சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

பெண் நோயாளிகள் கவனத்துக்கு... Khan11

பெண் நோயாளிகள் கவனத்துக்கு...

Go down

பெண் நோயாளிகள் கவனத்துக்கு... Empty பெண் நோயாளிகள் கவனத்துக்கு...

Post by ahmad78 Wed 1 Oct 2014 - 9:33

பெண் நோயாளிகள் கவனத்துக்கு... Ld2760
சமீபத்தில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட பலரும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ‘பரிசோதனைக்காகச்  சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற லேப் டெக்னீஷியன் கைது’ என்ற அந்தச் செய்தி பலருக்கும் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.  மருத்துவர்கள் தொடுவதையோ உடலைப் பார்ப்பதையோ தவறாக நினைக்கத் தோன்றாதவர்களுக்குக் கூட இது அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

பெண் நோயாளிகளைக் கையாள மருத்துவர்களுக்கும், லேப் டெக்னீஷியன்களுக்கும் என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன? என்னென்ன வழிகளில்  பெண் நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரியான ஆனந்த் பிரதாப்பிடம்  கேட்டோம்.

‘‘பெண் நோயாளிகளை இப்படித்தான் கையாள வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் இல்லை. ஆனால், மருத்துவர்களாகவே கடைப்பிடிக்க  வேண்டிய பல நெறிமுறைகள் இருக்கின்றன. இதுபோன்ற துரதிர்ஷ்டமான சம்பவங்கள் மருத்துவத் துறையில்  நடப்பதில்லை. மருத்துவம்  படிக்கும்போதே உடலியல் பற்றிய தெளிவான ஒரு புரிதல் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.

இதனால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பார்ப்பதனாலோ, தொடுவதனாலோ எந்த உணர்வும் மருத்துவருக்கு ஏற்பட்டுவிடாது.  நோயாளியைக் குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும். பரிசோதனை செய்கிற ஆய்வாளர்களுக்கும் இது பொருந்தும்.

அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு என்ன பரிசோதனை செய்கிறார்கள் என்பதை வெளியில் இருந்து பார்க்கும் வகையில் கண்ணாடி  அறைக்குள்தான் பரிசோதனை நடக்கும். நோயாளியுடன் வந்திருப்பவர்களும் மருத்துவரும் கண்காணிக்கும் வகையிலேயே இந்த அறை  அமைந்திருக்கும்.

தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் பெண் நோயாளிகள், இந்த விதிமுறைகள் அங்கு பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.  பரிசோதனைக்காகச் செல்லும்போது, தங்களுடன் ஒருவரை நிச்சயம் அழைத்துச் செல்ல வேண்டும். அவர் பெண்ணாகவோ, கணவராகவோ இருப்பது  நல்லது. பரிசோதனை செய்யும் இடத்தில் பெண் நர்ஸ், பெண் லேப் டெக்னீஷியன் இருக்கிறார்களா என்பதையும், பரிசோதனைக்காக  மருத்துவமனையில் அதற்கென பிரத்யேகமான உடை (கவுன்) கொடுக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்.

பரிசோதனைக்கு வருபவர்கள் நகைகள், ஆபரணங்கள் அணியாமல் வர வேண்டும். நகை,சங்கிலி போன்ற ஆபரணங்களை பரிசோதனைக்கு முன்பு  உடன் அழைத்து வந்தவரிடம் மட்டுமே கொடுக்க வேண்டும். மருத்துவமனை ஊழியர்களிடமோ, மற்றவர்களிடமோ கொடுக்கக் கூடாது’’ என்று  எச்சரிக்கிறார்.

பரிசோதனை எப்படி செய்யப் படுகிறது என்று ரேடியாலஜிஸ்ட் விமல்ராஜிடம் கேட்டோம். ‘‘பரிசோதனைக்கு முன்பு அதற்கென இருக்கும் பிரத்யேக  உடைக்கு மாற வேண்டும். உடை மாற்றிய பிறகு, பரிசோதனை அறைக்கு அழைத்துச் செல்வார்கள். நோயாளியை ஸ்கேனரில் சரியான முறையில்  லேப் டெக்னீஷியன், நர்ஸ் ஆகியோர் படுக்க வைப்பார்கள். இந்த நேரத் தில், நோயாளியுடன் வருபவர் இருக்கலாம். சரியான முறையில் அமர்த்திய  பிறகு, லேப் டெக்னீஷியன், நர்ஸ், உடன் வந்தவர் என எல்லோரும் அறையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள்.

வெளியிலிருந்து கணிப்பொறியின் உதவி மூலம் பரிசோதனை நடக்கும். பரிசோதனைக்கு வந்தவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய ஸ்கேனருக்குள்  ஒரு கேமரா இருக்கும். நோயாளி எதுவும் சொல்ல விரும்பினால் அந்த கேமரா மூலம் தகவல் சொல்ல லாம். உள்ளுக்குள் ஏதேனும் அசவுகரியம்  என்றால், உடனடியாக சோதனை செய்பவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்கான வசதி இது. இதைத் தவிர வேறு ஏதேனும் சந்தேகப்படும்  வகையில் இருந்தால், உடனே நீங்கள் சுதாரித்துக் கொள்ளலாம்.

தனியார் மையங்களில் பரிசோதனைக்குச் சென்றிருந்தால் உடை மாற்றும் அறையில் கேமரா இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.  முக்கியமாக, நாமே ஒரு மையத்தைத் தேடிச் சென்று பரிசோதனை செய்துகொள்வதை விட மருத்துவர் பரிந்துரைக்கும் மையத் தில் பரிசோதனை  செய்து கொள்வது இன்னும் பாதுகாப்பானது. போலி மருத்துவர்கள் கைது என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

அதுபோல், தவறான ஆட்கள் இந்தத் துறையில் இருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகளைத் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு  உண்டு. அதனால், சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுத்துத்தான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். பரிசோதனைக்கு என்று மட்டும் இல்லாமல்  ஆலோசனைக்குச் செல்லும்போது கூட துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்வது நல்லது’’ என்கிறார். தொழில்நுட்பங்களும் தவறுகளும்  மலிந்துவிட்ட காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது ஒன்றே நம்மைக் காப்பாற்றும் என்பதால் நம்முடைய பாதுகாப்பு நம் கையில்தான்! பரிசோதனைக்கு வருபவர்கள் நகைகள், ஆபரணங்கள் அணியாமல் வரவேண்டும்.


http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=2762


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum