சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Khan11

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters

Page 1 of 27 1, 2, 3 ... 14 ... 27  Next

Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:48

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:52

சபாஷ் சரியான போட்டி
---------------------------------
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த தத்துவஞானி புரோட்டாகோரஸ் (Protogoras). அவர் “”எல்லாம் பொய்! உண்மை என்று எதுவுமே இல்லை!” என்று கூறினார்.

அவர் கருத்தை மறுத்த அரிஸ்டாட்டில்,

“”உங்கள் கொள்கை உண்மையா? பொய்யா? பொய் என்றால், உலகில் உண்மை இருக்கிறது என்று பொருள். உங்கள் கொள்கை உண்மை என்றால், உலகத்தில் உங்கள் கொள்கையாவது உண்மையாக இருக்கிறது என்பது புலனாகும்.

அப்போது, ” உலகில் உண்மையே இல்லை என்னும் உங்கள் கொள்கை தோற்கிறது. எப்படிப் பார்த்தாலும் உங்கள் கொள்கைக்கு தோல்விதான்’ என்று கூறி வெற்றி பெற்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:54

லாரிகளில் வந்த நஷ்ட ஈடு
---------------------------

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான வாயில். 20.11.13 அன்று முப்பது லாரிகள் அதன் முன்பு அணி வகுத்து நிற்கின்றன. “”கேட் முன் நிறுத்தாதே…” பாதுகாவலர்கள் கத்திக் கொண்டே வருகிறார்கள்.

லாரி டிரைவர்களில் ஒருவர், “”இல்லை… இந்த லாரியில் உள்ளவை உங்கள் முகவரிக்குத்தான் வந்திருக்கின்றன” என்றார்.

அதே நேரம், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வருகிறது. பேசியவர் சாம்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி குவான் கியூன்:

“”உங்களுக்கு நாங்கள் தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் 30 லாரிகளில் அனுப்பியிருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்”.

திகைத்துப் போகிறார் டிம் குக்.

கொரிய நிறுவனமான சாம்சங் 100 கோடி டாலரை(ரூ.6200 கோடி) அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் காப்புரிமை வழக்கு ஒன்றில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராகத்  தீர்ப்பளித்தது. அதுதான் சாம்சங் நிறுவனம் தர வேண்டிய நஷ்ட ஈடு. அதற்கு எதற்கு முப்பது லாரிகள்?

பாதுகாவலர்கள் லாரிகளில் வந்தது என்ன? என்று பார்த்தார்கள்.

30 லாரிகளிலும் சில்லறைக் காசுகள்!

5 சென்ட் நாணயங்களாக மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். அபராதத் தொகையை அனுப்பி வைத்திருக்கிறார்கள்!

இவற்றை எப்படி எண்ணுவது? முப்பது லாரி சில்லறைகளையும் எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது? இவ்வளவு சில்லறைகளையும் எந்த வங்கியிலும் போட்டு வைக்க முடியாதே! ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் தலையைப் பிய்த்துக் கொண்டு நின்றார்கள்.

அபராதம் கட்டும் அளவுக்கு சாம்சங் நிறுவனம் செய்த தவறு என்ன?

ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் நிறுவன போன்களில் உள்ள தொழில்நுட்பத்தைக் காப்பி அடித்து சாம்சங் நிறுவன போன்கள் தயாராகின்றன என்பதே குற்றச்சாட்டு. இல்லையில்லை எங்களைத்தான் ஆப்பிள் நிறுவனம் காப்பி அடித்துவிட்டது என்பது சாம்சங் நிறுவனத்தின் பதில் குற்றச்சாட்டு.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறிவிட்டதாகத் தீர்ப்பளித்து, அபராதமும் விதித்தது நீதிமன்றம்.

“”எல்லா ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைஸில் போன் தயாரிக்கக் கூடாது என்று சொல்வது அநியாயம்” என்று சாம்சங் நிறுவனம் வாதிட்டாலும், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. அதனையொட்டிதான் அபராதம். என்றாலும், அபராத பணத்தைக் கட்டித்தானே ஆக வேண்டும்?

தான் தண்டனைக்குட்பட்டாலும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் தண்டனை அளிக்க சாம்சங் நிறுவனம் நினைத்தது.

விளைவு?

30 லாரிகளில் சில்லறைக் காசுகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:03

தலைக்கனமும் ரிடையர்ட் ஆகும்

(நாமக்கல் பஸ் நிலைய டீக்கடைக்காரரும் வாடிக்கையாளரும்)

டீக்கடைக்காரர்: ஏன் சார்… இப்ப உங்களைப் பார்த்துப் பேசிய ரிடையர்ட் தாசில்தார் உங்களுக்கு ரொம்ப பழக்கமோ?

வாடிக்கையாளர்: அவர் ரிட்டையர்ட் ஆகிவிட்டாரா? அதானே பார்த்தேன். விஷ் பண்ணினாக் கூட கண்டுக்காம போகிறவர்… இப்பெல்லாம் பேசுறாரேன்னு!

என்.சி.தர்மலிங்கம், நாமக்கல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:14

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Hus_wif
(வேலூர் கோட்டை பூங்காவில் இளம் தம்பதியினர்)
“”ஏங்க… நான் செத்துட்டா இரண்டாவதா கல்யாணம் செஞ்சுக்குவீங்களா?”
“”சத்தியமா பண்ணமாட்டேன்”
“”என் மேலே உங்களுக்கு அவ்வளவு பிரியமா?”
“”வாழ்க்கையில, மறுபடியும் நான் கஷ்டப்பட்டு ஏமாற தயாராயில்லைன்னு சொல்ல வந்தேன்”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:20

பஸ் ஓட்டச் சொல்வாங்களா?
--------------------------------

சிரி சிரிப்பு

“”மச்சான், வீட்டுக்குச் சாப்பிட வாடா… சிக்கன் பிரியாணி செஞ்சிருக்கா உன் தங்கச்சி”
“”புரட்டாசி விரதமாச்சே… சரி… நீ ஆசையாக் கூப்பிடுற… தங்கச்சியும் சொல்லி விட்டுருக்கும்… சாப்பிட வர்றேன்”
“”புரட்டாசி விரதத்துக்கு நீ நாக்கைக் கட்டுப்படுத்தமாட்டேன்னு உன் தங்கச்சிக்கிட்ட நூறு ரூபாய் பெட் கட்டினேன். ஜெயிச்சிட்டேன்டா…”
“”அடப் பாவி… அப்ப பிரியாணி கிடையாதா?”
செல்வ.மேகலா, காகிதப்பட்டறை.
•••
(சைக்கிள் கடைக்காரரும் அவருடைய நண்பரும்)
கடைக்காரர்: காத்தடிச்சதனாலே இன்னைக்கு நல்லா வியாபாரம் நடந்துச்சு
நண்பர்: காத்துக்கும் உன் கடைக்கும் என்ன சம்பந்தம்?
கடைக்காரர்: இன்னைக்கு ஸ்கூல்ல 100 இலவச சைக்கிள் கொடுத்தாங்க. ஒரு சைக்கிள்ல கூட காத்து இல்லை. எல்லா சைக்கிளுக்கும் காத்தடிச்சேன்…
நண்பர்: சைக்கிளுக்குக் காத்தடிச்சேன்னு சொல்ல வேண்டியதுதானய்யா? என்னையே ஒரு நிமிஷம் குழப்பிட்டேயே…

•••

எஸ்எம்எஸ்
ஒரு பெண்ணை
உன்னிடம் அதிகமாகப் பேச
அனுமதிக்காதே…
பின்னால்…
அவள் உன்னைப் பேச வைத்துவிடுவாள்…
தனியாக…

•••
உதிர்ந்த முத்து
ஹோட்டல்லே காசு கொடுக்கலேன்னா
மாவாட்டச் சொல்வாங்க…
பஸ்ஸிலே காசு கொடுக்கலேன்னா
பஸ் ஓட்டச் சொல்வாங்களா?

•••
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:22

கண்டது

(சென்னை மயிலாப்பூரில் ஓர் ஆட்டோவில்)

நண்பா

உன்னை யாரும் காதலிக்கவில்லையே

என்று கவலைப்படாதே

அது உன் வருங்கால மனைவியின்

வேண்டுதலாகக் கூட  இருக்கலாம்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:23

(சென்னை தியாகராய நகரில் கோவிந்தன் சாலையில் திறக்கப்பட்ட ஓர் உணவகத்தின் திறப்பு விழா அழைப்பிதழில் கண்டது)
குண்டூர் இட்லி அழைக்கிறது.
நாள்: 12.09.2013
தலைமை: குருவாயூர் பால்பாயசம், செட்டிநாடு உத்ரா ஸ்வீட்ஸ், அசல் நெய் பொங்கல், அசத்தலான மெதுவடை, அமர்க்களமான பூரி மசாலா இன்னும் பல புதிய சுவை
முன்னிலை: வேர்க்கடலை சட்னி, பொட்டுக் கடலை சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி
சிறப்பு விருந்தினர்: சின்ன வெங்காய சாம்பார்
மூச்சுகட்டி பாத்திகட்டுங்க திரும்பத் திரும்ப வருவீங்க…
விசாலாட்சி, சென்னை-33
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:24

(திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே ஒரு காரின் பின்புறத்தில்)

இடிச்சுடாதே…

ஆத்தா வையும்!

ஆர்.சி.முத்துக்கண்ணு, திருத்தியமலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:25

(வேதாரண்யத்தில் நினைவஞ்சலி சுவரொட்டியில்)

துணையாய் இருந்தாய்

துணிந்திருந்தோம்

உதிர்ந்து போனாய்

அதிர்ந்து போனோம்.

வ.வெற்றிச் செல்வி, வேதாரண்யம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:26

(நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கிராமத்தின் பெயர்)

கஞ்சா நகரம்

ஆலன் டேவிட் ராய், மயிலாடுதுறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:27

(திருநெல்வேலி சிப்ஸ் கடை ஒன்றின் பெயர்)

அங்கயற்கண்ணி நொறுவல் அங்காடி

க.சரவணகுமார், திருநெல்வேலி -11.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:27

கேட்டது
(சித்தோடு முடித்திருத்தும் நிலையத்தில்)
“”ஏம்பா ஒண்ணு வாங்கினா, ஒண்ணு ஃப்ரீ, அதுக்கு இது ஃப்ரீன்னு எல்லாரும் சலுகை தர்றாங்க… உங்க கடையில எதுவும் கிடையாதா?”
“”ம்… உண்டே… கட்டிங் பண்ணும்போது கொஞ்சம் காதை ஃப்ரீயா கட் பண்ணுவோம். ஷேவிங் பண்ணும்போது மூக்கைக் கொஞ்சம் ஃப்ரீயா சேவ் செய்வோம்… பரவாயில்லையா?”
இரா.கமலக்கண்ணன்,  சித்தோடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:29

(மதுரை மேலமாசி வீதியில் இரு நண்பர்கள்)

“”மூணு நாளா ஒரே பல் வலி. சாப்பிடக் கூட முடியலை”

“”டாக்டர்ட்ட போய் பல்லைப் புடுங்க வேண்டியதுதானே”

“”புடுங்கினா வலிக்குமே”

“”ஊசி போட்டுத்தான் புடுங்குவாங்க. வலிக்காது”

“”ஊசி போடும்போது வலிக்குமே”

“”பல் வலின்னு சொல்லாதே… வாய் வலிக்கப் போகுது”

கனகவிஜயன்,  மதுரை-20.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:30

(சென்னை காந்திசிலை பேருந்துநிறுத்தத்தில் இருவர் பேசக் கேட்டது)

“”கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்தில் ஒரு விஷயத்தில்தான் மாமா எனக்கும் அவளுக்கும் ஒத்துப் போகிறது”

“”என்ன விஷயம்?”

“”நான் செலவு பண்ணினால் அவளுக்குப் பிடிக்கலை. அவள் செலவு பண்ணினால் எனக்குப் பிடிக்கலை”

“”இதை வெளியே வேற பெருமையாச் சொல்லணுமா? நீங்க ரெண்டு பேரும் சரியான கஞ்சப் பிசினாறின்னு எங்களுக்குத் தெரியாதாக்கும்”

நெ.இராமன், சென்னை-74.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:31

எஸ்எம்எஸ்

எதுவும் புரியாதபோது,

வாழ்க்கை தொடங்குகிறது.

எல்லாம் புரியும்போது

வாழ்க்கை முடிகிறது.

ஆர்.மனோஜ்,

புதுமாயாகுளம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:33

மைக்ரோ கதை

இணையதளம் மூலம் பெண் பார்க்க விரும்பிய இளைஞன் ஒருவன், பலமுறை முயன்றும் ஒரு பெண்ணும் அவனுக்குச் சரியாக அமையவில்லை. இறுதியில் ஒரு திருமண புரோக்கரின் தொடர்பு இணையதளத்தின் மூலம் கிடைத்தது. அவரிடம் பேசினான்.

அதற்கு அவர் சொன்னார்:

“”20 வயதில் அழகிய பெண் இருக்கிறாள். வரதட்சணை 5 லட்ச ரூபாய்தான் கிடைக்கும் ”

“”இவ்வளவுதானா?”

“”25 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். 10 லட்ச ரூபாய் வரதட்சணை கிடைக்கும்”

இளைஞன் கேட்டான்:

“”50 வயதில் பெண் கிடைக்குமா? ஏனென்றால் எனக்குத் தேவை இப்போது 50 லட்சம் ரூபாய்”

செ.சத்தியசீலன், கிழவன்ஏரி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:57

“”முப்பத்தைந்து மார்க் வாங்கியுமா உன்னை ஃபெயிலாக்கிட்டாங்க…”

“”ஆமாம்… அஞ்சு பாடத்திலும் சேர்த்து முப்பத்தைந்து மார்க் வாங்கினேன்!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:58

“”லெட்டர்ல அனுப்புனர் முகவரி எழுதற இடத்துல உன் சந்தனம் பூசுறியே ஏன்?”

“”இது மொட்டைக் கடுதாசியாச்சே…!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:59

“”எதுக்கு வாசல்ல நிக்கிற செக்யூரிட்டியை கூப்பிடுறீங்க?”
“”நீங்கதானே செக்யூரிட்டி இருந்தாதான் லோன் கொடுப்பேன்னு சொன்னீங்க!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:00

“”அவரவர் செய்யற வினைப்படிதான் வாழ்க்கை அமையும்னு சொல்றீங்களே… அதுல எனக்கொரு சந்தேகம் சார்!”
“”என்ன சந்தேகம்..?”
“”செய்வினைப் படியா… இல்ல செயப்பாட்டு வினைப் படியா சார்?!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:01

“”ஏம்மா… உட்காருன்னு எத்தனைத் தடவை சொல்றது. நின்னுக்கிட்டு இருக்கியே உன் பேரு என்னம்மா?”
“”அமரா’வதிங்க என் பேரு!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:02

“”உடம்பெல்லாம் ஏண்டா காயம்?”

“”கணக்குப் பாடம் செய்தேன், அதாண்டா!”

“”கணக்குப் பாடம் செய்தால் ஏண்டா உடம்பில் காயம் ஏற்படுது?”

“”கணக்கு உதைச்சுதே!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:03

“”அந்த பஸ் ஓடுமா?”

“”ஓடும். ஏன் கேட்கிறே?”

“”ஓடும் பஸ்ஸில் ஏறாதேன்னு போட்டிருக்கே!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:04

“ராமு, வான்கோழி முட்டை போடுமா?”

“”அதுகிட்ட சாக்பீஸைக் கொடுத்துப் பார்த்தா தெரியும் சார்!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 27 1, 2, 3 ... 14 ... 27  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum