சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

மனசின் பக்கம் : இனியவை சில... Khan11

மனசின் பக்கம் : இனியவை சில...

3 posters

Go down

மனசின் பக்கம் : இனியவை சில... Empty மனசின் பக்கம் : இனியவை சில...

Post by சே.குமார் Tue 10 Mar 2015 - 18:30

திரு. துரை.செல்வராஜூ ஐயா அவர்களின் மனைவி மற்றும் மகன் இங்கு வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்கப் போக வேண்டும் என என்னிடம் கடந்த வாரமே கில்லர்ஜி அண்ணா சொல்லியிருந்தார். நாங்கள் அபுதாபிக்குள் இருக்கிறோம். ஆனால் அவர்கள் இருந்ததோ விமான நிலையம் பக்கம்... அதனால் சந்திப்பதற்காக நேரம் சரிவர அமையவில்லை. கடந்த சனியன்று மாலை அபுதாபி மாலுக்கு வருகிறார்கள் என்றும் நாம் போய் சந்திக்கலாம் என்றும் கில்லர்ஜி அண்ணன் போனில் சொன்னார். அதன்படி அங்கு சென்று அவர்கள் வரும்வரை காத்திருந்து... சந்தித்து கொஞ்ச நேரம் அவர்களுடன் உரையாடித் திரும்பினோம். இது குறித்து விவரமான பதிவை கில்லர்ஜி அண்ணா தளத்தில் படிக்கலாம். அதற்குச் செல்ல இங்கு சொடுக்குங்கள்.
மனசின் பக்கம் : இனியவை சில... Saram%2B7

விஷால் உடல் நலம் தேறி வீட்டுக்கு வந்துவிட்டான். அவனுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்றதில் இருந்து இணையப் பக்கம் அதிகம் வர முடியவில்லை. மேலும் அலுவலகத்தில் 9 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து விட்டு வருவதால் அலுப்பின் காரணமாக மற்ற பதிவுகளைப் பார்க்க முடிவதில்லை.  இருப்பினும் நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்... தவறாக நினைக்க வேண்டாம்.
மனசின் பக்கம் : இனியவை சில... Saram%2B7

சேனைத்தமிழ் உலாவில் சிறுகதைப் போட்டிக்கான கால அவகாசத்தை மார்ச்-31 வரை நீட்டித்து இருக்கிறார்கள். நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசினை வெல்லுங்கள். போட்டி குறித்த விவரம் அறிய இங்கு சொடுக்கவும்.
மனசின் பக்கம் : இனியவை சில... Saram%2B7

ங்கு இரண்டு நாட்களாக மணல் காற்று வீசுகிறது. வெளியில் ஒரே தூசி மயம். இனி கொஞ்சம் கொஞ்சமாக குளிர் குறைந்து மே மாதம் முதல் சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பித்து விடும். அப்புறம் வெளியில் சென்று வந்தால் குளித்துவிட்டு வந்தது போல் இருக்கும்.
மனசின் பக்கம் : இனியவை சில... Saram%2B7

சென்ற சனிக்கிழமை அன்று எனது பிறந்ததினம். எப்பவும் காலையில் எழுந்து குளித்து சாமி கும்பிடுவதுடன் சரி. பொதுவாக பிறந்ததினம் என்பதும் மற்ற நாட்களைப் போல் சாதாரணமாகத்தான் கடந்து செல்லும். யாரிடமும் சொல்வதும் இல்லை... கொண்டாடுவதும் இல்லை. எப்பவும் மனைவி எடுத்துக் கொடுத்து விடும் புதிய உடையை அணிவதுடன் முடித்துக் கொள்வேன். இந்த வருடம் கொஞ்சம் ஸ்பெஷல்... அப்பாவுக்கு நாங்கதான் டிரஸ் எடுப்போம் என செல்லங்கள் தங்கள் உண்டியல் சேமிப்பில் இருந்து அவர்களே தேர்வு செய்து வாங்கி அனுப்பிய சட்டையோடு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அன்றைய தினம் கடந்தது.
மனசின் பக்கம் : இனியவை சில... Saram%2B7

ம்ம ஊரில் அரசு அலுவலகத்துக்கு ஒரு வேலையாகச் சென்றால் முதலில் லஞ்சம் கொடுக்கணும்... அப்படியே கொடுத்தாலும் அதிகாரி தனது பதவியின் காரணமாக வா... போ... என்றே பேசுவார். படித்தவன்... அரசு வேலை என்றால் மட்டுமே மரியாதை... இதை ஒரு முறை காவல் நிலையத்தில் அனுபவித்திருக்கிறேன். ஊர் திருவிழா பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது விதி. அதனால் நானும் எங்க சித்தப்பாவும் சென்றோம். அவர் தாடியுடன் வேஷ்டி சட்டையில் வந்தார். புதிய காவலர் ஒருவர் எங்களிடம் விவரம் கேட்டு 'ஐயா இல்லை... எழுதிக் கொடுத்துட்டுப் போய்யா...' என்று சித்தப்பாவிடம் சொல்லி 'இந்தா அங்க உக்காந்து எழுது' என்றார் கிராமத்தானுங்கதானே என்ற திமிருடன்...  'என்னப்பா இப்படி பேசுறார்' என்றதற்கு 'விடு பதவி பேசச் சொல்லுது.. எழுதிக் கொடுத்துட்டுப் போவோம்... நாம வந்தது ஊர்க்காரியத்துக்கு...' என்றார் கோபக்காரரான சித்தப்பா.

அந்தாளு சொன்னபடி  எழுதி தனது பெயரை ஆங்கிலத்தில் கையெழுத்து இட்டு தம்பி நீயும் கையெழுத்துப் போடுடா என என்னிடமும் கையெழுத்துப் பெற்றுக் கொடுத்தார். வாங்கிப் பார்த்த காவலர், 'சார் நீங்க...?' என மெதுவாக இழுத்தார். 'நான் ஹயர் செகண்டரி ஸ்கூல் தலைமையாசிரியர்... இது எங்க அண்ணன் மகன்... காலேசுல வேலை பாக்குறான்' என்றார். உடனே காவலர் எழுந்து 'ஐயா வந்ததும் கொடுத்துடுறேன் சார்... எதையும் மனசுல வச்சிக்காதீங்க' என்றார். ஊரில் ஆளைப் பார்த்துத்தான் வேலை நடக்கும். 

இங்கு எனது படிப்புச் சான்றிதழுக்கு இணையான அரபிச் சான்றிதழ் பெறுவதற்காக ஒவ்வொரு வேலையாக முடித்து உயர் கல்வித்துறை வரை சென்று கையெழுத்து வாங்கிவிட்டேன். நேற்று கல்வி அமைச்சகத்தில் இருக்கும் அலுவலகத்தில் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கச் சென்றேன். அங்கிருந்த ஒரு அரபிப் பெண் ஆன்லைனில் பதிவு செய்ய உதவினார்.  பின்னர் டோக்கன் எடுத்து காத்திருந்து மற்றொரு அரபிப் பெண்ணிடம் சான்றிதழ்களைக் கொண்டு போய்க் கொடுத்தபோது வாங்கிப் பார்த்து பண்பாகப் பேசியபடி எல்லா வேலையும் முடித்து சான்றிதழ் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகிவிடும் சார்... உங்களுக்கு குறுஞ்செய்தி வரும். நீங்களோ உங்கள் நண்பரோ ரசீதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுங்கள் என்றார் புன்னகையுடன். இப்படி அலுவலக வேலைகள் நம்ம ஊரில் நடக்க இன்னும் பல காலம் ஆகும். மாற்றங்கள் வருவது எதிர்கால சந்ததியினரிடமே இருக்கிறது.
மனசின் பக்கம் : இனியவை சில... Saram%2B7

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : இனியவை சில... Empty Re: மனசின் பக்கம் : இனியவை சில...

Post by Nisha Tue 10 Mar 2015 - 18:41

விசாலுக்கு குணமானது அறிந்து  மனம் நிறைந்தது!

பிறந்த நாள் மறக்க முடியாத  அன்புப்பரிசோடு நிறைவாய் இருந்ததில் மகிழ்ச்சி குமார்!

படிப்புக்கு கூட மதிப்பில்லாத  நிலையும் உண்டு குமார். உங்கள் அனுபவம் பரவாயில்லை. 

அனுபவங்களை தொகுத்து வரும் விதம் அருமை!
பாராட்டுகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : இனியவை சில... Empty Re: மனசின் பக்கம் : இனியவை சில...

Post by நண்பன் Tue 10 Mar 2015 - 18:41

ரசனையாக உள்ளது கடந்து வந்த பாதை படிப்பதற்கு

படிப்பதற்கும் இலகுவாக உள்ளது

நம்மூர் அதிகாரிகளின் பேச்சும் அவர்களின் போக்கும் மனவேதனை
வெளிநாட்டு அதிகாரிகளின் பேச்சும் அவர்களின் போக்கும் மகிழ்வைத் தரும்

நானும் இந்த முறை நாடு சென்ற போது மாமாவின் சிறு விடயமாக காவல் நிலையம் செல்ல வேண்டி இருந்தது அங்கு அவர்கள் நடந்து கொண்ட விதம் மன வேதனையைத் தந்தது

கன்னத்தில் இரண்டு போடுவோமா என்றும் தோன்றியது அந்த அளவுக்கு உதாசீனப்படுத்துவார்கள்.

தொடருங்கள் அண்ணா உங்கள் பணிகளை
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : இனியவை சில... Empty Re: மனசின் பக்கம் : இனியவை சில...

Post by Nisha Tue 10 Mar 2015 - 18:56

நண்பன் wrote:ரசனையாக உள்ளது கடந்து வந்த பாதை படிப்பதற்கு

படிப்பதற்கும் இலகுவாக உள்ளது

நம்மூர் அதிகாரிகளின் பேச்சும் அவர்களின் போக்கும் மனவேதனை
வெளிநாட்டு அதிகாரிகளின் பேச்சும் அவர்களின் போக்கும் மகிழ்வைத் தரும்

நானும் இந்த முறை நாடு சென்ற போது மாமாவின் சிறு விடயமாக காவல் நிலையம் செல்ல வேண்டி இருந்தது அங்கு அவர்கள் நடந்து கொண்ட விதம் மன வேதனையைத் தந்தது

கன்னத்தில் இரண்டு போடுவோமா என்றும் தோன்றியது அந்த அளவுக்கு உதாசீனப்படுத்துவார்கள்.

தொடருங்கள் அண்ணா உங்கள் பணிகளை
நன்றியுடன் நண்பன்

சம்ஸ் சார் கொஞ்சம் இந்தப்பக்கம் வந்து இந்த பின்னூட்டத்தை பாருங்கள். என் தும்பி தும்பி என சொன்னால் எங்களை பார்த்தால் உங்க கண்ணுக்கு தெரியல்லையா என மட்டும் சண்டை போடுவிங்களே!  

இதுக்குத்தான் சொன்னேன்! புரிந்துக்கோங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : இனியவை சில... Empty Re: மனசின் பக்கம் : இனியவை சில...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum