சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Khan11

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

4 posters

Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by சே.குமார் Sat 12 Dec 2015 - 22:03

க்களின் வாழ்க்கையை அடித்துத் துவம்சம் செய்த மழை வெள்ளம் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து மதம் கடந்த மனிதத்தை காண்பித்துச் சென்றிருக்கிறது. ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் அதற்காகவாவது மழைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ழை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உதவிய யூனூஸின் பெயரையே தங்கள் மகளுக்கு வைத்து தங்கள் நன்றியைக் காட்டினர் மோகன் தம்பதிகள் என்றால், தன் மீது அன்பு வைத்து தன் பெயரையே குழந்தைக்கு சூட்டியவர்களின் அன்பில் நனைந்து அந்தக் குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் தானே செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அந்த நண்பர். மேலும் இவர்களுக்கு மட்டுமில்லாது இன்னும் வாழ்வை இழந்து நிக்கும் எல்லாரும் பயனடையும்படியாக காரியங்களைச் செய்ய முனைந்து வருவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். நண்பர் யூனூஸ் அவர்களை நாமும் வாழ்த்துவோமே.

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் JmmaF6djeidsi

முகநூலில் கூட அதிகம் பகிரப்படாமல் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு பிறந்தநாள் கழிந்திருக்கிறது என்றால் அது இந்த முறைதான் என்று நினைக்கிறேன். அவர் வேண்டாம்... வேண்டாம் என்று சொன்னாலும் பாலாபிஷேகங்களும் ஊர்வலங்களும் தமிழகத்தையே அதிர வைக்கும். அவருக்கு அரியாசனம் கொடுத்தும் அதை துச்சமென மதித்தார் என அண்ணன் ஒருவர் எழுதியிருந்தார். எப்போது அரியாசனம் கொடுத்தார்கள் அவருக்கு என்றுதான் தெரியவில்லை. படத்தில் வசனம் பேசினாலும் விஜயகாந்த் போல் எழுச்சி கொண்டு கட்சி ஆரம்பிக்க உள்ளுக்குள் அவருக்கு பயமே அதிகமிருந்தது என்பதே உண்மை. சரி அரசியல் எதுக்கு நமக்கு. அவரே ஒதுங்கித்தான் இருக்கார்... அப்படியே இருக்கட்டும் அதுவே தமிழகத்துக்கு நல்லது... இல்லையென்றால் சினிமாவில் நுழையும் எல்லாருக்கும் முதல்வர் கனவும் சேர்ந்து வந்துவிடும். தமிழனின் தலைவிதி சினிமாக்காரர்கள்தான் ஆளணுமின்னு வழிவழியா தொடர ஆரம்பிச்சிடும். இந்த முறை மக்கள் அவர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொன்னதற்காக எதுவும் செய்யவில்லை என்று சொன்னால் அது நகைப்புக்குரியதாகும். மக்கள் கொண்டாட விரும்பவில்லை என்பதே உண்மை. மக்களின் இந்த நிலைப்பாடு ரஜினிக்கு அல்ல மற்ற நடிகர்களுக்கும் சற்று வருத்தமாகத்தான் இருக்கும். இதை ரஜினிக்கு மட்டுமல்ல எந்த நடிகருக்கும் செய்யாமல் நாம் நம் வேலையைப் பார்த்தோம் என்றால் அவர்களும் சாதாரண மனிதர்களாக நம்மோடு உலாவருவார்கள்.  எனிவே ஹாப்பி பர்த்டே ரஜினி சார்.

வீணாப்போன சிம்புவும் அனிருத்தும் 'பீப்' பாடல் போட்டிருக்கானுங்களாம். ரெண்டு பேருமே அக்கா, தங்கச்சியோட பிறக்கலை போல. கதாநாயகியை தொடாமலே நடித்த, காதலித்த பெண்ணையே கரம்பிடித்து வெளியுலகிற்கு டண்டணக்கா ராஜேந்தராக இருந்தாலும் பன்முகத் திறமையில் ஜொலித்த மனிதரின் மகன் மாற்றி மாற்றிக் காதலித்து காதல் என்ற அழகிய வார்த்தைக்கு மோசமான இலக்கணம் எழுதியவன். இன்னொருவன் ரஜினியின் சொந்தக்காரன் என்று சொல்லிக் கொண்டு ஆண்ட்ரியாவின் உதடை கமல் உறிஞ்சுமுன்னே பலகோணத்தில் உறிஞ்சியவன் ரெண்டு சேர்ந்து பாட்டு போட்டிருக்காம் பாட்டு... கேவலப்பட்டவனுங்க... அவனவன் மழை வெள்ளத்துல வாழ்வை இழந்து கிடக்கிற மக்களுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு திரியிறானுங்க... மக்கள் பிரச்சினையை இனி நடிகர் சங்கம் பேசாதுன்னு சொன்ன விஷால் கூட மக்களுக்காக இறங்கி வேலை செய்யிறான். இவன் என்னடான்னா... இலக்கிய, இலக்கண ரசனையோடு பாட்டெழுதுறான். இதுல உனக்குப் பிடிக்காட்டி கேக்காதேன்னு வேற ஆவேசமாச் சொல்றாராம் இந்த கேடுகெட்ட சிம்பு. இந்தப் பாடலை யூடிப்பில் தடை செய்ய வேண்டும் என ரிப்போர்ட் நிறைய பேர் பண்ணியிருக்கிறார்கள். நானும் அதில் ஒருவன்.  'பீப்' பாடலின் கழுத்து நெறிக்கப்படுதா என்று பார்ப்போம். ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிக்கையாளரான ஒரு பெண் அருமையாக கிழிகிழி என்று கிழித்திருக்கிறார்.

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் 1424433149-9536

றுமீன்... பாபி சிம்ஹா ரொம்ப நல்லா நடிச்சிருந்தார். முன் ஜென்மத்துக் கதையோடு இந்த ஜென்மத்துக் கதையை இணைத்து ஒரு புத்தகமும் அதில் இருக்கும் கடிகாரமும் என மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். 'மெட்ராஸ்'கலையரசன் அருமையாக நடித்திருக்கிறார். முன் பின் என இரண்டிலும் கலக்கல். அழகர்சாமி கூட நல்லாவே நடித்திருக்கிறார். விறுவிறுப்பான கதை... பரபரப்பாக கதை பயணிப்பதால் நாயகியை பாதியிலேயே பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள். இறுதி காட்சியில் வரும் சண்டைதான் ஏற்புடையதாக இல்லை. நாயகனும் வில்லனும் அப்போது கூட மோதாமல் நாயகன் மாஞ்சாக் கயிற்றில் பட்டம் விட்டு மக்கள் கழுத்தை அறுத்துக் கொள்ளும் சென்னை வாழ் மாஞ்சாக்கயிறு பட்டவாசிகள் போல அண்டர்கிரவுண்ட் பாதைக்குள் வைத்து அத்தனை பேரையும் அறுத்து எடுக்கிறார். அது மட்டுமே நல்லாயில்லை... மற்றபடி உறுமீன் நன்றாகவே இருக்கிறது.

ஸ்டாலின் இன்னும் நமக்கு நாமே படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். காலில் முழங்கால் வரை ஷூ போட்டு கெரண்டைக் கால் தண்ணீரில் நடந்து போட்டோ எடுத்து விளம்பரம் செய்து கொள்கிறார். அதற்கு விஜயகாந்த் சேற்றிலும் சகதியிலும் செருப்பில்லாமல் தான் நடக்கிறார். மக்களிடம் அன்போடு பேசுகிறார். என்ன கோபம் வந்த கைதான் படக்குன்னு எந்திரிக்குது... அதையும் கழுத்துப்பக்கமாக கொண்டு போயி சமாளிக்க கத்துக்கிட்டு இருக்கார். சீமான் இப்போத்தான் வெள்ளம் வந்தது போல மீண்டும் கத்த ஆரம்பித்திருக்கிறார். பார்த்தீபன் சப்தமில்லாமல் உதவிகள் செய்து வருகிறார். வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த போது ஸ்டாலினும் அவர் மனைவியும் கேரளாவில் தங்கி ஓய்வெடுத்திருக்கிறார்கள். அதை கேரளப் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டு கேலி செய்திருக்கின்றன. அலுவலக நண்பர் காலையில் சொல்லிச் சிரித்தார். மாலையில் பேப்பர் செய்தியும் பார்வைக்குக் கிடைத்தது. இவர்தான் மக்களுக்கான முதல்வராம். இவர் இது செய்தார்... அதைச் செய்தார்... நாங்கள்தான் மக்கள் நலம் விரும்பிகள் என்று முகநூலில் பலர் கத்திக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் NTLRG_151010175000000000

ப்புக்கருவாடு.... கஞ்சிக்கு சுட்ட கருவாடு இருந்தால் இன்னும் இரண்டு தட்டு சாப்பிடத் தோணுமே அப்படியிருக்கு... சான்ஸே இல்லை... ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் படம் பார்ப்பவர்கள் சிரித்து ரசிக்கலாம். ராதாமோகனின் கதை வசனத்தில் படம் ரொம்ப நல்லாயிருக்கு. இது உப்புக் கருவாட்டிலும் நெய்மீன் கருவாடு சும்மா கம.. கமன்னு... சரவணன் மீனாட்சி நாயகி இதில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கம்மி... அவரை சினிமா நாயகியாக வருபவருக்கே அதிக வாய்ப்பு. டைமிங்க் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். ரசித்துப் பார்க்கலாம்.

டலூரில் களப்பணியில் இருக்கும் நண்பன் தமிழ்க்காதலனின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த செய்தி இது.

"கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் பணிகளுக்கு இடையே நாம் செய்த மற்றொரு பணியும் இருக்கிறது. ஆங்காங்கே கைகட்டி, ஏரிக்கரை, குளக்கரை, கோயில் வாசல், ஆற்றுப் பாலம், என கிடைத்த இடத்தில் அமர்ந்து கதைப்பேசி கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும், அதற்கான தேடல்களையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் சொல்லி, அவர்கள் சும்மா இருக்க, வெளியூர்களில் இருந்து வரும் மற்றவர்கள் களப்பணியில் ஈடுபடுவதைப் பார்க்க உங்களுக்கு உறுத்தலாக இல்லையா என்று வினாத்தொடுத்து, நாம் சென்ற அனைத்துப் பகுதிகளிலும் நமது இளைஞர்களை களப்பணியில் இறக்கி அவர்களுக்கும் சமூக அக்கறையை ஊட்டி இருக்கிறோம். இந்த பணி ஓரளவு எமக்கு நிறைவைத் தந்திருக்கிறது."

தமிழ்க்குடில் தன் கடமையைச் செய்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.

தொடர்ந்து பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருப்பதில் சந்தோஷம். நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துக்களும் தொடர்ந்து வருகின்றன. வாழ்த்துக்கள் நண்பரே.

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் 12316066_1112132518804884_8662070443716477198_n

கேரளா எப்.எம். சேனலில் சென்னை மக்கள் சூப்பர் கிங்க்ஸ் என்று புகழ்ந்திருப்பதாக முகநூலில் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. வெள்ளத்தில் தவித்த சென்னை மக்களுக்கு உதவ தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும் தமிழன் ஓடிவந்தான். இங்கே சென்னை மக்கள் மட்டும் சூப்பர் கிங்க்ஸ் அல்ல... தமிழக மக்களே சூப்பர் கிங்க்ஸ்தான்.... உதவியின்னா முதல்ல நிக்கிறவன் தமிழன்தான். அது என்னவோ தெரியலை கடலூர்ல மழை, இப்போ தென் தமிழகம் எங்கும் மழை அப்படியிருக்க சென்னை மட்டுமே எல்லா இடங்களிலும் முன்னணியில் இருக்கு. ஒருவேளை நம்ம ஆட்சியாளர்கள் நினைப்பது போல் தமிழகம் என்றால் சென்னை மட்டும்தான் என்று நினைத்து விட்டார்கள் போல. எப்படியோ தமிழர்கள் வாழ்த்துக்காகவும் வீடியோக்களுக்காகவும் உதவவில்லை. மனிதாபிமானத்தோடுதான் உதவி வருகிறார்கள். வாழ்த்துவோம் நம் மக்களை.

இந்த மனசின் பக்கம் நேற்று (வெள்ளி) வரவேண்டியது... உடல் நலமும் மன நலமும் கொஞ்சம் யோசித்ததால் இன்று  இனி வழக்கம் போல் அடுத்த வெள்ளி மலரும்.

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 10:36

யூனூஸின் பங்களிப்பை எண்ணி நானும் கண் கலங்கினேன் மனித நேயத்தைப் பார்த்து மகிழ்ந்தேன் பெரிய தொழிலதிபரான யூனூஸின் இந்த செயல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது அத்தோடு அவரின் அடுத்தடுத்த நடவடிக்கைள் உட்பட!

சூப்பர் ஸ்டார் என்று சும்மா வேஷ்டாக சொல்லிக்கொள்ள வேண்டியதுதான் இவர்கள் பிறந்த நாளை சில அர லூசுகள் இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்  உங்களை சொல்ல வில்லை அண்ணா மன்னிக்கனும்.

இந்த வீணாப்போன சிம்பு இடைக்கிடை வந்து இந்த மாதிரி வம்பு வளர்த்து விட்டு போவது வழக்கம் கேட்டால் அது எனது சொந்த விடயம் விரும்பினால் கேளு இல்லை என்றால் விடு என்று தலைக்கனமா பதில் தருவான் பொருக்கி்பயல் இவனெல்லாம் நடிக்கும் படத்தை ரசித்துப்பார்க்கும் நமக்கு சொல்லனும் 

உப்புகருவாடு விமர்சனம் சூப்பர் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க வேண்டும்  

அத்தோடு கடலூர் மற்றும் சுற்று வட்டம் வாலிபர்கள் புதினம் பார்த்திட்டுத்தான் இருக்கிறார்கள் இன்னும் அவர்களுக்கு வளங்கிய சமூக அக்கரை மிகவும் அருமை பாராட்டுக்கள் 

இன்றய வாட்ஸ் அப் ஸ்பெஷல் ஸ்டாலின் கேரளா உணவகத்தில் எடுக்கும் ஓய்வுதான் என்னத்த செய்து கிளித்து விட்டு இப்படி ஐநது நட்சத்திர ஹோட்டலில் ஓய்வு எடுக்கிறார் பன்னிப்பய

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை அண்ணா இன்னும் தொடருங்கள்  உங்கள் உடல் நலமும் மனமும் என்றும் நலமாய் இருக்க ஆண்டவன் துணை
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by சே.குமார் Sun 13 Dec 2015 - 20:45

நண்பன் wrote:யூனூஸின் பங்களிப்பை எண்ணி நானும் கண் கலங்கினேன் மனித நேயத்தைப் பார்த்து மகிழ்ந்தேன் பெரிய தொழிலதிபரான யூனூஸின் இந்த செயல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது அத்தோடு அவரின் அடுத்தடுத்த நடவடிக்கைள் உட்பட!

சூப்பர் ஸ்டார் என்று சும்மா வேஷ்டாக சொல்லிக்கொள்ள வேண்டியதுதான் இவர்கள் பிறந்த நாளை சில அர லூசுகள் இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்  உங்களை சொல்ல வில்லை அண்ணா மன்னிக்கனும்.

இந்த வீணாப்போன சிம்பு இடைக்கிடை வந்து இந்த மாதிரி வம்பு வளர்த்து விட்டு போவது வழக்கம் கேட்டால் அது எனது சொந்த விடயம் விரும்பினால் கேளு இல்லை என்றால் விடு என்று தலைக்கனமா பதில் தருவான் பொருக்கி்பயல் இவனெல்லாம் நடிக்கும் படத்தை ரசித்துப்பார்க்கும் நமக்கு சொல்லனும் 

உப்புகருவாடு விமர்சனம் சூப்பர் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க வேண்டும்  

அத்தோடு கடலூர் மற்றும் சுற்று வட்டம் வாலிபர்கள் புதினம் பார்த்திட்டுத்தான் இருக்கிறார்கள் இன்னும் அவர்களுக்கு வளங்கிய சமூக அக்கரை மிகவும் அருமை பாராட்டுக்கள் 

இன்றய வாட்ஸ் அப் ஸ்பெஷல் ஸ்டாலின் கேரளா உணவகத்தில் எடுக்கும் ஓய்வுதான் என்னத்த செய்து கிளித்து விட்டு இப்படி ஐநது நட்சத்திர ஹோட்டலில் ஓய்வு எடுக்கிறார் பன்னிப்பய

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை அண்ணா இன்னும் தொடருங்கள்  உங்கள் உடல் நலமும் மனமும் என்றும் நலமாய் இருக்க ஆண்டவன் துணை
நன்றியுடன் நண்பன்
வணக்கம் நண்பா...
நலம். நலமே ஆகுக.

தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.

நான் சூப்பர் ஸ்டாரின் ரசிகன் என்று சொல்லவில்லை... தாங்கள் சொன்னதற்கு வருந்த... :) யாருமே வாழ்த்தலையேன்னு ஒரு ஆதங்கத்தில்தான் ஹாப்பி பர்த்தே போட்டேன்... மற்றபடி நான் ரஜினி, விஜய் படங்களை தியேட்டரில் பார்ப்பதில்லை... விரும்புவதும் இல்லை... படிக்கும் காலத்தில் கமல் படங்கள் மட்டுமே என் விருப்பம்... ரஜினி என்றாலே தூர்தர்ஷனில் கூட பார்ப்பதில்லை... ஏனோ தெரியவில்லை.

சிம்புவை சினிமாவில் நடிக்க விடாமல் ஆயுள்கால தடை விதிக்க வேண்டும். எனக்கு பிடிக்காத நடிகர் வரிசையில் இவனும் ஒருவன்.

மற்ற கருத்துக்களுக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 21:31

நன்றி அண்ணா சிம்புக்கு தலைக்கனம் சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Nisha Sun 13 Dec 2015 - 22:23

சந்தனம் சந்தானம் இல்லை தானே?

ஹாப்பி பேர்த்தே  ரூ சூப்பர் ஸ்டார்.  நீங்க யாரும் வாழ்த்தாட்டி போங்க.. நிஷா விஷ் செய்துட்டுது. நிஷா விஷ் செய்தால் 100 இல்லை 1000 பேர் விஷ் செய்த மாதிரின்னு நிஷா  புது டயலாக்  செட்டும் பண்ணிடுத்தாம் .  ஹாப்பி பிறந்த நாள் ரஜ்ஜ்ஜ்னி  சார். உங்களை யாருமே வாழ்த்தலையா?  கவலையே படாதீங்க.நான் வாழ்த்திட்டேன்ல.இன்னும் 100 வருடம்  இருப்பிங்க.எல்லாரும் நல்லா திட்டுவாங்க..அப்புறம் உங்க படம் வந்தால் தலையே தலைவான்னுஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ப்ப்டி வந்து பார்ப்பாங்க.டோண்ட் வொரி மைடியர் சூப்பர் ஸ்டார்! 

எனக்கு பிடிக்கவே பிடிக்காத... நான் பார்க்கவே பார்க்காத  சின்ன வயசிலருந்து பிஞ்சிலயே பழுத்த சிம்பு பத்தி நோ காமென்ட்ஸ்.. விதை ஒன்று போட்டால் முளை என்ன வரும்? விதைத்தது  வளர்ந்து நிற்குது! ராஜேந்திரர் சார் நோட் திஸ் பாயிண்ட்ஸ்!

உப்பு மீன் நல்லாருக்கா? அது கருவாடு.. உப்பு போட்டிருப்பதால் ருசியாத்தான் இருக்கும். சுடு சோத்தில் சுட்ட உப்புக்கருவாடும்  இருந்தால் அப்பப்பா... ஆமாம் நீங்க  கருவாடு பத்தி தானே சொன்னியள் குமார்!

இந்த  மாதிரி ஆபத்து நேரம் உதவுவோரை பிள்ளைகளுக்கு வைக்கும்  மனித நேயம் வாழட்டும். ஆனால் பெயர் வைக்கும் போது ஆண் பெயரை பெண் பிள்ளைக்கு உணர்வு வேகத்தில் வைத்தது அப்பிள்ளை வளர்ந்து பெரியவளாகதும் சமூகத்தில்  சந்திக்கபோகும் சங்கடங்களையும் கருத்தில் கொள்ளணும்  யூனுஸ் போல் இன்னும் பலர் களத்தில் நின்று உயிரை துச்சமாக மதித்து  பணி செய்திருக்கார்கள். அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். 

பல நூறு வருட எதிர்மறை சிந்தனையை இந்த வெள்ளைம் தகர்த்திருக்கின்றது. இஸ்லாமியர்களை இன பேதம் பார்த்து  தூரத்தில் நிறுத்தியோர இருண்ட மனங்களில் வெளிச்சம் பரவி இருக்கின்றது. இதுவே தொடரட்டும். 

மழை ....வெள்ளம்..... நிதி.... நிவாரணம்... முடிந்திருச்சா குமார்? 

அடுத்த சிம்பு புராணம் ஸ்டாட்..ஜாமீனின் வெளிவர முடியாத  வழக்கில் உள்ளே தள்ளணுமாம்...!

டெல்லியில்  மானை சுட்ட மானை வெளியே விட்டாச்சாம். மேகிக்கும் விடுதலையாமே? அதை பத்தி எழுதலையோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 22:38

அப்பாடா தலைக்கு மேல வேலை இருந்தும் அதை விட்டு விட்டு சேனைக்காகவும் நேரம் ஒதுக்கும் எங்கள் அக்காவிற்கு நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Nisha Sun 13 Dec 2015 - 22:43

தலைக்கு மேல வேலையா? 
அண்ணாந்து பார்த்தேன் ..  வெள்ளையா  என் வீட்டின் சீட்டும்.. லைட்டும் தான் தெரியிது. அதில் என்ன செய்யணும் இப்ப.. ! போன வாரம் ஒட்டடை அடிச்சாச்சே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 22:44

Nisha wrote:தலைக்கு மேல வேலையா? 
அண்ணாந்து பார்த்தேன் ..  வெள்ளையா  என் வீட்டின் சீட்டும்.. லைட்டும் தான் தெரியிது. அதில் என்ன செய்யணும் இப்ப.. ! போன வாரம் ஒட்டடை அடிச்சாச்சே?

அப்படியா நான் நினைத்தேன் ஹெப்சி குட்டிட தலையில் சீவி கட்டுறிங்களோ அதான் தலைக்கு மேல வேலையோன்னு நினைத்தேன் சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Nisha Sun 13 Dec 2015 - 22:47

இல்லையே. அவ தலை முடியை அவளே சிவி கட்டுவா. உங்க தலைக்கு டை அடிக்கும் வேலைக்கு என்னை வர சொன்னிங்க தானே? அதை சொன்னிங்க என இப்ப புரிந்திருச்சே! சுவிஸ் டூ கட்டார்  விமான டிக்கட் அனுப்புங்கோ..  எனக்கு விசா கூட தேவைலை. டிக்கட் போட்டாலே போதும் நேரா வந்து தோகாவில் தோகையோட்  இறங்கிருவேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 22:50

Nisha wrote:இல்லையே. அவ தலை முடியை அவளே சிவி கட்டுவா. உங்க தலைக்கு டை அடிக்கும் வேலைக்கு என்னை வர சொன்னிங்க தானே? அதை சொன்னிங்க என இப்ப புரிந்திருச்சே! சுவிஸ் டூ கட்டார்  விமான டிக்கட் அனுப்புங்கோ..  எனக்கு விசா கூட தேவைலை. டிக்கட் போட்டாலே போதும் நேரா வந்து தோகாவில் தோகையோட்  இறங்கிருவேன்.

அட எப்புடிகா கேப்ல அடிக்கிறிங்க சிக்சறு ம்ம் வாருங்கள் வாருங்கள் முடிவெளுக்கும் வரை காத்திருக்கனும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Nisha Sun 13 Dec 2015 - 22:51

ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by பானுஷபானா Mon 14 Dec 2015 - 14:54

இந்தாளு இன்னும் 25 வயசு ஹீரோ என்ற நினைப்பு தான் மக்கள் மனதிலும் இவர் மனதிலும் இருக்கு....வயது போன காலத்தில் ஹீரோ வேஷம் கட்டுவது எதுக்கு?

[img]மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Mkkcrd[/img]

சிம்புவும் அனிருத்தும் என்ன பாட்டு எழுதுனாங்க ?

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Nisha Mon 14 Dec 2015 - 15:11

பானு இந்த சிம்புவுக்கு இப்படி எழுதியே பயங்கர ஹிட்ஸ் கொடுத்திட்டிருக்காங்கப்பா!@ திட்டி எழுத எழுத அப்படி என்ன தான் எழுதினான் என தேடிப்போய்  கேட்டே யூ ரியுபில் அவன் பாட்டு படு ஹிட்ஸ் ரேஞ்கில் போகுதாம். அதனால் நான் என்ன எழுதினான் என ஆராய்வதும்  இல்லை  கேட்பதும் இல்லை என விட்டுட்டேன். 

ஆமாம் ரஜ்ஜ்ஜினி தாத்தாக்கு அப்பூடி என்ன வயசாச்சுன்னு அவரை திட்டுறிங்க! பாவம் என்னையும் உங்களையும் விட  20 வயது தானேப்பா ஜாஸ்தி. திட்டாதிங்க.. பிழைச்சி போகட்டும். ஹாஹா!  நம்ம வழி  எதிர் வழி பானுவோய்.. நீங்க போற வழிக்கு எதிர் வழி.. எதிரி வழியில்லைப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by பானுஷபானா Mon 14 Dec 2015 - 15:26

Nisha wrote:பானு இந்த சிம்புவுக்கு இப்படி எழுதியே பயங்கர ஹிட்ஸ் கொடுத்திட்டிருக்காங்கப்பா!@ திட்டி எழுத எழுத அப்படி என்ன தான் எழுதினான் என தேடிப்போய்  கேட்டே யூ ரியுபில் அவன் பாட்டு படு ஹிட்ஸ் ரேஞ்கில் போகுதாம். அதனால் நான் என்ன எழுதினான் என ஆராய்வதும்  இல்லை  கேட்பதும் இல்லை என விட்டுட்டேன். 

ஆமாம் ரஜ்ஜ்ஜினி தாத்தாக்கு அப்பூடி என்ன வயசாச்சுன்னு அவரை திட்டுறிங்க! பாவம் என்னையும் உங்களையும் விட  20 வயது தானேப்பா ஜாஸ்தி. திட்டாதிங்க.. பிழைச்சி போகட்டும். ஹாஹா!  நம்ம வழி  எதிர் வழி பானுவோய்.. நீங்க போற வழிக்கு எதிர் வழி.. எதிரி வழியில்லைப்பா!

ஹீரோவா நடிச்சு இவர் படம் வெளி வருதுனு கேள்விபட்டாலே கோவம் கோவமா வருது நிஷா.... என்ன கொடுமை என்ன கொடுமை

என்ன தான் அப்படி எழுதி இருக்கானு கேட்டா தானே தெரியும்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Nisha Mon 14 Dec 2015 - 15:28

அதான் கேட்டு கேட்டு ஹிட்ஸ் ஆக்கி வெற்றி கொடுத்திட்டு இருக்காங்க. ஒரு வேளை இதுவும் அவர்கள் விளம்பர டிரிக்கோ என்னமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 15:45

ரொம்ப கேவலமான பாட்டு கேட்காதிங்க பயம்
நானும் இதே ஆர்வத்தோடு அரை மணி நேர தேடுதலின் பின் கிடைத்தது கேட்க முடியல

இவன் பாடிய பாட்டில் எனக்கு பிடிக்காத பல பாடல் உண்டு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Nisha Mon 14 Dec 2015 - 15:50

ஹாஹா அப்படின்னால் நாங்க கட்டாயம் கேட்கணுமே! அநியாயம்

கேட்டுத்தான் ஆகணும். கூட்டணி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 15:57

Nisha wrote:ஹாஹா அப்படின்னால் நாங்க கட்டாயம் கேட்கணுமே! அநியாயம்

கேட்டுத்தான் ஆகணும். கூட்டணி

அப்போ நீங்களே தேடிப்பாருங்கள்  என்ன ....................... லவ் பன்ற   என்ன ................. லவ் பன்ற என்று தொடங்குது  என்ன கொடுமை என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Nisha Mon 14 Dec 2015 - 16:00

அதான் நான் தேடி ஹிட்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. நிஷா ஒரு தடவை சொன்னால்................ ???? ஹிஹி.. அப்புறம்  ஒரு தடவை சொன்னதை நிஷாவே மறந்திரும். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 16:04

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் 12391208_818671151611814_544782790408421700_n
மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் 12342559_818671238278472_105784199188754074_n
இது தவறான புள்ள
இது தருதலைப் புள்ள
இது உருப்படாத புள்ள
இது உதவாக்கரப் புள்ள

இது கெட்ட புள்ள
இது கேடுகெட்ட புள்ள
இது நாதாறிப் புள்ள
இது ஊதாறிப் புள்ள
இது மதிகெட்ட புள்ள
இது மானங்கெட்ட புள்ள
இது புழுத்த புள்ள
இது புழுப்புழுத்த புள்ள
இது நான் பெத்த புள்ள
இது தமிழுக்கு தவறான புள்ள

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 16:04

Nisha wrote:அதான் நான் தேடி ஹிட்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. நிஷா ஒரு தடவை சொன்னால்................ ???? ஹிஹி.. அப்புறம்  ஒரு தடவை சொன்னதை நிஷாவே மறந்திரும். 

சரி மறந்திருங்க  சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Nisha Mon 14 Dec 2015 - 16:06

எங்கள் சேனையில் சிம்பு படம் போட்ட நண்பன் சாரை வன்மையாக கண்டிக்கின்றேன். 

சுட்டுத்தள்ளு.!! மண்டையில் அடிவிழும் டிஸ்யூம் டீஸ்யூம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும் Empty Re: மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum