சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

குடல்வால் நோய் Khan11

குடல்வால் நோய்

2 posters

Go down

குடல்வால் நோய் Empty குடல்வால் நோய்

Post by ahmad78 Sun 22 Feb 2015 - 9:12

குடல்வால் நோய் Ht3304
இன்றைய கால கட்டத்தில் மாறிவரும் உணவுமுறை, அவசர அவசரமாக இயங்க வேண்டிய வாழ்க்கைச்சூழல், மன அழுத்தம் போன்றவை காரணமாக  அல்சர், அஜீரணம், புற்றுநோய் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகள் பலருக்கும் ஏற்படுகின்றன. இவற்றில் குழந்தை களையும் இளைய வயதினரையும்  அதிகம் பாதிக்கின்ற ஒரு முக்கியமான நோய் - ‘குடல்வால் அழற்சி’ (Appendicitis). 

பிறந்த குழந்தை முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு   வருவதில்லை. அதேபோல் முதியோருக்கும் இந்தப் பாதிப்பு  பெரும்பாலும் ஏற்படுவதில்லை.  சமீபத்தில் கிடைத்துள்ள புள்ளிவிவரப்படி 5 முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக  வருகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய இளம் பெண்களுக்கு இதன் தாக்கம்  அதிகம் என்று தெரிய வருகிறது.

எது குடல்வால்?


நம் அடிவயிற்றில், வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்குச் சற்று மேலே, சிறுகுடல் முடிந்து பெருங்குடல் தொடங்கும் இடத்தில், மிளகாய் அளவுக்குத்  தொங்கிக் கொண்டிருக்கும் ஓர் உறுப்பு, குடல்வால் (Vermiform appendix ). இதன் நீளம் 7 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை  இருக்கும். இதனுள்ளே  ஒரு தீக்குச்சி நுழையும் அளவுக்குக் குழல் போன்று வெற்றிடம் இருக்கும். மனிதனின்   பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்தில் உணவுப்பாதையில்  பெரியதொரு உறுப்பாகத் தோன்றியுள்ள இந்த உறுப்பு, வருடங்கள் ஆக ஆகச் சுருங்கி, ஒரு சிறு பகுதியாகிவிட்டது. இன்னும் சில ஆயிரம்  ஆண்டுகளில் இந்த உறுப்பு மனித உடலில் இருந்து மறைந்து போனாலும் போகலாம்.

ஆரம்ப காலத்தில் இது ஒரு செரிமான உறுப்பாக செயல்பட்டுள்ளது. நாம் உண்ணும் உணவில் ‘செல்லுலோஸ்’ (Cellulose) எனும் புரதச்சத்து உள்ளது.  இந்தப் புரதச் சத்தைச் செரிப்பதற்கு ‘செல்லுலேஸ்’ (Cellulase) எனும் என்சைம் தேவை. இந்த என்சைமை சுரக்கும் உறுப்புகளில் ஒன்றுதான்  குடல்வால். 

அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. தற்போது இந்த உறுப்பால் உடலுக்கு ஒரு பயனும் இல்லை. உணவு செரிமானத்திலோ, உணவுச் சத்துகளை  உறிஞ்சி ரத்தத்திற்குக் கொடுக்கும் பணியிலோ இது ஈடுபடுவதில்லை. இது உடலுக்குத் தேவையில்லாத உறுப்புதான் (Vestigial  organ) என்றாலும்  ‘உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவம் உண்டு’ என்னும் பழமொழியை நினைவுபடுத்துவது போல குடல்வாலில் பாதிப்பு ஏற்பட்டால் உடல்  நலிவடையும். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குடல்வால் நோய் Empty Re: குடல்வால் நோய்

Post by ahmad78 Sun 22 Feb 2015 - 9:13

காரணங்கள்

அசுத்த உணவு மற்றும் தூய்மையற்ற தண்ணீர் மூலம் உடலுக்குள் நுழையும் என்டிரோக்காக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், எச்செரிச்சியாகோலை    போன்ற பாக்டீரியாக்   கிருமிகள் சிறுகுடலை அடையும்போது அவை ரத்தத்தில் கலந்து குடல்வாலைத் தொற்றுகின்றன. இதன் விளைவால்  குடல்வாலில் அழற்சி உண்டாகிறது.  டான்சில் அழற்சி, பயோரியா எனும் பல்ஈறு நோய், நடுச்செவி அழற்சி, வயிற்று உள்சுவர் அழற்சி மற்றும்  வயிற்றின் உள்ளுறுப்புகளில் தோன்றும் பிற நுண்ணுயிர்களின் தொற்றுகள் குடல்வாலில் தொற்றும் போது அங்கு அழற்சி உண்டாகி இந்த நோய்  வருகிறது.

காசநோய் கிருமிகளின் பாதிப்பினாலும் இந்த நோய் வர வாய்ப்புண்டு. உணவு மூலம் உடலுக்குள் நுழையும் அந்நியப் பொருட்களான கல், முள்,  ஸ்டேப்ளர் பின், எலும்பு, குண்டூசி,  பித்தான், நூல், ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி பழக்கொட்டைகள் போன்றவை குடல்வாலை அடைத்துக் கொள்ளும்  போது இந்த நோய் வருகிறது.  நாக்குப்புழு, கீரைப்புழு போன்ற குடல்புழுத் தொல்லையால் துன்பப்படும் சிறுவர், சிறுமியருக்கு இப்புழுக்கள் ஒரு  நூல்பந்து போல் உருண்டு திரண்டு குடல்வாலை அடைத்துக் கொள்ளும். அப்போது குடல்வால் அழற்சி ஏற்படுவதுண்டு. 

அடிக்கடி மலச்சிக்கல் தொல்லை உள்ளவர்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புண்டு. எப்படியெனில், இறுகிய மலம் குடல்வாலில் தங்கிவிட்டால்,  மலத்தில் உள்ள நீர்ச்சத்து இன்னும் குறைந்து, மலம் இறுகி ‘கல்‘ போல் ஆகிவிடும். இந்த ‘மலக்கல்’ (Faecolith) குடல்வாலை அடைத்து அழற்சியை  ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய இளைஞர் மற்றும் யுவதிகளின் நாகரிக உணவுப்பழக்கங்களும் குடல்வால் அழற்சிக்கு  அடிபோடுகிறது. 

குறிப்பாக இவர்கள் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதைக் குறைத்து விட்டனர். பதிலாக பதப்படுத்தப்பட்ட உணவுகள்,  சாக்லெட், ஐஸ்க்ரீம், கேக், ஜாம், பீட்சா, பர்கர், சீன அசைவ உணவுகள் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவதால் இவர்களுக்குத் தேவையான  அளவுக்கு நார்ச்சத்து கிடைப்பதில்லை. இதன் விளைவாக இவர்களுக்கு மலம் இறுகி மலச்சிக்கல் தொல்லை வருகிறது. இது குடல்வால் நோய்க்கு  அடித்தளம் அமைக்கிறது.

குடல்வாலில் சிறிதளவு ‘மியூக்கஸ்’ (Mucus) எனும் திரவம் சுரக்கிறது. இது பெருங்குடலுக்குச் சென்று மலத்துடன் வெளியேறுகிறது. சில நேரங்களில்  சிறுகுடலைச் சுற்றியுள்ள நிணநீர்த் திசுக்கள் வீங்கும் போது அவை குடல்வாலை அழுத்தும். அப்போது குடல்வாலின் தடிமன் அதிகரிக்கும். இதன்  விளைவாக குடல்வால் சுவர்களுக்கு உள்ளே உள்ள இடைவெளி குறைந்துவிடும். இது தெரியாமல் குடல்வால் தொடர்ந்து மியூக்கஸை சுரக்கும். இது  வெளியேற முடியாமல் குடல்வாலை அடைத்து அழற்சி உண்டாகி நோய் வரும். 

குடல்வால் பகுதிக்கு ரத்தம் செலுத்தும் தமனி மற்றும் சிரை ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்து போனால், குடல்வாலுக்கு ரத்தம் கிடைக்காமல்  குடல்வாலில் அழற்சி ஏற்பட்டு, அழுகிவிடும். பெருங்குடலில புற்றுநோய் இருந்து அது குடல்வாலை அழுத்தினாலும் குடல்வால் அழற்சி வரும்.  பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகின்ற சினைப்பையிலும்  (Ovary) கருக்குழாயிலும் (Fallopian tube) பிரச்னை ஏற்பட்டால் அது  குடல்வாலுக்குப் பரவி இந்த நோய் வரலாம்.

புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற தீய பழக்கங்கள் குடல்வால் அழற்சி ஏற்படுகிற வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. இப்படிப்  பல  காரணங்களால் குடல்வாலில் அழற்சி ஏற்படும்போது அங்கு வீக்கம் உண்டாகி, புண் ஏற்படுகிறது. பின்பு அந்த இடத்தில் சீழ் பிடிக்கிறது. இதனால்  இதன் நுனி அழுகிப் போகிறது. இது குடல்வால் நோயின் ஆபத்தான கட்டம். 

வகைகள்

குடல்வால் நோய் இரு வகைப்படும். ஒன்று, திடீர் குடல்வால் அழற்சி (Acute appendicitis ). மற்றொன்று, நாட்பட்ட குடல்வால் அழற்சி (Chronic appendicitis).  2 முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு ‘திடீர் அழற்சி’ ஏற்படும் வாய்ப்பு அதிகம். வயதில்  பெரியவர்களுக்கு ‘நாட்பட்ட  அழற்சி’ வரும் வாய்ப்பு அதிகம்.

அறிகுறிகள்

திடீர் குடல்வால் அழற்சிக்கான அறிகுறிகள் இவை: இந்த நோயின் தொடக்கத்தில் திடீரென்று தொப்புளைச் சுற்றி கடுமையாக வலி தொடங்கும். சில  மணி நேரங்களில் அந்த வலியானது வலது புறத்தில் அடிவயிற்றில் நிலை கொள்ளும். சிலருக்கு தொடக்கத்தில் வயிறு முழுவதும்  கடுமையாக  வலிக்கும். பின்பு இந்த வலியானது வலது அடிவயிற்றில் மட்டும் அதிகமாகத் தோன்றும். இதனைத் தொடர்ந்து வாந்தி ஏற்படும். காய்ச்சல் வரும். பசி  குறையும். 

சாப்பிடப் பிடிக்காது. மலச்சிக்கல் ஏற்படும்.  சிலருக்கு வயிற்றுப்போக்கு இருக்கலாம். நேரம் ஆக ஆக வயிற்றுவலி கடுமையாகும். வயிறு உப்பும்.  நடந்தாலோ, இருமினாலோ, வயிற்றைத் தொட்டாலோ வயிற்றுவலி அதிகரிக்கும். நிமிர்ந்து நடக்க முடியாது. வலியைக் குறைக்க நோயாளி  குனிந்தபடி நடப்பார்.   இந்த நிலைமையில் மருத்துவரை அணுகி சிகிச்சை   பெற்று கொண்டால் ஆபத்து குறையும். சிகிச்சை பெறத் தவறினால் குடல்வால்  அழுகிவிடும். ஒரு கட்டத்தில் குடல்வால் வெடித்துவிடுகிற ஆபத்தும் உள்ளது. அப்போது வயிற்றின் உள்ளறை முழுவதும் கிருமிகள்  பரவி, நோய் கடுமையாகும். அப்போது நோயாளியின் உயிருக்கு ஆபத்து அதிகமாகும்.

நாட்பட்ட குடல்வால் அழற்சிக்கான அறிகுறிகள்


திடீர் அழற்சியின் போது முறையான சிகிச்சை பெறாவிட்டால், குடல்வால் வீங்குவது மட்டுமல்லாமல், குடல் மற்றும் வயிறை ஒட்டிய பகுதிகளில்  கட்டியாக மாறவும் வாய்ப்புண்டு. இது அவ்வப்போது வலியை ஏற்படுத்தும். அடுத்த சில நாட்களில் வீக்கமும் வலியும் குறைந்துவிடும். சிறிது காலம்  கழித்து மறுபடியும் இந்த வீக்கம் ஏற்படும். வலி வரும். இப்படி இந்தப் பாதிப்பு அடிக்கடி தொல்லை கொடுக்கலாம். சிலருக்கு இப்படி பாதிப்பு வராமலும்  போகலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குடல்வால் நோய் Empty Re: குடல்வால் நோய்

Post by ahmad78 Sun 22 Feb 2015 - 9:13

என்ன பரிசோதனை?

நோயாளியின் வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன் பரிசோதனைகளை செய்து பார்த்தால் நோய் உறுதியாகிவிடும். இவற்றோடு வயிறு  எக்ஸ்ரேயும் ரத்தப் பரிசோதனைகளும் தேவைப்படும்.     
சிகிச்சைகள் 
    
குடல்வால் நோய்க்கு மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை என இருவகை சிகிச்சைகள் உள்ளன. நோயின் தொடக்கநிலையில் நோயாளிக்கு  மருத்துவ சிகிச்சை அளிக்கப் படும். குளுக்கோஸ் மற்றும் சலைன் செலுத்துதல், ஆன்டிபயாடிக் மருந்துகள் மற்றும் அமீபா கொல்லி மருந்துகளைச்  செலுத்துதல் போன்றவை மருத்துவ சிகிச்சையில் அடங்கும். இந்த சிகிச்சையில் முதலில் நிவாரணம் கிடைத்த மாதிரி தெரியும். என்றாலும், இந்த  நோய் அந்த நோயாளிக்கு ஒரு மாதத்துக்கு உள்ளாகவே மீண்டும் வருவதற்கு அதிக  வாய்ப்புண்டு. சிலருக்கு ஒரு வருடத்துக்குள் மீண்டும் வந்து  தொல்லை கொடுக்கலாம். அதேசமயம் அறுவை சிகிச்சை செய்துவிட்டால் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும். 

நவீன அறுவை சிகிச்சை

முன்பு பொது அறுவை சிகிச்சை முறையில் வயிற்றைத் திறந்து, குடல்வாலை வெட்டி  எடுத்துவிட்டு, அந்த இடத்தில் தையல் போட்டு  மூடிவிடுவார்கள். இந்த அறுவை சிகிச்சை முறை இப்போது அவ்வளவாக மேற்கொள்ளப்படுவதில்லை. பதிலாக, ‘லேப்ராஸ்கோப்பி’ எனும் ‘நுண்துளை  அறுவை சிகிச்சைமுறை’யில் வயிற்றைக் கிழிக்காமல், சில துளைகள் மட்டும் போட்டு, அவற்றின் வழியாக குடல்வாலை அகற்றிவிட்டு, அந்த  இடத்தை மின் சூட்டுக்கோலால் பொசுக்கி விடுவார்கள். இதில் அறுவை சிகிச்சை தழும்பு இல்லை.  வலி குறைவு. இந்த அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் நாளில் நோயாளி வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும்.

தடுப்பது எப்படி?


தெருக்களில் விற்கப்படும் ஈக்கள் மொய்க்கும் அசுத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த சுத்தமான  தண்ணீரையே எப்போதும் குடிநீராகப் பயன்படுத்த வேண்டும்.  நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவோருக்கு குடல்வால் நோய் வர  வாய்ப்பில்லை என்பதால் கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற முழுதானியங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பயறுகள், பச்சைப்பட்டாணி, கேரட், தக்காளி, ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. தேவையான  அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கும் சிறுவர், சிறுமிகளுக்கும் குடல்புழுத் தொல்லை ஏற்படாமலிருக்க மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புழுநீக்கம் செய்யும்  மாத்திரையைத் தரலாம். டான்சில் அழற்சி, பல் ஈறு நோய், நடுச்செவி நோய், வயிற்று உள்சுவர் அழற்சி மற்றும் வயிற்றின் உள்ளுறுப்புகளில்  தோன்றும் எந்தக் கோளாறுக்கும் ஆரம்ப நிலையிலேயே தகுந்த சிகிச்சை பெற்றுவிட வேண்டும். புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மது  வேண்டவே  வேண்டாம்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3314


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குடல்வால் நோய் Empty Re: குடல்வால் நோய்

Post by பானுஷபானா Mon 23 Feb 2015 - 13:45

nalla thagaval nanri
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குடல்வால் நோய் Empty Re: குடல்வால் நோய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum