சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Khan11

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

+2
Nisha
சே.குமார்
6 posters

Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by சே.குமார் Sat 17 Jan 2015 - 20:54

இன்று எங்கள் அன்பு மகன் விஷாலுக்குப் பிறந்தநாள். அவன் நீண்ட ஆயுளோடும்... நல்ல கல்வியோடும்... நிறைவான வாழ்வும் நிறைந்த சந்தோஷமுமாய் வாழ உங்கள் ஆசிகளை வேண்டி....

நேற்றிரவு நண்பரின் திடீர் அழைப்பின் பேரில் 'ஐ' படம் பார்த்தாச்சு. இயக்குநரின் சங்கரின் முந்தைய படங்களைப் போல் அவ்வளவாக கவரவில்லை. காதலும் காதலுக்கான பழிவாங்களுமான அரதப் பழசான தமிழ் சினிமாக் கதையை பிரமாண்டம் என்னும் சர்க்கரை சேர்த்து தித்திப்பான பொங்கலாக்க முயன்று தோற்றிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அவ்வளவாக நல்ல கதை என்று சொல்ல முடியாத ஒரு படத்தில் சண்டைக்காட்சிகளை நீளமாக்கி நகர்த்தியிருக்கிறார். ஐந்து வில்லன்களில் 'சைடு வகுப்பெடுத்து சாப்டா பேசினா சரத்குமார்ன்னு நினைச்சியோ அவருதான் மெயின் வில்லன்' அப்படின்னு ராம்குமார் இறுதிக்காட்சியில் சொல்வதற்கு முன்னரே அந்த நபர் வரும் இரண்டாவது காட்சியிலேயே நமக்கு இவர்தான் முக்கிய வில்லன் எனத் தெரிய வருவதால் சுவரஸ்யம் இல்லை. இசைப்புயலின் இசையும் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும் அருமை என்றால் மெர்சலாயிட்டேன் தவிர மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலக்கியிருப்பவர் சீயான். மனுசனுக்கு தொழில் மீது எவ்வளவு ஈர்ப்பு... அப்பா... கலக்கிட்டார். படம் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் விக்ரம் நிறைவாய் நிற்கிறார். தன்னை வருத்தி கலைஞன்டான்னு சொல்ல வைத்திருக்கிறார். சந்தானம், பவர்ஸ்டார் கூட்டணி சிரிப்புக்கள் பரவாயில்லை. 
மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Img1140325029_1_1

மாடலாக வரும் எமி அழகோ அழகோ... அவர் விளம்பரப் படங்களில் நடிப்பது போன்று வரும் பாடல் காட்சியில் அவர் மீது கேமரா விளையாடியிருக்கிறது. தன்னைக் காதலித்தது போல் நடித்தது தெரிந்த இடத்தில்... இன்னும் ஒரு சில இடங்களில் விக்ரம் வசனம் பேசும் போது தனுஷ் தெரிஞ்சான்ய்யா... அது எனக்கு மட்டும்தானான்னு தெரியலை... திருநங்கைகளை கேவலமாக காட்டுவதும், இரட்டை அர்த்தம் என்பதை விட நேரடி அர்த்தமே கொள்ளக்கூடிய அசிங்கமான வசனங்களை வைத்திருப்பது ஷங்கருமா என நினைக்க வைக்கிறது. பிரமாண்டத்தை நம்பி படமெடுக்கும் இயக்குநர் ஷங்கர், ரசிகர்கள் தனது படத்தை எப்படியும் பார்ப்பார்கள் என்ற தீவிர நம்பிக்கை வைத்திருக்கிறார். அதை முதலில் அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மீண்டும் இந்தியன் போன்ற ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும். ஆளானப்பட்ட சூப்பர் ஸ்டாரோட லிங்காவையே ஓரங்கட்டுன ரசிகர்கள் பிரமாண்டத்தை பிச்சி உதறுவானுங்கங்கிறதுக்கு 'ஐ' உதாரணம். மொத்தத்தில் ஐ-யை விக்ரம் என்னும் மகா கலைஞனுக்காகப் பார்க்கலாம்.
மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Modhoru%2Bpagan%2Bfinal%2Bcurved

ஒரு எழுத்தாளன் இனிமேல் எழுதமாட்டேன்... எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்துவிட்டான் என்று சொல்லும் அளவுக்கு கொண்டு சென்ற சமூகத்தை என்ன சொல்வது. தனது நாவலில் ஒரு ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டு எழுதும் போது அதனால் பிரச்சினைகள் எழும் என்று நினைத்தால் அதை அப்போதே கற்பனைப் பெயராக மாற்றியிருக்கலாம். நம்ம ஊர் பெயரைப் பயன்படுத்த நமக்கு உரிமை இருக்கு என்று நினைத்திருக்கலாம். அதேபோல் நம்ம ஊர் பெயரை களங்கப்படுத்தியிருக்கிறார் என்பதை நாலாண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய பிரச்சினை ஆக்கும் நபர்கள், புத்தகத்தின் முதல் பிரதி வந்த போதே அவரிடம் பேசி அடுத்த பிரதியில் பெயர் வராமல் செய்திருக்கலாம். நாலாண்டுக்குப் பிறகு ஒரு அரசியல்... அது ஒரு எழுத்தாளனின் சிந்தனையை சிறையிலிடும் அளவுக்குப் போய்... ஊரை விட்டே போ என்று மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையால் சொல்ல வைத்து... எழுத்தாளன் செத்துட்டான்யா என அறிக்கைவிட வைத்து... சை... என்ன மாதிரியான சூழலில் நாம் இப்போது வாழ்கிறோம். ஒரு எழுத்தாளனின் பேனாவைப் பறித்து வைத்து அவன் சிந்தனைகளுக்கு தீயிட்டு விட்டோம் என மார்தட்டிக் கொள்வதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு. இதில் இருந்து ஐயா பெருமாள் முருகன் அவர்கள் மீண்டு வர வேண்டும்... மீண்டும் வரவேண்டும்... 
மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Vennila-Veedu-Hot1378456991

வெண்ணிலா வீடு படத்தை இரண்டு நாட்களுக்கு பொழுது போகவில்லை எனப் பார்த்தேன். இரவல் நகை வாங்கி அதனை களவு கொடுக்கும் கதைகள் பல புத்தகங்களில் வெளி வந்திருக்கின்றன. அதே கதைக்களம்... அன்பான வாழ்க்கை. அழகான குழந்தை என வாழும் குடும்பத்துக்குள் பக்கத்து வீட்டுக்கு குடிவரும் பணக்காரியின் நட்பும்... அதன் பின்னான நிகழ்வுகளில் அவளின் நகையை வாங்கி அணிந்து திருமணத்திற்குச் சென்று அதை களவு கொடுத்து விட்டு படும் இன்னல்களும் என வெண்ணிலா வீடாக இருந்த குடும்பம் எப்படி அமாவாசை இருளுக்குள் செல்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். நல்ல படம்.... பார்க்கலாம்...

பதினைந்து நாட்கள் அலைனில் ஓட்டியாச்சு.. இன்னும் ஒரு வாரம்... இரண்டு வாரம்... என்று சொல்கிறார்களே தவிர முடிவாய் சொல்ல மாட்டேங்கிறானுங்க... எதாயிருந்தாலும் சொல்லுங்கடா நான் இரண்டு இடத்திலும் வாடகை கொடுக்க முடியாது என்று மின்னஞ்சல் அனுப்பினால் இன்னும் பதிலில்லை. அபுதாபி குளிரை விட அலைனில் குளிர் கொன்று எடுக்கிறது. இங்கு ஹீட்டர் தண்ணீரில் 5.30க்கு குளிக்கும் போது கிடைத்த சுகம் 5 மணிக்கு எழுந்து குளிரக்குளிர தண்ணியை ஊத்தும் போது கிடைக்கவில்லை. பின்னர் குளிரில் பேருந்து நிறுத்தம் வந்து பஸ் பிடித்து அலுவலகம் சென்று வேலை பார்த்து திரும்ப அறைக்கு 3.30 மணிக்கு வந்தாலும் குளிர் மட்டும் குறைவேனா என்கிறது. அலுவலகத்திலோ பெண்கள் அதிகம்... பெரும்பாலும் அரபிப் பெண்களுக்கு வெளியில் எவ்வளவு குளிர் இருந்தாலும் ஏசியை மட்டும் குறைக்கும் மனசு வரவே வராது. அங்கயும் பிரீசர்தான்... என்ன செய்ய... எப்படா அபுதாபிக்கு வருவோம்ன்னு இருக்கு... ஆனா அறையை விட்டு எங்கும் செல்லாததால் ஊருக்குப் பேச, படிக்க, எழுத என நிறைய நேரம் கிடைக்கிறது. இங்கு 11.30 மணி வரை விளக்கு எரியும் அங்கே 9.40க்கெல்லாம் சிவசம்போதான்... 
மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் To-noora-with-love-wallpaper_139589944730
டூ நூரா வித் லவ் அப்படின்னு ஒரு மலையாளப்படம் பார்த்தேன். சமூக சேவை செய்யும் இஸ்லாமியப் பெண்ணுக்கு எல்லா மதங்களிலும் நண்பர்கள். குழந்தை பிறப்பதில் பிரச்சினை என்பதாக ஆரம்பிக்கும் படம்.... மெல்ல பின்னோக்கி பயணிக்க... அவளின் சமூகசேவை, ஆராய்ச்சி, நட்பு, காதல் என நகர்ந்து கர்ப்பிணி ஆகும் போது இந்தக் குழந்தை வயிற்றில் வளர வளர அவளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் வரும்.. உயிருக்கே ஆபத்து வரும் என்ற இடத்தில் நிற்க, கருவைக் கலைக்கலாம் என கணவன் மன்றாட அவளோ எனக்கு என்னோட குழந்தை வேணும் என பிடிவாதமாய் மறுக்க, பிரசவ சமயத்தில் மருத்துவமனையில் அவள் உயிருக்குப் போராட, பைக்கில் இந்த நினைவுகளைச் சுமந்து செல்லும் கணவன் விபத்தில் தலையில் அடிபட்டு அதே ஆஸ்பத்திரி ஐசியூவில் இருக்க, குழந்தை பிறந்து கணவனைப் பார்த்தவளுக்கு மீண்டும் பிரச்சினை வர, இதயத்தை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். இதயம் மாற்றி மீண்டு வந்தாளா? அவளுக்கு யார் இதயத்தைக் கொடுத்தார்கள் என்பதை இறுதிக்காட்சியாக்கி முடித்திருக்கிறார்கள். ரொம்ப நல்ல படம்ன்னு சொல்ல முடியாது என்றாலும் பார்க்கலாம் ரகம்தான்.

விஷால் பள்ளியில் நடனத்தில் இரண்டாம் பரிசாக ஒரு கோப்பையும் சர்ட்டிபிகேட்டும் வாங்கி வந்திருந்தான். நேற்று எங்கள் ஊர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் பரிசாக டம்ளம் பெற்றிருக்கிறான். அவனை அவன் போக்கில் வளர விட வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

சில நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் போது என்ன மனிதர்கள் இவர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அடுத்தவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பொழைப்பை நடத்த நினைக்கும் பிறவிகளைப் பற்றி என்ன சொல்வது? நம்மிடம் உருகி உருகிப் பேசி, நம்ம சொந்தங்களிடம் நல்ல பெயர் வாங்க உன்னை அப்படிப் பேசினான், இப்படிப் பேசினான்... அவரை வாடான்னான் போடான்னான்... சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப் பாக்கிறான்னு வாய்க்கு வந்ததைப் பேசி வாழ நினைக்கும் ஈனர்களுக்கு என்ன பதில் சொல்வது? 

சொத்துக்கள் மட்டுமே ஒருவனுக்கு சுகத்தைக் கொடுக்குமெனில் அந்தச் சொத்துக்களை போட்டுக் கொடுத்து வாழ நினைக்கும் புண்ணியவான்களே துதி பாடி பெற்றுக் கொள்ளட்டும். எங்களுக்கு வேண்டாம்... கடனை வாங்கிக் கட்டினாலும் எங்களுக்கு என்று ஒரு வீடும் இரண்டு செல்வங்களும் சொத்தாய்... நிறைவான வாழ்க்கையை எங்களுக்கு கொடுக்க அதுவே போதும்... தயவு செய்து சொத்து சொத்து என்றோ... சொல்லாததை சொன்னேன் என்றோ சொல்லி வாழ நினைக்காதீர்கள்... அந்த வாழ்க்கை நரகலைத் தின்று வாழ்வதற்குச் சமம். இனி இது போல் என்னிடம் செய்யாதீர்கள். பிறர் போற்ற வாழப் பழகிக் கொள்ளுங்கள்... பிறரைத் தூற்றி வாழ நினைக்காதீர்கள்.
மனசின் பக்கம் தொடரும்...

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by Nisha Sat 17 Jan 2015 - 21:24

வாவ்! 

நீங்கள் அந்த குமாரா? அம்மாடி  வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள்.  நான் யாரோ என நினைத்தேன் சார்.

கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள். 

இனிய வரவேற்புகள் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by சுறா Sat 17 Jan 2015 - 21:31

அருமையான ஐ விமர்சனம். நிதர்சன உண்மை.

எழுத்தாளரின் குமுறல் உண்மையில் நெஞ்சை தொடுகிறது.

தொடரட்டும் உங்கள் பயணம் குமார்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by *சம்ஸ் Sat 17 Jan 2015 - 21:32

Nisha wrote:வாவ்! 

நீங்கள் அந்த குமாரா? அம்மாடி  வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள்.  நான் யாரோ என நினைத்தேன் சார்.

கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள். 

இனிய வரவேற்புகள் சார்.

அது சரி உங்களுக்கு தெரிந்தவரா நிஷா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by Nisha Sat 17 Jan 2015 - 21:33

மகன் விசாலுக்கு எங்கள் அன்பு நல் வாழ்த்துகள் குமார் சார்.   நடனத்தில் பரிசும் சார்டிபிகேட்டும் வாங்கியதற்கும் வாழ்த்துகள் சொல்லி விடுங்கள். 

Last edited by Nisha on Sun 18 Jan 2015 - 14:33; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by Nisha Sat 17 Jan 2015 - 21:38

*சம்ஸ் wrote:
Nisha wrote:வாவ்! 

நீங்கள் அந்த குமாரா? அம்மாடி  வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள்.  நான் யாரோ என நினைத்தேன் சார்.

கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள். 

இனிய வரவேற்புகள் சார்.

அது சரி உங்களுக்கு தெரிந்தவரா நிஷா?

எனக்கு தெரிந்தவர் இல்லை சம்ஸ். ஆனால் இவரின் வலைப்பூவில் இருக்கும் அனைத்து பதிவையும் படித்திருக்கின்றேன். கிராமத்து மண்ணும் நினைவுகளும் , சூழலுமாய் மனசை  கவர்ந்த எழுத்து இவருடையது. 

 நேற்று கூட பொங்கல் குறித்த கட்டுரை ஒன்றில் அவர்கள் ஊர் பொங்கல் குறித்து எழுதி இருந்தார். அந்த ஊருக்கு ஒரு தடவை  போக மாட்டோமா என ஏக்கம் வந்தது என்னமோ உண்மை.   

கீழே இருக்கும்  படம் பாருங்கள்.  இயற்கையோடு ஒன்றி எப்படி பொங்கல் வைக்கின்றார்கள் என..இந்த படத்தில் அவர் தகப்பனும் இருப்பதாய் வலைப்பூவில் சொல்லி இருக்கார்.  கையை உயர்த்தியபடி  இருப்பவர் இவர் அப்பாவாம். 

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் IMG-20150116-WA0007

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by Nisha Sun 18 Jan 2015 - 1:01

ஐ பட விமர்சனம் அருமை!

பெருமான் முருகன் எனும் எழுத்தாளர் குறித்த  பகிர்வு எனக்குள் புரியாத புதிராய் இருக்கின்றது. அப்படி என்ன எழுதினார் என கேட்பதை விட  ஏன் இப்படி தமிழ் சமூகத்தை  அதிலும் பெண்களை குறித்து எழுதினார் எனும் கேள்வியும் வருகின்றது.ஆனாலும் அவருக்கான தண்டனையும் எதிர்ப்பும் சற்று அதீதமாய் அரசியல் கலந்ததாய் தான் போனது.  தவிர்த்திருக்கலாம். 

வெண்ணிலா வீடு குறித்த விமர்சனம் அருமை .. அலைன் வாழ்க்கை யும் குளிரும்  வெளி நாட்டு வாழ்க்கை எனில் நாடோடிகள் தான் நாம் என புரிய வைக்கின்றது. 

விஷால் குறித்து  தெளிவான முடிவுக்கு பாராட்டுகள். சினிமாவும் வாழ்க்கையும் பின்னிப்பிணைந்ததாய்  இரண்டையும் இணைத்த பகிர்வுக்கு  நன்றி 

இறுதியாய் மனிதர் குணம் குறித்து கீழே இருக்கும் குறள்  தான் நினைவில் வருகின்றது. 

  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Jan 2015 - 7:08

ஐ இன்னும் பார்க்கவில்லை விமர்சனங்களால் சில படங்களை தவிர்த்திருந்தேன் அந்த லிஸ்டில் ஐயும் வருமோ தெரியல பார்க்கலாம் 
விமர்சனப்பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by ahmad78 Sun 18 Jan 2015 - 8:31

புத்தகம் எழுதிய உடன் எதிர்ப்பதை விட்டு விட்டு இப்போது எதிர்ப்பது என்பது ஏதோ உணர்த்துகிறது.

வேண்டுமென்றே செய்கின்றசெயல்போல் தெரிகிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by Nisha Sun 18 Jan 2015 - 14:32

ahmad78 wrote:புத்தகம் எழுதிய உடன் எதிர்ப்பதை விட்டு விட்டு இப்போது எதிர்ப்பது என்பது ஏதோ உணர்த்துகிறது.

வேண்டுமென்றே செய்கின்றசெயல்போல் தெரிகிறது.

ஆமாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by சே.குமார் Sun 18 Jan 2015 - 15:53

Nisha wrote:வாவ்! 

நீங்கள் அந்த குமாரா? அம்மாடி  வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள்.  நான் யாரோ என நினைத்தேன் சார்.

கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள். 

இனிய வரவேற்புகள் சார்.

ரொம்ப நன்றிங்க...
என்னைத் தொடர்ந்து வாசிப்பதற்கும்... இத்தனை அன்பிற்கும்... 
சந்தோஷமா இருக்கு.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by சே.குமார் Sun 18 Jan 2015 - 15:54

Nisha wrote:
ahmad78 wrote:புத்தகம் எழுதிய உடன் எதிர்ப்பதை விட்டு விட்டு இப்போது எதிர்ப்பது என்பது ஏதோ உணர்த்துகிறது.

வேண்டுமென்றே செய்கின்றசெயல்போல் தெரிகிறது.

ஆமாம்!
உண்மைதான்...
புத்தகத்தை வாசித்து முடித்தால் தெரியும். எதற்கான எதிர்ப்பு என... இப்போது வாசிப்பில்
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by சே.குமார் Sun 18 Jan 2015 - 15:55

நேசமுடன் ஹாசிம் wrote:ஐ இன்னும் பார்க்கவில்லை விமர்சனங்களால் சில படங்களை தவிர்த்திருந்தேன் அந்த லிஸ்டில் ஐயும் வருமோ தெரியல பார்க்கலாம் 
விமர்சனப்பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்
தங்கள் கருத்துக்கு நன்றிங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by சே.குமார் Sun 18 Jan 2015 - 15:56

Nisha wrote:ஐ பட விமர்சனம் அருமை!

பெருமான் முருகன் எனும் எழுத்தாளர் குறித்த  பகிர்வு எனக்குள் புரியாத புதிராய் இருக்கின்றது. அப்படி என்ன எழுதினார் என கேட்பதை விட  ஏன் இப்படி தமிழ் சமூகத்தை  அதிலும் பெண்களை குறித்து எழுதினார் எனும் கேள்வியும் வருகின்றது.ஆனாலும் அவருக்கான தண்டனையும் எதிர்ப்பும் சற்று அதீதமாய் அரசியல் கலந்ததாய் தான் போனது.  தவிர்த்திருக்கலாம். 

வெண்ணிலா வீடு குறித்த விமர்சனம் அருமை .. அலைன் வாழ்க்கை யும் குளிரும்  வெளி நாட்டு வாழ்க்கை எனில் நாடோடிகள் தான் நாம் என புரிய வைக்கின்றது. 

விஷால் குறித்து  தெளிவான முடிவுக்கு பாராட்டுகள். சினிமாவும் வாழ்க்கையும் பின்னிப்பிணைந்ததாய்  இரண்டையும் இணைத்த பகிர்வுக்கு  நன்றி 

இறுதியாய் மனிதர் குணம் குறித்து கீழே இருக்கும் குறள்  தான் நினைவில் வருகின்றது. 

  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
தங்கள் கருத்துக்கு நன்றிங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by சே.குமார் Sun 18 Jan 2015 - 15:57

Nisha wrote:மகன் விசாலுக்கு எங்கள் அன்பு நல் வாழ்த்துகள் குமார் சார்.   நடனத்தில் பரிசும் சார்டிபிகேட்டும் வாங்கியதற்கும் வாழ்த்துகள் சொல்லி விடுங்கள். 
ரொம்ப நன்றிங்க...
கண்டிப்பாக சொல்கிறேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by Nisha Sun 18 Jan 2015 - 16:24

சே.குமார் wrote:
Nisha wrote:வாவ்! 

நீங்கள் அந்த குமாரா? அம்மாடி  வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள்.  நான் யாரோ என நினைத்தேன் சார்.

கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள். 

இனிய வரவேற்புகள் சார்.

ரொம்ப நன்றிங்க...
என்னைத் தொடர்ந்து வாசிப்பதற்கும்... இத்தனை அன்பிற்கும்... 
சந்தோஷமா இருக்கு.

உங்களைக்குறித்த அறிமுகத்தினை   உறுப்பினர் அறிமுகம் பகுதியில்  புதிய திரி தொடங்கி சொல்லுங்கள் சார். 

சேனை அறிமுகமாகியது எப்படி? என இங்கேயும் சொல்லுங்கள்!

வரவேற்க வசதியாய் இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by Nisha Sun 18 Jan 2015 - 16:26

கலையாத கனவுகள், வேரும் விழுதுகளும் இரு தொடர்களுமே கிராமிய பேச்சு வழக்கில் மிக அருமையான் எழுத்து நடையோடான  தொடர் கதை குமார் சார். 

உங்கள்  வலைப்பூவில் வரும் பதிவுகளை தவறாது படித்து விடுவேன். ஆனால் இது வரை அங்கே பின்னூட்டியதில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும் Empty Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum