சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm

ஹைபுன் கவிதை. Khan11

ஹைபுன் கவிதை.

+4
சுறா
rammalar
நண்பன்
ந.க.துறைவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹைபுன் கவிதை. Empty ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Sun Jun 07, 2015 10:51 am

மதிப்பெண்“..!! 
*
பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்கள்
 செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது. பாராட்டலாம். இந்த தேர்ச்சி எப்படிப்பட்து என்புது தான் கேள்வி. மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து, அதை அப்படியே பரிட்சையில் பதிவு செய்ய வைப்பது ஒரு தேர்வா?  மனனம் செய்து எழுதியதை விடைத்தாள்கள் திருத்துபவர்கள் எப்படி முழுமையான சரியான விடையென்று மதிப்பெண் அளிக்கின்றார்கள்? அரசும் இதை எப்படி சரியானமுறையென்று அதிக மதிப்பெண் அள்ளிக் கொடுக்க அனுமதியளிக்கின்றது. இது தான் கல்விமுறையா?
அறிவிற்கு அளிக்கவில்லை
மனப்பாடத்திற்குத்தான்

அள்ளி வழங்கியது மதிப்பெண்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Tue Jun 09, 2015 10:57 am

மர [ ண ] ம்….!! [ HAIBUN / ஹைபுன் ]
*
இடி பலத்தக் காற்று. மழையின்னும் ஆரம்பிக்கவில்லை. காற்றில் மரங்கள் பேயாட்டம் போட்டன. முருங்கைகள் பலமிழந்து முறிந்து விழுந்து விட்டன. அதில் உள்ள காய்களைக் கீரைகளைப் பறித்துக் கொள்ள, அருகில் வாழும் பெண்கள் ஓடிவந்து மடமடவென்று ஒடித்து எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முகங்களில் ஓசியில் ஒருநாள் சமையலுக்கு காய்கள் கிடைத்ததென்று பெரும் மகிழ்ச்சி. மரத்தின் வீட்டுக்குச் சொந்தக்காரர் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தார். கிடைத்தவரை லாபமென்றுபெண்கள் ஒதுங்கிப் போய்விட்டார்கள். காற்று அடங்கி பலத்த மழைத் தொடங்கியது.
அருகில் யாருமில்லை.
அனாதைப் பிணமாய் கிடந்தது
முருங்கை மரம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by நண்பன் Tue Jun 09, 2015 1:41 pm

காற்று அடங்கி பலத்த மழை தொடங்கியது. 
அருகில் யாருமில்லை. 
அனாதைப் பிணமாய் கிடந்தது 
முருங்கை மரம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Wed Jun 10, 2015 10:49 am

தேடல்…!! [ HAIKUN / ஹைபுன் ]
*
எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேடிக் கொண்டேயிருந்தான். எங்கு வைத்தோமென்று யோசித்துப் பார்த்தான். கவனத்திற்கு வரவில்லை ஞாபக மறதி வந்துவிட்டதோ என்று பயந்தான். பயம் பல நேரங்களில் மனிதர்களை பயமுறுத்திப் பார்க்கும். பயந்தவர்கள் யாரும் தைரியசாலிகள் இல்லையா என்ன?. முக்கியமான பொருள் என்பதால் மனதில் பதட்டம் அதிகரித்தது. எப்படியும் கிடைத்துவிடும் என்ற உறுதியோடு தேடினான். பளிச்சென்று ஞாபகம் வந்துவிட்டது. அங்கே போய் பார்த்தான். பொருள் வைத்த இடத்திலேயே பத்திரமாக இருந்தது. சிக்கலானப் பிரச்சினையிலிருந்து தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.
தேடுவது்மில்லை தொலைப்பதுமில்லை
எந்தவொரு பொருளும் கைவசமில்லை
சேமித்து வாழத் தெரியாதப் பறவைகள்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by rammalar Fri Jun 12, 2015 6:07 pm

ஆமோதிக்கிறேன்-
-

ஹைபுன் கவிதை. Kuruvi+3
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24115
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by சுறா Fri Jun 12, 2015 11:08 pm

ஒருகாலில் நிற்குதே. அழகிய பறவை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Tue Jul 07, 2015 11:03 am

ஆமைத் தலைகள்….!! [ ஹைபுன் ]
*
நத்தை, ஆமை ஆகியன ஓரே இனத்தைச் சேர்ந்த நீர் வாழ்வனவாகும். அவைகள் கெட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓட்டிற்குள் தன் உடல் உறுப்புக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. நத்தையின் ஆயுள் குறைவு என்றாலும், ஆமையின் ஆயுள் காலம் முந்நூறு ஆண்டுகள் என்று கூறுகின்றார்கள். இதன் வடிவைப்பைக் கண்டு தானோ என்னமோ இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் உயிர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் என்ற தலைக்கவசத்தை உருவாக்கியுள்ளார்கள். வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன்பேரில் பாதையில் எங்கும் விதவிதமானத் தலைக்கவசமணிந்துப் பயணிக்கின்றார்கள்..    
*                                              
பக்தர்களைக் காப்பது கந்தசஷ்டிக் கவசம்
வாகன விபத்திலிருந்து மனிதஉயிர்களைக் காப்பது
ஹெல்மெட் மென்பொருள் தலைக்கவசம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Thu Jul 23, 2015 8:44 am

சக்தி…!! [ ஹைபுன் ]
*
அவனிடம் ஏதோவொரு சக்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதென்னவென்று அவனுக்குத் தெரியும். அந்தச் சக்தியைப் பற்றி அவன் எப்பொழுதும், யாரிடமும் காட்டிக் கொண்டதில்லை. அவனுக்கே தெரிந்திருந்தும் எப்படி வெளியில் காட்டுவதென்று பெரும் தயக்கம். அப்படிக் காட்டிவிட்டால் பிரச்சினையாகும். நம்மை ஏதோவொரு அதீதமானவன் அல்லது பித்தன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்பதாக மனதில் நினைத்துக் கொண்டான் ஊரெல்லாம் அதே பேச்சு, அதைக் கேட்டுக் கேட்டு அவன் மௌனமாகி விடுகிறான். அவனது அந்தமௌனம் தான் சக்தியோ?. 
*
கேள்வி கேட்க எழுந்தான்
கேட்காமலேயே உட்கார்ந்தான் 
மௌனமாய்…!!...
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Sun Sep 06, 2015 8:54 am

முகமற்ற ச – முகம்.
*
விடிந்தப் பொழுதுகளிலிருந்து துவங்கும் ஒவ்வொரு நாளும் மனிதர்களின் அவசர வேலைப்பாடுகளால் பரபரப்புடன் காணப்படுகின்றது. சூரிய வெளிச்சம் இல்லையெனில் மானுடர் எவரையும் கண்டு ரசிப்பது என்பது அதிசயமாகிவிடும். முகம் வெளிக்காட்டாமல் ஹெல்மெடடால் மறைக்கப்பட்டு பயணிக்கிறார்கள். தலைநிமிர்ந்து நடப்பதில்லை பலரும், புன்னகை இழந்து பயஉணர்வோடு பயணிப்பதாகவே தென்படுகின்றார்கள் பெண்கள்.. தனியார்க் கல்விக் கூடங்களின் நச்சரிப்பில் மனஉலைச்சலில் சிரிப்பை இழந்து தவிக்கின்றார்கள் குழந்தைகள். எங்கேனும் ஓரிடத்தில் மனிதர்களின் அவலக்குரல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றது. வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் வாழ்வையே தொலைத்துவிட்டு தவிப்போராய் தெரிகின்றார்கள் 
*
தெளிவாகத் தெரிகிறது சூரியன் முகம்
வாழ்வுரிமையை இழந்து விட்டது நிலம்
சாரமில்லாமல் வாழ்கிறது மனித ச-முகம்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by நண்பன் Sun Sep 06, 2015 2:55 pm

ந.க.துறைவன் wrote:முகமற்ற ச – முகம்.
*
விடிந்தப் பொழுதுகளிலிருந்து துவங்கும் ஒவ்வொரு நாளும் மனிதர்களின் அவசர வேலைப்பாடுகளால் பரபரப்புடன் காணப்படுகின்றது. சூரிய வெளிச்சம் இல்லையெனில் மானுடர் எவரையும் கண்டு ரசிப்பது என்பது அதிசயமாகிவிடும். முகம் வெளிக்காட்டாமல் ஹெல்மெடடால் மறைக்கப்பட்டு பயணிக்கிறார்கள். தலைநிமிர்ந்து நடப்பதில்லை பலரும், புன்னகை இழந்து பயஉணர்வோடு பயணிப்பதாகவே தென்படுகின்றார்கள் பெண்கள்.. தனியார்க் கல்விக் கூடங்களின் நச்சரிப்பில் மனஉலைச்சலில் சிரிப்பை இழந்து தவிக்கின்றார்கள் குழந்தைகள். எங்கேனும் ஓரிடத்தில் மனிதர்களின் அவலக்குரல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றது. வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் வாழ்வையே தொலைத்துவிட்டு தவிப்போராய் தெரிகின்றார்கள் 
*
தெளிவாகத் தெரிகிறது சூரியன் முகம்
வாழ்வுரிமையை இழந்து விட்டது நிலம்
சாரமில்லாமல் வாழ்கிறது மனித ச-முகம்.

*

நிதர்சனமான உண்மைகள் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by கமாலுதீன் Sun Sep 06, 2015 3:24 pm

சமுகத்திற்கு முகம் இருக்கிறது. அதைக் காட்டத்தான் நேரமில்லை. எப்போதும் ஓட்டம். 

ஹைபுன் கவிதைகள் இப்போதுதான் முதல் முதலில் படிக்கிறேன். வித்தியாசமாகவும் சிறப்பாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by சே.குமார் Mon Sep 07, 2015 12:52 am

நிதர்சன உண்மைகள்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Tue Sep 22, 2015 8:44 am

நன்றி காலுதீன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Tue Sep 22, 2015 8:44 am

ஹைபுன்.
*
இயற்கையின் ரகசியம்…!!
*
இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையே இயல்பான வாழ்க்கை. இயற்கை தரும் கொடை அனைத்தும் பரிபூரணமானது. தூய்மையானது. வளமை மிக்கது. இயற்கையின் எல்லா சுற்றுச் சூழல்களையும் மனிதன் அனுபவிக்கப் பெற்றவன். அவனுக்காக இயற்கைப் படைத்தப் பொக்கிஷங்கள். ஏராளம். இயற்கையின் எந்தவொரு அம்சமும் பழுதடையாதது. அப்படியே பழுதடைந்தாலும் அதுவாகவே சீர்செய்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது இயற்கையின் தீயவிளைவுகள் மனிதனைப் பாதித்தாலும் அவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் இயற்கை வழியே பெறமுடிகின்றது.
*
அழியாதது செழிப்பானது
உலகையே வளமாக்குவது
இயற்கையின் ரகசியம்.
*
 விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள்
அஞ்ஞானிகள் மெய்யறிகிறார்கள்.
இயற்கையின் ரகசியம்.
 *
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 07, 2016 4:56 pm

ரசித்தேன் மகிழ்ந்தேன் 
இன்னும் சேனையில் கவிதை பூக்கணும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Thu Mar 31, 2016 8:03 am

நெருங்கிய நண்பன்…!!
*
ஒருவர் மீது அன்பு மிகும்போது அது அன்பாக மாறி நெருங்கிய உறவை ஏற்படுத்துகிறது. அதுவே நட்பாக வளர்ந்து நேசிக்க வைக்கிறது. பரஸ்பரம் சிறந்த புரிதலை ஏற்படுத்தி உயிருள்ள வரை இணைப்பை உண்டாக்கி எல்லோர் மத்தியிலும் ஒரு நல்ல மனிதனாக வெளிப்படுத்தி விடுகிறது. ஆதலால் தான் சிலர் தன்னை அறியாத நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும் போது “ என் நெருங்கிய நண்பன் ” என்று அறிமுகப்படுத்தி வைக்கிறது. இப்படித் தான் நட்பு ஒரு தொடர் சங்கிலி போன்று நீடித்து சமுதாயத்தில் வாழ்கின்றது.
*
இணைப்புப் பாலமாய் அன்பு
உணர்ச்சியோடு நெருங்கி வைத்து
மரணம் வரைக்கும் நட்பு
*

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Sat Apr 09, 2016 8:24 am

செய்திகள்..


N E W S .-  இவ்வுலகம் ஊடகங்களால் சூழ்ந்திருக்கிறது. எத்திசை நோக்கினும் வான்வெளியில் காற்றின் ,ஈரப்பதத்தோடு செய்திகள் நிறைந்து ததும்புகிறது. நொடிக்கு நொடி ஒலி / ஒளிப் பரப்பாகும் செய்திகள் மக்களிடம் சென்று சேர்கின்றன.  அச்செய்திகள் எப்பொழுதும் மகிழ்ச்சியும் துக்கமும் அதிர்ச்சியும் தருகின்றன. ஆனால் அதற்காக மக்கள் யாரும் மனச்சோர்வு அடைவதில்லை. .அதனை  இயல்பாகவே எடுத்துக் கொண்டு தங்களின் வேலைகளைப் பார்க்கிறார்கள். சில மணிநேரத்திற்குள் மறந்தும் விடுகிறார்கள். அடுத்த நொடியே புதிய செய்திக்கு மனம் தாவிவிடுகிறது.
*
உலகமே உள்ளடங்கியுள்ளது
சுருக்கமான ஆங்கில எழுத்தின்
திசைகளுக்குள் செய்திகள்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Tue May 17, 2016 8:36 am

ஹைபுன் : குடை…!!
 
இந்தப் பூமி அதிகம் வெப்பமடையாமல் பாதுகாப்பதற்காக மரம்செடி கொடிகள் எல்லாம்  குடை பிடித்து நிழல் கொடுக்கின்றன. உயிரினங்கள் கடுமையான வெப்பத்திலிருந்து, தற்காத்துக் கொள்கவதற்காக நிழல் தேடி ஒதுங்கி நின்று ஆசுவாசம் பெறுகின்றன. வயதானவர்கள் கையில் குடை வைத்துக் கொண்டே நடைபழகுகிறார்கள்.  வெயிலுக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை மழைக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை எப்பொழுதும் எடுத்து விரித்துப் போகாமல் எதற்காக வைத்திருக்கிறாய் கைப்பையின் உள்ளே வண்ணக்குடை? அது உன் பாதுகாப்பிற்காகத்தானே?
 
எடுத்துக் குடையை விரி
இருவரையும் இணைக்கும்
மழைக்கு நன்றி சொல்வோம்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Fri May 20, 2016 8:07 am

சுமை…!!
*
பலாமரத்திற்கு பலாப்பழம் சுமை. மாமரத்திற்கு மாங்கனிகள் சுமை. தென்னைக்கு இளநீர்க் காய்கள் சுமை. காய்க்கும் மரங்கள் எல்லாம் தாய்மைக் குணம் கொண்டவை என்பதால், அவைகள் மகரந்தச் சேர்க்கையால் சூல் கொண்டு பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகிச் தொங்குகின்றன. பெண்ணே! நீ  இயற்கையின் படைப்பில் தாய்மையின் வசீகரமான அழகைப் பெற்று திகழ்கின்றாய். இயற்கைச் சுமப்பதை விட கூடுதாய், நீ வயிற்றிலே சுமக்கிறாய் இடுப்பிலே சுமக்கிறாய் தலையிலே சுமக்கிறாய் பூரணமாய் அனுபவிப்பவளுக்குத் தானே தெரியும்? அந்த சுமையின் அந்தரங்கம்.
 
கருவறையின்  சுமை
தாய்மையின் உச்ச சுகம்
பெண்ணிற்கு பெருமை


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by பானுஷபானா Fri May 20, 2016 5:57 pm

ந.க.துறைவன் wrote:சுமை…!!
*
பலாமரத்திற்கு பலாப்பழம் சுமை. மாமரத்திற்கு மாங்கனிகள் சுமை. தென்னைக்கு இளநீர்க் காய்கள் சுமை. காய்க்கும் மரங்கள் எல்லாம் தாய்மைக் குணம் கொண்டவை என்பதால், அவைகள் மகரந்தச் சேர்க்கையால் சூல் கொண்டு பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகிச் தொங்குகின்றன. பெண்ணே! நீ  இயற்கையின் படைப்பில் தாய்மையின் வசீகரமான அழகைப் பெற்று திகழ்கின்றாய். இயற்கைச் சுமப்பதை விட கூடுதாய், நீ வயிற்றிலே சுமக்கிறாய் இடுப்பிலே சுமக்கிறாய் தலையிலே சுமக்கிறாய் பூரணமாய் அனுபவிப்பவளுக்குத் தானே தெரியும்? அந்த சுமையின் அந்தரங்கம்.
 
கருவறையின்  சுமை
தாய்மையின் உச்ச சுகம்
பெண்ணிற்கு பெருமை


*

அருமை ஐயா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Thu Jun 23, 2016 8:06 am

ஹைபுன் மனோசக்தி…!!
 
இக்கணத்தில் நிகழும் சம்பவங்களும் உண்மைகளும் மனதில் நினைவு கொள்ளாமல், எப்பொழுதோ நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் அசைப்போட்டு மனம் கலங்குகின்றது. அத்தவறுகளிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறது. கொஞ்ச காலம் கழித்து அதிலிருந்து விடுபடும்  யுத்தியை மனமே உருவாக்கி தருகிறது  அதுவே மீண்டும் வழக்கம்போல இயல்பாக செயல்படத் துவங்குகின்றது. இதைத் தான் மனோசக்தி என்று சொல்கிறார்கள்.
திசை தெரியாமல் தவித்தது
மீண்டு திரும்பியது இருப்பிடம்
கடல் கடந்து சென்ற பறவை
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Tue Aug 16, 2016 8:15 am

தந்திரங்கள்….!!
 
அசம்பாவிதமாக நடக்கின்ற செயல்கள் யாவும் அதிர்ச்சியைத் தருகி்ன்றது. அச்சம்பவங்கள் யாவும் எவருக்கும் அதிர்ச்சியாகத் தெரிவதில்லை. வேடிக்கையான சம்பவமாகவே பாவிக்கிறார்கள். அசட்டையான நடவடிக்கைகள் கண்டு கேலியாகப் பேசுகிறார்கள். இச்சமூக நிகழ்வுகள் யாவும் சர்க்கஸ் விளையாட்டு போன்று கண்டு களிக்கிறார்கள். அச்சம்பவங்கள் பற்றி கொஞ்ச நாள்கள் பேசுகிறார்கள். பிறகு, அதனை மறந்தே போகிறார்கள். மக்களின் இம்மனநிலையினை அறிந்துள்ள அரசியல்வாதிகள் சில இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் மனதை திசைதிருப்புவற்காக, இத்தந்திரங்களைப் பயன்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.
                                          
காலடி வைத்து திரும்புகின்றனர்
யார் என்றும் முகம் தெரியாது?
நிலாவிற்கு நினைவிருக்குமா?  

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Tue Aug 23, 2016 7:54 am

நொடியில்..!!
*
மகிழ்ச்சியான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? துக்கமான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? இரண்டுமே இல்லை. எல்லாமே மனம் தீர்மானிப்பது தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு நொடியிலே இரண்டும் மாறி மாறி நிகழ்ந்தேறும். இதனை நேரடியாக அனுபவத்திலே காணலாம். இரவு – பகல் அமாவாசை, பௌர்ணமி என எல்லாம் மாறி மாறி வருவது போன்று தான் மகிழ்ச்சியும் துக்கமும் வாழ்வில் நிகழ்ந்தேறி வருகின்றன. இயற்கை தகவமைத்துள்ள செயல்பாட்டு முறைப்படியே மனித மனமும் செயல்படுகின்றன என்பதை இதன் வாயிலான அறிந்துக் கொள்ள முடிகின்றது.
 
பூமியின் உருண்டை வடிவில்
காலம் வெளி கணக்கிட்டு
கடிகாரம் கண்டான் மனிதன்.

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Thu Sep 08, 2016 7:40 am

கலவை.
 
மற்றவர்கள் வாழ்கின்ற வாழ்க்கை என்னுடையதல்ல. நான் வாழ்கின்ற வாழ்க்கையே எனக்கு சொந்தம். - என்று எல்லோருமே நினைக்கின்றார்கள். அதிலென்ன தவறு இருக்கிறது? ஒவ்வொருவருக்குமான ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதைத் தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. இந்தியக் கலாச்சாரம், பண்பாடு, மக்களை எப்படி வாழ வேண்டுமென்று ஏராளமான ஆன்மீக நியதிகளை வகுத்தளித்துள்ளது. அதில் சரியான வழிக்காட்டுதலும் உண்டு. மரபு மீறிய தவறாக நெறிமுறைகளும் உண்டு மேலைக் கலாச்சாரம் சார்ந்துள்ள வாழ்க்கை முறைகளும் உண்டு. இந்தியக் கலாச்சார வாழ்க்கை என்பது கூட்டுக் கலவையான வாழ்க்கை முறையாகவே திகழ்கின்றது.
 
அடைக்கப்பட்ட இனிப்பான
மருந்து கலவையாய் இருக்கிறது
மனித சமூக வாழ் நெறிகள்.  

*                                          *
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by ந.க.துறைவன் Fri Sep 16, 2016 8:07 am

ஹைபுன். 
 
முரண்பாடுகள்.
 
எந்தவொரு பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், அதில் இருவேறு கருத்துக்கள் உள்ளடங்கியிருக்கிறது. அதில் எது உண்மை? எது பொய்? என்று நிரூபிப்பது கடினமான காரியமாகும். வாழ்க்கை முழுக்கவுமே மனிதர்களிடையே இம்முரண்பாடுகள் மலிந்து காணப்படுகின்றன. பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் நடைமுறைக்குமான இம்முரண்பாடுகளை நேரிடையே கண்டறியலாம். முரண்பாடுகள் என்பது இயற்கையின் நியதியிலிருந்து தொடங்கி மனித வாழ்வின் எல்லை வரை தொடர்கின்றது. முரண்பாடுகள் இன்றி எதுவுமேயில்லை. முரண்பாடுகளோடு தான் சமூகமே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.
 
முரண்பாடுகளை வென்றெடுத்து தான்
முளைவிட்டு எழுகின்றன
மண்ணில் விதைக்கும் விதைகள்.

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைபுன் கவிதை. Empty Re: ஹைபுன் கவிதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum