சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:27

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

ரம்ஜான் இப்தார் விருந்து Khan11

ரம்ஜான் இப்தார் விருந்து

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:00

ரம்ஜான் இப்தார் விருந்து

ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan-1
ரம்ஜான் இப்தார் விருந்து Mecca
ரம்ஜான் இப்தார் விருந்து Masjid_al-Haram_panorama
ரம்ஜான் இப்தார் விருந்து Mecca_view
ரம்ஜான் இப்தார் விருந்து Makkah-1910
ரம்ஜான் இப்தார் விருந்து Mecca-1850
ரம்ஜான் இப்தார் விருந்து Lossy-page1-1199px-Adriaan-Reland-Verhandeling-van-de-godsdienst-der-Mahometaanen_MG_0723.tif
ரம்ஜான் இப்தார் விருந்து Meccamontage
ரம்ஜான் இப்தார் விருந்து 1200px-Mecca_from_Jabal_Nur
ரம்ஜான் இப்தார் விருந்து Kabsa-mandi
ரம்ஜான் இப்தார் விருந்து Dsc05967


உண்ணல் பருகலை தவிர்த்திடுவது போன்று, பாவங்களையும் முற்றிலும் தவிர்ப்பது நோன்பில் கடைபிடித்தே ஆக வேண்டிய, அவசியமான ஒழுங்குமுறை. ஆச்சரியமாக இருக்கிறது! மக்கள், உண்ணல், பருகலையும், இல்லற உறவையும் விட்டுவிடுவதை அவசியமாகக் கருதுகின்றனர்; ஆனால், குற்றங்களை விடுவதை, அந்த அளவிற்கு அவசியமானதாகக் கருதுவதில்லை.

உண்மை நிலை யாதெனில், அம்மூன்று செயல்களும், மற்ற நேரங்களில் செய்ய அனுமதிக்கப்பட்டவை. சொல்லப் போனால் ரமலானின் இரவுகளிலும், அவை ஆகுமானவை. நோன்பின் காரணத்தால் தான், அனுமதிக்கப்பட்ட சில செயல்களைச் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா நிலைகளிலும், தடை விதிக்கப்பட்டுள்ள காரியங்களை, நோன்பு நிலையில் எவ்விதம் அனுமதிக்க முடியும்? அவற்றைச் செய்யாதிருப்பது மிக மிக அவசியமல்லவா?ஆக,நோன்பின் நிலையில் ஒருவர் புறம் பேசினால், தீய பார்வை பார்த்தால், அவரது நோன்பு கூடாது என்று சொல்ல முடியாது;

 மாறாக நோன்பின் வளம் குறைந்து விட்டது என்று சொல்ல முடியும்."எவரொருவர் அணு அளவு நன்மை செய்தாலும் அதனைக் காண்பார். எவரொருவர் அணு அளவு தீங்கு செய்தாலும் அதனைக் காண்பார். (அஸ்ஸில்ஸால்: 7,8)இதை விளக்க, இப்படியும் ஒரு உதாரணம் சொல்லலாம். ஒரு அதிகாரி, தன் கடமையான பணிகளைச் செய்கிறார்.

அதே நேரத்தில், கையூட்டும் பெறுகிறார் எனில், அது பற்றிய தகவல், அரசுக்கு கிடைக்கும் பட்சத்தில், அவர் லஞ்சம் வாங்கியதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். எனினும் அவர் ஏற்கனவே செய்த பணிக்கான சம்பளமும், அவருக்கு கிடைக்கும்.பாவங்களால் நோன்பு முறியாது: அதை மீண்டும் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்பதில், அனைவரும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர். நன்மைகளுடன் செய்யும் வணக்கங்களினால் மனதில் உருவாகும் ஒளி, புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சி, குற்றங்களுடன் செய்யும் வணக்கங்களால் உருவாவதில்லை.

இதை விளக்க இப்படி ஒரு உதாரணம் கூறலாம். சுவையான உணவைத் தயாரித்த பிறகு, அதில் கொஞ்சம் சாம்பலைத் தூவினால், உணவின் சுவை முற்றிலும் குறைந்து போகும்.வணக்கங்களை நிறைவேற்றிக் கொண்டே, செய்யும் குற்றங்கள், இரு வகைப்படும். சில குற்றங்கள், நன்மைகளை முற்றிலும் அழித்துவிட வல்லவை; அவற்றின் காரணமாக, நற்செயல் நிறைவேறாது போகும். குற்றங்களுடன் நன்மைகள் ஏற்கப்படும் என்ற வாதம், அத்தகைய குற்றங்களுடன் தொடர்புடையதல்ல.

வணக்கத்தை அழித்திடாத வகையில் நிகழும் குற்றங்களே இங்கு நோக்கம். இத்தகு குற்றங்களினால் வணக்கங்கள் பாழாகாது; எனினும் அவற்றின் வளம் குறைந்து போகும். எனவே தான், "குற்றங்களிலிருந்து விடுபடா விட்டால் உண்ணல் பருகலை விட்டுவிடுவதில் என்ன பயன்? என நபிகளார் (ஸல்) இயம்பினார்.இப்போது இந்த நபிமொழியின் நோக்கத்தை, ஆழ்ந்து நோக்குவது அவசியம். அதாவது, பாவத்தை விட்டொழிப்பது, நோன்பின் போது இன்றியமையாத ஏற்பாடு. பாவம் தீயது என்பதை, முஸ்லிம்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.

குறைந்தது ஒரு மாதம் முழுவதும், அதை விட்டொழிக்க வேண்டும். அதே நேரத்தில், இம்மாதத்திற்குப் பிறகு பாவங்கள் செய்யலாம் என்று மாற்றுக் கருத்து கொள்ளக் கூடாது. ஏனெனில், மனதிடம் வாக்குறுதி வாங்குவது, கடினமான காரியம். எனவே தான் ஒரு மாதத்திற்குப் பாவம் செய்ய மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறேன்; அது எளிது. மேலும் எப்போதும் அது ஒரு எச்சரிக்கை உணர்வாகவும் அமையும்.பெரியவர் ஒருவர், "நான் ஒரு மணி நேரம், இறைதியானம் செய்யப் போகிறேன் என தன் மனதுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

ஒரு மணி நேரம் கழிந்தும் தியானத்தில் மூழ்கியவராகவே இருந்தார். ஆக, ரமலான் வரை குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை என, மனதிடம் சொல்லிக் கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்காக மட்டும் உறுதிமொழி மேற்கொள்ளுங்கள்; பிறகு பாருங்கள்! உறுதியாகக் கூறுகிறேன்... ரமலான் இறையச்சத்துடன் கழியுமானால் அந்த இறையச்சம் விடாது தொடரும்.கடுஞ்சொல் கூறுவது, திட்டுவது, புறம் பேசுவது, குற்றங் குறை சொல்வது, படிக்க கூடாத விஷயங்களைப் படிப்பது போன்ற, நாவினால் செய்யும் பாவங்களை விட்டு விடுங்கள். தீய சொல் கேட்பது, பாட்டுக் கேட்பது போன்ற, செவிக் குற்றங்களை விட்டொழியுங்கள்.

 நடன அரங்குகளுக்குச் செல்வது, பொய் சாட்சியம் அளிக்கச் செல்வதும், பொய் வழக்குகள் போடவும், பொய் வாதங்களைப் பின்பற்றவும் செல்வது போன்ற, கை கால் செய்யும் குற்றங்களையும் விட்டொழியுங்கள். எல்லாவற்றையும் விட, லஞ்சம், வட்டி மற்றும் அபகரிப்புப் பொருள்களைச் சாப்பிடுவது போன்ற, வயிற்றின் பாவங்களை முற்றிலும் விட்டொழியுங்கள். ரமலானின் அனைத்து வகையான குற்றங்களையும் முற்றிலும் விட்டொழியுங்கள். பிறகு பாருங்கள். இறைவனை நாடினால், அந்த நோன்பு அருள்வளம் நிறைந்த நோன்பாக அமையும்.


மேலும் அது உனக்காகப் பரிந்துரை செய்யும் நோன்பாக அமையும். நானே அதற்குரிய கூலியை வழங்குவேன் என, எது விஷயமாக, அல்லாஹ் கூறினானோ, அத்தகைய சிறப்பான நோன்பாக அது அமையும். குற்றங்களை விடாவிட்டால் நோன்பு ஆகும்; எனினும் எப்படி ஆகும் எனில், "நீங்கள் எங்களது நண்பர் ஒருவரிடம் ஒரு மனிதரைக் கொண்டு வாருங்கள்; அதுவும் இப்படிப்பட்ட ஒரு மனிதரை கொண்டு வாருங்கள்;

அவருக்கு காது இருக்கக் கூடாது; கண்களும் இருக்கக் கூடாது; நொண்டியாகவும் இருக்க வேண்டும்; தலையில் முடியில்லாதவராகவும் இருக்க வேண்டும்; பேச முடியாதவராகவும் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போன்றதாகும். இத்தகையவரும் மனிதர் தான் என்றாலும், பயனற்றவர். மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் காரணத்தால், அவரையும், பேசும் உயிரினம் என்போம். இத்தகையவர், மனிதரும், தான்; மனிதர் அல்லாதவரும் தான். அவ்விதமே இது நோன்பு தான்; இல்லையும்தான். இத்தகைய நோன்பு நல்லடக்கம் செய்வதற்குத் தகுதியானது. இறையருள் செழிக்கும் நோன்பாக, நம் நோன்பு அமைய வல்லவன் அருள்வானாக!

சென்று வா ரமலானே!

ரமலான், நோன்பின் மாதம் ரமலான், இரவு வணக்கத்தின் மாதம் ரமலான், "தவ்பாவின் (பாவ மன்னிப்பின்) மாதம் ரமலான், ரத்த உறவின் - சகோதரத்துவத்தின் மாதம் ரமலான், மறை ஞானம் இந்த மண்ணுக்கு அருளப்பட்ட மாதம்; அதாவது, "குர்ஆனின் மாதம். ரமலான், "குர்ஆனியக் கொள்கைகளுக்கு மகத்தான வெற்றிகள் கிடைத்த மாதம்.நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய, "குர்ஆனிய சமூகம் வரலாறு காணாத வெற்றிகளை அள்ளிக் குவித்த மாதமாக ரமலான் திகழ்ந்தது. சத்தியத்தை வாழ வைத்து அசத்தியத்தை வீழ வைத்த மாதமாக, அது மாறியது. இஸ்லாம் எழுச்சி பெற்று, "ஜாஹிலிய்யத்தின் கோட்டைக் கொத்தளங்கள், சரிந்து வீழ்ந்த மாதமாக, அது காட்சியளித்தது.இன்றோ, அந்த உன்னத மாதம், நம்மைப் பார்த்துவிட்டுச் செல்கிறது. ஆண்டுதோறும் வந்து செல்கிறது.

இருப்பினும் என்ன!

களைகட்டி களைந்துவிட்ட ஒரு விழாவாகவே, அது முடிந்து வருகிறது. விழா முடிந்ததும், சோர்வும், அயர்வும், தூக்கமும் மிகைக்கின்றன. இன்றைய ரமலான் ஓய்வெடுத்துக் கொள்ளும் மனிதர்களை விட்டுச் செல்கிறது. வெறிச்சோடிய,"மஸ்ஜித்களை விட்டுச் செல்கிறது. சவால்களை எதிர்கொள்ளத் திராணியற்ற ஒரு சமுதாயத்தை விட்டுச் செல்கிறது.பண்படாத உள்ளங்களைப் பண்படுத்தாமலேயே, ரமலான் சென்று விடுகிறது.

"உம்மத்தை, ஒரு சோதனைக்குப் பின்னால் மற்றொரு சோதனையிலும், ஒரு தோல்விக்குப் பின்னால் மற்றொரு தோல்வியிலும் விட்டுச் செல்கிறது."ஓ... ரமலானே, மகத்துவமிக்க, "குர்ஆனைச் சுமந்து வா... என, சப்தமிட்டு உன்னை அழைக்க, விழைகிறது என் மனம். எனினும் இயலாமைகளையும், தோல்விகளையும், பலவீனங்களையும், தோல்வி மனப்பான்மைகளையும் சுமந்து அடுத்த வருகைக்காக, உன்னை வழியனுப்பி வைத்து விடுவோமே என நினைக்கும் போது, அந்த அழைப்பின் குரல், நாணித்து நலிவடைகிறது.ரமலானே... சத்தியத்திற்கு உயிர் கொடுத்த மாதம் நீ... இஸ்லாமிய, "உம்மத் தின் இருப்பை... அதன் இலக்குகளோடு இணைத்து உறுதிப்படுத்திய மாதம் நீ...!"க அபத்துல்லாஹ்வின் திரையைப் பிடித்து பாவமன்னிப்புக் கோருவோரின் உள்ளங்கள் சிலபோது உயரலாம். எனினும் அதே மனிதர்கள் தாம் வாழும் வீட்டையும், தெருவையும், கிராமத்தையும், சமூகத்தையும், பாவமீட்சிக்குக் கொண்டுவருவதற்காக உழைக்கா விட்டால், அங்கு இஸ்லாத்துக்கு என்ன உயர்வு கிடைக்கப் போகிறது? விமானத்திலிருந்து பொதிகள் போடுவது போல, ரமலான், உயர்வுகளையும், வெற்றிகளையும், பொதிகளாகப் போட்டுச் செல்லுமா இவர்களுக்கு...?ரமலானே... உனது இந்தக் குரலை செவிமடுத்து கூறுகிறேன். உன்னை வரவேற்பதில், இந்த உம்மத்துக்கும் மகிழ்ச்சிதான். உன்னைச் சிறப்பிக்க வேண்டும் என்பதிலும் இவர்களுக்கு ஆர்வம்தான்...!என்றாலும் அது ஒரு மகா வெற்றிக்கல்ல. "காதிசியாவுக்காக அல்ல... "பைத்துல்முகத்தசின் விடுதலைக்காக அல்ல... குறைந்தபட்சம் ஒரு கிராமத்தில் இருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, பகைமைகள் அகன்று ஒற்றுமை மலர்ந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை, அடுத்த பதினோரு மாதங்களில் மேலோங்கச் செய்வதற்குமல்ல.உன்னை வரவேற்கும் ஆர்வம், வெறுமனே ஒரு சீசனல் ஆர்வம்தான்.

அது ரமலான் தலைப்பிறையில் ஆரவார்த்து நடுப்பிறையாகும்போது, நலிவடைந்து, 27 ஆகும்போது மீண்டும் கொதிநிலைக்கு வந்து, "ஷவ்வால் தலைப்பிறையோடு ஆறிப் போகிறது. இந்த சீசனல் ஆர்வத்தைப் பார்க்கதான், நீ வருகிறாய். அன்று வெற்றிகளைச் சுமந்து, உன்னை வரவேற்ற, "உம்மத் இன்று, தோல்விகளையும், தோல்வி மனப்பான்மையையும் சுமந்து கொண்டு உன்னை வரவேற்பதைப் பார்க்க என்னால் முடியாதிருக்கிறது.இருப்பினும் நீ ஒரு நாள் வருவாய். உனது வரலாற்றுப் பெருமையைக் காண வருவாய்; வெற்றிகளைக் காண வருவாய்.உமர்களும், தாரிக்களும் சலாஹீத்தீன் அய்யூபிகளும் தவழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்று அவர்கள் எழுந்து நடைபயின்று, சிறுபிராயம் தாண்டி, வாலிபம் அடைகிற போது, நீ உன் வரலாற்றுப் பெருமையை மீட்ட வருவாய். வெற்றிகளைக் காண வருவாய். அந்த நம்பிக்கையோடு உன்னை வரவேற்கிறேன். உமர்கள், தாரிக்கள், சலாஹீத்தின்களின் வாரிசுகளுக்கு, நீ சுமந்துவரும் அருள்களைப் பொழிந்து விட்டுப் போ. அவர்கள், செத்துப்போன இதயங்களைத் துடிக்க வைப்பர்.


ஈத் முபாரக்


உலக முஸ்லிம்கள் அனைவருக்கும், இரண்டு பண்டிகைகள் தான். ஒன்று: ரமலான், இன்னொன்று: பக்ரீத் எனும் தியாகத் திருநாள். இந்த ரம்ஜான் பண்டிகை, ரமலான் மாதம் முழுக்க நோன்பு வைத்த பிறகு, நோன்பு முடியும் கடைசி நாளின், மறு நாள் கொண்டாடப்படுகிறது.இதை, ஈகை பெருநாள் என்றும் அழைப்பர். ஏனெனில், இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம் எனும், உன்னத லட்சியத்தை கொண்ட இஸ்லாம், அதை முழுக்க முழுக்க நடைமுறைப்படுத்துவது, ரமலான் மாதத்தில் தான்.இந்த நோன்பு காலத்தில் தான், செல்வந்தர்களின் செல்வங்கள் மீது, 2.5 சதவீதம் "ஜகாத் வரி கடமையாக்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், ஏன் அறிமுகமில்லாதவர்களில் கூட, வசதியில்லாமல் இருப்பவர்களுக்கு, உதவி செய்ய பயன்படுத்துவர்.காலையிலிருந்து மாலை வரை பசித்திருப்பது, ஏழையின் பசியை உணர்வதற்கு தான். ஏழை எப்போதும் பசியிலேயே இருக்கிறான். ஆனால், இறைவனுக்காக நோன்பு வைப்பது, அவனுக்கு கூடுதல் ஆன்ம பலம். பணக்காரர்கள் பசித்திருப்பது தான் சிறப்பு. அவர்கள் இந்த நோன்பின் மேன்மையை உணர்ந்து விட்டால், பசி என்ற வார்த்தையே உலகில் இருக்காது.ஒருவர் நோன்பு வைக்கிறார். அந்த நிலையில் வெளியே செல்கிறார். அவருக்கு கடுமையான பசியும், தாகமும் ஏற்படுகிறது; தாங்க முடியாத களைப்பும் உருவாகிறது.

அவர் நினைத்தால் எதுவும் சாப்பிடலாம் அல்லது கொஞ்சம் தண்ணீராவது குடிக்கலாம். ஆனால், அப்படிச் செய்வதில்லை.ஏனென்றால், இறைவன் தன்னை பார்த்து கொண்டிருக்கிறான் என்ற இறையச்சம் (தக்வா). முஸ்லிம்களுக்கு எல்லா காலகட்டத்திலும் இந்த அச்சம் வந்து விட்டால், அவர்கள் வெற்றி பெற்ற சமுதாயமாக நிச்சயம் மாறி விடுவர்.ரம்ஜான் மாதம் என்றால், வெறும் நோன்பு வைப்பது மற்றும் "ஜகாத் கொடுப்பது என, பலரும் நினைக்கின்றனர். அது மட்டுமல்ல; அதை மீறிய பல வணக்க வழிபாடுகள், மிக முக்கியமானவையாக உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது, "இஹ்திகாப் எனும் செயல். "இஹ்திகாப் என்றால், மசூதியில் தங்குவது: இது ஒரு, நபி வழிசுன்னத்."இறைவனுக்காக, "இஹ்திகாப் இருக்கிறேன், நபி (ஸல்) முறைப்படி என்று எண்ணி, மசூதியில் தங்க வேண்டும். வீண் பேச்சு பேசக் கூடாது. அவசிய தேவை தவிர, மற்றவைக்காக மசூதியை விட்டு வெளியே வரக்கூடாது.

தொழுகை, குர் - ஆன் ஓதுதல், இறைவனின் தியானம் என பொழுது கழிய வேண்டும். ஒரு நாள், இருநாள் கூட, சிலர், "இஹ்திகாப் இருப்பர். அதுவும் கூடலாம்; தவறு அல்ல. அவரவர் வசதிக்கேற்ப இருக்கலாம். ஆனால், நோன்பின் கடைசி, 10 நாள் முழுக்க இருக்கும் நோக்கம், உயரிய அந்த, "லைலத்துல் கதர் எனும் சிறப்பான இரவை அடைந்து விட வேண்டும் என்பதே. அந்த ஒரு இரவின் வழிபாடுகள், பிரார்த்தனைகள், நற்செயல்கள், ஆயிரம் இரவுகளுக்கான வழிபாட்டுக்களை விட மேலானது.முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு நபராவது, கட்டாயமாக அந்த பகுதியில் இருக்கும் மசூதியில், "இஹ்திகாப் இருக்க வேண்டும்.அதைப் போல இந்த மகத்துவம் பொருந்திய ரமலான் மாதத்தில் தான், "லைலத்துல் கதர் என்கிற, அருள்வளம் பொருந்திய இரவு வருகிறது. இந்த இரவின் சிறப்பை விளக்கவே, "குர் ஆனில் இறைவன் தனியொரு அத்தியாயத்தை இறக்கியருளினான்.ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது "லைலத்துல் கதர்! அந்த இரவில், வானவர்களின் தலைவர், ஜீப்ரயிலும் பூமிக்கு இறங்கி வருகிறார். தங்கள் அதிபதியின் கட்டளைப்படி, நன்மையான விஷயங்களுடன் இந்தப் பூமியின் மீது, வானவர்கள் இறங்குகின்றனர். இந்த இரவு முழுவதும் சாந்தி நிறைந்ததாக இருக்கிறது.

இந்த இரவு அத்துணை நன்மைகளுடன் அதிகாலை உதயமாகும் வரை... (திருக்குர் ஆன் 91: 1 - 5) என "லைலத்துல் கதர் இரவின் சிறப்பை, இறைவன் கூறுகிறான்.அந்த மகத்தான இரவு, ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில், ஒற்றைப் படை இரவுகளில் வருகிறதென, அண்ணல் நபி (ஸல்) சொல்லியுள்ளார். இந்த இரவில் தொழுது, பிரார்த்தனை செய்யும் இறையச்சமுடையவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்!


மனித நாள்


பொய்யே பேசா புனிதநாள்! - சருகைப்
பூவாய் மாற்றும் இனியநாள்!
நொய்யே சோறாய் ஆனபோதும் - சிறிதும்
நினைத்தும் பார்க்கா மனிதநாள்!
நடுநிசி தோறும் விழித்தெழுந்து - இறை
நாமம் போற்றும் அரியநாள்!
கடும்பசி எழுந்தும் உணவுகள் இருந்தும்
கண்டு கொள்ளா பெரியநாள்!
பணக்காரனிடம் "ஜக்காத் வாங்க
பாமர ஏழைக்(கு) கதிகாரம்-
வழங்கும் திருநாள் வாழ்வில் ஒருநாள்
வந்தது; தந்தது சுவீகாரம்!
திருநாள் இதுபோல் ஒருநா ளில்லை
தேவை இந்தப் பெருநாளே!
அரிதின் அரிதாய் வந்தே எம்மை
ஆனாய் ஆக்கும் திருநாளே!
நோன்பின் மாண்பு
கெட்ட காட்சிகளை
பார்க்காமலிருப்பது
கண்களின் நோன்பு...
மற்றவர்களை பற்றி
அவதூறு பேசாமலிருப்பது
நாவின் நோன்பு...
இறைவனுக்கு அஞ்சி
என்றும் வாழ்வது
மனதின் நோன்பு...
வறுமையை உணர்ந்து விட்டால்
வசதியை உதறிவிட்டால்
அதுவே நோன்பின் மாண்பு...!

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:05

ரம்ஜான் இப்தார் விருந்து Rice


ஆன்மிக வழிகாட்டுதல் மட்டுமே இஸ்லாத்தின் நோக்கம் கிடையாது. அதையும் தாண்டி பல விஷயங்களை இஸ்லாம் வலியுறுத்துகிறது. 'தண்ணீரை வீண் விரயம் செய்யக் கூடாது' என குர்ஆனில் வசனம் வருகிறது. இதற்கும் ஆன்மிக செயல்பாட்டுக¢கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இந்த வசனத்துக்கும் மனிதனின் பக்குவப்பட்ட செயல்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது.


 மறுமை நாளில் இறைவன் கேட்கும் பல கேள்விகளில ஒன்று, உன் கல்வி பிறருக்கு எப்படி பயன்பட்டது? இதில் மார்க்க கல்வியை மட்டுமே இறைவன் குறிப்பிடுகிறான் என நினைத்தால் அது தவறு. இந்த உலக தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நாம் கற்ற கல்வியையும் சேர்த¢தே அந்த கேள்வியை இறைவன் எழுப்புகிறான். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள்.

நீங்கள் கற்ற உலக கல்வியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பயன்படும் வகையில் மட்டுமே வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க நினைக்காதீர்கள். அந்த கல்வியை பிறருக்கும் கற்றுத் தாருங்கள். அந்த கல்வியால் மற்றவருக்கு நன்மை தரும்படியான செயலை செய்யுங்கள் என்கிறார்.


வட்டியை ஹராமாக (தடுக்கப்பட்டது) இறைவன் அறிவித்திருக்கிறான். இன்றைய வேகமான உலகில் ஒவ்வொருவரும் வெற்றி பெற ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வட்டியை பற்றியெல¢லாம் யோசித்தால் ஆகாதுÕ என கூறுபவர்கள் உண்டு. வட்டியை ஏன் இறைவன் தடுத்தான் என்பதை பார்க்க வேண்டும்.


ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி அவர்களை சுரண்டும் கொடூரம்தான் வட்டி என இஸ்லாம் சாடுகிறது. பிறருக்கு உதவி செய்கிறேன் என கூறிக்கொண்டே அந்த நபருக்கு தீங்கானதையும் செய்தால் அதனால் அவர் சந்தோஷப்பட முடியுமா? கடனுக்கு வட்டி என்பது அதுபோன்ற செயல்தான் என்கிறார் நபி. வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டையுமே இஸ்லாம் தடுக்கிறது. இன்றைய காலகட்டத்தில் வட்டி வட்டத்துக்குள் விழாமல்கூட ஒருவரால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும். ஜெயிக்க முடியும்.

அப்படி சந்தோஷமாக இருப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால்தான், Ôவட்டி இல்லாத வாழ்க்கை உங்களுக்கு நிம்மதி தரும் என இஸ்லாம் கூறுகிறது. இதிலும் ஆன்மிகத்தை தாண்டிய சமூகப் பார்வை இருப்பதை அறியலாம்.
தர்மம் செய்வது ஆன்மிக நாட்டத்தில் ஒரு பகுதிதான்.


தம்மால் தவறுகள் நிகழும்போதெல்லாம் இறைவனுக்கு பயந்து அதிகம் தர்மம் செய்கிறார்கள்.அதிகம் தர்மம் செய்யுங்கள். அதனால் உங்கள் தவறுகள் மன்னிக்கப்படும்ÕÕ என நபிகள் கூறுகிறார். ஆனால் அல்லாஹ் கடமையாக்கிய ஜகாத், சாதாரண தர்மம் போல் கிடையாது. அதை கட்டாயமாக கொடுத்தே ஆக வேண்டும் என¢பது இறைவனின் கட்டளை.


உங்களிடம் ஒரு வருடத்தில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்ட பணம், நகை (87 கிராமுக்கு மேல்), வெள்ளி இவைகள் மீது இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளதாக இறைவன் குறிப்பிடுகிறான். இன்று தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்ககிறோம். பத்து வருடத்துக்கு முன்பு குறிப்பிட்ட விலையில் நாம் 15 பவுன் தங்கம் வாங்கியிருப்போம். அதை இன்றைய விலையில் இரண்டரை சதவீதம் ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.


ஜகாத்தை பணமாக கஷ்டத்தில் உள்ள உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் தர வேண்டும். ஜகாத் கொடுப்பதற்கான நகைகள் உங்களிடம் இருந்தும் பணம் இல்லையென்றால் அந்த நகையை விற்றாவது ஜகாத் பணத்தை கொடுக்க வேண்டும் என¢பது அல்லாஹ்வின் உத்தரவாகும். அல்லாஹ் இவ்வளவு முக்கியத்துவம் தரும் ஜகாத்துக்கு பின்னால் இருப்பதுகூட, சமூகத்தில் நிலவும் ஏழ்மை நிலை குறைய வேண்டும் என்ற நோக்கம்தான்.


இதேபோல் உடல் நலன் பேணும் விஷயத்திலும் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது இஸ்லாம். ஹலால் செய்யப்பட்ட ஆடு, மாடு, கோழி இறைச்சிகளையே சாப்பிட வேண்டும் என முஸ்லிம்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஹலால் என்பது ஆட்டை அறுப்பதற்கு முன்பு துவா (பிரார்த்தனை) செய்துவிட்டு, ஆட்டின் கழுத்தை முழுமையாக அல்லாமல் பாதியாக அறுத்துவிடுவார்கள். இதனால் அதன் ரத்தம் முழுவதும் வெளியேறிவிடும். அதன்பிறகே அந்த ஆட்டு இறைச்சியை உணவுக்காக பயன்படுத்துவார்கள்.

இதுதான் ஹலால். ஆட்டு ரத்தத்துடன் அதில் இருக்கும் கிருமிகளும் வெளியேறுவதால் நோய் எதுவும் உண்டாகாது என்பதால்தான் ஹலால் உணவு கடமையாக்கப்பட்டுள்ளது.
கை, கால் விரல் நகங்கள் வளர்ந்திருந்தால் தொழுகைகூட முழுமை பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு காரணம், சுகாதார பேணுதல்தான். மீசை முடி உதட்டில் படாதபடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. காரணம், ஏதேனும் பானம் குடிக்கும்போது மீசை அதில் பட்டால் நோய்கள் உண்டாகும் என்பதுதான். ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் கடமையாக்கப்பட்டதும் உடல் நலனுக்காகத்தான்.


இப்படி மனிதனை பக்குவப்படுத்துதல், சுகாதாரம் பேணுதல் என இரண்டு விஷயத்திலும் தனித்தனியே பல்வேறு கட்டளைகளை விதித்துள்ளது இஸ்லாம்.


இந்த இரண்டையும் ஒன்றாக சேர்க்கும் பாலமாக ரம்ஜான் மாத நோன்பை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
நோன்பு இருக்கும்போது உணவை மட்டுமல்ல, பொய் மற்றும் புறம் பேசுதல், மோசடி செய்வது, கெட்டதை பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விலக்கி வைக்கிறோம். இதனால் ரம்ஜான் இல்லாத பிற மாதங¢களுக்கு இது பயிற்சி களமாக மாறி மனிதனை பக்குவப்படுத்துகிறது.

 ஏழையின் பசியை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு நமக்கு கடமையாக்கப்படவில்லை. அப்படி இருந்தால் ஏழைகளுக்கு நோன்பில் இருந்து வ¤லக்கு அளிக்கப்பட்டிருக்கும். மனிதன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதில் இறைவனுக்கு விருப்பமா என்றால் அதுவும் கிடையாது.


நபி தோழரான அப்துல்லாஹ் இப்னு அமர், நாள் கணக்கின்றி நோன்பு வைத்து வந்தார். இதை அறிந்த நபிகள் நாயகம், ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பது கடமை. மற்றபடி நாள், மாதக் கணக்கில் நோன்பு வைக்க வேண்டாம். உங்கள் உடல் நலத்தையும் குடும்பத்தையும் கவனிப்பது அவசியம் என்றார். அதனால் நோன்பின் நோக்கம் மனிதன் பக்குவப்பட வேண்டும் என்பதுதான்.


அதே நேரம், நோன்பு வைப்பதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் நமது ஆரோக்கிய வாழ்வுக்கு நலம் தருபவை என்பது மருத்துவ ரீதியாக நரூபிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன விஷயங்களின் இணைப்பு பாலமான ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பதால் அல்லாஹ்வின் நல்லடியாராக நாம் திகழ¢ந்து, அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:13

ரம்ஜான் இப்தார் விருந்து Maamoul-Recipe
ரம்ஜான் இப்தார் விருந்து Maamoul
ரம்ஜான் இப்தார் விருந்து Qatayef-Asafiri

நோன்பு பெருநாள் என்றால் என்ன?

ஓர் உண்மையைச் சொன்னால் உங்கள் விழிப் புருவங்கள் வில்லாய் வளையும்...!இஸ்லாமியர்களுக்கான இனிய பண்டிகைகள்-இனிய திருவிழாக் கள் மொத்தம் எத்தனை தெரியுமா?இரண்டே இரண்டுதான்.வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை! ஒன்று, ரம்ஜான் பண்டிகை என்று சொல்லப்படும் ஈகைத் திருநாள். இன்னொன்று, ஹஜ்ஜுப் பெருநாள் என்று சொல்லப்படும் தியாகத் திருநாள்.இந்த இரண்டைத் தவிர, வேறு எந்த ஒரு பண்டிகையோ, திருவிழாவோ இஸ்லாமியர்களுக்கு இல்லை.
அப்படியானால் முஹர்ரம், பஞ்சா, உரூஸ். சந்தனக்கூடு என்பதெல்லாம்...?


அவையெல்லாம் பண்டிகையும் அல்ல; திருவிழாவும் அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்கள் அவை.அவ்வளவு ஏன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாது நபி கூட, இஸ்லாமியப் பண்டிகை அல்ல.உலக முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா...!அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?அதைச் சொன்னால் நீங்கள் இன்னும் வியப்படைவீர்கள்.பிறர் கண்ணீர் துடைப்பதையும், பிறர்க்கு உதவுவதையும் மதக் கடமையாகவே - இறை வழிபாடாகவே ஆக்கியுள்ள மார்க்கம் தான் இஸ்லாம்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ""இறைத் தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன?'' என்று வினவினார்.


இந்த வினாவிற்கு இறைத் தூதர் என்ன விடை சொல்லி இருப் பார் என்று நினைக்கிறீர்கள்?



இறைவன் மீது நம்பிக்கை கொள்ளல் எனத் தொடங்கி இஸ்லாத்தின் அடிப்படைகளை எல்லாம் விலாவாரியாக விளக்கியிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்?அதுதான் இல்லை.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரே வார்த்தையில் விடை அளித்தார்கள்."பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்!'"அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை நம்பிக்கையாளர் அல்லர்' என்று அண்ணலார் ஓங்கி முழங்கினார்கள்.


நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டதன் நோக்கம், மக்களின் உளப் பிணியைத் தீர்ப்பது மட்டுமல்ல, பசிப் பிணியைத் தீர்ப்பதும் தான்.அவருடைய அனைத்து அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும், இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்பதை வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.இதே வழிகாட்டுதல் தான் ரமலான் மாதத்திலும் பளிச்சிடுகிறது."ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்தேனும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்'"ஒரு மிடறு பாலைக் கொண்டாவது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுங்கள்'"இறை வழியில் தான தர்மங்களை வாரி வழங்குங்கள்'"வசதியுள்ளவர்கள் தங்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்குக் கொடுத்தே ஆக வேண்டும்'-
இவை போன்ற எண்ணற்ற கட்டளைகள், நபிமொழி நூல்களில் நிரம்பி வழிகின்றன.பெருமானார்(ஸல்) அவர்களின் அதே கட்டளை தான், ஈகைத் திருநாளிலும் செயல் வடிவம் பெறுகிறது.எப்படி?பெருநாளன்று, யாரும் பசி- பட்டினியோடு இருக்கக் கூடாது என்று, இஸ்லாம் விதித்துள்ளது.அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளார்கள்.எல்லாம் சரி, ஆனால் கஞ்சிக்கே வழியில்லாத, கதியற்ற மக்களுக்கு ஏது பெருநாளும், திருநாளும்? அரிசிச் சோற்றுக்கு அவர்கள் எங்கே போவர்?இங்கு தான் இஸ்லாமியச் சட்டம் மிக அருமையாகச் செயல்படுகிறது.பணக்காரர்கள் மட்டுமல்ல, ஓரளவு வசதியுள்ள நடுத்தர மக்கள் கூட, பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக "ஃபித்ரா' எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் தர வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.


நாம் சாப்பிடுவதற்கு என்ன அரிசியைப் பயன்படுத்துகிறோமோ, அதே தரத்தில், ஏறத்தாழ இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் கிரயத்தை, ஏழைகளுக்கு, பெருநாள் தர்மமாக வழங்கிட வேண்டும்.உங்கள் குடும்பத்தில் ஆறு பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆறு பேருக்கும் தலா இரண்டரை கிலோ அரிசி எனக் கணக்கிட்டு 15 கிலோ அரிசியை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்."ஃபித்ரா எனும் இந்தப் பெருநாள் தர்மத்தை யார் வழங்கவில்லையோ, அவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


பூமிக்கும், வானத்துக்கும் இடையே அது தொங்கிக் கொண்டிருக்கும்' என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம், பெருநாளன்று எந்த ஓர் ஏழையும் பசியோடு இருக்கக் கூடாது; உணவின்றி வாடக் கூடாது; பிஞ்சுக் குழந்தைகள், பட்டினியால் தவிக்கக் கூடாது என்பதேயாகும்.

அதனால்தான் இந்தப் பண்டிகைக்கு ஈதுல் ஃபித்ரு- ஈகைத் திருநாள் என்று பெயர் வந்தது.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:15

ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு



அமீருல் முஃமினீன் அவர்களே.., உங்களிடமிருந்து தொடர்ந்து எங்களுக்குக் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் அந்த உத்தரவுக் கடிதங்களில் தேதிகள் குறிப்பிடப்படவில்லை, சிலவேளைகளில் கடிதத்தில் உள்ள வாசகங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன, எனவே அவற்றில் எது முந்தையது, எது பிந்தையது என்ற குழப்பம் நீடிக்கின்றது, உங்களது உத்தரவுகளை சரிவரப் புரிந்து கொள்ள இயலவில்லை என்று பஸராவின் கவர்னராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் ஒரு கடிதத்தை உமர் (ரலி)அவர்களுக்கு எழுதினார்கள்.

பஸராவின் கவர்னரது சந்தேகம் உமர் (ரலி) அவர்களைச் சிந்திக்க வைத்தது. அதேநேரத்தில் யமன் தேசத்திலிருந்து ஷஃபான் மாதம் குறிப்பிடப்பட்டதொரு பணம் வந்திருந்தது. சரி.., அப்படி என்றால் இனி கடிதங்களில் மாதத்தைக் குறிப்பிடலாம் என்றால்.., அது இந்த வருடத்தில் உள்ளதா.., அல்லது அடுத்த வருடத்தியதா என்ற சந்தேகத்தையும் உருவாக்கி விடுமே என்று சிந்தித்தார்கள். உடனே, தோழர்களின் உதவியை நாடி இது குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள்.

சிலர் ரோமர்களின் முறையையும், இன்னும் சிலர் பாரசீக முறைப்படியும் காலண்டர் உருவாக்கிக் கொள்ளலாம் என்றார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களோ., நாம் முஸ்லிம்கள்..,
முஸ்லிம்களுக்கென்று ஒரு நாட்காட்டி வேண்டும் என்றார்கள். சரி.., நம்முடைய தசாப்தம் எப்பொழுதிலிருந்து துவங்குகின்றது? என்று கூறுங்கள் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.



இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்திலிருந்து என்று ஒருசிலர் கூறினார்கள். இன்னும் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரண நாளிலிருந்து என்றார்கள். அப்பொழுது அலி (ரலி) அவர்கள் கூறினார்கள், முஸ்லிம்களினுடைய மறுமலர்ச்சி என்பது மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்ட நாளிலிருந்து ஆரம்பமாகின்றது என்றார்கள், அலி (ரலி) அவர்களினுடைய இந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரபிய்யுல் அவ்வல் மாதம் தனது ஹிஜ்ரத்தை ஆரம்பித்தார்கள். அவ்வாறென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்ட பொழுது அந்த ஆண்டின் இரண்டு மாதங்களும் எட்டு நாட்களும் கடந்து விட்டிருந்தன. சரி.., ஹிஜ்ரியைக் கணக்கு வைத்து ஆண்டு என்றால், மாதங்களில் எந்த மாதத்தினை முதல் மாதமாகக் குறிப்பது என்ற குழப்பம் ஆரம்பமானது.


சிலர் ரஜப் மாத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்றார்கள், சிலர் ரமளான் மாதம் புனிதமிக்கது, எனவே அதிலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்றார்கள், சிலர் ஹஜ் புனிதமிக்கது அதிலிருந்து தான் துவங்க வேண்டும் என்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.., அரேபியாவில் புத்தாண்டு என்பது முஹர்ரம் மாதத்திலிருந்து தான் துவங்குகின்றது என்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்களது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.


அன்றிலிருந்து புத்தாண்டின் முதல் மாதமாக முஹர்ரம் அறிவிக்கப்பட்டது. ஹிஜ்ரி காலண்டர் முறையும் உருவானது. பின்னர் இந்த முடிவு அனைத்துப் பிரதேசங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:16

இஸ்லாமியர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடும் ஒரு பண்டியை தான் ரம்ஜான் பண்டிகை. மேலும் அவர்கள் உலக மக்களின் நன்மைக்காக புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அதனைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாளைக் கொண்டாடுவர்.

இந்த நாளன்று ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள், தங்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும் களிப்பையும் பெறுவார்கள். மேலும் இந்நாளன்று நன்கு சுவையான பலவற்றை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி அவர்கள் ஈகைத் திருநாளன்று சமைத்து சாப்பிட ஈஸியான, அதே சமயம் மிகவும் சுவையான சில ரெசிபிக்களை இந்த பட்டியலில் மட்டன், சிக்கன், மீன் என அனைத்து வகைகளும் இடம் பெற்றுள்ளன. சரி, இப்போது அந்த ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷல் ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!

ரம்ஜான் இப்தார் விருந்து 28-1406532401-1-muttonbiryani

மட்டன் பிரியாணி ரம்ஜான் அன்று எளிமையான முறையிலும், வித்தியாசமான சுவையிலும் ஒரு பிரியாணி செய்ய வேண்டுமெனில், அதற்கு இந்த மட்டன் பிரியாணி சரியானதாக இருக்கும். ஏனெனில் இதன் செய்முறை மிகவும் எளிமையானது.

ரம்ஜான் இப்தார் விருந்து 28-1406532416-3-shikampuri-kebab
ரம்ஜான் இப்தார் விருந்து 28-1406532424-4-mutton-korma
ரம்ஜான் இப்தார் விருந்து 28-1406532435-6-natukodipulusu
ரம்ஜான் இப்தார் விருந்து 28-1406532442-7-chapli-kebab
ரம்ஜான் இப்தார் விருந்து 28-1406532448-8-salemmuttoncurry
ரம்ஜான் இப்தார் விருந்து 28-1406532455-9-hyderabadi-chicken-dum-biryani
ரம்ஜான் இப்தார் விருந்து 28-1406532461-10-kheema-pakora
ரம்ஜான் இப்தார் விருந்து 28-1406532469-11-coorgstylechickencurry

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:17

ரம்ஜான் இப்தார் விருந்து Chickenbiryani2
ரம்ஜான் இப்தார் விருந்து Chikcen%2Bon%2Btoast
ரம்ஜான் இப்தார் விருந்து Date%2Bchutney
ரம்ஜான் இப்தார் விருந்து R28_20097041
ரம்ஜான் இப்தார் விருந்து 11recipe-chicken-tikka

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:17

ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_sweets_phirni
ரம்ஜான் இப்தார் விருந்து Kabsa-mandi
ரம்ஜான் இப்தார் விருந்து Fruits-fruit-20461021-1280-1024
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan-iftar-food-item-2013
ரம்ஜான் இப்தார் விருந்து 2826342191_c2773d9151_z

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:18

ரம்ஜான் இப்தார் விருந்து Seekh_kebab
ரம்ஜான் இப்தார் விருந்து Chicken_lolipop
ரம்ஜான் இப்தார் விருந்து Kheema_samosa
ரம்ஜான் இப்தார் விருந்து Pakoras
ரம்ஜான் இப்தார் விருந்து Chicken_seekh_recipe1

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:18

ரம்ஜான் இப்தார் விருந்து Aloo_chaat1
ரம்ஜான் இப்தார் விருந்து Bombay_potatoes_recipe

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:19

ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_625x350_61435042233
ரம்ஜான் இப்தார் விருந்து Ramazan-collage_600
ரம்ஜான் இப்தார் விருந்து Ramazan-collage_600
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan3_600
ரம்ஜான் இப்தார் விருந்து Biryani_600
ரம்ஜான் இப்தார் விருந்து Ramadan_600

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:20

ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan-the-month-of-abstinence-is-also-the-time-for-some-hearty-eating
ரம்ஜான் இப்தார் விருந்து Promo1
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg2
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg2
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg3
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg3
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg4
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg4
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg5
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg5
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg6
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg6

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:22

ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg7
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg8
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg9
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg10
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg12
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg23

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:24

ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg14
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg020
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg22
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg1
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg21
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan_pg15

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:24

ரம்ஜான் இப்தார் விருந்து 625-ramzan-general_625x350_81435905335
ரம்ஜான் இப்தார் விருந்து Deadly-kebabs-625-mumbai_625x350_51435908160
ரம்ஜான் இப்தார் விருந்து Tikka-ramzan-625-mumbai_625x350_71435907718
ரம்ஜான் இப்தார் விருந்து 625-kebab-shop-ramzan_625x350_81435908695
ரம்ஜான் இப்தார் விருந்து Mumbai-phirni-ramzan-625_625x350_71435906382
ரம்ஜான் இப்தார் விருந்து 625-rmzan-mumbai_625x350_81435905486
ரம்ஜான் இப்தார் விருந்து Chicken-masala_625x350_51436163569

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:25

ரம்ஜான் இப்தார் விருந்து 576547-CafePHOTOSAYESHAMIREXPRESS-1373738752-786-640x480
ரம்ஜான் இப்தார் விருந்து Ramzan-640x400
ரம்ஜான் இப்தார் விருந்து 113-1024x683
ரம்ஜான் இப்தார் விருந்து 27
ரம்ஜான் இப்தார் விருந்து 31
ரம்ஜான் இப்தார் விருந்து Curry-eggs2
ரம்ஜான் இப்தார் விருந்து Aloo-keema2
ரம்ஜான் இப்தார் விருந்து Rustic-Tomato-Basil-Soup-and-Grilled-Cheese-Sandwiches-17
ரம்ஜான் இப்தார் விருந்து 14216637878_d2f7e85b4c_o
ரம்ஜான் இப்தார் விருந்து Apple-and-Almond-Samoosas--1024x680
ரம்ஜான் இப்தார் விருந்து SEVIYAN21
ரம்ஜான் இப்தார் விருந்து 6561924801_ba6a56087d_o
ரம்ஜான் இப்தார் விருந்து Chana-pindi-recipe
ரம்ஜான் இப்தார் விருந்து Ramazan-400x260

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:27

ரம்ஜான் இப்தார் விருந்து Vegies
ரம்ஜான் இப்தார் விருந்து Dates
ரம்ஜான் இப்தார் விருந்து Laban
ரம்ஜான் இப்தார் விருந்து Roast-chicken-recipe
ரம்ஜான் இப்தார் விருந்து Roast-mutton-leg
ரம்ஜான் இப்தார் விருந்து Spicy-baked-chicken-recipes-indian
ரம்ஜான் இப்தார் விருந்து Club-sandwich-recipe-pakistani
ரம்ஜான் இப்தார் விருந்து Best-cheese-cake-ever

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:29

ரம்ஜான் இப்தார் விருந்து 25-child-prepares-iftar
ரம்ஜான் இப்தார் விருந்து P01ch053_0
ரம்ஜான் இப்தார் விருந்து Iftar_prepare_tn
ரம்ஜான் இப்தார் விருந்து Iftar

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:31

ரம்ஜான் இப்தார் விருந்து Dsc05967

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:33

ரம்ஜான் இப்தார் விருந்து Dsc06104ரம்ஜான் இப்தார் விருந்து Iftar-madinahரம்ஜான் இப்தார் விருந்து JS
ரம்ஜான் இப்தார் விருந்து 20
ரம்ஜான் இப்தார் விருந்து Slide_356171_3917759_free
ரம்ஜான் இப்தார் விருந்து Kabsa-mandi

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:33

Best Arabic Iftar Party
ரம்ஜான் இப்தார் விருந்து ATT00000
ரம்ஜான் இப்தார் விருந்து ATT00001
ரம்ஜான் இப்தார் விருந்து ATT00002
ரம்ஜான் இப்தார் விருந்து ATT00003
ரம்ஜான் இப்தார் விருந்து ATT00001

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by anuradha Fri 7 Aug 2015 - 10:38

ரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN1_2461170gரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN2_2461171gரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN3_2461172gரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN4_2461173gரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN5_2461174gரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN6_2461176gரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN7_2461177gரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN8_2461178gரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN9_2461179gரம்ஜான் இப்தார் விருந்து RAMZAN9_1_2461180g

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by Nisha Tue 11 Aug 2015 - 15:30

சாப்பாட்டை பார்த்தபின் பசிக்கல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 15:45

எப்பா இவ்வளவு உணவா  நக்கல் நாயகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 15:46

கொஞ்சம் லேட்டு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by பானுஷபானா Thu 13 Aug 2015 - 15:19

அடேங்கப்பா......
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரம்ஜான் இப்தார் விருந்து Empty Re: ரம்ஜான் இப்தார் விருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum