சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

வாழைப்பழம் Khan11

வாழைப்பழம்

+2
கவிப்புயல் இனியவன்
anuradha
6 posters

Go down

வாழைப்பழம் Empty வாழைப்பழம்

Post by anuradha Wed 5 Aug 2015 - 13:20

வாழைப்பழம்

வாழைப்பழம் Luxor%2C_Banana_Island%2C_Banana_Tree%2C_Egypt%2C_Oct_2004
வாழைப்பழம் Bananas
வாழைப்பழம் Bananavarieties

வாழைப்பழம் Arogya-vazhvirku-vaazhaipazhangal-1050x700

முக்கனிகளில் ஒன்று வாழைப் பழம். வாழைப் பழம் தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தைப் படைக்கிறோம். கல்யாணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சீர் வரிசையாகக் கொண்டு செல்வதும் வாழைப் பழத்தைத்தான். அன்றே வாழைப் பழத்தின் மகிமையை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியே இது.

வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்து, டிரிப்தோபன், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. இவ்வளவு சத்துகள் கொண்ட அபூர்வமான பழமாக வாழைப் பழம் இருக்கிறது.
வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலைத் தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகியுள்ளது.

அதனால்தான் விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப் பழம் உட்கொள்கிறார்கள். மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளனது.

வாழைப் பழத்தில் உள்ள டிரிப்தோபன் என்னும் சத்து மன அழுத்தத்தைக் குறைத்து மனத்தை மிருதுவாக்குகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினைத் தூண்டுகிறது. இரத்த சோகை வராமல் தடுக்கிறது. வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

மலச் சிக்கலுக்கும் வாழைப் பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும். ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டின் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைரேட் சத்தும் 3 மடங்கும் அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு விட்டமீன் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. ஆனால் விலையே ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு.


உலகிலேயே மிகவும் பிரபலமான அதிக அளவில் மக்களால் சாப்பிடப்படும் பழம் வாழைப்பழம்தான்! மலைப்பிரதேசங்களிலும். சமதரைகளிலும் வளரும் வாழைமரம் தனது பூ, காய், கனி, தண்டு என அனைத்து விதத்திலும் உணவாகப் பயன்படுவது நம் நாட்டில் மட்டும்தான்.



உடம்பு சோர்வாக இருக்கிறதா? மனதில் அழுத்தம் ஏற்பட்டது போன்ற உணர்வா? இரண்டு வாழைப்பழங்களை உரித்து வைத்து சாப்பிட்டுப் பாருங்கள். புத்துணர்ச்சி ஏற்பட்டு விடும். எதனால்? வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ், க்ளுகோஸ், ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை இருப்பதால், உண்டவுடன் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.


வாழையின் மருத்துவ பலன்கள்:


•இது நம் உடலில் தோன்றக்கூடிய பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது.

•இதில் உள்ள நார்ச்சத்து, பெரும்பாலானோர் அவதிப்படும் மலச்சிக்கல் தொந்தரவிலிருந்து விடுதலை அளிக்கிறது.

•உடலில் நல்ல இரத்த ஓட்டம் அமைய ‘ஹீமோக்ளோபின்’ உற்பத்தியை அதிகரித்து, உடலில் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.

•பொட்டாசியம் சத்து அதிகமாக, அதே சமயத்தில் உப்பு சத்து குறைவாக வாழைப்பழத்தில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இப்பழம் மிக ஏற்ற உணவாகும்.

•இதே பொட்டாசியம் சத்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

மனச்சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் இப்பழம் எப்படி உதவியாயிருக்கிறது? வாழைப் பழத்தில் உள்ள ட்ரைபோடோஃபான் என்னும் ஒரு வகை புரதம் உடலில் சேரும்போது ‘செரடோனின்’ என்ற பொருளாக மாறுகிறது. இதுவே உடலை தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் அதிக அளவு வேலை பளு உள்ளவர்களுக்கு, உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அப்போது இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இந்த நிலை ஏற்படாமலிருக்க அவ்வப்போது ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். அதோடு வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, நரம்புகளுக்குத் தளர்ச்சி அடையாமல் தெம்பூட்டுகிறது.

நம் ஊரில் மதிய உணவு, இரவு உணவிற்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கம். வயிற்றிற்கு, குடலுக்கு இதமாக உள்ள இப்பழம் வயிற்றில் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. எளிமையாகப் பயிரிடப்பட்டு, எல்லா இடங்களிலும், வருடம் முழுவதும் கிடைக்கும் இந்தப் பழம் விலையும் மலிவாகவே உள்ளது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்தவரின் உதவியை நாட வேண்டாம் என்று. தினம் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டால், நோயே உங்களை அண்டாதே!

ஒரு வாழைப்பழம் 4 ஆப்பிளுக்கு சமம் : இளமை, ஆரோக்கியம் நிச்சயம்!


‘தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:

வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.

ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.

ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.


வாழைப்பழ மில்க் சேக்

வாழைப்பழம் 3-low-fat-no-bake-desserts-banana-milkshake

தேவையானவை :
வாழைப்பழம் - 2
குளிர்ந்த பால் - 1 கப் (சூடுபண்ணி ஆறவைத்து ப்றீஸரில் வைத்த பால்)
சீனி - 2 டேபிள்ஸ்பூண்
பொடித்த ஏலக்காய் - 1
பாதாம் - 2
முந்திரி - 3
அல்மோண்ட் - 2
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை :
வாழைப்பழம்,பாதாம்,முந்திரி,அல்மோண்ட் சீனி, ஏலக்காய், தண்ணீர் எல்லவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அடிக்கவும்.
நன்கு அடித்தபிறகு குளிர்ந்த பால் சேர்த்து 2 நொடி அடித்தால் போதும்
எப்பொழுது தேவையோ அப்போது அடித்து உடனே குடிக்க டேஸ்டாக இருக்கும்
கோடைக்கால்த்திற்க்கு ஏற்ற சுவையான ஆரோக்கியமான வாழைப்பழ மில்க் சேக் ரெடி..
வாழைப்பழம் 3-low-fat-no-bake-desserts-banana-milkshake

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by கவிப்புயல் இனியவன் Wed 5 Aug 2015 - 18:07

பயனுள்ள பதிவு 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by *சம்ஸ் Sat 8 Aug 2015 - 16:09

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by ahmad78 Sun 9 Aug 2015 - 14:58

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 16:32

பயனுள்ள தகவல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:09

என் மகனுக்கு  வாழைப்பழத்தினை கண்டால் இது தான் வேலை! அவன் எசென்ஸ்,  சர்க்கரை என சேர்க்காமல் வாழைப்பழமும் பாலும் மட்டும் சேர்த்து  மிக்சியில் அடிச்சு பிரிஜ்ஜில் வைத்து  குடிப்பான். 

அதிலும் நல்ல வெயில் நேரம் தினம் குடிப்பார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 17:11

Nisha wrote:என் மகனுக்கு  வாழைப்பழத்தினை கண்டால் இது தான் வேலை! அவன் எசென்ஸ்,  சர்க்கரை என சேர்க்காமல் வாழைப்பழமும் பாலும் மட்டும் சேர்த்து  மிக்சியில் அடிச்சு பிரிஜ்ஜில் வைத்து  குடிப்பான். 

அதிலும் நல்ல வெயில் நேரம் தினம் குடிப்பார்.
நானும் ரொம்ப குடித்தேன் இப்போது நிறுத்தி விட்டேன் காரணம் இப்போது நான் துப்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:13

ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 17:14

Nisha wrote:ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!
வாழைப் பழம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன் வாரம் ஒரு பழம் அவ்வளவுதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:16

ரெம்ப நல்லதுங்கோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 17:19

நண்பன் wrote:
Nisha wrote:ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!
வாழைப் பழம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன் வாரம் ஒரு பழம் அவ்வளவுதான்

வாழைப் பழம் சாப்பிட்டால் உங்களுக்கு நல்லது சாப்பிடாவிட்டால் வாழைப் பழதிற்கு நல்லது பாஸ்  சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 17:57

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!
வாழைப் பழம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன் வாரம் ஒரு பழம் அவ்வளவுதான்

வாழைப் பழம் சாப்பிட்டால் உங்களுக்கு நல்லது சாப்பிடாவிட்டால் வாழைப் பழதிற்கு நல்லது பாஸ்  சிரிப்பு வருது
புதிய அறிவு நன்றி அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 16:05

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!
வாழைப் பழம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன் வாரம் ஒரு பழம் அவ்வளவுதான்

வாழைப் பழம் சாப்பிட்டால் உங்களுக்கு நல்லது சாப்பிடாவிட்டால் வாழைப் பழதிற்கு நல்லது பாஸ்  சிரிப்பு வருது
புதிய அறிவு நன்றி அழுகை

அப்படியா பாஸ்  சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum