சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Khan11

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

5 posters

Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by anuradha Wed 5 Aug 2015 - 13:40

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா PICT07381

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா DSC084741
திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா 161696dc-de3a-4cec-8306-4dfeb3959177_S_secvpf

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றால்
திருநெல்வேலி என்றாகி விட்டது என்று ஒரு சாரார் சொல்கின்றனர். வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக தமிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது. இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.

எது எப்படியோ இன்று திருநெல்வேலி என்றாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அல்வா ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. இந்த ஊரு அல்வாவிற்கு இருக்கும் சுவையே தனிதான். திருநெல்வேலி முழுக்க அல்வாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலின் எதிரே இருக்கும் "இருட்டுக்கடை"

அல்வாவிற்குத்தான் முதலிடம். இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகிலுள்ள "சாந்தி ஸ்வீட்ஸ்" கடையின் அல்வாவிற்கு இரண்டாமிடம் (இந்த சாந்தி ஸ்வீட்ஸ் என்கிற பெயரில் திருநெல்வேலி சந்திப்பு மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இரண்டாம்தரக் கடைகள் நிறைய இருக்கிறது. ஒரு பிரபலமான கடைக்கு இத்தனை போலியான கடைகளா? என்று வியக்க வைக்கும் அளவிற்கு அனைத்துக் கடைகளிலும் சாந்தி ஸ்வீட்ஸ் பெயர்ப்பலகைகள்...) மூன்றாவது இடத்தில் "லெட்சுமி விலாஸ்" கடை அல்வா இருக்கிறது. இது தவிர பல லாலாக் கடைகள் (ஸ்வீட் மற்றும் மிக்சர் போன்றவை விற்பனை செய்யும் கடைகளை லாலாக் கடை என்றுதான் அழைக்கிறார்கள்.) சுவையான அல்வாவைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்த இருட்டுக் கடையில் அல்வா மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு மணிக்குத் துவங்கி இரவு பத்து மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. 82 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக் கடை என்று அழைத்தனர். கடையைத் துவங்கிய இருவரது மரணத்திற்குப் பிறகு ஹரிசிங் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் (செண்டிமெண்ட்) அதாவது வெறும் 40 வாட்ஸ் மின் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி விட்டது.

இங்கு அல்வாவை 100 கிராம், 200 கிராம் என்கிற அளவுகளில் சுடச்சுட இலையில் வைத்து விற்பனை செய்கிறார்கள். இவ்வூர் மக்கள் இதை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். கிலோக் கணக்கிலும் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். திருநெல்வேலியிலும் இதைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள், வெளியூர்களில் இருக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது இந்த இருட்டுக் கடையில்தான் அல்வாவை வாங்கிச் செல்கின்றனர். வெளியூரிலிருந்து வருபவர்கள் திருநெல்வேலிக்கு வரும் போது இருட்டுக் கடை குறித்து தெரியாததாலும், இந்தக் கடை அல்வாவிற்காக இரவு வரை காத்துக் கிடக்க விரும்பாமலும் வேறு கடைகளில் வாங்கிச் செல்கின்றனர். இப்படி வாங்கிச் செல்லும் கடைகளில் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தின் அருகிலிருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ், லெட்சுமி விலாஸ் கடைகளில் இருக்கும் அல்வாக்கள் சுவையாக இருக்கிறது. மற்ற லாலாக் கடைகளிலும் அல்வா ஓரளவு சுவையாக கிடைக்கிறது. தரம் குறைந்த அல்வாவும் பல போலிக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச் செய்யப்படும் அல்வா மிகச் சுவையாக கிடைக்கிறது. ஆனால் பல போலிக் கடைகளில் தரமில்லாத கோதுமையில் அல்லது ஜவ்வரிசி மற்றும் பிற மாவுப் பொருட்களையும் கலந்து தயாரிக்கப் படுகின்றன. இது போன்ற கலப்புப் பொருள்களால் தயாரிக்கப்படும் அல்வா சுவையாக இருப்பதில்லை...!!!

திருநெல்வேலி அல்வா செய்முறை

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Halwa

தேவையான பொருட்கள்:

கோதுமை - 250 கிராம்
 சர்க்கரை - 500 கிராம்
 பால் - ஒன்றரை கப்
 நெய் - 100 கிராம்

செய்முறை:

 1. கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும். நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு, மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே மூன்று மணி நேரம் வைக்கவும்.

2. மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு கப் பாலைச் சேர்க்கவும். பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும். சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும்.

3. கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும். கைவிடாமல் நன்கு திரண்டு வரும் வரை கிளறவும். இப்போது அல்வா சிவப்பு நிறத்தில் வந்து விடும்.

4. இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாத நிலைக்கு வரும் பொழுது நெய் தடவிய தட்டில் போட்டு ஆற வைத்துச் சாப்பிட அல்வா தயார்.

 (முந்திரி ஏலக்காய் போன்றவை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் முந்திரி - 25 கிராம் எடுத்து மீதி நெய்யில் வறுத்தும் ஏலக்காய்-8 எடுத்து தோல் நீக்கி, பொடியாக்கியும் அந்தக் கலவையுடன் சேர்த்துக் கிளறலாம். (திருநெல்வேலி அல்வாவில் இவை சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.)
குறிப்பு:

 * கோதுமையைக் கல் உரல் அல்லது கிரைண்டரில் மட்டுமே அரைக்க வேண்டும். மிக்ஸியில் அரைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

திருநெல்வேலிக்கு வருபவர்கள் இங்கு வரும் போது அல்வாவை வாங்கிச் செல்ல மறந்து விடாதீர்கள். வரவே வாய்ப்பில்லை என்று நினைப்பவர்கள் மேலே சொன்ன திருநெல்வேலி அல்வாவைச் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by கவிப்புயல் இனியவன் Wed 5 Aug 2015 - 18:05

பயனுள்ள பதிவு 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by Nisha Mon 10 Aug 2015 - 13:33

அல்வா செய்து பார்த்து விட்டு தான் அடுத்த வேலையே செய்வேன்! 

ருசியாக வந்தால் எனக்கு! ருசி இல்லன்னால்?/

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by பானுஷபானா Mon 10 Aug 2015 - 13:46

ஒன்றுக்கு மூனு பங்கு சக்கரை போடணும்னு சொல்வாங்களே இனிப்பு கம்மியாக இருக்குமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by பானுஷபானா Mon 10 Aug 2015 - 13:56

Nisha wrote:அல்வா செய்து பார்த்து விட்டு தான் அடுத்த வேலையே செய்வேன்! 

ருசியாக வந்தால் எனக்கு! ருசி இல்லன்னால்?/
நல்லாவரலேனா எனக்கு அனுப்பிடுங்க திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா 3638139948
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by *சம்ஸ் Mon 10 Aug 2015 - 14:59

Nisha wrote:அல்வா செய்து பார்த்து விட்டு தான் அடுத்த வேலையே செய்வேன்! 

ருசியாக வந்தால் எனக்கு! ருசி இல்லன்னால்?/

எப்படி இருந்தாலும் எனக்கு ஒரு பார்சல் மேடம்.
நானும் செய்து பார்க்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by Nisha Mon 10 Aug 2015 - 17:53

அனுப்பிட்டால் போச்சு!@

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by *சம்ஸ் Mon 10 Aug 2015 - 18:18

முடிந்த வரை சிக்கிரம் அனுப்புங்கள் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 14:22

அல்வா அனுப்பிட்டாங்களா தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 15:15

பானுஷபானா wrote:அல்வா    அனுப்பிட்டாங்களா தம்பி

இன்னும் இல்லை அக்கா ஐயோ நான் பாவம்..

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by Nisha Wed 12 Aug 2015 - 15:19

அடப்போங்கப்பா!

இப்ப எங்க வீட்டில் நிரம்ப இனிப்புப்பலகாரங்கள் இருக்குது. அதைச்சாப்பிடவே ஆளில்லையாம். இதில் அல்வா கிண்டி என்ன செய்யணும்.

தங்கை ஊரிலிருந்து பயத்தம் பலகாரம். எள்ளுப்பலகாரம், அரியதரம், பனம்பலகாரம். நொதல் என கொண்டு வந்து தந்தா. சுவை பார்த்ததோட சரி. எல்லாம் அப்படியே இருக்கு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 15:31

Nisha wrote:அடப்போங்கப்பா!

இப்ப எங்க வீட்டில் நிரம்ப  இனிப்புப்பலகாரங்கள் இருக்குது. அதைச்சாப்பிடவே ஆளில்லையாம். இதில் அல்வா கிண்டி என்ன செய்யணும்.

தங்கை ஊரிலிருந்து  பயத்தம் பலகாரம். எள்ளுப்பலகாரம், அரியதரம்,  பனம்பலகாரம். நொதல் என கொண்டு வந்து தந்தா. சுவை பார்த்ததோட சரி. எல்லாம்  அப்படியே இருக்கு.

அது சரி மேடம் ”நொதல்” என்றால் என்ன எதில் செய்வது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by Nisha Wed 12 Aug 2015 - 15:33

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! மகனே கண்ணை தோண்டி காக்கைக்கு போட்டிருவேன் கவனம்.

அது தொதல்.. திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா 3638139948

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 15:37

Nisha wrote:ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! மகனே கண்ணை தோண்டி காக்கைக்கு போட்டிருவேன் கவனம்.

அது தொதல்..  திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா 3638139948
 ஸாரி மேடம் நான் ஏதும் எனக்கு தெரியாதது என்று நினைத்தேன் வேறு கிண்டலுக்கு அல்ல.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by Nisha Wed 12 Aug 2015 - 15:44

அட நிஜமாகத்தான் கேட்டீர்களோ? அப்படின்னால் நானும் ஸாரி. தோண்டிய கண்ணை திரும்பி மாட்டி விட்டு விட்டேன்.! ஐ ஜாலி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 15:52

அப்பாடா எது எப்படியோ என் கண் தப்பிச்சது அது போதும் ஆள விடுங்க  அய்யோ நான் இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by பானுஷபானா Thu 13 Aug 2015 - 13:22

தொதல் என்றால் என்ன?????????????????????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by *சம்ஸ் Thu 13 Aug 2015 - 14:57

பானுஷபானா wrote:தொதல் என்றால் என்ன?????????????????????????

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா 9k=

இது தான் தொதல் அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா Empty Re: திருநெல்வேலி"இருட்டுக்கடை" அல்வா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum