுக்குத் தயாராகவே இருப்பார்கள். தன்னுடைய இந்தப் போக்கு தவறு என்பதையும் உணர்ந்திருப்பார்கள். ஆனால், அதிலிருந்து வெளியில் வர அவர்களது ஈகோ அத்தனை சீக்கிரத்தில் அனுமதிக்காது. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், ஆண்கள் எப்போதும் இடது பக்க மூளையிலிருந்து யோசிப்பார்கள்.

• அதில் உணர்வுகளுக்கு இடமிருக்காது. பெண்கள் எப்போதும் வலது பக்க மூளையிலிருந்து பேசுவார்கள். அதில் உணர்வுகள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும். தான் சொல்வதுதான் சரியென நம்புவதிலும் அப்படி நம்ப வைப்பதிலும் சம்பந்தப்பட்டவரின் சுயமரியாதை அடங்கியிருப்பதாக உணர்வார்கள். அதுவே அவர்கள் அந்த மனநிலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கக் காரணம். இவர்களால் புதிய கருத்துகளை ஒருபோதும் யோசிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது. கொள்கை ரீதியான சிந்தனைகள் எனச் சிலதைப் பிடிவாதமாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.

• உண்மையில் அந்த எண்ணங்கள் முட்டாள்தனமானவையாகவே இருக்கும். விஞ்ஞானம் உண்மையென நிரூபித்த விஷயங்களைக் கூட இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம்... அவர்களது போலியான சுயமரியாதை. தன்னுடைய இந்த மனப்பான்மையின் மூலம் மற்றவர்களைக் கட்டுப்படுத்தி விடலாம் என்கிற தவறான, ஆழமான எண்ணம் பதிந்து போயிருக்கும். இவர்கள், திறந்த மனத்துடன் மற்றவர்களது கருத்துகளுக்குக் காது கொடுக்கவோ, அவை நல்லவையாகவே இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவோ முடியாமல் தவிப்பார்கள். முதல் பத்தியில் சொன்னது போல படித்தவர்களிடமும் வசதியானவர்களிடமும் காணப்படுகிற இந்த மனநிலையை, ஒழுக்கமின்றி வாழும் மனிதர்களிடமும் பார்க்கலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்.. Empty Re: வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்..

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 12:10

உதாரணத்துக்கு... குடிகாரர்கள், தாம் குடிப்பதற்குக் காரணமாக தமக்கென ஒரு நியாயத்தை வைத்திருப்பார்கள். லஞ்சம் வாங்குவோர் அதற்கு தம் தரப்பு நியாயம் என ஒன்றைப் பேசுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்போர், ஆசிரியர்கள், பெற்றோர், கணவர்கள் போன்றோர் இந்த ‘நானே சரி’ மனநிலைக்குப் பழகிப் போகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்த மனநிலை வேறு என்ன செய்யும்?

தான் சொல்வதே சரியென்கிற இந்த மனப்பான்மை, நல்ல நண்பர்களையும் மனிதர்களையும் தொலைக்க வைக்கும்.

சந்தோஷத்தையும் நிம்மதியையும் காணாமல் போகச் செய்யும்.

ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுகிற பழமானது நேரேதான் விழுமாம். தள்ளிப் போய் விழாது. அதைப் போல இந்த மனப்பான்மையால் உடனடியாக பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தாராகவே இருப்பார்கள். துணையையும் குழந்தைகளையும்தான் அதிகமாக பாதிக்கும்.

என்னதான் தீர்வு?

எல்லா விஷயங்களுக்கும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டிருக்காமல், அமைதியாக அவற்றை உற்றுநோக்கப் பழகலாம்.

தள்ளி நின்று நம்மையே நாம் கவனிக்கலாம். ‘நாம் பரந்த மனப்பான்மையுடன் இந்த விஷயத்தைப் பார்க்கிறோமா’ அல்லது ‘நாம் சொல்வது தான் சரியென நிரூபிக்கத் துடிக்கிறோமா’ என தன்னையே கேள்வி கேட்டுக் கொள்ளலாம். இந்த சுய கேள்வியின் மூலம் தனக்கிருக்கும் அகந்தையையும் ஒருவர் உணர முடியும்.

தான் செய்வது தவறு எனத் தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்கலாம். தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யலாம்.

வாழ்க்கையில் நம் எல்லோருக்கும் பிரச்னைகள் குறித்த பார்வையும் புரிதலும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டேதான் இருக்கும். ஒரு விஷயம் குறித்து, குழந்தைப் பருவத்தில் ஒருவிதமான கருத்து இருக்கும். பதின்ம வயதில் அது வேறு மாதிரி மாறலாம். அதற்கடுத்தடுத்த வயதிலும் இந்த மாற்றம் தொடரும். ஒரு பிரச்னை பற்றிய பிடிவாத மும் நம்பிக்கையும் மாறலாம்... தளரலாம். இந்த அடிப்படை புரிதல் இருந்தாலே ‘நான் சொல்வது தான் சரி’ என்கிற மனப்பான்மை மாறுவதோடு, தம்பதிக்கிடையிலான சகிப்புத் தன்மை வளர்வதோடு, சந்தோஷங்களும் பெருகும்.

நன்றி வாழ்வோம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்.. Empty Re: வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்..

Post by Nisha Thu 4 Sep 2014 - 12:45

கனமான கட்டுரையும் ஆலோசனையும்!

புரிந்துணர்ந்து வாழ்ந்தால் சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை. வீட்டுக்கொடுத்தல் இருந்தால் வீடு கபீட்சமாய் தான் இருக்கும்.  ஆண் ;பெண் இருவருமே புரிந்து நடக்க வேண்டியதுதான்..!  குடும்ப வாழ்க்கை என்பது  இரு மாடுகளை பூட்டிய வண்டி மாதிரி.. இரு மாடும் சேர்ந்து ஒழுத்தால் தான் சேருமிடம் போய் சரியாய் சேரும். 

ஒரு மாடு இடை நடுவே முரண்டு பிடித்தால் ஒன்றுக்காக மற்றதும் வண்டிச்சொந்தக்காரனிடம் அடி வாங்கும். இதை புரிந்தால் பிரச்சனையும் இல்லை. சிக்கலும் இல்லை. 

நல்லதொரு கட்டுரை பகிர்வுக்காக நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்.. Empty Re: வாழ்வோம் இனிதாய் வாழ்வோம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum