சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை -
by rammalar Today at 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Today at 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Today at 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Today at 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Today at 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Today at 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Today at 15:59

» இனி - துளிப்பா
by rammalar Today at 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Today at 15:56

» மகா பெரியவா.
by rammalar Today at 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Today at 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Today at 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Today at 14:03

» பல்சுவை 11
by rammalar Yesterday at 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39

» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Khan11

உனக்குக் கீழே உள்ளவர் கோடி

4 posters

Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by நண்பன் Mon 1 Dec 2014 - 11:16

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..
                  
                         "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
 
உனக்குக் கீழே உள்ளவர் கோடி
உனக்குக் கீழே உள்ளவர் கோடி

பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப்பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது.இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையைஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.

இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

இங்கு தான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வாழ்வியலுக்குஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புத வழிகாட்டலை வழங்குகின்றான்.மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் புற்று நோய்க்கு சிறந்த மாமருந்தைவழங்குகின்றான். அந்த அருமருந்து இதோ:

“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490

அகிலப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் இந்த அருமருந்து தான் இன்று, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவிதை வடிவம் பெற்று நிற்கின்றது. கால் செருப்பில்லை என்று ஒருவர் கவலையுடன் நடந்து வருகின்ற போது, தன் எதிரே வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப் பார்த்து தன் மனதை ஆற்றியும் தேற்றியும் கொள்கின்றார்.

இது போல் அழகில் குறைந்தவர் அழகானவரைப் பார்த்து பொருமிக் கொண்டிருக்காமல் தன்னை விட அழகில் குறைந்தவரைப் பார்த்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டால் அவர் பூரண நிம்மதி அடைகின்றார். இது உடலமைப்பு ரீதியிலான பிரச்சனைக்குரிய மிகப் பெரும் தீர்வாகும்.

இது போல் பொருளாதார ரீதியில் தனி மனிதன், குடும்பம், நாடு என்று எல்லோருமேதனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடையும் போது தனி மனிதன் நிம்மதிஅடைகின்றான். குடும்பம் நிம்மதி பெறுகின்றது. நாடு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது. எங்கு, யார் தனக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கத் துவங்குகின்றாரோ அங்கு அமைதியின்றி தவிக்கின்றனர். தனி மனிதன், குடும்பம், நாடு என்று அந்தந்த வட்டத்திற்குத் தக்க பிரச்சனைகள் வெடிக்கின்றன.

கடைசியில் போர் மேகங்கள் சூழ்ந்து பல்லாயிரக்கணக்கான, ஏன் பல இலட்சக்கணக்கானஉயிர்கள் பயாகிப் போகின்றன. மேல் தட்டு மக்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும்இந்தப் பாதகமான மனித நோய் தான் மக்களை அழிக்கும் அணு ஆயுதமாகத் திகழ்கின்றது. அகில உலகிற்கும் அமைதியைத் தரும் மார்க்கத்தின் மக்கள் தூதராக வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நோயை, கீழ் தட்டு மக்களைப் பார்த்து குணப்படுத்தச்சொல்கின்றார்கள். இது பேணப்படுமாயின் உலகம் அமைதிப் பூங்காவாகி விடும்.

உலகமெங்கும் தொற்றியுள்ள இந்த நோய் தான் அரசு ஊழியர்களிடத்திலும் நுழைந்து அவர்களின் நிம்மதியைப் பறித்து, அவர்களைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கின்றது.
கை நிறைய சம்பளம் பெறும் இந்த மக்கள் தங்களை விட மேல் தட்டு மக்களைப் பார்க்கஆரம்பித்தனர். இன்று வீதிக்கு வந்து விட்டனர். தங்களுக்குக் கீழ் தட்டு மக்களைப்பார்த்திருந்தால் இந்தப் பரிதாபகரமான நிலையை சந்தித்திருக்க மாட்டார்கள். தங்கள்பணிகளைச் சரிவர செய்திருப்பார்கள்.

பொதுவாகவே மக்களிடம் அரசு ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் ௲ அந்த மக்களின்வருவாயில் வாழ்கின்றோம் என்ற நிலையில் இல்லாமல், மக்களின் எஜமானர்களாக ௲ அவர்களை அலைக்கழித்து சித்ரவதை செய்யும் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டனர்.

இதில் விதிவிலக்குகள் இருப்பதை மறுக்க முடியாது. எனினும் அரசு எந்திரத்தைக் குறித்த பொதுமக்களின் பொதுவான சிந்தனை இப்படித் தான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இதனால் தான் இன்று அரசு ஊழியர்கள் மீது அந்த மக்கள் அனுதாபப்படவில்லை. மாறாக இவர்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான் என்பது போன்ற கருத்துநிலவுவதைப் பார்க்க முடிகின்றது. சொல்லப் போனால் அவர்களின் பல நாள் நிந்தனை தான்இந்தத் தண்டனை என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது.

ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் இல்லை” (நூல் : புகாரி 1496)

அரசு ஊழியர்களின் இந்தச் சோதனையைப் படிப்பினையாக எடுத்து நாம் அனைவரும்உடலமைப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளில் நம்மை விட மேல் தட்டுமக்களைப் பார்க்காமல் கீழ் தட்டு மக்களைப் பார்த்து, படைத்த அல்லாஹ்விற்கு நன்றிசெலுத்துவோமாக!

மெயில் வந்தது நன்றி சபீர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty Re: உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by Nisha Tue 2 Dec 2014 - 11:30

உனக்குக்கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு!

செருப்பில்லையே ஏன கவலைப்படுவதை விட கால் இருக்குதே என சந்தோஷப்ட நமக்குத்தெரிவதில்லை என்பது தான் நிஜம்!

 செருப்பும் இருக்கு, காலும் இருக்கு அதனால் இதையெல்லாம் யோசிப்பதில்லை. 

நல்ல கட்டுரை! பகிர்ந்தமைக்கு நன்றி!

பெரிய பந்தியாய் பதியும் போது போதிய இடைவெளி விட்டு பதிந்தால் படிக்க இலகுவாயிருக்குமே தும்பி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty Re: உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by நண்பன் Tue 2 Dec 2014 - 15:04

வெரி சாரி மெயில்ல இருக்கும் போதே படித்துப் பார்த்து விட்டேன் அப்படியே எடுத்து இங்கே பதிந்து விட்டேன் இனிமேல் கவனிக்கிறேன் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty Re: உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by Nisha Tue 2 Dec 2014 - 15:08

சரி சரி!

பர்மிசன் கிராண்டட்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty Re: உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by பாயிஸ் Tue 2 Dec 2014 - 15:28

Nisha wrote:உனக்குக்கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு!

செருப்பில்லையே ஏன கவலைப்படுவதை விட கால் இருக்குதே என சந்தோஷப்ட நமக்குத்தெரிவதில்லை என்பது தான் நிஜம்!

 செருப்பும் இருக்கு, காலும் இருக்கு அதனால் இதையெல்லாம் யோசிப்பதில்லை. 

நல்ல கட்டுரை! பகிர்ந்தமைக்கு நன்றி!

பெரிய பந்தியாய் பதியும் போது போதிய இடைவெளி விட்டு பதிந்தால் படிக்க இலகுவாயிருக்குமே தும்பி சார்!
மேலுள்ள கட்டுரைக்கு பொருத்தமான பின்னூட்டம்,
அது சரி அக்கா இரண்டுமே இல்லையென்றால்.......?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty Re: உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by Nisha Tue 2 Dec 2014 - 15:45

அது தான் கை இருக்கும். கூடவே நல்ல அறிவோட மூளை இருக்கும். இருந்த இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டியது தான். 

ஒரு விடயம தெரியுமா? நம்மிடமிருந்து ஒரு விடயம் எடுக்கும் இறைவன் அதை விட பத்து மடங்கு  இன்னொரு சக்தியை தந்திருப்பார். நம்மில் பலர் இல்லாததை நினைத்து கலங்கி  மறைந்திருக்கும் சக்தியை கண்டு கொள்ளாது  விட்டு விடுகின்றோம். 

இது தான் பிரச்சனை.  நமக்குள் இருப்பதை நாள் கண்டு கொண்டால் நம்மில் இல்லாததை குறித்து கவலைப்பட மாட்டோம். 

நானே ராஜா.. நானே மந்திரி என சொல்லி நம்மை நாம் ஜெயிப்போம்.. 

அதாவது என்னைபோல!!!!!!!!!.. ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty Re: உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by நண்பன் Tue 2 Dec 2014 - 16:09

Nisha wrote:அது தான் கை இருக்கும். கூடவே நல்ல அறிவோட மூளை இருக்கும். இருந்த இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டியது தான். 

ஒரு விடயம தெரியுமா? நம்மிடமிருந்து ஒரு விடயம் எடுக்கும் இறைவன் அதை விட பத்து மடங்கு  இன்னொரு சக்தியை தந்திருப்பார். நம்மில் பலர் இல்லாததை நினைத்து கலங்கி  மறைந்திருக்கும் சக்தியை கண்டு கொள்ளாது  விட்டு விடுகின்றோம். 

இது தான் பிரச்சனை.  நமக்குள் இருப்பதை நாள் கண்டு கொண்டால் நம்மில் இல்லாததை குறித்து கவலைப்பட மாட்டோம். 

நானே ராஜா.. நானே மந்திரி என சொல்லி நம்மை நாம் ஜெயிப்போம்.. 

அதாவது என்னைபோல!!!!!!!!!.. ஹாஹா!

என்னையும் போல்  சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty Re: உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by பாயிஸ் Tue 2 Dec 2014 - 16:34

நண்பன் wrote:
Nisha wrote:அது தான் கை இருக்கும். கூடவே நல்ல அறிவோட மூளை இருக்கும். இருந்த இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டியது தான். 

ஒரு விடயம தெரியுமா? நம்மிடமிருந்து ஒரு விடயம் எடுக்கும் இறைவன் அதை விட பத்து மடங்கு  இன்னொரு சக்தியை தந்திருப்பார். நம்மில் பலர் இல்லாததை நினைத்து கலங்கி  மறைந்திருக்கும் சக்தியை கண்டு கொள்ளாது  விட்டு விடுகின்றோம். 

இது தான் பிரச்சனை.  நமக்குள் இருப்பதை நாள் கண்டு கொண்டால் நம்மில் இல்லாததை குறித்து கவலைப்பட மாட்டோம். 

நானே ராஜா.. நானே மந்திரி என சொல்லி நம்மை நாம் ஜெயிப்போம்.. 

அதாவது என்னைபோல!!!!!!!!!.. ஹாஹா!

என்னையும் போல்  சியர்ஸ்
யானும் உள்ளேன் ஐயா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty Re: உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by Muthumohamed Tue 2 Dec 2014 - 19:10

சிறந்த பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உனக்குக் கீழே உள்ளவர் கோடி Empty Re: உனக்குக் கீழே உள்ளவர் கோடி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum