சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 2:26 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 2:11 pm

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 10:19 am

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 12:23 am

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 12:10 am

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 12:08 am

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 12:04 am

» அட...ஆமால்ல?
by rammalar Sat May 11, 2024 8:02 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat May 11, 2024 7:50 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat May 11, 2024 2:27 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat May 11, 2024 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat May 11, 2024 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat May 11, 2024 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat May 11, 2024 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat May 11, 2024 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat May 11, 2024 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்! Khan11

ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!

4 posters

Go down

ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்! Empty ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!

Post by ahmad78 Sun Oct 26, 2014 1:26 pm

ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்! Ht2963
என்னது... ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோயா? என்று  அதிர்ச்சியாகக் கேட்டாலும் சரி... ஆர்வத்தோடு கேட்டாலும் சரி... ‘புற்றுநோய் வருமா?’ என்றால் ‘...ம்’ என்பதே மருத்துவத்தின் பதில். ஆனால், இதில் அச்சப்படாமல் ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம் இந்த மார்பகப் புற்றுநோய் இருநூறு பேரில் ஒருவருக்கே வரும் என்பது! அதனால் டென்ஷன் இல்லாமல் ஜஸ்ட் தெரிந்துகொள்வோம்... ஒரு சின்ன எச்சரிக்கையுடன்...

‘‘பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய்க்கும் ஆண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய்க்கும் அதிகம் வித்தியாசமில்லை. அதே போன்ற அறிகுறிகள், மேமோகிராம் பரிசோதனை, கதிரியக்கம், கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகள், அதே மருந்துகள்... ஆனால், ஒரு சின்ன வித்தியாசம்... பொதுவாகப் பெண்களுக்கு 45 வயதுக்கு மேல் மார்பகப் புற்றுநோய் வரும்; ஆண்களுக்கு 55 வயதுக்கு மேல் வரும்’’ என்கிறார் புற்றுநோய் மருத்துவர் ராமநாதன்.

யாருக்கெல்லாம் இந்தப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்? கவனிக்க வேண்டியதன் அவசியம், வராமல் தடுக்கும் வழிகள் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார் டாக்டர். ‘‘ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தில் ஓர் ஆணுக்கு மரபியல் காரணங்களால் வரும். உடல் பருமன் உள்ள ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு. இன்று ஸ்டீராய்டு ஊசிகள், மாத்திரைகள் என்று தவறான வழிகளில் உடல் கட்டமைப்பைப் பெற இளைஞர்கள் முயற்சிக்கிறார்கள். இதனால், ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் ஹார்மோன் சுரப்பு அதிகமாகி இவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும். தவிர, கதிரியக்க சிகிச்சைகள், பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் கோளாறுகளாலும் வரலாம்.

மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்குத்தான் வரும் என்றே பலரும் நினைக்கிறோம். அதனால், ஆண்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. மார்பில்  கட்டியே இருந்தாலும் அதை அலட்சியப் படுத்தி விடுவார்கள். அலட்சியத்தின் விளைவாக மார்பகப் புற்றுநோய் இறுதிக்கட்டத்துக்கு வந்த பிறகே பல ஆண்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள். கட்டி இருந்தாலும் வெளியே சொல்வதற்கு சங்கடப்பட்டு சொல்லாமல் இருப்பவர்களும் உண்டு. ஆனால், புற்றுநோயை எவ்வளவு விரைவில் கண்டு பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. ஏனெனில், பெண்களின் மார்பகப் புற்றுநோயை விட வேகமாக உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவக் கூடியது ஆண்களின் மார்பகப் புற்றுநோய். 

அதனால், மார்பில் கட்டி தென்பட்டாலோ, வலி இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். கண்டு பிடித்த பிறகு, சிகிச்சை எடுத்துக் கொள்வதில் பெண்கள் காட்டுகிற அக்கறை, ஆண்களிடம் இல்லை என்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் குறைவுதான். ஆனால், இப்போது நம் நாட்டிலும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதுபோல், ஆண்கள் மார்பகப் புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக, வட இந்தியாவில் ஆண் மார்பகப் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். உடற்பயிற்சிகள் செய்வது, உடல் எடையை சரியாகப் பராமரிப்பது, தேவையற்ற ஹார்மோன் ஊசிகள், புரோட்டீன் பவுடர்கள் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் இந்த அபாயம் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்!’’ - எச்சரிக்கிறார்.

டாக்டர் ராமநாதன்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2973


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்! Empty Re: ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!

Post by சுறா Sun Oct 26, 2014 11:38 pm

ஏம்பா இது ரொம்ப அநியாயம். எங்களுக்கு என்ன இருக்குன்னு புத்துநோய் வருது. இதெல்லாம் ரொம்ப மோசம்.  )*

சில ஸ்பெசலிஸ்டு டாக்டர்கள் இதுபோன்ற கட்டுரை எழுதி அவங்க பெரிய ஆஸ்பித்திரிக்கு வரவச்சி எல்லாசெக்கப்பும் எடுக்க வச்சிருவாங்க. கடைசியில உங்க ஜோக்குல சொன்ன மாதிரி பல்வலி சரியாயிடுச்சின்னு சொன்னாகூட ரிப்போர்ட்டை பார்த்துட்டு தான் பதில் சொல்வாங்க. கடைசியில நீங்க நார்மல்ன்னு ஹிஹி

தகவல் தந்து உஷார் படுத்தியமைக்கு நன்றி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்! Empty Re: ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!

Post by பானுஷபானா Mon Oct 27, 2014 5:11 pm

நல்ல்ல தகவல் நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்! Empty ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!

Post by ahmad78 Mon Oct 27, 2014 5:58 pm

பானுஷபானா wrote:நல்ல்ல தகவல் நன்றி

எங்களுக்கு நோய் வர்றது உங்களுக்கு நல்ல தகவலா(_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்! Empty Re: ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!

Post by Nisha Mon Oct 27, 2014 6:01 pm

ஹாஹா! நல்ல கேள்வி  முஹைதீன்!

விழிப்பூட்டும் பகிர்வுக்கு நன்றி சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்! Empty Re: ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum