சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

துன்பம் தருதே தூசு! Khan11

துன்பம் தருதே தூசு!

3 posters

Go down

துன்பம் தருதே தூசு! Empty துன்பம் தருதே தூசு!

Post by ahmad78 Tue 4 Nov 2014 - 10:17

துன்பம் தருதே தூசு! Ht2995
‘நீயெல்லாம் எனக்கு தூசுடா’ என்று ஆக்ஷன் படங்களில் ஹீரோ பஞ்ச் பேசிக் கேட்டிருப்போம். ஆனால், அந்த தூசுதான் டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களுக்கு வில்லன். தூசுக்குப் பயந்து மூக்கை மூடும்படி கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு செல்பவர்களை அன்றாடம் பார்க்க நேர்கிறது. இந்த டஸ்ட் அலர்ஜி ஏன் வருகிறது? இதற்கு என்னதான் தீர்வு? விளக்குகிறார் நோய்த்தொற்று மருத்துவர் சுப்ரமணியன்.

‘‘தூசியை எதிர்கொள்ளும்போது இருமல், தும்மல், கண் எரிச்சல், மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாவதற்கு பெயர்தான் டஸ்ட் அலர்ஜி. இப்பிரச்னை உள்ளவர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகள், கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் அதிக அளவு தூசி வெளியாகும் பணியிடங்களுக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களின் முன்னோர் எவருக்கேனும் இந்தப் பிரச்னை இருந்து 
மரபணுக்கள் வழியாக அது தொடர்ந்திருக்கலாம். பிறப்பிலிருந்தே டஸ்ட் அலர்ஜிக்கான தன்மை உடலில் இருக்கும். அது எந்த வயதில் வேண்டுமானாலும் வெளிப்படலாம். இன்றைய சுற்றுச்சூழல் தூசிகள் நிறைந்து காணப்படுவதால் இந்த அலர்ஜி உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நல்ல வேளையாக, டஸ்ட் அலர்ஜி எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. இருமல், தும்மல், கண் எரிச்சல் போன்றவை வருவதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும், விடுப்பு எடுக்க நேரிடும். வேலை நேர இழப்புதானே தவிர பயப்படும்படி எதுவும் இல்லை. ஆஸ்துமா, இளைப்பு தொந்தரவு உள்ளவர்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருந்தால், அத்தொந்தரவுகள் அதிகரிக்கக்கூடும்’’ என்கிறவர், டஸ்ட் அலர்ஜிக்கான தீர்வு குறித்துப் பேசினார். 

‘‘டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை. முடிந்தவரை தூசி கிளம்பும் இடங்களுக்கு செல்லாமல் இருத்தல் நல்லது. அதையும் மீறி சென்றே ஆக வேண்டிய கட்டாயம் நேரிடும்போது, கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டும். நம் வசிப்பிடத்தில் தூசி தங்குவதற்கான வாய்ப்புகள் எவற்றில் இருக்கிறதோ, அவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். உதாரணமாக ஏ.சி. ஃபில்டரில் தூசி தேங்கும்... அது ஏசி காற்றோடு வெளியேறி தொந்தரவு ஏற்படுத்தும். வாரம் ஒரு முறை ஏசி ஃபில்டரை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மெத்தை மற்றும் தலையணைகளில் அதிக அளவு தூசி தேங்க வாய்ப்பிருப்பதால், முறையாக பராமரித்தல் அவசியம்.

முக்கியமான ஒன்று... டஸ்ட் அலர்ஜி உள்ள எல்லோருக்கும் எல்லா தூசியாலும் அலர்ஜி ஏற்படாது. எந்தத் தூசியால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்த்து விடுதல் நல்லது’’ என்கிறார் சுப்ரமணியன். டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை...


தேவை தூசு கட்டுப்பாட்டு கருவி!


பஞ்சாலைப் பகுதிகளில் பருத்தியிலிருந்து வரும் நெப்த் என்னும் தூசு பெருவாரியாக வெளியாகிறது. இதனால்தான் பஞ்சாலைகள் அதிகம் உள்ள திருப்பூரை ‘தூசு நகரம்’ என்றே சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பஞ்சாலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் மர இலைகளில் கூட தூசு படிந்திருப்பதைக் காண முடியும். இந்தத் தூசு ஆஸ்துமா ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. போர்வெல் போடும் இடங்கள், கல்குவாரிகள், கிரஷர்களில் இருந்து அதிகளவில் மண் தூசு வெளியாகிறது, இந்தத் தூசுகள் வளிமண்டலத்தைச் சென்று சேர்ந்து புவிஈர்ப்பு விசை காரணமாகக் கீழே வந்தடைகிறது. 

இந்தத் தூசுகளை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் மேலைநாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் பஞ்சாலைகள் போன்ற தூசு அதிகம் வெளியேறும் தொழிற்சாலைகள் நம் நாட்டில்தான் அதிக அளவில் இருக்கின்றன. இதுபோன்ற தொழில் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் முதலாளிகள், செலவு செய்ய நேரிடும் என்பதற்காக தூசியைக் கட்டுப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகனங்கள் மற்றும் இயந்திரங்களில் ஒலி மற்றும் புகைத் தடுப்பான்கள் பொருத்துவது போன்று தூசு கட்டுப்பாட்டு கருவியும் பொருத்த வலியுறுத்தப்பட வேண்டும்.  பஞ்சாலைகள், குவாரி மற்றும் கிரஷர் என தூசு அதிகம் வெளியாகும் பகுதியைச் சுற்றிலும் சவுக்கு மரங்களை அதிக அளவில் நட்டு வளர்த்தல் நல்ல ஒரு தீர்வாக அமையும். தேக்கு மரத்தின் இலைகள் தூசுகளை வடிகட்டும் பண்புடையவை.  

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3005#


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

துன்பம் தருதே தூசு! Empty Re: துன்பம் தருதே தூசு!

Post by rammalar Tue 4 Nov 2014 - 13:07

)(
-
தலைப்பில் துசு என உள்ளதை தூசு
என திருத்தலாம்..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24315
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

துன்பம் தருதே தூசு! Empty Re: துன்பம் தருதே தூசு!

Post by Nisha Tue 4 Nov 2014 - 13:15

எங்க வீட்டில் அனைவருக்குமே இந்த டஸ்ட் அலர்ஜி பிரச்சனை உண்டு.  அதனால் வீட்டை சூழலை எப்போதும் சுத்தமாய் வைத்திருப்பேன்! 

நாய் பூனைகளின் முடி,  பறவைகள் இறகு, கஜூ கச்சான் போன்றவை மகளுக்கும் மகனுக்கும் அலர்ஜி!

பிரபாவுக்கு  பூக்களில் வரு மகரந்தம் அலர்ஜி. பூக்கும் காலங்களில் ரெம்ப சிரமப்படுவார். இப்போது பரவாயில்லை.

எனக்கு தங்கம் தவிர்த்து உடலில் எது அணிந்தாலும் அலர்ஜி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

துன்பம் தருதே தூசு! Empty Re: துன்பம் தருதே தூசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum