சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Khan11

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

2 posters

Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 18:29

கதை.1

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 18:33

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: லண்டனுல இருந்து சென்னைக்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் லவ்வர் பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்தர வேண்டும் என கேட்க கூடாது...

கடவுள்: சென்னைக்கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 18:36

காசேதான் கடவுளடா.
********** ***********
ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்

.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக,எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன், என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,

கஞ்சன் சொன்னான்,என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.

# நீதி
என்னதான் இருந்தாலும்... காசேதான் கடவுளடா...
(அப்பாடா.. இருநூறு ரூபாய் மிச்சம்)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:06

ஒரு பயணி,டாக்சியில் சென்று கொண்டிருக்கும்போது,

அதன் ஓட்டுனரிடம் ஏதோ கேட்பதற்காக,அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டான்.

உடனே ஓட்டுனர் நிலை குலைந்து,

இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்து,

அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்து,

ஒரு மரத்தின் மீது மோதுமுன் காரை நிறுத்தினான்.

சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.

ஓட்டுனர் பயணியிடம் சொன்னார்,''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?'

'பயணி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே,

''உன் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை

.''ஓட்டுனர் சொன்னார்,

''இல்லை,இது என்னுடைய தவறுதான்.

இன்று தான் முதல்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன்.

கடந்த பத்தாண்டுகளாக நான் வேனில் பிணங்களைத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன்.''
நமது அனுபவங்கள் கடந்த காலத்தால் பாதிக்கப் படுகின்றன. 

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:23

ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்.. என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டடுவிடும்.”

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.பாதிரியார் பெருமையுடன், என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார் என்றார். அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, “அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?” என பாடின. 

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு” என்றது உற்சாகத்துடன்..!!!! 

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:24

ஒருத்தன் வேகமா ரோட்ல பைக்ல போகும்போது ஒரு கிளி மேல மோதிட்டான், கிளி அடிபட்டு மயக்கமாகி விழுந்துட்டுது! அந்த பையன் கிளிமேல பாவப்பட்டு அதுக்கு வைத்தியம் பாத்து, ஒரு கூன்டுல சாப்பாடு போட்டு பத்திரமா வச்சிருந்தான்! முழிச்சு பாத்த கிளி நினைச்சுதாம் "அய்யய்யோ நாம மோதினதுல பையன் spot out போல! நம்மள பிடிச்சு ஜெயில் ல போட்டுடாங்க" அப்புடின்னு!

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by Nisha Sun 23 Aug 2015 - 19:31

சுறா wrote:ஒருத்தன் வேகமா ரோட்ல பைக்ல போகும்போது ஒரு கிளி மேல மோதிட்டான், கிளி அடிபட்டு மயக்கமாகி விழுந்துட்டுது! அந்த பையன் கிளிமேல பாவப்பட்டு அதுக்கு வைத்தியம் பாத்து, ஒரு கூன்டுல சாப்பாடு போட்டு பத்திரமா வச்சிருந்தான்! முழிச்சு பாத்த கிளி நினைச்சுதாம் "அய்யய்யோ நாம மோதினதுல பையன் spot out போல! நம்மள பிடிச்சு ஜெயில் ல போட்டுடாங்க" அப்புடின்னு!

ஹாஹா. அப்படியா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:34

Nisha wrote:
சுறா wrote:ஒருத்தன் வேகமா ரோட்ல பைக்ல போகும்போது ஒரு கிளி மேல மோதிட்டான், கிளி அடிபட்டு மயக்கமாகி விழுந்துட்டுது! அந்த பையன் கிளிமேல பாவப்பட்டு அதுக்கு வைத்தியம் பாத்து, ஒரு கூன்டுல சாப்பாடு போட்டு பத்திரமா வச்சிருந்தான்! முழிச்சு பாத்த கிளி நினைச்சுதாம் "அய்யய்யோ நாம மோதினதுல பையன் spot out போல! நம்மள பிடிச்சு ஜெயில் ல போட்டுடாங்க" அப்புடின்னு!

ஹாஹா. அப்படியா?

கிளி ஓவரா தான் பில்டப் கொடுக்குது... அனைத்து கதைகளையும் வாசியுங்க. மனம் லேசாக இருக்கும் நல்ல சிரிப்பு வரும். ஹாஹாஹாஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:36

[th][/th]
நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?”

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
... 
பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.

சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.

சொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க 
எண்ணி அவ்வாறு செய்தேன்” 

இளைஞன் உரக்கச் சொன்னான்”என்ன?ஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா?மிக அதிகம்”

இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர். 

அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான்”நான் ஒரு வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...! 

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by Nisha Sun 23 Aug 2015 - 19:36

ம்ம்! படிக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:46

Nisha wrote:ம்ம்! படிக்கணும்.

சலூட் சலூட்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by Nisha Sun 23 Aug 2015 - 19:48

சுறா wrote:ஒரு பயணி,டாக்சியில் சென்று கொண்டிருக்கும்போது,

அதன் ஓட்டுனரிடம் ஏதோ கேட்பதற்காக,அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டான்.

உடனே ஓட்டுனர் நிலை குலைந்து,

இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்து,

அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்து,

ஒரு மரத்தின் மீது மோதுமுன் காரை நிறுத்தினான்.

சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.

ஓட்டுனர் பயணியிடம் சொன்னார்,''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?'

'பயணி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே,

''உன் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை

.''ஓட்டுனர் சொன்னார்,

''இல்லை,இது என்னுடைய தவறுதான்.

இன்று தான் முதல்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன்.

கடந்த பத்தாண்டுகளாக நான் வேனில் பிணங்களைத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன்.''
நமது அனுபவங்கள் கடந்த காலத்தால் பாதிக்கப் படுகின்றன. 

ஹாஹா! பிணம் எழும்பி தட்டி இருக்குமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:53

ஆமாம் அது செம்ம காமெடி... நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by Nisha Sun 23 Aug 2015 - 19:54

விழுந்து விழுந்து சிரித்ததில்  பல்லுக்கில்லு  உடையலையோ? இனி விழாமல்  சிரிக்கணும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:55

Nisha wrote:விழுந்து விழுந்து சிரித்ததில்  பல்லுக்கில்லு  உடையலையோ? இனி விழாமல்  சிரிக்கணும்!

இன்னும் நிறைய இருக்கு.... தினம் ஒரு பக்கம் போடலாம்னு சேமிச்சி வச்சிருக்கேன்.  பாடகன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by Nisha Sun 23 Aug 2015 - 19:57

ஓஒ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:58

Nisha wrote:ஓஒ!

இனி தினம் சிறிது ஓய்வு கிடைக்கும். அவசியம் பதிவுகள் இருக்கும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by Nisha Sun 23 Aug 2015 - 19:59

நம்பிக்கை தானே வாழ்க்கை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 20:04

Nisha wrote:நம்பிக்கை தானே வாழ்க்கை.

ஒருவன் என்னிடம் கோடிகணக்கில் பணம் உள்ளது தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள் என அறிவித்தான். மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர்.. 

அப்போது அங்கே வருகை தந்த அந்த கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான். எண்ணிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது ஆகவே யாரும் அடித்துக்கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள் என்றானாம். உடனே அணைவரும் வரிசையாக நின்றனர் வரிசை செங்கல்பட்டுவரை நீண்டது. 

அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளான் அந்த கோடிஸ்வரன் அதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்........................ ஆயிரமாவதாக நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்சருபாயும் என கண்டிசன் போட்டுவிட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான். 

முதலில் நின்றவர் இங்கு என்ன நடக்கிறது என்று ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் டீ குடிக்க போறேன்டு சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்துவிட்டார்.. இப்படியே ..................

முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே கடைசியாக இணைந்துகொள்வோம் என்று பேசிக்கொண்டார்கள்.

இப்படியே யாருமே உதவிகள் பெற வரவே இல்லை....

இப்படி தான் நான் சேனை வருவதும்... ஹாஹா

நகைச்சுவைக்காக

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by Nisha Sun 23 Aug 2015 - 20:07

அடடா! இது நல்லா இருக்கே! 
இப்ப என்ன சொல்ல வரிங்கன்னு தெளிவா சொல்லணும்.  முதல்ல  யார் வந்தாலும் முன்னாடி ஒருத்தர் வந்தால் பின்னாடி பலர் வருவாங்க என்பதும் தெரியாதோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 20:14

Nisha wrote:அடடா! இது நல்லா இருக்கே! 
இப்ப என்ன சொல்ல வரிங்கன்னு தெளிவா சொல்லணும்.  முதல்ல  யார் வந்தாலும் முன்னாடி ஒருத்தர் வந்தால் பின்னாடி பலர் வருவாங்க என்பதும் தெரியாதோ?

அந்த முன்னாடி நிற்பவர் நீங்க தான் ஹாஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by Nisha Sun 23 Aug 2015 - 20:25

அது சரி!

இன்னிக்கு கையில் வெட்டுபட்டதால் வந்தேன். இல்லன்னால் இப்ப சர்ச்சில் இருப்பேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Sun 23 Aug 2015 - 20:27

Nisha wrote:அது சரி!

இன்னிக்கு கையில் வெட்டுபட்டதால் வந்தேன். இல்லன்னால் இப்ப சர்ச்சில் இருப்பேன்.

ஓ அப்படியா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Mon 24 Aug 2015 - 17:39

பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் ­.
ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொரு ­த்தி ஜன்னலை திறக்க சொல்லி!
ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,
காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.
முதலில் ஜன்னலை மூடுங்கள்..ஒருத்தி செத்து விடுவாள்.
அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் ­ செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!.
சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம்.எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..
பெரியவர் கூறினார்:
அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்!

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by சுறா Mon 24 Aug 2015 - 17:41

அண்ணே, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு..வாங்கண்ணே காபி சாப்பிட்டு போகலாம்…!

வேணாம்…நான் அவசரமா வீட்டிற்குப் போகணும்…!

“என்னங்க அண்ணே! ரொம்ப நாளைக்கு அப்புறமா ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கோம். வீட்டிற்கு போக துடிக்கிறீங்க. வீட்டில ஏதாச்சும் விஷேசங்களா?”

விஷேசம் ஒன்னுமில்லை.என் பொண்டாட்டி சாப்பிடாம
எனக்காக காத்திட்டிருப்பா”

இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்டாட்டியா! அதுவும்
கணவன் வரும் வரைக்கும் காத்திருந்து சாப்பிடுற
பொண்டாட்டியா!” ஆச்சரியமா இருக்கே!

“அடப் போங்க தம்பி!அவங்களாச்சும் எனக்காக சாப்பிடாம காத்திட்டிருப்பதாவது. நான் போய் தான் அவங்களுக்கே சமைச்சு
போடனும்..!”

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது Empty Re: சிரிப்புக்காக சில கதைகள் - சுட்டது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum