சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Khan11

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை

3 posters

Go down

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Empty மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை

Post by சே.குமார் Sat 14 Nov 2015 - 17:30

சேனைத்தமிழ் உலாவில் எழுதும் அனைவரையும் தனது பின்னூட்டக் கருத்துக்களால் ஊக்கப்படுத்தி எழுத வைப்பதில் நிஷா அக்காவுக்கு நிகர் அவர்தான்.... சேனையில் மட்டுமின்றி முகநூல், பலரின் வலைப்பூக்கள் என எல்லா இடத்திலும் தனது நீண்ட, நிறைவான கருத்துக்களால் நிறைய விஷயங்களைப் பேசுவார். எல்லாமே வாழ்வியல் பேசும் கருத்துக்கள் என்பதை அவரின் கருத்துக்களை வாசித்தவர்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட ஒருத்தர் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து செல்லாமல் தனது எண்ணங்களை பதிவுகளாக்கி தனக்கான பெட்டகமாகவும் மற்றவர்களும் அறியும் வகையில் செய்ய வேண்டும் என நினைத்தபோதெல்லாம் அவர் பார்க்கும் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவரிடம் சொல்வதில்லை. ஒருநாள் அவராகவே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்கும் ஆசை வந்துவிட்டது என்று சொன்னார். விடுவோமா... கீதமஞ்சரி அக்கா, நான், சம்ஸ், நண்பன் என ஒரு குழு சேர்ந்து அவரை தீபாவளி அன்று வலையுலகிற்குள் இழுத்து விட்டுவிட்டோம். ஆம் இப்போது அக்கா அவர்கள் தனது 'ஆல்ப்ஸ் தென்றல்' என்ற தளத்தில் எழுத ஆரம்பித்து மூன்று பதிவுகளும் போட்டாச்சு. நீங்களும் வாசித்துப் பாருங்கள்... அவரின் எழுத்தில் லயித்துப் போவீர்கள். தளத்திற்குச் செல்ல  கிளிக்குங்கள்.
http://alpsnisha.blogspot.ae/


***

வேதாளம் தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதனால் தூங்காவனம் நேற்றிரவு இணையத்தில் பார்த்தேன். கமல் என்ற கலைஞனுக்காக ஒரு முறை பார்க்கலாம். மற்றபடி ஆங்கிலப் படத்தின் கதையை அப்படியே எடுத்திருந்தாலும் அந்த நைட் கிளப்பும் கோட் அணிந்த மனிதர்களும் கதையோடு ஒட்டவில்லை.  த்ரிஷா... நண்பர் செங்கோவி விளிப்பது போல் கமலா காமேஷ்... ஆமா முகம் அப்படித்தான் இருக்கு... போலீசுக்கு எல்லாம் செட்டே ஆகாத முகம்... ஒரு வேகம் இருக்க வேண்டாமா... சண்டை போடுறேன்னு கமல்... விடுங்க... தலைவர் மதுஷாலினிக்கு கொடுக்கிற முத்தத்தைவிடவா... இந்தச் சண்டை பெரிசு... இதெல்லாம் இல்லைன்னா அது கமல் படமே இல்லை... 

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Bg


கமலா காமேஷ்... மன்னிக்கவும் த்ரிஷாவுக்குப் பதிலாக பாபநாசம் படத்தில் போலீசாக அதிரடி காட்டி கலக்கிய ஆஷா சரத்தையே போலீசாக்கியிருக்கலாம் மிரட்டியிருப்பார். இதில் கமலின் மனைவியாக நாலு காட்சிகளில்  மட்டுமே ஒப்புக்கு வருகிறார். நடிப்புக்கு தீனியே இல்லை போனில் பேசுவதாய் மட்டுமே... திரைக்கதையில் ஒரு வேகமில்லை... கமல் என்ற மனிதர் ஓடுகிறார்... படத்தையும் தாங்கிக் கொண்டே ஓடுகிறார். வருடத்திற்கு மூன்று படமெல்லாம் எடுக்க நினைத்தால் கமலும் இப்படித்தான் எடுக்க முடியும்... கமலின் ரசிகனாய் மீண்டும் சண்டியர், தேவர் மகன், ஹேராம், குணா, குருதிப்புனல், விஸ்வரூபம் போன்ற படங்களை அவர் கொடுக்க வேண்டும் என்ற ஆசையே படத்தைப் பார்த்தபோது மேலோங்கியது.
***

ந்த வாரம் அலுவலகத்தில் அவ்வளவாக வேலை இல்லை.... அதற்கெல்லாம் சேர்த்து வரும் வாரம் பிழிந்து எடுத்துவிடுவார்கள் அது வேற விஷயம்... நான் சொல்ல வந்தது தீபாவளி அன்று எழுதிய சிறுகதை பற்றி... அலுவலகத்தில் வேலை முடிந்தும் 5.30 மணி வரை உக்கார வேண்டுமே என்பதால் ஒரு கவிதை எழுதலாம் என உட்கார்ந்தேன். அப்படியே தையற்காரரையும் பார்த்தவனுக்கு தீபாவளிக்கு ஒரு சிறுகதை எழுதலாமே என்று தோன்றியதும் ஆரம்பித்ததுதான் ஜீவநதி, முதலில் ஒரு பாரா எழுதும் போது கணவன் பணம் அனுப்பவில்லை, குழந்தைகளுக்கு துணி எடுக்கணும் என்பதாய் பயணப்பட்ட கதையில் அண்ணனும் எங்கிட்ட காசில்லைன்னு சொல்லிட்டுப் போவதாய் போகும்போது கடன் வாங்கலாம் என்பதாய் போய், ஏன் கடன் வாங்கணும் அண்ணனே கொடுப்பதாய் இருந்தால் என்று மாற்றுப் பாதையில் பயணித்த போது அந்தப் பணம் அண்ணனுக்கு ஏது...? என்ற கேள்வியில் தொக்கியபோது விரல்கள் தட்டச்சு செய்ததே கடைசி பாரா... 

கதை எல்லோருக்கும் பிடித்திருந்தது. நான் கதையின் கருவை யோசித்து வைத்து அதுக்கு தீனி போட்டு எழுதுபவன் அல்ல... இதுதான் கதை என்றெல்லாம் யோசித்துப் பயணிப்பவனும் இல்லை... முதல் பாரா எழுதி முடியும் போது இரண்டாம் பாரா அதுவாக பயணிக்கும்... இப்படியேதான் கடைசிப் பாரா வரை... கதையின் போக்கில் பயணிப்பேன். நான் தேர்ந்த எழுத்தாளன் இல்லை... மொழி அழகியல் எல்லாம் என் கதையில் இல்லை... ஆனாலும் கடைசிப் பாரா மொத்தக் கதையையும் தாங்கிப் பிடிப்பதாய் அமைவது கடவுள் கொடுத்த வரம் என்றுதான் நினைக்கிறேன். கல்லூரிக் காலத்தில் நிறைய எழுதி பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. சில கதைகள் மட்டுமே நல்ல கதைகள் என்று எனக்குத் தோன்றும்... இப்போது நினைத்தால் எல்லாமே ஏதோ எழுதியவைதான்... ஆனால் இப்போது எழுதும் கதைகள் கொஞ்சம் வாழ்க்கையோடு பயணிப்பதாய்த் தெரிகிறது. இருந்தாலும் என் நண்பர்களில் சிலர் உனது கதைகள் பெரும்பாலும் சோகத்தைத்தான் சொல்கிறது என்பார்கள். அவர்களுக்காகவே சில காதல், சந்தோஷக் கதைகள் எழுதியிருக்கிறேன்.. ஆனால் அவை எல்லாம் வாழ்க்கை பேசவில்லை... இப்படிப்பட்ட கதைகள்தான் என் மண்ணின் மக்களோடு வாழ்வதைப் போல் எனக்குள் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. எனது கதைகள் அப்படித்தானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

***

நேற்றுக் காலை அலுவலகம் செல்லும் போது மேகம் இருட்டிக் கொண்டு வந்தது, காற்றும் வீசியது... சரி இன்னைக்கு மழை இருக்கு என்று நினைத்துக் கொண்டே நடந்தேன். வெயில் சுட்டெரித்த பூமியில் இதமான காற்று... அதுவும் மழை மேகம் இருப்பதால் சற்று குளிராய்... நடக்கவே சுகமாய் இருந்தது... அலுவலகத்தில் அமர்ந்து வெளியில் பார்க்கும் போதெல்லாம் எப்படியும் மழை வரும் என்றே தோன்றியது. துபாயில் இருந்து போன் பண்ணிய அண்ணனிடம் இங்கு மழை வருவது போல் இருக்கு.. அங்கு எப்படி என்றதும்... காலையில் லேசாகத் தூறி இருக்கு... ஆனா இப்ப வெயில் இருக்கு, மழை வர்றது மாதிரி தெரியலை... மாலை அலுவலகம் விட்டு வரும்போது எப்பவும் போல் இருந்தது... மழையும் இல்லை ஒன்றும் இல்லை... அறைக்கு வந்த பிறகு  சாயந்தரம் துபாயில மழை அடித்துப் பெய்திருக்கிறது தெரியுமா.. இங்குதான் இல்லை என்று நண்பர் ஒருவர் சொன்னார். அட... அங்க பெய்ந்த மழை இங்கும் பெய்திருக்ககூடாதா..? போன வருடமும் சுற்றி மழை பெய்தது அபுதாபியில் மட்டும் இல்லை... இந்த வருடமும் அப்படித்தான் போல...

தொடர்ந்து பெய்யும் மழையால் தமிழகமே தத்தளிக்கிறது என்று செய்திகள் வருகின்றன... வீடுகளைச் சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று சொல்கிறார்கள். ஆம்... நகரை விரிவாக்குறேன் என்று சொல்லியே ஏரிகளையும் குளங்களையும் பட்டா போட்டு விற்றுவிட்டார்கள். விற்பவன் செல்வச் செழிப்போடு இருக்கிறான்... வாங்கியவன் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறான்.  இப்பப் புலம்பி என்னாகப் போகுது..? அம்மாவுக்கு சுத்தமாக் கேக்காது... வித்தவனில் அவர் ஆளும் இருக்கிறான் என்றாலும் ஏதோ குரல் கொடுப்போம் என்று ஐயா கத்துவார், தளபதியோ அதிலும் படகு விடலாமா அல்லது நீச்சலடிக்கலாமா என நமக்கு நாமே திட்டம் திட்டுவார். சிவகாசிக்காரரும் மாம்பழத்து ஐயாவும் சின்னக்கவுண்டரும் வளவனாரும் மூப்பனாரின் வாரிசும் தமிழிசை பாடி வரும் வானம்பாடியும் என்ன அழகு எத்தனை அழகு புகழ் இளங்கோவும் கூடையில் பூவும் அறிக்கைப் போர் நடத்துவார்கள். நாமதான் மலேரியாவும் டெங்கும் வராமல் தேங்கி தண்ணீர் கொசுக்களுக்கு வீட்டுக்குள் வரவிடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

***

ரு நிமிடமே என்றாலும் இந்தக் குறும்படம் சொல்லும் செய்தி... உண்மையிலேயே படம் முடியும் போது ரொம்பக் கஷ்டப்படுத்திருச்சு.... இந்தப் படத்தை எடுத்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்... நீங்களும் பாருங்களேன்.



***

கில்லர்ஜி அண்ணன் அவர்கள் சென்ற முறை கனவில் வந்த காந்தி சொல்லி நம்மளை எல்லாம் கேள்வி கேட்டாரு... இப்ப கனவுல வந்த கடவுளுக்கிட்ட பத்து நனவாக வேண்டிய கனவுகளைச் சொல்லச் சொல்றாரு... நம்மளையும் அதுல மாட்டி விட்டுட்டாரு... ஒரு பக்கம் ஆளாளுக்கு ஜோரா எழுத ஆரம்பிச்சிட்டாங்க... நாம என்னத்தை எழுதுறதுன்னு தெரியலை.... இருந்தாலும் அழைப்புக்கு என்று ஒரு மரியாதை இருக்கு அல்லவா..? அதனால் நாளை எப்படியும் எழுத வேண்டும்... பார்ப்போம்... வேதாளம் படத்துக்கு வேற போகணும்... கனவுப் பதிவு வேற எழுதணும்... நாளைக்கு ரொம்ப வேலை இருக்கு போங்க.
***

தாய் மனசு படத்தில் வரும் இந்த 'தூதுவளையலை அரைச்சி...' பாடலைக் கேளுங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்... சுகமான கிராமத்துக் கீதம் இது.


மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Empty Re: மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை

Post by நண்பன் Sat 14 Nov 2015 - 21:37

ஒரு படமும் பார்க்க வில்லை வேதாளமும் பார்க்க வில்லை கமலஹாசன் படமும் பார்க்க வில்லை பார்த்தவர்கள் வந்து கடுப்பேத்துகிறார்கள்  நெட்ல பார்க்கிறத்துக்கும் டைம் கிடைக்க வில்லை  புதுப்படங்கள் வெளியாகும் திருட்டு விசீடி தளத்தின் முகவரியை தாருங்கள் அண்ணா

ஆல்ப்ஸ் தென்றல் பார்த்தேன் பிரமாண்டமான ஒரு பெயருடன் சும்மா அதிருதுல்ல அக்காவையும் ப்ளோக் திறக்கும் ஆசையைக் காட்டி விட்டீர்கள் அக்காவுக்கும் ஆசை வந்து விட்டது எனிவே அனைத்தும் வெற்றியாக செல்லட்டும் குமார் அண்ணன் இடைக்கிடை நிஷா அக்காவின் ப்ளோக் சம்மந்தமாக எழும் சந்தேகங்களுக்கு பதில் கொடுங்கள் தீர்த்து விடுங்கள் பாவம் கஸ்டப்படுகிறார்கள் நிஷா அக்கா

பாடல்கள் கதைகள் என அனைத்தையும் சிறப்பாக எழுதி வருகிறீர்கள் தொடருங்கள் அண்ணா
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Empty Re: மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 15 Nov 2015 - 7:29

அருமை அண்ணா தொடருங்கள் அக்காவின் தளம் சூப்பர் அவர்களின் சிந்தனையும் எழுத்தாற்றலுமே ஆணிவேர் பாராட்டுகள் நன்றிகள்


மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Empty Re: மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 15 Nov 2015 - 7:32

நண்பன் wrote:ஒரு படமும் பார்க்க வில்லை வேதாளமும் பார்க்க வில்லை கமலஹாசன் படமும் பார்க்க வில்லை பார்த்தவர்கள் வந்து கடுப்பேத்துகிறார்கள்  நெட்ல பார்க்கிறத்துக்கும் டைம் கிடைக்க வில்லை  புதுப்படங்கள் வெளியாகும் திருட்டு விசீடி தளத்தின் முகவரியை தாருங்கள் அண்ணா

ஆல்ப்ஸ் தென்றல் பார்த்தேன் பிரமாண்டமான ஒரு பெயருடன் சும்மா அதிருதுல்ல அக்காவையும் ப்ளோக் திறக்கும் ஆசையைக் காட்டி விட்டீர்கள் அக்காவுக்கும் ஆசை வந்து விட்டது எனிவே அனைத்தும் வெற்றியாக செல்லட்டும் குமார் அண்ணன் இடைக்கிடை நிஷா அக்காவின் ப்ளோக் சம்மந்தமாக எழும் சந்தேகங்களுக்கு பதில் கொடுங்கள் தீர்த்து விடுங்கள் பாவம் கஸ்டப்படுகிறார்கள் நிஷா அக்கா

பாடல்கள் கதைகள் என அனைத்தையும் சிறப்பாக எழுதி வருகிறீர்கள் தொடருங்கள் அண்ணா
நன்றியுடன் நண்பன்
மன்னிக்கணும் நண்பா என் மேலதான் கடுப்பாயிருப்பிங்கன்னு நினைக்கிறேன் வண்டியின் பிரச்சினை உங்களுக்கு நன்றாகத் தெரியும் சொதப்பி விட்டது விமர்சனங்கள் பார்க்ககும் போது தியட்டர் போகதது நல்லதோ என்றிருக்கிறது திருட்டு vcd


மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Empty Re: மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை

Post by நண்பன் Sun 15 Nov 2015 - 10:19

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:ஒரு படமும் பார்க்க வில்லை வேதாளமும் பார்க்க வில்லை கமலஹாசன் படமும் பார்க்க வில்லை பார்த்தவர்கள் வந்து கடுப்பேத்துகிறார்கள்  நெட்ல பார்க்கிறத்துக்கும் டைம் கிடைக்க வில்லை  புதுப்படங்கள் வெளியாகும் திருட்டு விசீடி தளத்தின் முகவரியை தாருங்கள் அண்ணா

ஆல்ப்ஸ் தென்றல் பார்த்தேன் பிரமாண்டமான ஒரு பெயருடன் சும்மா அதிருதுல்ல அக்காவையும் ப்ளோக் திறக்கும் ஆசையைக் காட்டி விட்டீர்கள் அக்காவுக்கும் ஆசை வந்து விட்டது எனிவே அனைத்தும் வெற்றியாக செல்லட்டும் குமார் அண்ணன் இடைக்கிடை நிஷா அக்காவின் ப்ளோக் சம்மந்தமாக எழும் சந்தேகங்களுக்கு பதில் கொடுங்கள் தீர்த்து விடுங்கள் பாவம் கஸ்டப்படுகிறார்கள் நிஷா அக்கா

பாடல்கள் கதைகள் என அனைத்தையும் சிறப்பாக எழுதி வருகிறீர்கள் தொடருங்கள் அண்ணா
நன்றியுடன் நண்பன்
மன்னிக்கணும் நண்பா என் மேலதான் கடுப்பாயிருப்பிங்கன்னு நினைக்கிறேன் வண்டியின் பிரச்சினை உங்களுக்கு நன்றாகத் தெரியும் சொதப்பி விட்டது விமர்சனங்கள் பார்க்ககும் போது தியட்டர் போகதது நல்லதோ என்றிருக்கிறது திருட்டு vcd

இது வரைக்கும் படம் பார்க்க போகாமல் இருந்த கொழும்பு பையன் எல்லாரும் இரண்டு தரம் பார்க்கும் அளவுக்கு படம் சூப்பர் என்றால் நமக்கு எப்படி இருக்கும் இன்று இரவைக்கு போக எண்ணியுள்ளேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பார்ப்போமா ஹாசிம் என்ன??


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை Empty Re: மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum